 |
சங்க இலக்கியங்கள்:
சங்க இலக்கியங்களின் காலங்களைப் பற்றிக் கணித்துள்ள பல அறிஞர்கள்
அவைகளில் சில கி.மு நூற்றாண்டைச் சார்நதவை என்றும் சில கி.பி
நூற்றாண்டைச் சார்ந்தவை என்றும் எழுதியுள்ளனர். பொதுவாகவே தமிழ்
இலக்கியங்கள். நீதி நூல்கள் ஆகிய பலவற்றின் காலங்களைப்பற்றி ஆராய்ந்து
கூறியுள்ள பலரும் ஒருவருக்கொருவர் மாறுபட்ட கருத்துக்களையே
கொண்டுள்ளனர். எதைக் கொள்ளுவது. எதைத்தள்ளுவது என்ற நிலையே
ஏற்பட்டுள்ளது. எது எவ்வாறாயினும் கால ஆராய்ச்சிக் குழப்பத்தில்
புகுந்து நம் மூளையைக் குழப்பிக் கொள்ளாமல், சங்க இலக்கியங்களில் ஜைன
ஆசிரியர்கள், மற்ற ஜைன இலக்கியங்கள் நீதி நூல்கள் மற்றும் பல்கலைகளின்
சிறப்புகளையும், அவைகளின் தன்மைகளையும் விளக்கிச் செல்வதையே
குறிக்கோளாகக் கொண்டுள்ளேன்.
சங்க இலக்கியங்களான பத்துபாட்டு எட்டுத்தொகை, நற்றிணை, புறநானூறு,
குறுந்தொகை, பதிற்றுபத்து, பா�பாடல், கலித்தொகை போன்ற நூல்களில்
காணும் ஆசிரியர்களில் பெரும்பாலோர். ஜைன சமய அறிஞர்களே. குறிப்பாக
உலோசனார், பூங்குன்றனார், நிகண்டனார். அறிவுடை நம்பி. அகம்பன்,
ஆதிமந்தி, பதுமனார், சேரலாதன், காப்பியஞ்சேந்தனார். கணக்காயனார்
போன்ற பலராவர். சங்க நூல்கள் பலவற்றிலும் அறநெறிகள்
வலியுறுத்தப்பட்டுள்ளன. ஜைன முனிவர்கள் காட்சி அளிகின்றனர்.
அறங்கூறும் அவைகள், பள்ளிகள். தத்துவக் கொள்கைகள் நிறைந்துள்ளன.
இன்னோரன்ன பல ஜைன நெறிகளைப் புலவர் பெருமக்கள் பலரும்நன்கு அறிந்தே
உள்ளனர்.
இங்கே ஒரு கேள்வி பிறக்கலாம் ஜைன புலவர்கள் முருகனையும், திருமாலையும்
கொற்றவையையும் ஏன் பாடினார்கள் எனக் கேட்க உரிமை உண்டு
தொல்காப்பியத்திலேயே இத்தெய்வங்கள் விளக்கப்பட்டுள்ளன.
மேலே கூறிய தெய்வங்கள் எந்தச் சமயத்தின் சார்புடையவைகளும் அல்ல.
மருதம், முல்லை, குறிஞ்சி, பாலை, நெய்தல் போன்ற நிலங்களுக்குரிய தெய்வங்களாக விளங்கின. அந்தந்த நிலங்களில் வாழும் மக்கள் அந்தந்த
தெய்வங்களை வழிபட்டு வந்தனர். அது மட்டுமல்ல அந்தந்த
நிலங்களுக்கேற்பப் பழக்க வழக்கங்களில் வழிபட்டனர். நரபலிகளும்
உயிர்ப்பலிகளும்
புரிந்து வழிபட்டுள்ளனர். எனவே சங்க கால புலவர்கள்
அந்தந்த நிலங்களிலுள்ள மக்களையும், அவர்கள் பழக்கவழக்கங்களையும் படம்
பிடித்துக் காட்டியுள்ளார்கள். அக்கால தமிழக மக்களில் ஒரு சிலா�ன்
வாழ்க்கை வரலாறுகள் எனக் கொள்வதில் தவறில்லை. பிற்காலத்தில்
காடுகளிலும் மலைகளிலும் வாழ்ந்த மக்கள் நாடுகளில் குடியேறிவிட்டனர்.
இவர்கள் தங்கள் பழக்க வழக்கத்திற்கேற்ப அவர்கள் வழி பட்ட
தெய்வங்களையும், வழிபாடியற்றும் வழக்கங்களையும் இங்கு வந்த பின்னரும்
புரிந்து வந்தனர்.
கிராம நகரங்களில் வழ்ந்திருந்த சிலமக்கள் புதிதாக வந்துள்ள மக்களோடு
கலந்து அத் தெய்வங்களை வழிபட்டனர். பின்னர் பல்வேறு கொள்கைகளைக்
கொண்ட மதங்கள் தோன்றின. தெய்வ வழிபாட்டை வற்புறுத்தும் பக்திமார்க்கம்
பரவிற்று. இவ்வாறு அத்தெய்வங்கள் மத சார்புடையனவாக வளரவே,
அவைகளுக்குப் புராணங்கள் இயற்றப்பட்டன. இப்புராணங்கள் தோன்றிய பின்னரே
முருகன் ஆகிய தெய்வங்களை ஒன்றுபடுத்தி உறவு முறைகளையும் கற்பித்தனர்.
இவ் வரலாறு மறுக்கவியலாத உண்மைகள்.
எவ்வாறாயினும் ஜைன அறவோர்கள், புலவர்கள் தமிழகத்தில் நிலவும்
வழக்கங்களையும், வழிபாடுகளையும் வரலாற்றுக்கண்கொண்டு தங்கள் தங்கள்
நூல்களில் குறித்துக் சென்றுள்ளனர். இப்பரந்த உயர்ந்த,
விரிந்த
மனப்பாண்மையைத் தொல்காப்பியம், சங்க இலக்கியங்கள், சிலப்பதிக்காரம்,
சீவகசிந்தாமணி, சூளாமணி, பெருங்கதை போன்ற ஜைன இலக்கியங்கள்
பலவற்றிலும் கலங்கரை விளக்கம்போல் காணலாம்.
இலக்கியங்களும் நீதி நூல்களும்:
"கொல்லா விரதம் பூண்ட நலத்தோர்
அறிவால் நிறைந்த அறமாண்புடையோர்
தமிழினிதருமை தனியா யுணர்ந்தோர்
கருவிநூற் காவியம் கழறும் பொ�யோர்
கால கதியாற் கடை நிலைப்படுவோர்
தம் வயப்படுவது சமணகாலம்."
என ஜைன (சமண) அறவோர்களின் தமிழ்ப்பணிகளை நுண்ணிதின் ஆய்ந்து நோ�தின்
உணர்ந்த தமிழ்ச் சான்றோர் ஒருவர் பாடிய பழம்பாடல். இ�து பெருந்தொகை
நூலில் காணப்படும் அரிய வரலாற்றுச் சிறப்பு மிக்க பாடலாகும்.
இப்பாடலால் ஜைன அறவோர்கள் சிறப்புற்று வாழ்ந்த காலத்தின் மாண்புதனை
விளக்கமுறக் காண வைத்துள்ளார் அப்பெருந்தகைப் புலவர். இவர் ஜைன
சமயத்தைச் சார்ந்த வரவல்லவென்பதை, சமண காலம்
எனக்குறிப்பிடுவதினின்றும் அறியலாம்.
ஜைன அறவோர்கள் மனித குலம் அனைத்தும் கல்வி வளம் பெற்று, அறிவொளி வீசி
அறநெறிச் செம்மல்களாய்ப் பண்புநலம் பெற்றுத் தூய வாழ்க்கையுடையோராய்
விளங்கவும். ஆன்மீகத் துறையில் ஆர்வங்கொண்டு போ�ன்ப நிலை பெறும்
வெற்றிக்குரிய சின்னங்களாய்த் திகழும் வகையில் அறிவியல் (விஞ்ஞானம்)
அடிப்படையில் பல்வேறு இலக்கியங்களையும், நீதி நூல்களையும் படைத்தது
போன்றே தீர்த்தங்கரர்களை வழிபடடி அத்தூயோர் ஆற்றிய அறவுரை மண்டபமாகிய
சமவசரணத்தின் அமைப்பைப் போன்ற அழகிய சிற்பக் கலைகளுடன் வானளாவுங்
கோயில்களையும் படைத்தனர். தீர்த்தங்கரர்களின் வரலாறுகளையும்
அம்மாபெருங் கோயில்களில் ஓவியங்கள் தீட்டி வைத்தனர் இவைமட்டுமல்ல!
இக்கலை பிற்கால சந்ததியர்கள் கற்று வளர்க்க வேண்டி கட்டிடக்கலை,
சிற்பக்கலை, ஒவியக்கலை, இசைக்கலை, நாட்டியக்கலை, நாடகக்கலை, நுண்கலை,
வானநூற்கலை, மனிதநூற்கலை, ஜோதிடக்கலை, மருத்துவக்கலை. ஆட்சிக்கலை
போன்ற பலவற்றிற்கும் நூல்கள் இயற்றிய உலகுக்கு வழங்கினர். ஜைனர்களின்
சிற்பக்கலைகளின் சிறப்பைப்பற்றி (wolhouse) வால் ஹெளஸ் என்ற
பேரறிஞர்களைக் கொண்டு அறிய முடிகின்றது. உலோகம், கல், விலையுயர்ந்த
மாணிக்கங்கள் ஆகிய எல்லாப் பொருள்களையும் கொண்டு எந்த எந்த அளவிலும்
உருவங்களை அமைப்பதில் வல்லுநர். பளிங்கு, வெண்பளிங்கு இவைகள்
முதலியவற்றைக்கொண்டு தீர்த்தங்கரர்களின் உருவங்களை உருவாக்கினர்.
முனிவர்கள் தங்கள் கையில் எடுத்துச் செல்லக் கூடிய மிகச்சிறிய உருவகச்
சிலைகளைப் படைத்தனர். அதுமட்டுமா! ஆங்காங்கே கிடைக்கும்
கற்களிலிருந்து பெரும் பெரும் சிலைகளைச்செய்து மகிழ்வெய்தினர் என
எழுதியுள்ளார்.
இசைக் கலை:
ஜைன அறவோர்கள் இசையையும், நடனத்தையும் வளர்த்து வந்தனர்.
ஈரோடுக்கடுத்த அறச்சாலையூர் மலைப்பள்ளியிலும், குடுமியா
மலைக்குகையிலும் உள்ள கல்வெட்டுச் செய்திகளே சான்றாகும்.
பகவான் விருஷபதேவர் முதல் பகவான் மகாவீரர் வரையிலுள்ள
தீர்த்தங்கரர்களின் அறவுரை மண்டபமாகிய சமவசரணத்தில் இந்திரன் தன்
மனைவி இந்திராணியுடன் இசையோடு துதிப்பாடி நடனம் செய்து வழிபட்டதாகப்
புராணங்களில் விளக்கப்பட்டுள்ளன. சீவக சிந்தாமணியில் காந்தருவத்தை
இசைப் போட்டிக் காட்சியும் அனங்கமாலையின் நடனமும் நம் உள்ளத்திற்கு
விருந்தாக விளங்குகின்றன. சிலப்பதிகாரம், சூளாமணி, பெருங்கதை போன்ற
இலக்கியங்களில் இசை நிகழ்ச்சியையும் நடனக் காட்சியையும் காணலாம்.
ஓவியக் கலை:
சமவசரணத்தை நினைவுறுத்தும் வகையில் பல சிற்பக் கலைகளுடன் அமைத்தது
போன்றே கோயில்களிலும், குகைகளிலும் தீர்த்தங்கரர் வரலாறுகளையும்
முனிபுங்கவர் அறவுரைக் காட்சிகளையும் ஓவியங்களாகத் தீட்டி
ஓவியக்கலைகளை வளர்த்தனர். இத்தகு ஓவியங்கள் அஜந்தா ஜைன குகைகளிலும்
புதுக்கோட்டை சித்தன்னவாசல் பள்ளியிலும் வட ஆற்காடு மாவட்டம்
திருமலைக்குகையிலும், திருப்பருத்திக்குன்றம் கரந்தை கோயில்களிலும்
இன்னும் காட்சியளிக்கின்றன. நாம் மேலே கண்ட ஒருபழம் புலவா�ன்
பாராட்டின் உண்மையை உறுதிப்படுத்துவது போன்ற மோனாட்டு அறிஞர்
கால்டுவெல்டுதுரை மகனார் தம் நூலில் "ஜைன சமயம் தமிழகத்தில்
சிறப்புற்று விளங்கியது, அரசியலில் அன்று கல்வித் துறையிலும் அறிவுத்
துறையிலுமேயாம். உண்மையில் அவர்கள் காலமே தமிழ் நாகா�த்தின் பொற்காலம்
எனலாம்." எனப் போற்றியுள்ளார்.
ஜெர்மனி நாட்டு பேராசிரியர் ஜி புஹ்லர் (G. Buhler) தமது ஆராய்ச்சி
நூல் ஒன்றில் பின்வருமாறு எழுதியுள்ளார்.
"இலக்கியம், இலக்கணம், நீதிநூல்கள், விஞ்ஞானம் மற்றும் இதரகலைகளிலும்
ஜைன முனிவர்கள் சாதித்துள்ளவை அவர்களுடைய பகைவர்களும் போற்றத்தக்க
அளவுக்கு சிறந்துள்ளன. மேலும் அவற்றில் சில நூல்கள் தற்கால ஐரோப்பிய
விஞ்ஞானத்திற்கு உறுதுணையாயுள்ளன. இந்தியாவின் தென்னாட்டில் ஜைன
அறிஞர்கள் அம்மொழிகளையும் வளம்பபெறச் செய்தனர். தமிழ், தெலுங்கு,
கன்னடம் முதலிய மொழிகளில் அவர்கள் பணி அளவிடற்கா�யது. ஜைன அறவோர்கள்
தோற்றுவித்த அடிப்படையின் மீதே அம்மொழிகள் வளர்ந்து வருகின்றன.
மேற்கூறிய பணிகள் மக்கள் வாழ்க்கைப் பண்பிற்கும், ஆன்மீக
வளர்ச்சிக்கும்
உரியவை. இவ்வுயா�ய குறிக்கோளுடன் இயற்றியருளிய
நூல்களால் இந்திய இலக்கிய வரலாற்றிலும், நாகா�கப் பண்பாட்டிலும்
மேலான இடத்தை அளித்துள்ளன." எனப் புகழ்ந்து போற்றியுள்ளனர்.
1958ம் ஆண்டில் செக்கோஸ்லோவேகியா நாட்டினின்றும் தமிழகம் விஜயம்
செய்தவர். தமிழ் மொழி கற்று தமிழ் அறிஞராய் விளங்கும் டாக்டர் கமில்
சுவலேபில் அவர்கள்.
"தமிழ் மொழியும் அதன் இலக்கியமும் வளம் பெறுவதற்குப் பேருதவியாளராக
ஜைனர்களின் எப்பொழுதுமே இருந்து வந்திருக்கின்றனர். தமிழ்
நாகரித்திற்காக அவர்கள் ஆற்றியுள்ள தொண்டு குறைத்து அளவிடக்
கூடியதன்று" என அவர் சென்னை கோகலே மண்டபத்தில் நடந்து இலக்கியக்
கூட்டத்தில் பேசிச் சிறப்பித்துள்ளனர்.
சுமார் 40 ஆண்டுகளுக்கு முன் யசோதர காவியத்தின் மூலத்தை மட்டும் முதன்
முதல் பதிப்பித்த பேரறிஞர் தில்லையம்பூதூர் திரு. வெங்கட்ராம
அய்யங்கார் அவர்கள் அப்பதிப்புரையில் ஜைன அறவோர்களின் தமிழ்த்தொண்டின்
மேன்மையை உள்ளங்கனிந்து எழுதியுள்ள புகழுரைகள்.
"ஜைனர்கள் போட்ட அடிப்படையை வைத்துக்கொண்டே பின்னாளில் சைவர்,
வைஷ்ணவர் முதலியோர் தங்கள் சமயக் கோட்பாடுகளைச் சீராக்கினார்கள்.
வடமொழி, தென்மொழி என்னும் இரண்டு பாஷைகளையும் நெடுங்காலம் பாடுபட்டுச்
சீராக்கி, பத்திய நடையையும், கத்திய நடையையும் இவ்விரு பாஷைகளின்
சேர்க்கையாலும் மணிப்பவளநடையையும், அமிழ்தினும் இனிய சுவையையும்
ஆழ்ந்த கருத்தும் தெளிவும். தண்ணிய ஒழுக்கமும் குடிகொண்டு விளங்கும்
மேன்மையுடையதாக்கி அவைகளிற்பல காவியங்களையும், நீதி நூல்களையும்
செய்து என்றும் ஒளி மழுங்காத போ�சை பெற்று விளங்குபவர் ஜைனர்களேயாம்.
இன்று தென்னாட்டில் வழங்கும் நிகண்டுகளும் நெடுங்கணக்கு நெல்லிலக்கம்,
எண் சுவடி, நீதிசாரம் முதலியனவும் இவர்கள் செய்து வைத்தவைகளேயாகும்.
இவர்கள் உன்னத நிலையிலோங்கிய காலத்தேற்பட்ட காவியங்கள் முதலிய பல
நூல்களின் இனிய நடைபோன்ற நடை பிற்காலத்தவர் செய்த நூல்களில் இன்றுவரை
காணப்படவில்லை. பெருங்காவியங்களில் ஐந்தையும், சிறு காவியங்களில்
ஐந்தையும் தென்றமிழ் நாட்டில் என்றும் விளங்கும்
பெருந்தனமாகப்பாடியளித்தவர் அச்சமயத்தாரே.
ஆதிகாலத் தொடங்கி மனிதர்கள் முறை முறையாய் நடை, உடை, பாவனைகளில்
சீராய் வருவது போலவே பாஷைகளும் நானேற நாளேறச் சீரடைதல் உண்மையாயினும்,
ஜைனர்கள் உன்னதபதம் நீங்கித் தாழ்ந்த நிலை நேர்ந்து நெடுங்காலமாகியும்
அவர்களின் உன்னத காலத்தில் அமைந்துள்ள பல நூல்களின் இனியநடை போன்ற
நடையுள்ள நூல்கள் இந்நாள் அளவும் தலை நீட்டாமையே ஜைனர்களின் பாஷா
வல்லமைக்குப் போந்த நிதர்சனமாகின்றது.
கலைமகளாம் பெண்ணரசியை அன்போடு அவர்கள் வளர்த்து எழில் உண்டாக்கி,
அணிகளையும் அணிவித்து, அவ்வழகையும், அணிகளையும் இனிது விளங்கச்
செய்யும் இருகலைகளாம் வெண்பட்டாடை செம்பட்டாடை போன்ற வடமொழி, தென்மொழி
இரண்டு கலைகளினுடைய கண்வழிக்கூறும் எழிலும், நயமும் காந்தியும்,
அகலமும், நீளமும் இத்தென்றமிழ் நாட்டார் என்றைக்கும் நினைக்கவும்
போற்றவும் உரியமையாம். கலைமகளின் ஒரு கலை போஜன், காளிதாசன், இவர்கள்
நாளில் அதாவது கி.பி. 11-ம் நூற்றாண்டில் ஒருவாறு மேன்மை பெற்றோங்கி
யிருப்பினும், அதற்கு முன்பாகவே கலைமகளின் இருகலைகளாம் வடமொழி,
தென்மொழிகளை எழில் பெறச் செய்தோர் ஜைனர்களே"