 |
கடவுளர் கோட்டம்
இவ்வா�களுக்கு உரை எழுதிய அடியார்க்குநல்லார், குணவாயில் என்பது 'திருக்குணவாயில்
என்பதோர் ஊர்' என்றும், 'கோட்டம் என்பது அருகன் கோயில்' என்றும்,
விளக்கியுள்ளார். அரும்பத உரையாசிரியரும்,
"வஞ்சி மூதூர் மணி மண்டபத்திடைத் தந்தையோடிருந்துழி அரசு
வீற்றிருக்கும் திருப்பொறியுண் டென்று ஓர் நிமித்திகன் சொல்ல,
முன்னோனாகிய செங்குட்டுவன் இருப்ப இவ்வாறு முறைபிறழக் கூறியது பொறாது
குணவாயில் கோட்டத்துக் கடவுளர் முன்னர்த் துறந்திருந்த
இளங்கோவடிகளுக்கு,,,"
எனக் குறிப்பிட்டுள்ளார். இவ்விரு உரையாசிரியர்களுக்கும் இளங்கோவடிகள்
துறவியானார் என்பதிலும் குணவாயிலிலுள்ள அருகன் கோயிலில்
துறந்திருந்தார் என்பதிலும் கருத்து வேறுபாடில்லை.
கோட்டம்
கோட்டம் என்பது பொதுவாக கோயில்களுக்கும், அரண்மனைகளுக்கும் பெயராக
வழங்கி வந்துள்ளது. சிலப்பதிகாரத்தின் பல சமயக் கோட்டங்கள்
கூறப்பட்டுள்ளன. குறிப்பாக சைன சமயக் கோவில்களைக் குறிப்பிடும்போது,
'புறநிலைக் கோட்டம்' 'நிக்கந்த கோட்டம்' 'ஐவகை நின்ற அருகத்தானம்', 'கந்தன்
பள்ளி' 'பஞ்ச பரமேட்டி கோவில்' எனப் பல பெயா�ட்டு அழைக்கின்றார்
இளங்கோவடிகள். புறநிலைக் கோட்டம் என்பது நகரத்திற்குப் புறம்பே உள்ள
கோவில். இக் கோவில்களில் ஜைன முனிவர்கள் தங்கி வழிபடுவார்கள். மற்றக்
கோட்டங்கள் நகருக்குள்ளே அமைந்திருப்பன. இவைகளில் நகரத்து மக்கள்
பலரும் வழிபட்டு வருவர். அக்காலத்தில் தனித்துத் தவம்
புரிந்து வரும்
முனிவர்களுக்கென புறநகர்க் கோட்டங்கள் அமைந்திருந்தன. காவிரியின்
கரையோரத்தில் அமைந்த பல கோட்டங்களைச் சிலப்பதிகாரம் காட்டுகிறது.
இவ்வாறே மதுரை, உறையூர், திருவரங்கம் முதலிய இடங்களில் இருந்த
புறநகர்க் கோட்டங்களைச் சிலம்பு வழிக்காணலாம். இத்தகு புறநகர்க்
கோட்டங்களில் ஒன்றுதான் 'குணவாயிற் கோட்டம்'. அது அருகன்
கோட்டமாகையால் அடியார்க்கு நல்லாரும், அரும்பதவுரையாசிரியரும் அதனை
அருகன் கோயில் எனக் குறிப்பிட்டனர். இளங்கோவடிகள், இக்கோட்டத்தில்
தான் துறவு மேற்கொண்டார். எனவே, அடியார்க்குநல்லார் தம் உரையில்
குணவாயிற் கோட்டம் என்ற பகுதிக்கு 'திருக்குணவாயில் என்பதோர் ஊர், அது
வஞ்சியின் கீழ்த் திசைக்கண் உள்ளது, கோட்டம்-அருகன் கோயில்' என
உரையில் விளக்கியுள்ளார்.
அடியார்க்கு நல்லாரும், அரும்பதவுரை யாசிரியரும் பொறுப்பு வாய்ந்த
உரையாசிரியர்கள். அவர்கள் காலத்தில் குணவாயிற் கோட்டம் நல்ல நிலையில்
இருந்திருக்க வேண்டும். அதனால் அக் கோட்டத்தின் வரலாற்றைப்
பல்லாற்றானும் ஆய்ந்து அறிந்தே அதனை அருகன் கோயில் என உறுதியுடன்
அறுதியிட்டுக் கூறினர். இக்காலத்தார் அக்கோட்டத்தின் வரலாற்றை
அறிந்திராததாலும் இளங்கோவடிகளைச் சமணர் எனக் கொள்ளக்கூடாது என்ற
காழ்ப்புணர்ச்சியாலும் மறுத்து எழுதி வருகின்றனர்.
நல்ல வேளையாக இவர்கள் மயக்கம் தெளியவும், அடியார்க்கு நல்லாரின் கொள்கையை உறுதியுடன் நிலைநாட்டவும், குண வாயிற் கோட்டத்து வரலாறு பல
ஆதாரங்களுடன் கிடைத்துள்ளது. அவ்வரலாற்றைப் படித்து இன்புறுவோம்!
குணவாயில் கோட்டம்
அலகாபாத்து இந்தி சாகித்திய சம்மேளனம் வெளியிட்டுள்ள 'கேரள விசேக்ஷ�ங்'
என்ற இந்தி நூலின் ஆசிரியர் அறிஞர் ஏ. ஸ்ரீதரமேனன் 'பலகலாசார நாடு'
என்ற தலைப்பில் குணவாயில் கோட்டத்தைப் பற்றி பின்வருமாறு
எழுதியுள்ளார்:
'கி.மு. கடைசி நூற்றாண்டுகளில் சமணர்கள் தென்னகத்தில்
பெருகியிருந்தார்கள். இதற்குச் சான்று தமிழ்க் காப்பியமான
சிலப்பதிகாரம். சேரமன்னா�ன் இளவலான இளங்கோவடிகள்தான் இதன் ஆசிரியர்.
குணவாயில் கோட்டத்தில் அடிகள் வசித்து வந்தார். திருச்சூர்
மாவட்டத்தைச் சேர்ந்த மதிலகந்தான் அன்றைய குணவாயில் கோட்டம், அந்தக்
காலத்தில் மதிலகம் ஜைனசமயத்துக்கும் கல்விக்கும் மையமாக இருந்தது.
முன் காலத்தில் பல ஜைனப் பள்ளிகளும் ஜைன சமயமையங்களும் கேரளப்
பகுதிகளில் இருந்தன. பிறகு சமயக் காழ்ப்புகளின் விளைவாக அவை அழிந்தும்
உருமாறியும் போயின. மதிலகத்திலேயே பொ�ய தொரு சமவசரணம் என்ற ஜைனர்
ஆலயம் இருந்தது. அதைச் சார்ந்து அக்கம் பக்கங்களில் பல ஜைனக்
கோயில்கள் இருந்தன. பிறகு அவை அனைத்தையும் இந்து கோயில்களாக மாற்றி
விட்டார்கள். 'கோகசந்தேசம்' (சக்ரவாகப்பட்சி விடுதூது) என்னும்
மலையாளப் பிரபந்த நூலின்படி பதினான்காம் நூற்றாண்டு வரையிலும் மதிலகம்
ஆலயத்தில் ஜாதி இந்துக்கள் கூட நுழையவில்லை. ஆதலால் அதற்கு முன்பு அது
ஜைனப் பள்ளியாகவோ ஜைனர் ஆலயமாகவோ இருந்திருக்கவேண்டும்'
இவ்வரலாற்றுண்மையால் குணவாயில் கோட்டம் என்பது ஜைனப் பள்ளியே என்பதும்
இங்கே இளங்கோவடிகள் தவமியற்றி வந்தார் என்பதும் தெளிவாகிவிட்டன.
குணவாயில் கோட்டம் என்பதில், கோட்டம் என்றால் கோயில் என்றும், ஆகையால்
இளங்கோவடிகள் சிவன் கோயிலில் தான் துறந்திருந்தாரென்றும் பொருள்
கொள்ளுமாறு எழுதியுள்ளார் ஒரு புலவர். குணவாயில் என்னும் ஊரில் விளங்கிய அக்கோட்டம் அருகன் கோயில் என்பதை அறிந்தே அடியார்க்கு
நல்லார் உரை எழுதியுள்ளார். அடியார்க்குநல்லார் கொங்கு நாட்டைச்
சேர்ந்தவர்; பேரறிவாளர். அவரை இலங்கையிலுள்ள சிங்கநல்லூர் மன்னன்
அமைச்சராக அமர்த்திக்கொண்டான். எனவே, அடியார்க்குநல்லார் அறிவும்
பண்பும் நடுத்திறம்பாக்கொள்கையுமுடைய அமைச்சராகப் பணியாற்றியவர். அவர்
சிலப்பதிகாரத்திற்கு உரை எழுதியதும் அக்காலமே.1 ஆகவே அவர் வரலாற்றுச்
செய்திகளை ஆராய்ந்தறிந்தே வெளியிடுவாராகையால் குணவாயில் கோட்டம அருகன்
கோயில் என்னும் உண்மையை அறிந்தே எழுதினார் என்பது உறுதி. அரும்பத உரை
ஆசிரியரும் திருக்குணவாயில் கோயில் எனக் கூறுவதும் அருகன் கோயிலென்றே
பொருள்படும்.
மேலும், வரந்தரு காதையில் தேவந்தி ஆவேசம் வந்து, இளங்கோவடிகளைப்
பற்றிக் கூறி வருகையில்,
கடவுளர்
"செங்குட் டுவன்றன் செல்லம் நீங்க்ப
பகல்செல் வாயிற் படியோர் தம்முன்
அகலிடப் பார மகல நீக்கிச்
சிந்தை செல்லாச் சேணெடுந் தூரத்து
அந்தமில் இன்பத் தரசாள் வேந்தென்
றென்திற முரைத்த இமையோ
ரிளங்கொடி" (சிலப்பதிகாரம், 3:30:178-183)
என்றார். அரும்பத உரையாசிரி, "செங்குட்டுவனிருக்க இவ்வாறு முறைமை
கெடச் சொன்னாய் என்று அந்நிமித்திகனை வெகுண்டு நோக்கிக்
குணவாயிலிடத்துத் துறந்திருக்கின்ற கடவுளாக வந்து இராச்சிய பாரத்தை
விட்டு நீங்கி, மோட்சமாகிய இராச்சியத்தை ஆளக்கடவ வேந்தனல்லையோ" என
விளக்கியுள்ளார்.
அந்தமில் இன்பம் என்பதே ஜைன சமயத்தின் மோட்ச நிலை; இதனைக்
கடையிலாயின்பம், இறுதி யிலின்பம், ஈறிலின்பம் என இதே சிலப்பதிகாரமும்,
சிந்தாமணி, சூளாமணி, சூடாமணி நிகண்டு, சாந்திபுராணம், திருக்கலம்பகம்
போன்ற நூல்களும் குறிப்பிடுதலைக் காணலாம். எனவே இளங்கோவடிகள் வீடுபேறு
பெறும் ஆற்றல் கொண்ட பற்றற்ற துறவோர் என்பதும் பெறப்படுகிறது.
'கடவுளர் முன்னர்த் துறந்த' என்பதனால் 'அருகப் பெருமானின் துறவற
நெறியை மேற்கொண்ட துறவிகள் முன்னர்'
1. அடியார்க்கு நல்லார் குளம், அடியார்க்குநல்லார் மண்டபம் என
நினைவுச் சின்னங்களும் இலங்கையில் இருக்கின்றனவென்பதை அடியார்க்கு
நல்லார் ஆராய்ச்சி நூலில் காண்க.
என்பது அரும்பத உரையாசிரியர் பொருள். இன்று ஜைன சமயம் அல்லது சமண
சமயம் எனப் பிறரால் அழைக்கப்படுவது ஆதிபகவனால் (பகவான் விருடப தேவர்)
அருளப்பட்ட திருவறக்கொள்கையே யாகும். இவ் வுலகில் முதன் முதல் இல்லறம்,
துறவறம் எனும் இரு பேரறங்களை வகுத்தருளியவர் பகவான் விருடப தேவரேயாவர்.
அப் பெருமகன் அருளிய துறவற நெறியை மேற்கொண்டவர்களைக் 'கடவுளர்' எனப்
பண்டைய தமிழ்நூல்கள் பலவும் போற்றுகின்றன. இளங்கோவடிகள் தமது
சிலப்பதிகாரத்திலேயே,
"கந்தன் பள்ளிக் கடவுளர்க் கெல்லாம்" (சிலப்பதிகாரம், 2:11:5)
எனப் போற்றியுள்ளதைக் காணலாம். உதயணன் தான் கண்ட கனாவின் பயனை
விளக்குமாறு ஒரு முனிவரை அணுகியமையைக் கூற வந்த பெருங்கதை ஆசிரியர்
கொங்குவேளிர்,
"அளப்பருவம் படிவத்து அறிவர் தானத்துச்
சிறப்பொடு சென்று சேதியம் வணங்கிக்
கடவது திரியாக் கடவுளர் கண்டுநின்று
இடையிருள் யாம நீங்கிய வைகறை
இன்றியான் கண்டது இன்னது,,,,." (பெருங்கதை 4:5:85:89)
என்றார். முனிவரைக் கடவுளர் என்றார். திருத்தக்க தேவரும், சீவக
சிந்தாமணியில்,
"காசறு துறவின் மிக்கக் கடவுளர் சிந்தைபோல்" (சீவகசிந்தாமணி, 851)
என விளக்கியுள்ளார்.
சூளாமணி ஆசிரியர் தோலா மொழித்தேவர்,
"பனிமலர்த் தாமரைப் பழன நாடனைக்
கனிய மற்றின்னனங் கடவுள் கூறினான்" (சூளாமணி, இரத்துநூபுரச்சருக்கம்,
78)
எனவும், கம்பராமாயணத்தில் கவிச்சக்கரவர்த்தி கம்பர்,
"கொல்லாத விரதத் தார்தம் கடவுளார் கூட்டம் ஒத்தார்" (கம்பராமாயணம்,
யுத்தகாண்டம், இந்திரசித்து வதைப்படலம், 56)
எனவும் கூறியிருப்பதால், கடவுளர் (பார்க்க : மயிலை சீனி வேங்கடசாமி,
கடவுள்-ஜைன முனிவர், மும்மணி 1:4, 15-10-47) என்பது ஜைனத் துறவிகளையே
குறிப்பதாகும். இவ்விளக்கத்தால் அரும்பதவுரையாசிரியர் கருத்தும்
அருகர்கோயிலென்பதேயாகும்.