 |
இறுதியாக இவ்வுண்மையை மறுக்க வியலாத இலக்கிய ஆதாரத்தைக் காண்போம்.
நன்னூல் ஆசிரியர் பவணந்தி முனிவரும் அதன் உரையாசிரியர் மயலைநாதரும்
திவாகரத்தையும், பிங்கலத்தையும் தங்கள் நூல்களில் பாராட்டி
புகழ்ந்துள்ளனர். மற்றொரு ஜைன அறவோராகிய சூடாமணி நிகண்டு ஆசிரியர்
மண்டல புருடர் திவாகரை 'செங்கதிர்வரத்தாற்றோன்றும் திவாகரர்" எனப்
புகழ்ந்து சிறப்பித்துள்ளமையாலும், திவாகரர் சமயம் ஜைனமே என
ஐயத்திற்கிடமற்ற சான்றுகள்.
இவர்கள் இவ்வாறு பண்டைய நூல்களைப் பாழ் செய்யும் செயல்களில்
ஈடுபடுவதன் நோக்கம் வெளிப்படையானது. தமிழகத்திலுள்ள இந்துசமயத்தின்
உட்சமயத்தவர் எவரும், தமிழ் மொழியின் ஆக்கத்திற்கான பொது நூல்கள்
எதையும் இயற்றியதில்லை எனவே இக்குறைப்பாட்டை அறிந்த சிலர் ஜைன
அறவோர்கள் இயற்றிய பொது நூல்களைத் தம் சமயத்தவர் இயற்றியதாகக் காட்ட
வேண்டியே எத்தகு பழிக்கும் அஞ்சாது அப்போது நூல்களைத்திருத்தியும்
தங்கள் சமயக் கருத்துக்களைப் புகுத்தியும் பாழ் செய்துள்ளனர்.
இப்போலிச் செயல்களை நேர்மையுள்ளம் படைத்தப் புலவர் பெருமக்கள் நன்கு
அறிந்துள்ளனர். அறிந்து மட்டுமல்ல. அவ்விழி செயலுக்காக வருந்தியும்
உள்ளனர்.
இத்தகு செயல்களால் பாதிக்கப்பட்ட ஜைன நூல்கள் ஒரு புறமிருக்கத் தமிழ்
மொழியின் பெருமைக்கும் சிறப்பிற்கும் கதிரவன் ஒளி போன்று விளங்கும்
ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றாகிய வளையாபதி காவியம் மறைந்த துக்கச்
செய்தியைத் தமிழார்வம் படைத்த அனைவரும் செவிமடுத்துக்கேளுங்கள்.
மகா மகோபாத்தியாய தக்ஷண கலாநிதி டாக்டர் உ.வே. சாமிநாத அய்யர் அவர்கள்
தாம் எழுதிய என் சா�தம் என்ற நூலின் 858ம் பக்கத்தில் 'வளையாபதி'
காவியத்தைப்பற்றி பின்வருமாறு எழுதியுள்ளார்.
திருவாடுதுறை மடத்துப் புத்தக சாலையில் வளையாபதி ஏட்டுச் சுவடியை நான்
பார்த்திருக்கின்றேன். அந்தக் காலத்தில் அத்தகையப் பழைய நூல்களில்
எனக்குப் பற்று உண்டாகவில்லை அதனால் அந்நூலை எடுத்துப் படிக்கவோ,
பாடம் கேட்கவோ சந்தர்ப்பம் நேரவில்லை. பழைய நூல்களை ஆராயவேண்டுமென்ற
மனநிலை என்பால் உண்டான பிறகு தேடிப்பார்த்தபோது அந்தசுவடி மடத்துப்
புத்தக சாலையில் கிடைக்கவில்லை. தமிழ் நாடு முழுமையும் தேடியும்
பெற்றிலேன். எவ்வளவோ நூல்கள் அழந்தொழிந்துப் போயினவென்று தொ�ந்து
அவற்றிற்காக வருத்தமடைவது என்இயல்பு கண்ணால் பார்த்த சுவடிகைக்
கிட்டாமல் போயிற்றே என்ற துயரமே மிக அதிகமாக வருத்தியது. 'கண்ணில்லான்
பெற்றிழந்தான் என வுழந்தான் கடுந்துயரம்' என்று கம்பர் குறிக்கும்
துயருக்குத்தான் அதனை ஒப்பிட வேண்டும் வருந்தி கண்ணிர் மல்கி
எழுதியுள்ளார்.
இங்கு வாசகர்களுக்கு ஓர் உண்மையைக் கூற விரும்புகிறேன். திருவாடுதுறை
மடத்தில் மறைந்தது என்பதால் மதிப்புமிக்க அம்மடாதிபதி சுவாமிகள் போல்
ஐயங்கொள்ளாதீர்கள். பெருமைக்குரிய உ.வே. சுவாமிநாத அய்யர் அவர்கள்
சீவக சிந்தாமணியைப் பதிப்பித்த காலத்தில் மடாதிபதியாக விளங்கியவர்
ஸ்ரீலஸ்ரீ சுப்பரமணிய தேசிகர் என்ற பேரறிஞர் பெருந்தெகை. அத்தூயரோ
சீவக சிந்தாமணியைப் பதிப்பிக்க பேருதவி
புரிந்தவர். ஆகவே வளையாபதியை
மறைத்தவர் அம்மடத்தின் பணியாற்றிய வேறறெவரேவாகத்தானிருக்கவேண்டும்.
தமிழ்மொழியிலும் கன்னட மொழியிலும் ஜைன இலக்கிய இலக்கணங்கள்
எண்ணிலடங்கா உயர்நிலையை அடைந்திருக்கின்றன. தெலுங்கு மொழியில் ஒரு
நூல் கூட கிடைக்கவில்லை. ஏன்? எங்கே போயின? அந்தோ! கேளுங்கள் வரலாற்றை!
விமர்சதரங்கணி என்ற தெலுங்கு வரலாற்று நூலில் ஜைன நூல்களையெல்லாம்
ஒன்று திரட்டி ஆங்காங்கு தீயிலிட்டுக் கொளுத்தினர்' என
எழுதப்பெற்றுள்ளது.
இந்நிலை தமிழகத்தில் ஏற்பட்டதோ ஏற்படவில்லையோ? என்றாலும் மதக்
காழ்ப்பின் காரணமாகத் தனித்த முறையில் ஆசிரியர்களையும் கடவுள்
வாழ்த்தையும், மதமாற்றஞ்செய்தும் வந்துள்ள செயல்களைக் காணும்போது
மறைந்து போன நூல்கள் பலவும் நெருப்புக்கும், நீருக்கும்
இரையாகியிருக்கலாமென ஐயுறுவதற்கு இடமளிக்கிறது.
அறம், அறிவு, ஒளி அளித்து மனிதனை தவறான பாதையில் செல்லவொட்டாமல்
தடுக்கும் ஓர் அரிய அறிவியல் கருவி மனிதனுடைய மனசாட்சியையும்
தன்மானத்தையும் வளரச்செய்யும் தத்துவக்கலை. மனிதன் இன்ப வாழ்விற்கு
இயைந்த அற்புத அறநெறிட் புதையல் இந் நல்லற நெறிகளுக்கு கலையாது
அஹிம்ஸை என்னும் கொல்லா நோன்பு எவ்வுயிரும் பொதுவெனக் கொண்டு எவ்வுயிரிடத்தும்
அன்பு பூண்டு ஒழுகும் உயா�யக் கொள்கை ஜைன அறவோர்கள் பாரத நாட்டின்
பல்வேறு மொழிகளில் இத்தூய அறநெறிகளைத் கொண்ட பல நூல்களை யாத்துத்
தந்துள்ளனர். மக்கள் பண்பாட்டிற்குரிய அறநெறிகளை வகுத்தருளியது போன்றே
அந்தந்த மொழிகளின் வளர்ச்சிக்கும், சிறப்பிற்கும்,பெருமைக்கும் உரிய இலக்கணங்கள், அகராதிகள் போன்ற பல நூல்களையும் இயற்றிய வளர்த்தனர். இக்
கலைக்காட்சியைத் தமிழ்மொழியிலும் காண்கிறோம்.
இத்தகு உயா�ய நோக்குடன் ஜைன அறவோர்கள் வழங்கியுள்ள நூல்களின் அருமையை
அறியாமல் அவைகளை அழித்தும் திருத்தியும் கொடுமை
புரிந்தது போன்றே ஜைன
சமயக் கோயில்களையும், குகைப் பள்ளிகளையும் அழித்தும், மாற்றியும், தம்
சமயக் கோயில்களாகக் கைப்பற்றிக் கொண்டுள்ள வரலாறுகளும், புராணங்களும்,
கல்வெட்டுச்செய்திகளும், சின்னங்களும் கலங்கரை விளக்கம் போல இன்றுக்
காட்சி அளிக்கின்றன.
குறிப்பாக காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் கச்சாலிஸ்வரன் கோயில்,
நிகண்டன் கோயில், வரதராசப் பெருமாள் கோயில், வடஆர்க்காட்டில் உள்ள
விரிஞ்சிபுரம் கோயில். வள்ளி மலை, சோளங்கிபுரம் மலை,
திருச்சிராப்பள்ளி மலைக் கோயில், தஞ்சை ஜில்லா திருப்புகலூர்
வர்த்தமானிஸ்வரம், திருவதிகை, திருநெல்வேலி ஜில்லா கழுகு மலை, நாகர்
கோயில் நாகராஜா கோயில், திருச்சாரணத்து மலை போன்ற பல கோயில்கள் உள்ளன.
திருவாருர் கோயில் பற்றிப் பொ�ய புராணமே கூறும் வரலாற்றை நேர்மையின்
சின்னமாய் விளங்கும் திரு. மயிலை சீனி வேங்கடசாமி அவர்கள் சமணமும்
தமிழும் என்ற நூலின் 69ம் பக்கத்தில் பின்வருமாறு எழுதியுள்ளார்.
'அப்பர்-சம்பந்தர் காலத்துக்குச் சற்று முன்னர் திருவாரூரிலும்,
இத்தகைய சைவ-சமணர் கலகம் ஏற்பட்டுச் சமணர் துன்புறுதப்பட்டுத்
துரத்தப்பட்டதோடு அவருடைய நிலைகளும், மடங்களும், பள்ளிகளும்பாழிகளும்
அழிக்கப்பட்டன. இந்தச் செய்தியையும் பொ�யபுராணம் கூறுகிறது. இப்போது
திருவாரூர் திருக்குளம் மிகப் பொ�யதாகவும், பதினெட்டு ஏக்கர்
நிலப்பரப்பைக் கொண்டதாகவும், இருக்கிறது. இத்துணை பொ�ய குளம் தமிழ்
நாட்டிலே வேறு எங்கும் கிடையாது என்று கூறப்படுகிறது. ஆனால்
தண்டியடிகள் நாயனார் என்னும் சைவ அடியார் இருந்த காலத்திலே திருவாரூரில் சமணர் செல்வாக்குடனும், ஆதிக்கத்துடனும் வாழ்ந்திருந்தனர். இந்த குளம்
மிகச் சிறியதாக இருந்தது. அந்தச் சிறு குளத்தின் நான்கு கரைகளிலும்
சமண சமயத்தவருடைய நிலங்களும், மடங்களும், பள்ளிகளும், பாழிகளும்
இருந்தன. அப்போது, அந்தச் சிறிய குளத்தைப் பொ�ய குளமாகத் தோண்ட
வேண்டுமென்று தண்டியடிகள் என்னும் சைவநாயனார் முயற்சி செய்தார்.
இந்தச் செய்தியைப் பொ�யபுராணம் கூறுகிறது.
"செங்கண் விடையார் திருக்கோயில்
குடபால் தீர்த்தக் குளத்தின் பாங்கு
எங்கும் அமணர் பாழிகளாய்
இடத்தால் குறைபாடெய்துதால்
அங்கந் நிலைமை தனைத் தண்டி
யடிகள் அறிந்தே ஆதரவால்
இங்கு நானிக் குளம் பெருகக்
கல்ல வேண்டும் என்றெழுந்தார்"
குளமோ மிகச் சிறியது. குளத்தின் கரைகளிலே சமணருடை நிலங்களும்,
கட்டடிடங்களும் உள்ளன. குளத்தைப் பொ�ய தாகத்தோண்ட வேண்டுமானால்,
குளக்கரையச் சூழ்ந்திருந்த சமணருடைய நிலங்களையும், கட்டிடங்களையும்
இடித்துத்தகர்த்தல் வேண்டும். முதலில் குளத்தைப் பொ�யதாகத்
தோண்டுகிறார். அப்போது சமணர், தங்கள் நிலங்களும், கட்டிடங்களும்
தோண்டப்பட்டு இடிக்கப்படுவதைப் பார்த்துக்கொண்டு சும்மா இருப்பார்களா?
அவர்கள் தடுக்கிறார்கள். வழக்கம்போல கலகம் ;ஏற்படுகிறது. சேக்கிழார்
வாக்குப்படி "தண்டியடிகளால் அமணர் கலகம் விளைந்தது" கலக்கம் மட்டும்
நிகழவில்லை கலகம் நடந்தது. ஏனென்றால் சிவபெருமான் அரசன் களவில்
தோன்றிச் சமணரை அழிக்கச் சொல்கிறார், அரசன் சமணரை ஊரைவிட்டே துரத்திய
பின்னர், அவர்களுடைய கட்டிடங்கள�யும், நிலங்களையும் அழித்துப் பறித்து
அந்தச் சிறிய குளத்தை இப்போதுள்ள பொ�ய குளமாகத் தோண்டினான். இதனைப்
பொ�ய புராணம்
"அன்ன வண்ணம் ஆரூரில்
அமணர் கலக்கம் கண்டவர் தாம்
சொன்ன வண்ணமே அவரை
ஓடத் தொடர்ந்து துரந்ததற் பின்
பன்னும் பாழிப்பள்ளிகளும்
பறித்துக் குளஞ் சூழ் கரைபடுத்து
மன்னனவனும் மனமகிழந்து
வந்து தொண்டர் அடி பணிந்தான்"
இவ்வாறெல்லாம் சமணர்களைக் கழுவேற்றுதல், யானைகளால் மிதிப்பித்தல்,
ஊரைவிட்டுத்துரத்துதல் நிலபுலன்களைக் கவர்தல் முதலிய கலகங்களும்,
கொடுமைகளும், சச்சரவுகளும் போராட்டங்களும் நிகழ்ந்து வந்தன. சமயப்
போர் இல்லை சமயவெறி!
இவ்வாறு நிகழ்த்திய கொடும் செயல்கள் கணக்கில் இவ்வாறெல்லாம்
துன்பங்களும், கொடுமைகளும் நிகழ்ந்தபடியினாலே நாளடைவில் சமண சமயம்
செல்வாக்கு இழந்து நிலை குன்றியது. துன்பங்களைப் பொறுக்க முடியாத
சமணர்களின் பெரும்பான்மையோர் மதம் மாறினார்கள். அ�தவாது சமண
சமயத்தைவிட்டு சைவர்களாகவும், வைணவர்களாகவும் மாறிவிட்டார்கள். தமிழ்
நாடெங்கும். இவ்வாறே பலாத்காரம் செயலால் ஜைனசமயத்தவர்க்குத்
தீங்கிழைத்துள்ளனர். மதுரையில் நடந்த கொடுஞ்செயலை மங்களகரமான
அருஞ்செயலெனப் பொ�யபுராணத்தில்,
"பூமியன் மதுரை யுள்ளான்
புறத்துனர் அறணர் கேரும்
பாழியும் அருகர் மேவும்
பள்ளியும் ஆன எல்லாம்
கீழுறப் பறித்துப் போக்கிக்
கிளரொளித் தூய்மை செய்தே
வாழியாப் பதிகள் எல்லாம்
மங்கலம் பொலியச் செய்தார்"
எனப்பாடி மகிழ்ந்துள்ளார் சேக்கிழார்.
இக்கோரச் சம்பவங்களைப் பற்றி 1850-ம் ஆண்டில் விளங்கிய புலவர்
பெருந்தகை வேங்கடசாமி நாயகர் அவர்கள் நாம் இயற்றிய "இந்துமத ஆபாச
தரிசினி" என்ற நூலில் சம்பந்தர் சமணத்தை அழித்தக் கொடுமை" என்ற
தலைப்பில் மணமுடைந்து வருந்தி பாடியுள்ள பாக்கள் நம் உள்ளத்தை
உருக்கும்.
"நத்திமச் சோழன் நாட்டிய சமண் மதத்தை
வைத்திட வவருங்கூடி வஞ்சகர் தமக்குள்ளாகிப்
பற்றியே கற்காணத்திற் பதைத்திட வனேகம்பேரைச்
செற்றிட வாடிக்கொன்றே சமயத்தைப் பறக்கடித்தார்"
"உறுத்திட
வூரில்நின்ற வுற்சவச் சிலையுடைத்தார்
பெருந்திட விருந்த கோயிற் பிணக்கற விடித்தார்மேலும்
ஒறுத்திட வோடியோடி யொருங்கற வழித்தாரையோ
நிறுத்திய பொதுநோக்காமல் நிலையழி சோழன் செய்தான்.
இவ்வாறு பல பாக்கள் உள்ளன.
இத்தகு பகைமை உணர்ச்சிக்கு காரணம் வேண்டுமல்லவா? இக் காரணம்
வாசகர்களுக்கு புதிதல்ல. திரு. மயிலை சீனு வேங்கடசாமி அவர்கள் போன்ற
பல வரலாற்று ஆசிரியர்கள், ஆராய்ச்சி அறிஞர்கள். பகுத்தறிவாதிகள்
நேர்மை எழுத்தாளர்கள் பலரும் பலகாலமாக எழுதிவரும் வரலாற்றுச்
செய்திதான். எனினும் அவ்வரலாற்றைக் கொண்டுதான் உண்மையை நிலைநாட்ட
வேண்டியுள்ளது. எனவே அப்பண்டைய வரலாற்றின்படி மிகமிகப் பழங்கால முதல்
தொடர்ந்துவரும் பகைமை உணர்ச்சியே காரணமாகும் என்பதை இனி காண்போம்.
ஆரியர்கள் பாரத நாட்டில் குடியேறிய வரலாறும். அவர்கள் வாழ்க்கை
வரலாறும் பாரத நாட்டு வரலாற்று நூல்கள் அனைத்திலும் கண்டுள்ளோம். ஆரியர்கள்
பாரத நாட்டில் குடியேறுவதற்கு முன் இங்கு அஹிம்சா தர்மத்தை
அடிப்படையாகக் கொண்ட அறநெறி சமுதாயம் சிறப்புற்று விளங்கியிருந்தது.
இச்சமுதாயம் பகவான் விருஷபதேவரால் அமைக்கப் பெற்றது. சாதி சமயம்.
உயர்வு தாழ்வு என்ற பேதமற்ற அறநெறிக் கொள்கையைக் கொண்ட தென்பதை
முன்னரே அறிந்துள்ளோம் புதிதாக பாரத நாட்டில் நுழைந்த ஆரியர்
கொள்கைகளை இங்குள்ள அஹிம்சாவாதிகள் ஏற்றுக்கொள்ளாது எதிர்த்தார்கள்.
பகைமை மூண்டது. இந்திரன், வாயு, வருணன் முதலான சடங்குகள் அற்றவர்களாய்
கொலை, ஊனுண்ணல், கள்குடித்தல் அற்றவர்களாய் கொலை, ஊனுண்ணல்,
கள்குடித்தல் போன்ற தீய பழக்க வழக்கங்கள் இல்லாதவர்களாய் விளங்கும்
பாரத மக்களைத் தங்கள் வழியில் திருப்பித் தங்கள் ஆதிக்கத்தை
நிலைநாட்டப் பல விதங்களிலும் ஆரியர்கள் முயற்சித்து வந்துள்ளார்கள்
என்பதற்கு அவர்கள் வேதங்களே சான்றாகும். அவ்வேதங்களில் பாரத மக்களை
வேதப் பகைவர் என்றும் வேள்வியை நிந்திப்பவர்களென்றும் பல்வேறு
குற்றங்களைச் சாட்டிப் பொதுவாகப் பாரத மக்களை தஸ்யுக்கள் என்றும்
இராக்கதர் என்றும் வெறுத்துள்ளார்கள். அத் தஸ்யுக்களை அடியோடு
அழிக்குமாறு தங்கள் தெய்வமாகி இந்திரனை வேண்டிக் கொண்டுள்ளார்கள்.
இப்பகைமைக்கு சான்றாக
ரிக் வேதத்தில் 1-33-5வது சுலோகத்தில், "இந்திரனே!
தஸ்யுக்களை எங்குமில்லாமல் செய்த அவர்களை முதுகுகாட்டி ஓடச்
செய்யுங்கள் எனவும், சுலோகம் 13-3-7ல் இந்திரனே! இந்த தஸ்யுக்களோடு
யுத்தம் செய்து இந்நாட்டிற்கு வெளியே ஓட்டிவிடக்கடவீர். அன்றியும்
இந்த தஸ்யுக்களின் தலைவனை எங்கிருந்தேனும் பிடித்துக்கொண்டு வந்து
சுட்டொ�த்து அழிக்கவும்" என்பன போன்ற பல சுலோகங்களை அவ்வேதங்களில்
காணலாம்.
இனி தமிழகவரலாற்றை ஆராய்வோம். மேலே கண்ட வேதப்பகை பாரத நாடெங்கும்
நிலவியிருந்தது. அக்கால முதல் தொடர்ந்து வளர்ந்து வந்துள்ளது. தமிழ்
நாட்டிலும் அப்பூசல் இல்லாமலில்லை. கி.பி. ஏழாம் நூற்றாண்டின்
இறுதியில் திருஞான சம்பந்தரால் அடிக்கல் நாட்டப்பட்டது. ஞான சம்பந்தர்
வைதீக பிராமணர். வேதவழி நின்று வேள்வி செய்யும் பிராமண
வகுப்பைச்சார்ந்தவர். ஞானசம்பந்தர் தன் தந்தையார் புரியும் வேத
வேள்விக்குச் சிவபெருமானிடம் பொருள்வேண்டி தேவாரம் பாடியுள்ளார்.
தமிழகத்தில் வேத வேள்வியாகிய கொலை வேள்வியை அஹிம்சா வாதிகளான தமிழக
ஜைனர்களும் புத்த சமயத்தவர்களும் எதிர்த்தனர். ஞான சம்பந்தர்
எதிர்பாராத இந்த எதிர்பார்ப்பைக் கண்டு கோபங் கொண்டார். ரிக்
வேதத்திலுள்ள சுலோகங்கள் நினைவுக்கு வந்தன. அவ் வடமொழி சுலோகங்களை
தமிழாக்கம் செய்து சமணர்களைப் பழித்துப் பாடினார் அத் தேவாரப் பாக்களை
கேளுங்கள்.
"வேத வேள்வியை நிந்தனை சேய்துழல்
ஆதமில்லி அமணொடு தேரரை
வாதில் வென்று அழிக்கத் திருவுள்ளமே"
"வேட்டு வேள்வி செய்யும் பொருளை விளி
மூட்டு சிந்தை முரட்ட மண் குண்டரை
ஓட்டி வாது செய்யத் திருவுள்ளமே."
"அந்தணாளர் புரியும் அருமறை
சிந்தை செய்யா அருகர் சிரங்களை
சிந்தவாது செயத் திருவுள்ளமே"
இத் தேவாரப் பாடல்களும்,
ரிக் வேத சுலோகங்களும் ஒன்றை ஒன்றுப்
பின்னிப் பிணைந்திருப்பதைக் காண்கிறோம் கருத்துக்களும், குறிக்கோளும்
ஒன்றாகவே பா�ணமிக்கின்றன. எனினும் ஒரு வேறுபாடு.
ரிக் வேதம் ஜைனத்தை
அழிக்க இந்திரனை வேண்டுகின்றது. ஞான சம்பந்தர் பாடல்கள் சிவபெருமானை
வேண்டுகின்றன. இவ் வேறுபாடன்றி வேத வேள்விப் பகைவர்களை அழக்கவும்,
ஓட்டவும் இரண்டும் முனைந்து நிற்கின்றன.