 |
கண்ணகி வழக்காடப் பாண்டியன் முன்னே போய் நின்றாள். மன்னவன் அவள்
தோற்றத்தைக் கண்டு திடுக்கிட்டு 'நீயார்?' என்று கேட்டான். அதற்கு
விடை கூறிய கண்ணகி,
"வாழ்தல் வேண்டி, ஊழ்வினை துரப்பச்
சூழ்கழல் மன்னா! நின்நகர்ப் புகுந்துஈங்கு
என்காற் சிலம்பு பகர்தல் வேண்டி, நின்பாற்
கொலைக்களப் பட்ட கோவலன் மனைவி;
கண்ணகி என்பது என்பெயரே" (சிலப்பதிகாரம், 2:20:59-63)
என ஊழ்வினையை வலியுறுத்திக் கூறியுள்ளதைக் காண்கிறோம். கண்ணகி ஜைன
சமயத்தவளாகையால் அச்சமயக்கொள்கையின் அடிப்படைத் தத்துவமாகிய ஊழ்வினையை
வலியுறுத்திப் பேசுகின்றாள்.
வினையின் வலிமையையும் இயல்பினையும்,
"ஊழிற் பெருவலி யாவுளூ மற்றொன்று
குழினும் தான்முந் துறும்"
என்ற குறட்பாவாலும், (திருக்குறள், ஊழ், 10)
"பல்லாவு ளுய்த்து விடினும் குழக்கன்று
வல்லதாம் தாய்நாடிக் கோடலைத் - தொல்லைப்
பழவினையும் அன்ன தகைத்தே தற்செய்த
கிழவனை நாடிக் கொளற்கு" (நாலடியார், பழவினை, 1)
என்ற நாலடியாராலும் மற்றும் பல ஜைன மத நூல்களாலும் அறியலாகும்.
இவ்வாறே, ஆங்காங்கு சாரண பரமேட்டிகள் தோன்றி ஜின தருமங்களை உபதேசம்
செய்யும் காட்சிகளையும், அடைக்கலக் காதையில்
தானத்தினாலுண்டாகும்பெரும் புண்ணியப்பேற்றையும், கவுந்தி அடிகள்
கண்ணகியின் கதியைக் கேட்டு (சல்லேகனா) உண்ணாவிரதமிருந்து
உயர்பதியெய்தியதையும், நூலின் இறுதியில் ஜைன சமயத்தின் அடிப்படையான
ஒழுக்கமாகிய கொல்லாமை, ஊனுண்ணாமை ஆகிய பற்பல சீலங்களையும், உலக
மக்களுக்குத் தமது வாயிலாகவே கூறி, காவியத்தை அழகாக முடிக்கின்றார்.
இதுபோன்று சைவ சமயத்தின் கொள்கைகளையாவது, தத்துவங்களையாவது, சமயப்
பொ�யோர்களையாவது, அவர்கள் உபதேசங்களையாவது எடுத்துப் பேசுகின்றாரா?
ஒருவா�யேனும் இல்லையே!
இவ்வாறு நூல் முழுமையும், தமது சமய தர்மத்தை விளக்கியிருந்தும்,
இவரைச் சைவ சமயத்தவரென்றும், இந்துவென்றும், ஜைனராயிருக்க
முடியாதென்றும் பலர் எழுதுகின்றனர். இதற்குக் காரணம் இந்நூலில்
ஆங்காங்குக் காணப்படுகின்ற இயற்கைக்கு மாறான செய்திகள், உயிர்ப்பலி,
வேள்வி, நரபலி முதலியவைகளேயாம். இவைகளுக்கு இளங்கோவடிகள் காரணமாகார்.
ஏனெனில் இவைகள் யாவும் வேடர்களாலும், சாத்தனாராலும் கூறப்பட்டனவே
யாகும். அவர்கள் கூறிய கதாநாயகர்கள் தமது சமயத்தைச்
சார்ந்தவர்களாயிருத்தலாலும், தமது சமயத்தை விளக்கக் கூடிய மூன்று
செய்திகள் இதில் முக்கியமாக இடம்பெறுவதாலும் இந்நூலினை இயற்ற
ஒருப்பட்டார். பதிகத்தில்,
"அரசியல் பிழைத்தோர்க்கு அறம்கூற் றாவதூஉம்,
உரைசால் பத்தினிக் குயர்ந்தோ ரேத்தலும்,
ஊழ்வினை யுருத்துவந் தூட்டு மென்பதூஉம்
சூழ்வினைச் சிலம்பு காரண மாகச்
சிலப்பதிகார மென்னும் பெயரால்
நாட்டுதும் யாமோர் பாட்டுடைச் செய்யுள்" (புறநானூறு, 192)
என்றுரைப்பதினின்றும் இது நன்கு விளங்கும். யாம் முன்னர்க் கண்டதுபோல்
இரண்டொரு பொருந்தாச் செய்திகள் பிறரால் புகுத்தப்பட்டும் உள்ளன.
எனினும், இந்நூலில் அக்காலத்து மக்களின் பழக்க வழக்கங்கள், இயல், இசை,
நாடக முறைகள், மதக் கோட்பாடுகள், இக்கதை சம்பந்தமாகப் பேசப்படுகின்ற
பல நிகழ்ச்சிகள், வதந்திகள், தெய்வ வழிபாடுகள், ஆகியயாவும்
அடங்கியிருக்கின்றன. அதனால்தான் சிலப்பதிகாரம் கலைக்காக மட்டுமின்றித்
தமிழ்நாட்டு வரலாற்று நூலாகவும் பலராலும் போற்றப்படுகின்றது.
செங்குட்டுவன் காலத்தில் இத் தமிழகத்தில் பல மதங்கள் இருந்தன, சமண
சமயம் தமிழர் சமயமாகவே யிருந்தது. அத்துடன் வைதிக சமயமும், புத்த
சமயமும் வந்து கலந்துகொண்டிருந்தன. ஜைன சமயத்தில் பிரதமானு யோகம்,
கரணானு யோகம், சரணானு யோகம், திரவ்யானு யோகம் என நான்கு மறைகள்
இருந்தன. அரசர், அந்தணர், வணிகர், வேளாளர் என நான்கு
பிரிவுகள்
இருந்தன. இப்
பிரிவுகள் தொழில் முறையால்
பிரிக்கப்பட்டன என்பதையும்
முன்னரே குறித்துள்ளோம். ஜைன சமயம் மக்கள் நல மேம்பாட்டிற்கென
வகுக்கப்பட்டதேயன்றி ஒரு கூட்டத்தாருக்கெனத் தோன்றியதன்று என்பதை
நினைவில் கொள்ளல் வேண்டும். இதனை மெய்ப்பிக்கவே "யாதும் ஊரே யாவரும்
கேளிர்" என்றார் நம் பூங்குன்றனாரும்1. ஆகவே, மேலே கூறிய நான்கு
வருணத்தாருக்கும், யாதொரு வேறுபாடுமின்றி, அறங்கள் வகுக்கப்பட்டன. அது
மட்டுமல்ல! மண முறைகளும் இருந்தன.
அந்தணர்கள் நான்கு வேதங்களையும் கற்றுணர்ந்து ஓதல், ஓதுவித்தல்,
வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் என்னும் அறுவகைக் கொள்கைகளைக்
கொண்டு விளங்கினார்கள்;. வேள்வி என்பது சாந்தி ஓமம் அல்லது பெருநல்
வேள்வியாகும். கோவலன் கண்ணகி மண வினையிலும் இந்த ஓமச்சாந்தியே
நடந்திருக்கிறது.
"நீல விதானத்து நித்திலப்பூம் பந்தர்க்கீழ்
வானூர் மதியஞ் சகடணைய வானத்துச்
சாலி யொருமீன் றகையாளைக் கோவலன்
மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிடத்
தீவலஞ் செய்வது காண்பார்,,,,,,"2 (சிலப்பதிகாரம், 1:1:49)
என்பதனால் இதனை அறியலாம். இதுபோன்ற மணவினையைச் சீவக சிந்தாமணி,
சூளாமணி, போன்ற ஜைன நூல்களில் காணலாம். இவ் வந்தணர்களை நான்மறையாளர்க
ளென்றும் அழைத்து வந்தார்கள். அந்தணர் என்றால், சாவகர் என்று
அடியார்க்குநல்லார் எழுதிய உரையாலும் இவ்வுண்மை விளங்கும். இந்தப்
பிரிவினைகள் பிற்காலத்தில் வேறுபட்டன. ஜைன சமயத்தில் காணும்
பிராமணர்களைப் போலவே வைதிக சமயத்திலும் (இந்து மதம்) பிராமணர்களைக்
காண்கிறோம். அவர்களுக்கும் நான்மறையாளர்கள், அந்தணர்கள் என்ற பெயர்கள்
வழங்கி வருகின்றன. வைதிகப் பிராமணர்களுக்கு நான்மறையாளர், அந்தணர்
என்ற பெயர்கள் ஜைன சமயத்தினருக்குப்பின் ஏற்பட்டன. இளங்கோவடிகள் இதை
நன்கு விளக்குகின்றார். அடிகளின் குறிப்பை யுணர்ந்து அடியார்க்கு
நல்லாரும் அவ் வந்தணர்களைப்
பிரித்தே காட்டுகின்றார். காடுகாண்
காதையில் மதுரைக்கு வழி கூறிய நான்மறையாளனைக் கவுந்தி அடிகள்,
"நலம்புரி கொள்கை நான்மறை யாள
பிலம்புக வேண்டும் பெற்றியீங் கில்லை" (சிலப்பதிகாரம் 2:11:152-153)
என்றுரைக்கு மிடத்தில் "நலம்புரி கொள்கை நான் மறையாள இகழ்ச்சிச் சொல்"
என்று அடியார்க்கு நல்லார் சிறப்பு உரையில் குறித்திருக்கின்றார்.
ஆதலின், இவ்விருவகைப் பிராமணர்களையும் நூலின் வாயிலாக ஊன்றிக்
கவனித்தாலன்றி விளங்குவதில்லை. வைதிக பிராமணர்கள் வேள்வியில் கொலை
புரிந்தும், மனுதர்ம சாத்திரத்தைக் கடைப்பிடித்தும் வந்தார்கள்.
இதற்குப் போதிய சா�த்திரச் சான்றுகளும், ஆகமச் சான்றுகளும்
நிறைந்திருக்கின்றன. அகிம்சா தருமத்தை அடிப்படையாகக் கொண்ட ஜைன
பிராமணர்களையும், வேத வேள்வியில் கொலை
புரியும் வைதிக பிராமணர்களையும்
பிரித்துக்காட்டவே,
"அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்" (திருக்குறள், நீத்தார் பெருமை, 10)
என எங்கள் குறளாசிரியர் அருளறத்தின் வழிவந்த ஜைன பிராமணர்களையே
அந்தணர் என்று குறிப்பிட்டார். சிலப்பதிகாரத்தில் அறக்களத்தந்தணர்
என்று பல இடங்களில் அடிகள் கூறுகின்றார். அவர்கள் அனைவரும் ஜைன
அந்தணர்களேயாவார்கள். ஆகவே இவ் விரண்டு கூட்டத்தாரையும் நான்
மறையாளர்களென்றே அழைத்து வந்தாலும், அவரவர்கள் சமயத்தையும்,
கொள்கைகளையும், அவர்களுக்குச் செலுத்தும் மா�யாதைகளையும் வெவ்வேறாகப்
பிரித்துக் காட்டியுள்ளார் இளங்கோவடிகள். கோவலன், கண்ணகி,
கவுந்தியடிகள் ஆகிய மூவரும் மதுரைக்குச் செல்லுகையில் வழியில் ஒரு
மறையோன் எதிர்ப்படுகின்றான். அக் காட்சியை இளங்கோவடிகள்,
தீதுதீர் சிறப்பிற் றென்னனை வாழ்த்தி
மாமுது மறையோன் வந்திருந் தோனை
யாது நும்மூ ��ங்கென் வரவெனக்
கோவலன் கேட்ப,. (சிலப்பதிகாரம், 2:11:30-34)
என அறிமுகப்படுத்துகின்றார். பிறகு மூவரும் மதுரை வந்தடைந்தார்கள்.
கவுந்தியடிகள் ஜைன தபோதனியா�ருக்கும் பள்ளியில் தங்கினார். அங்கே
கோவலனும் இருந்தான். அது சமயம்,
"நான்மறை முற்றிய நலம்புரி கொள்கை
மாமறை முதல்வன் மாடல னென்போன்
மாதவ முனிவன் மலைவலங் கொண்டு
குமா�யம் பெருந்துறை1 கொள்கையிற் படிந்து
தமர்முதற் பெயர்வோன் றாழ்பொழி லாங்கண்
வகுந்துசெல் வருத்தத்து வான்றுயர் நீங்கக்
கவுந்தி யிடவயிற் புகுந்தோன் றன்னைக்
கோவலன் சென்று சேவடி வணங்க" (சிலப்பதிகாரம், 2:15:12-20)
என்று மாடல மறையோனைக் கோவலன் சென்று சேவடி வணங்கியதாக
அறிமுகப்படுத்துகின்றார். இவ்விரண்டையும் சீர்தூக்கிப் பாருங்கள்.
முன்பு கூறிய மறையோனைக் கோவலன் வணங்கவில்லை, அவன் கூறிய
வார்த்தைகளையும் கவுந்தியடிகள் மறுத்தார். புறஞ்சோ�யிறுத்த காதையில்
கோவலனைக் கோசிகன் என்னும் அந்தணன் சந்திக்கின்றான். அவனையும் கோவலன்
வணங்கவில்லை. இங்கு மாடலனைக் கோவலன் சென்று சேவடி வணங்குகின்றான்.