 |
நற்காட்சி
இளங்கோவடிகள் தமது காவியத்தில் முடிவுரையாகக் கூறும் அறவுரைகளில், "தெய்வந்
தெளிமின்" என்பதில், அவர் சமயமும் தெளிவாகிறது. நற்காட்சி, நல்ஞானம்,
நல்லொழுக்கம், ஆகிய மூன்றும் ஜைன சமயத்தின் அடிப்படையான கொள்கைகள்1.
இவற்றை ஜைன நூல்கள் பரக்கப் பேசும். எடுத்துக்காட்டாக,
"காட்சி யொழுக்கொடு ஞானம் தலைநின்று
மாட்சி மனைவாழ்த லன்றியு-மீட்சியில்
வீட்டுலக மெய்தல் என இரண்டே, நல்லறங்
கேட்டதனா லாய பயன்" (அறநெறிச்சாரம், 11)
என்ற அறநெறிச்சார நூலில் வரும் பாடலால் உணரலாம்.
இவைகளில் நற்காட்சி என்பது இறைவன், முனிவன், நூல், ஆன்மா
முதலியவைகளின் உண்மைகளை நன்கு ஆராய்ந்து உள்ளவாறே தெளிதலாகும். ஜைன
சமயப் பொ�யோர்கள், பிற சமய நூல்களையும் அவர்கள் தர்மங்களையும்
ஆராய்ந்து அறிய மக்களுக்குச் சுதந்திரம் அளித்துள்ளார்கள்.
"காட்சி வகைதான் கடவுண் முதலாய
மாட்சி யமைந்த பொருளெட்டு மனத்துவைத்து
மீட்சி யிலதாய்
விரிந்துந்திய வின்ப வெள்ள
வேட்கை யதுவாந் தெளிவென் றனர்வென்றவரே" (நீலகேசி, 121)
என நீலகேசி ஆசிரியரும்,
"நிறுத்தறுத்துச் சுட்டுரைத்துப் பொன்கொள்வான் போல
அறத்திறனும் ஆராய்ந்துள் புக்கால்-பிறப்பறுக்கும்
மெய்ந்நூல் தலைப்பட லாகுமற் றாகாதே
கண்ணோடிக் கண்டதே கண்டு" (அறநெறிச்சாரம், 22)
என அறநெறிச்சார ஆசிரியரும் விளக்கியுள்ளார்கள். இவ்வாறு ஆராய்ந்து
தெளியும் அறிவிற்கே நற்காட்சி என ஜைன நூல்கள் அனைத்தும் கூறுகின்றன.
நற்காட்சி எனில் பகுத்தறிவினால் ஆராய்ந்து உண்மை காணல் எனப்படும்.
நமது திருக்குறளாசிரியரும் இதனை மெய்யுணர்தல் எனப் பெயா�ட்டு ஓர்
அதிகாரமே வகுத்துள்ளர். இந்தப் பகுத்தறி வியக்கம் (Rationalism)
உலகெல்லாம் இப்பொழுது பரவி வருவதை நாம் அறிகிறோம். இந்த இயக்கம் நமது
நாட்டில் எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே பகவான் விருடபதேவரால்
தோற்றுவிக்கபட்டிருக்கிறதென்பதை ஜைன நூல்களிலெல்லாம் காணலாகும்.
மகாவீரவர்த்தமானர், சமவசரணத்தினின்றும் அறவுரைகள் போதித்த பின்னர்,
"யுக்திமத் வசனம் யஸ்வதஸ்வ கார்ய பா�க்கிரஹ
பா�க்ஷய பி�க்ஷ� ஓக்ராஹிம் மத்வச: நது ஆதராத்"
"என்னை எல்லோரும் தெய்விக புருஷராகப் போற்றுகின்றார்கள் என்பதற்காக
என்னுடைய வசனத்தை அப்படியே ஏற்றுக்கொள்ளாதீர்கள். உங்கள் யுக்தியால்
ஆராய்ந்து தெளியுங்கள்" எனக் கூறுவதாலும் இவ்வுண்மை விளங்கும்.
"மெய்ப்பொருள் தேறுதல் நற்காட்சி யென்றுரைப்ப
ரெப்பொருளுங் கண்டுணர்ந் தார்" (அருங்கலச் செப்பு, 3)
"இறைவனு முனிய நூலும் யாதுமோர் குற்றமில்லா
நெறியினைத் தெளிதல் காட்சியாம்" (மேருமந்தர புராணம், 355)
"மெய்வகை தொ�தல் ஞானம்
விளங்கிய பொருள் கடம்மைப்
பொய்வகை யின்றித் தேறல் காட்சி" (சீவகசிந்தாமணி, 1436)
"மெய்ப்பொருள் தொ�தல், மற்றுமப்
பொருள்மிசை
விரிந்த ஞானம்
அப்பொருள் வழாத நூலின்
அருந்தகை ஒழுக்கம் தாங்கல்
இப்பொருள் இவைகள், கண்டாய்
இறைவனால் விரிக்கப் பட்ட
கைப்பொரு ளாகக் கொண்டு,
கடைப்பிடி கனபொன் தாரோய்" (சூளாமணி, 201)
இத்தகைய காட்சியையுடையார் அடையும் பயனையும், பெருமையையும்,
"இருள் நீங்கி இன்பம் பயக்கும்; மருள்நீங்கி
மாசறு காட்சி யவர்க்கு" (திருக்குறள், மெய்யுணர்தல், 2)
எனக் குறளாசிரியரும் கூறுகின்றார். இது போன்றே நற்காட்சி (சம்யக்தா�சனம்)யை
உடையவராய் அதன் வழி நிற்போர் ஜைன நூல்களில் குற்றமற்ற காட்சியுடையார்
எனப் போற்றப்படுவர். சீவக சிந்தாமணி ஆசிரியர்
திருத்தக்கதேவரைப்பற்றிப் புகழும் அந்நூலின் உரைச்
சிறப்புப்பாயிரத்தில்,
"சிந்தா மணியைத் தெண்கடன் மாநிலம்
வந்தா தா�ப்ப வண்பெரு வஞ்சிப்
பொய்யா மொழிபுகழ் மையறு காட்சித்
திருத்தகு முனிவன்" (சீவகசிந்தாமணி, உ.வே.சா. பதிப்பு, 1969, பக்கம்
1523)
என்றும், வளையாபதி, நிக்கந்த வேடந்தாங்கிய ஜைன முனிவர்களை,
"துக்கந் துடைக்குந் துகளறு காட்சிய
நிக்கந்த வேடத் திருவடிக் கணங்களை
யொக்க வடிவீழ்ந் துலகியல் செய்தபி
னக்கதை யாழ்கொண்டமை வரப்பண்ணி" (வளையாபதி, 2)
என்றும் திருக்குறள், (திருக்குறள். புலால் மறுத்தல், 8; வினைத்தூய்மை,
4; ஒப்புரவறிதல், 8)
"செயிரிற் றலைப்பிரிந்த காட்சியா ருண்ணார்
உயிரிற் றலைப்பிரிந்த ஊன்"
"இடுக்கட் படினும் இளிவந்த செய்யார்
நடுக்கற்ற காட்சி யவர்"
"இடனில் பருவத்து மொப்புரவிற் கொல்கார்
கடனறி காட்சியவர்"
எனப் பல குறள்களால் கூறுகின்றார். சிலப்பதிகாரத்தில் இந்த
நற்காட்சியின் நன்மணம் ஆங்காங்கு வீசுவதைக் காணலாம். கோவலன் தன்னைப்
பிரிந்ததற்கு வருந்தி மாதவி ஓர் ஓலை எழுதி அனுப்புகின்றாள்.
அவ்வோலையில் "பொய் தீர் காட்சிப் புரையோய் போற்றி" என வணக்கம்
கூறுகின்றாள். மாடலமறையோன் செங்குட்டுவனுக்கு ஜைன தர்மங்களைப்
போதித்த பின்னர், இவைகள், "பொய்யில் காட்சியோர் பொருளுரையாதலின்" என
முடிப்பதையும் முன்னரே கண்டோம். ஆகவே, ஜைன சமயத்தவர் பகுத்தறிவு
இயக்கத்தை வளர்த்து வந்தார்கள் என்பதும், அவ் வியக்கத்தில் நம்பிக்கை
கொண்டு அவ்வறங்களைக் கடைபிடித்து ஒழுகும் அனைவரையும்
நற்காட்சியுடையார் என அழைத்து வந்தார்களென்பதும், இதுவரை நாம்
ஆராய்ந்து வந்த ஜைன நூல்களில் வாயிலாக அறிகின்றோம். இவ்வாறு வேறு
எந்தச் சமயத்தினரும் இந் நற்காட்சியைத் தங்கள் நூல்களிலோ, மதங்களிலோ
எடுத்துப் பேசவில்லை.
இனி இளங்கோவடிகள் தமது அறவுரையில் "தெய்வந்தெளிமின்" எனக் கூறியதன்
உட்பொருளைப் பகுத்தறிவால் ஆராய்வோம். உலகில் பல சமயங்கள் இருக்கின்றன.
ஒவ்வொன்றிலும் கடவுளைப் பற்றியும், அதன் குணம், உருவம், செயல்களைப்
பற்றியும் வெவ்வேறாகக் கற்பிக்கப்பட்டிருக்கின்றன. இவைகளில் எவை
கடவுளுக்குரியவை? கடவுள் எவ்விலக்கணத்தோடு விளங்குகின்றார்?
அவருக்கும் உலகுக்கும் உள்ள தொடர்பு யாது? எனும் உண்மைகளை ஆராய்ந்து
தெளிதல் வேண்டும். அதன் பின்னரே கடவுளை வழிபடுதல் அறிவுடைமையாகும்.
எனவே, இளங்கோவடிகள் 'தெய்வந்தொழுமின்' எனக் கூறாது தெய்வந் தெளிமின்
எனப் பகுத்தறிவின் பால் விட்டுள்ளார். இவ்வறிவினையே நற்காட்சி யென
முன்னர் கூறியுள்ளோம். திருக்குறளாசிரியரும்,
"எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு" (திருக்குறள். மெய்யுணர்தல்.5)
என்றார். எனவே, கடவுளைப் பற்றி ஆராய்வோம். கடவுளைப் பற்றி உலகில் பல
கொள்கைகள் இருக்கின்றன. பற்பல அற்புதக் கதைகளும் புராணங்களில்
எழுதப்பட்டிருக்கின்றன. பொதுவாகக் கடவுள் என்ற ஒருவரே இவ்வுலகைப்
படைத்துள்ளார் என்றும், அவர் எங்கும் நிறைந்திருக்கின்றார் என்றும்,
நிலம், தீ, நீர், காற்று, இரு சுடராய் எவ்வுயிருமாய் நின்றார் என்றும்,
நமது வாழ்வுக்கும் தாழ்வுக்கும் அவரே காரணர் என்றும், அவனன்றி
ஓரணுவும் அசையாது என்றும், பேசப் படுகின்றன. இவ்வாறு ஒரு கடவுள்
இருக்கின்றாரா? மக்கள் இன்பத்தையோ துன்பத்தையோ அடைய அல்லது
அடையாதிருக்கும்படி செய்ய அவருக்கு ஆற்றல் உண்டா? நம் வாழ்க்கையில்
தலையிட அவரால் இயலுமா? இவைபற்றிச் சாதாரணமாக ஒருவரும் சிந்திப்பதில்லை.
கடவுள் இவ்வுலகை ஏன் படைத்தார்? எங்கிருந்து படைத்தார்? எதைக் கொண்டு
படைத்தார்? என்பதையும் ஆராய்ந்தறிவதில்லை. பழக்கங் காரணமாகக் கடவுள்
என்னும் எண்ணம் உள்ளத்தில் வேரூன்றிவிட்டது. அறிவியல் துறையில் உலகம்
எவ்வளவோ முன்னேறியிருக்கிறது. பெரும் வியப்புக்குரிய புதுமைகள் பல
இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. ஆயிரக்கணக்கான
மைல்களுக்கப்பால் நடைபெறும் சொற்பொழிவு அல்லது இசையை இங்கிருந்தே
ரேடியோ மூலம் கேட்கின்றோம். மற்றும் பேசும் படம், அணுகுண்டு முதலிய
பல அற்புத அறிவியல் செயல்களைக் காண்கின்றோம். இவைகள் யாவும் மனிதன்
முயற்சியால் கண்டு பிடிக்கப்பட்டவை.