 |
தேன் உண்ணாமை
கோவலன், கண்ணகி இருவரும் வழியில் கவுந்தியடிகளைச் சந்திக்கின்றனர்.
இங்கே இளங்கோவடிகள் கதாநாயகர்களிருவரையும் ஜைன சமயத்தினரே யென்பதை
அவர்கள் செயலாலும், நெறியாலும், கவுந்தியடிகள் வாயிலாலும்
மெய்ப்பித்துக் காட்டுகின்றார்:
"தேமொழி தன்னொடுஞ் சிறையகத் திருந்த
காவுந்தி யையையைக் கண்டடி தொழலு
முருவுங் குலனு முயர்பே ரொழுக்கமும்
பெருமகன் திருமொழி பிறழா நோன்பும்
உடையீ ரென்னோ வுறுக ணாளா�ற்
கடைகழிந் திங்ங்னங் கருதிய வாறென" (சிலப்பதிகாரம் 1:10:44-49)
ஸ்ரீ கோயிலின் அருகேயுள்ள தவப்பள்ளியில் வீற்றிருந்த தவ நெறியில்
விளங்கா நின்ற கவுந்தியடிகளைக் கண்டு, இருவரும் தொழுதார்கள்.
கவுந்தியடிகள் அவ்விருவரையும் உற்று நோக்கி, "பேரழகும்,
குடிப்பிறப்பும், நல்லொழுக்கமும் ஒருங்கே அமைந்தவராய் அருகதேவன்
அருளிச் செய்த ஆகம நெறியுடையவராய் விளங்கும் நீங்கள், தீவினையாளரைப்
போல், நுமது,. இடத்தைக் கழிந்து வருவதற்குக் கருதிய தென்னோ" என்று
வினவுகின்றார். முன்னே அவ்விருவரும் அருகனை வலங்கொண்டு தொழுது வந்தனர்
என்றும், இங்கே அருகதேவன் அருளிச்செய்த நோன்பினையுடையவர் என்றும்
விளக்கி, கோவலனும் கண்ணகியும் ஜைன சமயத்தினரே என்பதை கவுந்தியடிகள்
வாயிலாக உறுதிப் படுத்துகின்றார்.
ஜைனர்கள் என்றால் கொல்லா விரதிகள், புலாலுண்ணாதவர்கள், இரவுண்ணா
நோன்பிகள் என்று தான் பலரும் அறிந்துள்ளார்கள். ஜைன சமயத்தினர் உயிர்
போவதாயினும் தேனீக்களால் சேகா�க்கப்பட்ட தேனை அருந்தவே மாட்டார்கள்.
அ�து, புலால் உணவுக்குச் சமம் எனக் கருதி, ஜைன சமயத்தில்
ஒதுக்கப்பட்டுள்ளது.
"ஒழுக்கமே யன்றித் தங்க
ளுள்ளுணர் வழிக்கும் மட்டும்
புழுப்பயில் தேனு மன்றிப்
பிறவற்றின் புண்ணு மாந்தி
விழுப்பய னிழக்கு மாந்தர்
வெறுவிலங் கென்று மிக்கார்
பழித்தன வொழித்தல் சீலம்
பார்மிசை யவர்கட் கென்றான்" (சீவக சிந்தாமணி, 2822)
"விரையார் மலர்மிசை வருவார் திறவறம் விழைவார்
கொலையினை விழையார்பொய்
யுரையார் களவினை யொழுகார் பிறர்மனை யுவவார்
மிகுபொரு ளுவவார்வெஞ்
சுரையா லுணர்வினை யழியா ரழிதசை
துவ்வார் விடமென வெவ்வாறும்
புரையார் நறவினை நுகரா
ரிரவுணல்புகழார்
குரவரை இகழாரே" (திருக்கலம்பகம், 67)
"கள்ளொடு தேன்புலைசுண்ணாமை யைவதமும்
தெள்ளுங்கால் மூல குணம்," (அருங்கலச்செப்பு, 82)
கவிச்சக்கரவர்த்தி சயங்கொண்டாராகிய ஜைனக் கவி தமது ஊரைக் குறித்துப்
பாடிய பாக்களொன்றில்,
"செய்யும் வினையு மிருளுண் பதுவும்
தேனு நறவு மூனு முயிரும்
பொய்யும் கொலையும் களவுந் தவிரப்
பொய்தீர் அறநூல் செய்வார் தமதூர்"
என்பர். இவ்வாறே இன்னும் பல ஜைன நூல்களிலெல்லாம் தேனுண்ணாமை
வற்புறுத்தப்பட்டிருப்பதைக் காணலாம்.
இதனை இளங்கோவடிகள் கவுந்தியடிகள் வாயிலாக விளக்கிக்காட்டுகின்றார்.
கவுந்தியடிகள் மதுரைக்குச் செல்லும் பாதை மிகக் கடினமான தென்றும்,
காடுகளும், மலைகளும், கற்களும் சூழ்ந்திருப்பதால் கண்ணகிக்கு மிகத்
துன்பத்தை விளைவிக்குமென்றும் கூறிவிட்டு, நமது சமயக் கொள்கைப்படி
நடக்கவொட்டாமல் மனத்தைக் கெடுக்கும் சம்பவங்களும் நிகழுமென்பதை
விளக்குகையில்,
"கரும்பில் தொடுத்த பெருந்தேன் சிதைந்து
கரும்புசூழ் பொய்கைத் தூநீர் கலக்கும்
அடங்கா வேட்கையி னறிவஞ ரெய்திக்
குடங்கை யினொண்டு கொள்ளவுங் கூடும்" (சிலப்பதிகாரம், 1:10:82-85)
எனத் தேன் கலந்த நீரையும் அருந்துதல் கூடாதென வற்புறுத்துகின்றார்.
இதற்கு உரை கூறவந்த அடியார்க்குநல்லாரும், "நமது தா�சனத்துக்
கடியப்பட்ட வாற்றல் தேனுண்டலை பா�கா�க்க வென்பதாம்" என எழுதியுள்ளார்.
இளங்கோவடிகளின் சமயப் பற்று இத்துடன் நின்றுவிட்டதா? இல்லை! இல்லை!!
அடிகள் எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுகிய சிறந்த ஜைனத் துறவி
யாகையால் அவர் உயிர்களிடத்துக் கொண்டுள்ள பேரன்பைத் தன்னைப் போன்ற
துறவியாகிய கவுந்தியடிகள் வாயிலாக,
"குறுந ரிட்ட குவளையும் போதொடு
பொறிவா� வண்டினம் பொருந்திய கிடக்கை
நெறிசெல் வருத்தத்து நீரஞ ரெய்தி
யறியா தடியாங் கிடுதலுங் கூடு
மெறிநீ ரடைகரை யியக்கந் தன்னிற்
பொறிமா ணலவனு நந்தும் போற்றா
தூழடி யொதுக்கத் துறுநோய் காணிற்
றாழ்தரு துன்பந் தாங்கவும் ஒண்ணா
வயலுஞ் சோலையும் அல்லதி யாங்கணு
மயல்படக் கிடந்த நெறியாங் கில்லை
நெறியிருங் குஞ்சி நீவெய் யோளொடு
குறியறிந் தவையவை குறுகா தோம்பென" (சிலப்பதிகாரம், 1:10:86-97)
என்று வழியில் தம்மை அறியாமல் நோ�டும் சீவஇம்சையைக் கோவலனுக்கு
எடுத்துக்கூறி, அதனைப் பாதுகாத்துச் செல்ல வேண்டிய கடமையையும்
குறிக்கின்றார்.
ஜைன சமயத்தில் பஞ்ச நமஸ்கார மந்திரம் மிக முக்கியானது. 'பஞ்ச
நமஸ்காரம்' என்பது அரகந்தர், அசா�ரி (சித்தர்) ஆசாரியர், உபாத்தியாயர்,
முனிகள் (சாதுக்கள்) என்னும் பஞ்சபரமேஷ்டிகளை எப்பொழுதும் தியானிப்பது.
இதற்கு உபதேச மந்திரம் என்றும் பஞ்ச நமஸ்கார மந்திரம் என்றும் பெயர்.
இன்றும் ஜைனர்கள் காலை, மாலை இரு வேளைகளிலும் மேலே கூறிய பஞ்ச
நமஸ்கார மந்திரமாகிய நமோ அரஹந்தாணம், நமோசித்தாணம், நமோ ஆயிர்யாணம்,
நமோ உபாத்திய யாணம் நமோ லோய சவ்வ சாஹ�ணம் என மனத்தில் ஐந்து அல்லது
ஏழு தடவை தியானித்த பின்னரே வேறு செயல்களில் ஈடுபடுவார்கள். இவ்வைந்து
மந்திரங்களையும், தெய்விக மந்திரங்களாகவே போற்றுவார்கள். இதன்
பெருமையைத் திருக்கலம்பக ஆசிரியர்,
"நாதனக் கமிழ்து நன்சுவை யுதவு
நற்கனி மருத்துவர் காணு
நோய்தனைத் தணிக்கும் நன்மருந் துழலு
நோன்பகை யெறிதருந் திகிரி
வேதனைக் கடலின் றனிப்புணை நெஞ்சம்
வேண்டிய வெலாந்தரு நிதியம்
ஆதலிற் பரமன் மூலமந் திரமைந்
தெழுத்தல் தொன்ற றியேனே" (சிலப்பதிகாரம் 1:10:171-207)
எனச் சிறப்பித்துக் கூறுகின்றார் ஜைனர்கள் நாள் கடமை (நித்தியானுஷ்டானங்)களிலும்
மற்றும் நல்வேளை சமயங்களிலும் எப்பொழுதும் தியானித்துக்கொண்டிருக்கும்
இப் பஞ்ச நமஸ்கார மந்திரத்தை இளங்கோவடிகள் தக்க சமயத்தில் நமக்கு
எடுத்துக் காட்டுகின்றார். கவுந்தியடிகள், கோவலன், கண்ணகியாகிய
மூவரும் மதுரைக்குப் புறப்படுகிறார்கள். அவர்கள் புறப்பட்ட
காட்சியையும், அவர்கள் கூறிய மந்திரத்தையும்,
"தோமறு கடிஞையுஞ் கவன்மே லறுவையுங்
காவுந்தி யையைகைப் பீலியுங் கொண்டு
மொழிப்பொருள் தெய்வம் வழித்துணை யாகெனப்
பழிப்பருஞ் சிறப்பின் வழிப்படர்
புரிந்தோர்" (சிலப்பதிகாரம்
1:10:98-101)
என்று வருணிக்கின்றார். மொழிப்பொருள் தெய்வம் என்பதுதான் பஞ்ச
நமஸ்கார மந்திரம். அரும்பதவுரை ஆசிரியரும், அடியார்க்குநல்லாரும்
மொழிப்பொருள் தெய்வம் என்பதற்குப் பஞ்ச மந்திரமென்றே உரை
எழுதியுள்ளார்கள். ஐந்து மந்திரத்தின் முதலெழுத்தாகிய அ, ஸி, ஆ, உ,
ஸா என்ற எழுத்துக்களையும் விளக்கியுள்ளார்கள்.
இவ்வாறு மூவரும் பஞ்ச நமஸ்கார மந்திரத்தைத் தியானத்திலிருத்திப்
புறப்படுகின்றார்கள்.
மேலே கூறிய சித்தரு (அரூபி)க்குக் கோயில்கள் பல இருந்தனவாகத் தொ�கிறது.
இன்றும் மதுரைக்கருகில் சித்தர் மலை என்றும், புதுக்கோட்டையில்
சித்தன்ன வாசல் என்றும் விளங்குவதைக் காணலாம்.
"பிறவா யாக்கைப் பொ�யோன் கோயில்" என்பதைச் சிவபெருமான் கோயில் என்று
பலர் கூறியுள்ளார்கள். ஆனால், அடியார்க்கு நல்லார் அதற்கு உரை
காணும்போது, "இனி யாக்கையிற் பிறவாப் பொ�யோன் எனினும் அமையும்" என்று
விளக்குகின்றார். சித்த நிலையை,
"ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே
பேரா இயற்கை தரும்" (திருக்குறள் : 370)
என்னும் நமது தமிழ் மறையாலும் அறியலாம். மற்றொரு ஜைன சமய நூலாகிய
திருப்பாமாலை இக்கருத்தை,
"பிறவா யாக்கைப் பொ�யோ ராவர்
மறவா தருகனை வாழ்த்தினர் தாமே" (திருப்பாமாலை)
என வலியுறுத்துவதாலும் அறியலாம் பொ�யோன் கோயில் அரூபியாகவுள்ள சித்த
பரமேஷ்டியின் கோயிலாக விளங்கியிருக்க வேண்டும் என்பதில் ஐயமில்லை.
ஆகவே, இத் தொடரும் சமண சம்பந்த முடையதே யாகும்.