 |
வரலாறு :
தமிழகத்தில் ஜைன சமயம் எக்கால முதல் விளங்கி உள்ளது என்பதை
அறுதியிட்டுக் கூறவியலாது. ஒருவாறு அறிய வேண்டுமானால் இலக்கிய
ஆதாரங்கள், கல்வெட்டுச் செய்திகளைக்கொண்டே முடிவு செய்யலாம்.
மேருமந்தர புராணத்தின் பதிப்புரையில் உயர்திரு. A. சக்கரவர்த்தி
நயினார், M.A. (IES) அவர்கள் 'இராமபிரான் தமிழ் நாட்டில் வந்தபோது
இங்குள்ள ஜைனாஸ்மரங்களிலுள்ள ஜைன முனிவர்களைத் தா�சித்து அளவளாலி
சென்றார் என்ற செய்தி வால்மீகி இராமாயணத்தில் விளக்கப்பட்டுள்ளது என
எழுதியுள்ளார். இவ் வரலாற்றினின்றும் இராமபிரான் காலத்திலேயே
தமிழகத்தில் ஜைன சமயம் இருந்தது என்பதை அறிகின்றோம். இவ்வரலாற்றை
அறிந்து கம்பர் பெருந்தகை இராமயண காலத்தில் ஜைன முனிவர்கள் சுக்��வன்
படை திரட்டி இலங்கைக்கு வழி அனுப்புகையில் அனுமானுக்கும்
அங்கதனுக்கும் படை செல்ல வேண்டிய வழிகளையும் ஆங்காங்குள்ள சிறப்பு
களையும் விளக்கி கூறுகையில் வேங்கட மலையைக் குறித்துப் பேசுகிறான்.
வட சொற்கும் தென்சொற்கும் வரம்பிற்றாய்
நான்மறையும் மற்றைநூலும்
இடைசொற்ற பொருட்கெல்லாம் எல்லையதாய்.
நல்லறத்துக்கு ஈறாய் வேறு
புடைசுற்றும் துணையின்றிப் புகழ்பொதிந்து
மெய்யேபோல் பூத்துநின்ற
அடைசுற்றும் தண்சாரல் ஓங்கியலேங்
கடத்தல் சென்று அடைதீர் மாதோ
இருவினையும் இடைவிடா எவ்வினையும்
இயற்றாதே இமையோர் எய்தும்
திருவினையும் இருபதம்தேர் சிறுமையையும்
முறை ஒப்பத் தெளிந்து நோக்கி
கருவினை அது இப்பிறவிக்கு என்றுணர்ந்து அங்கு
அதுகளையும் கடையில் ஞானத்து
அருவினையின் பெரும்பகைஞர் ஆண்டுஉளர் ஈண்டு
இருந்தும்அடி வணங்கற் பாலார்.
இவ்விரு கவிகளையும் ஆழ்ந்து ஊன்றி நேர்மையின் நின்று படித்தறிந்த
புலவர் பெருமக்கள் நன்கு உணர்வார்கள். இவ்விரு கவிகளிலும் கம்பர்
பெருமாள் ஆண்டிருக்கும் 'நல்லறம்' இருவினை திருவினையும், இருபதம் தேர்
சிறுமையையும் முறை ஒப்பத்தெளிந்து 'கடையில் ஞானம்' 'அருவினையின்
பெரும் பகைஞர்' ஆகிய பண்புகள் சொற்றொடரகள் ஜைன முனிவர்களையே
குறிக்கும் என்பதை நேர்மை வழி நிற்போர் எவரும் மறுக்கமாட்டார்கள்.
அதுமட்டுமல்ல அருக முனிவர் தவம் பு�யும் அம்மலையை அணுகுவோர் வீடு
பேற்றிற்குரிய நெறிச்செல்வர் எனும் மாண்பையும் கம்பர்...
"கோடு உறுமால் வரையதனைக் குறுகுதிரேல்
உம் நெடிய கொடுமை நீங்கி
வீடு உறுதீர்; ஆதலினால் விலங்குரிர்; அப்புறத்து
என்று பெருமையோடும் பேசுகிறார். எனவே ஜைன சமயம் இராமயாண காலந்தொட்டே
தமிழகத்தில் சீரும் சிறப்பும் பெற்றிருந்ததென்பதை அறிகின்றோம்.
பத்திரபாகு சுவாமிகள் விசயம் :
கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் வட நாட்டினின்றும் பத்திரபாகு சுவாமிகள்
எண்ணாயிரம் சீடர்களுடன் தென்னாட்டிற்கு வந்த செய்தி வரலாற்றுச்
சிறப்புடையது. அச்சான்றோருடன் சந்திரகுப்த மன்னரும் துறவியாகி
அனைவரும் மைசூர் இராமசந்திரகுப்த சிரவண பெளிகுளாவில் தங்கினார்கள்.
அதுசமயம் பத்திரபாகு சுவாமிகள் தமது சீடர்களில் ஒருவரான விசாக
முனிவருடன் சில துறவிகளைப் பாண்டிய நாட்டிற்கும். சோழ நாட்டிற்கும்
அனுப்பி அந்நாடுகளிலுள்ள ஜைன முனிவர்களோடு அளவளாவி ஆங்காங்கு
அறநெறிகளைப் போதிக்குமாறு பணித்துள்ளார். இவைகள்யாவும் கல்வெட்டுச்
சான்றுகளுடன் கூடிய வரலாற்று உண்மைகள்.
மன்னர்கள் :
இராமயணக்காலமுதல் தமிழகத்தில் ஜைன அறவோர்களும் சான்றோர்களும், ஜைன
மக்களும் சிறப்புற்று விளங்கினார்கள் என்றால் மன்னர்கள் ஆதரவின்றி
நிலைத்திருக்கவியலுமா? அம் மன்னர்களும் செங்கோலராக விளங்கியதனால்தான்
ஜைன அறவோர்களின் அறநெறிகள் எங்கும் பரவி மக்கள் வாழ்க்கை நலமும்.
பண்பும், அறிவும், கலைகளும் வளர்ந்தன. கொடுங்கோலர்களாக இருப்பின்
அறவோர்கள், சான்றோர்கள் வாழ முடியாது. கலைகளும் மற்ற அறநெறிகளும்
தலைகாட்டாது. எனவே பண்டைய கால மன்னர்களில் பெரும்பாலோர் ஜைன
சமயத்தவராகவும், ஜைன அறநெறிகளே மக்கள் வாழ்க்கைக்கு இன்றியமையாத
தென்றுணர்ந்து ஜைன சமயத்தை ஆதா�த்துவந்த வேறு துறை மன்னர்களாகவும்
இருந்திருக்க வேண்டும். குறிப்பாக சேர, சோழ, பாண்டிய, பல்லவ மன்னர்கள்
ஆதியில் ஜைன சமயத்தை சார்ந்தவர்களாகவே விளங்கினர். என்பதை வரலாறு
மெய்பித்துக் காட்டுகிறது. இலக்கியசான்றுகளும் இருக்கின்றன. கி.மு.
நூற்றாண்டில் வாழ்ந்த பாண்டிய மன்னா�ன் வரலாற்றில் ஒன்றை
எடுத்துக்காட்டாக இங்கே காண்போம்.
�கலிங்கமன்னரும்,
பாண்டியமன்னரும்:
கலிங்க நாட்டின் சக்கரவர்த்தி காரவேலர் ஆட்சிகாலத்தில் மகத நாட்டு
மன்னர் கலிங்க மன்னரோடு போர்தொடுத்து கலிங்கத்தில் பிரசித்திபெற்ற
பகவான் விருஷபதேவர் சிலையை அபகா�த்துக் கொண்டு மகத நாட்டுக்கு
சென்றுவிட்டார் பின்னர் கலிங்க மன்னர் காரவேலர் மகத நாட்டின்போரில் படையெடுத்துச் சென்று அப்புனிதச் சிலையை மீட்டுக்கொண்டு வந்தவிட்டார்.
இம்மாபெரும் வெற்றியை கொண்டாட மகத்தான் பகவான் விருஷப தேவர் சிலைக்கு
பிரதிஷ்டா மகோற்சவம் செய்தார் இவ்வெற்றி விழாவிற்கு தமிழ்
நாட்டினின்றும் பாண்டிய மன்னர் தம் பா�வாரங்களுடன் கலிங்கம் சென்று
பகவான் விருஷப தேவர் சிலையைப்போற்றி மகிழ்ந்தார் எனக் கலிங்கத்தின்
முக்கிய குகையாகிய ஹதிகும்பா குகையில் கல்வெட்டுச் செய்தி
பொறிக்கப்பெற்றுள்ளது.
இது கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் நிகழ்ந்து இச்செய்தியால் கி.மு.
இரண்டாம் நூற்றாண்டிற்கு முன்னரே ஜைன மன்னர்கள் தமிழகத்தில் ஆட்சிபுரிந்து
வந்தார்கள் என்பதைக் கலங்கரை விளக்கம்போல் காண்கிறோம். எனவே இராமாயண
காலமுதல் தமிழகத்தில் ஜைன சமயம் நாளிது வரை விளக்குகிற தென்பதை
இவ்வரலாறு மெய்பித்துக்காட்டுகிறது.
தமிழ்நாட்டு பிராமி கல்வெட்டுக்கள்:
1. மதுரை ஜில்லா அழகர் மலை --- கி.மு.
2. மதுரை ஜில்லா கருங்காலக்குழி ... கி.மு.
3.மதுரை ஜில்லா கீழவளவு ... கி.மு.
4. மதுரை ஜில்லா திருப்பரங்குன்றம் ... கி.மு.
5. மதுரை ஜில்லா மேட்டுப்பட்டி ... கி.மு.
6. மதுரை ஜில்லா வருக்கியூர் (குன்றத்தூர்) ... கி.மு.
7. மதுரை ஜில்லா விக்கிரமங்கலம் ... கி.மு.
8. புதுக்கோட்டை சித்தன்னவாசல் ... கி.மு.
9. திருநெல்வேலி ஜில்லா மாறுகால்தலை ... கி.மு.
10. புதுவை அருகன் மேடு ... கி.பி.1
11.மதுரை ஜில்லா ஆனைமலை ... கி.பி.1
12. மதுரை ஜில்லா திருபரங்குன்றம் ... கி.பி.1
13. மதுரை ஜில்லா முத்துப்பட்டி ... கி.பி.1
14. கோவை ஜில்லா அறச்சாலையூர் ... கி.பி.2
15. இராமநாதபுரம் குன்றக்குடி ... கி.பி.2
16. மதுரை ஜில்லாகொங்கற்புளியங்குளம் ... கி.பி. 2-3
17. திருச்சிராப்பள்ளி ... கி.பி. 2-3
18. தென்னாற்காடு திருநாதர்குன்றம் ... கி.பி. 2-3
19. மதுரை திருவாதவூர் ... கி.பி. 2-3
20. இராமநாதபுரம் பிள்ளையார்பட்டி ... கி.பி. 2-3
21. திருச்சி புகலூர் ... கி.பி. 2-3
22. மதுரை மாங்குளம் ... கி.பி. 2-3
23. வடஆற்காடு மாமண்டூர் ... கி.பி. 2-3
இப்பிராமி கல்வெட்டுச் செய்திகள் யாவும் ஜைன அறவோர்கள் தவமியற்றியப்
பள்ளிகள் பற்றிய வரலாறுகளேயாகும். மேலேகண்ட நூற்றாண்டுகளில் வாழ்ந்த
ஜைன முனிவர்கள் வட மொழியிலும், தமிழ் மொழியிலும் பல நூல்கள்
இயற்றியுள்ளார்கள். ஜைன முனிவர்கள் இராமயாண காலத்திற்கு முன்னரே தமிழ்
மொழியை வளர்த்துப் பல்வேறு துறைகளில் நூல்கள் இயற்றிய தமிழ்த்தாயை
அலங்கா�த்து வந்துள்ளார்கள் எனில் மிகைபடக் கூறுவதன்று காலம் ஆடிய
சூழலால் அவைகளை மறைத்தனர் என்பதுதான் உண்மை.
தொல்காப்பியம்
கி.மு. இரண்டு அல்லது மூன்றாம் நூற்றாண்டினதாகத் கருதப்படும்
தொல்காப்பியமே இதுவரை கிடைத்துள்ளது தமிழ் நூல்களில் தொன்மையும்,
முதன்மையும் உடையது. ஆசிரியர் தொல்காப்பியர் ஜைன அறவோரே அக்காலத்தில்
வைதிக சமயமும் ஜைன சமயமுமே இருந்தன. வேறு சமயங்கள் கிடையா.
இவ்வுண்மையை தொல்காப்பியத்திலேயே காணலாம்.
முதல் நூல், வழி நூல், சார்பு நூல் என நூல்கள் பிறந்த முறையினை
முதன்முதல் உரைத்தவர்கள் ஜைனர்களே! இவ்வுண்மையை இறையனார்
அகப்பொருளுக்கு உரை எழுதிய முதல் உரையாசிரியர்.
"முதல் வழி சார்பென நூன்மூன்றாகும்"
எனக் கூறி முதல் நூல் இன்னதென விளக்குகையில் தொல்காப்பியத்திலுள்ள
கடவுள் இலக்கணத்தை,
"முதல் வழி சார்பென நூன்மூன்றாகும்"
எனக் கூறி முதல் நூல் இன்னதென விளக்குகையில் தொல்காப்பியத்திலுள்ள
கடவுள் இலக்கணத்தை,
எனக் காட்டியுள்ளதால் முதல் நூல் உரைத்தவர் வினையினின்றும் நீங்கி
விளங்கிய அறிவின் (கேவல் ஞானத்தையுடைய) அருகப் பெருமானே என்பதை
உறுதிப்படுத்தியுள்ளார்.
இவ் வராலற்றுண்மையை நன்னூலாரும்,யாபெருங்கலக்காரிகை உரையாசிரியர்
குணசாகரரும், அகப்பொருள் விளக்கம் ஆசிரியர் நாற்கவி ராஜநம்பியாரும்
மேலே கூறிய வழி, முதல் சார்பு நூலின் விளக்கத்தைக் கூறியுள்ளார்கள்.
சூடாமணி நிகண்டு இயற்றிய மண்டல புருடர்
"பூமலியசோகி னீழற் பொலிந்த எம்மடிகள் முன்னாள்
எம்மா முதல் நூல் சொல்லக் கணதரா�யன்ற பாலால்
தாமொரு வழிநூல் சொல்லச் சார்புநூல் பிறருஞ்சொல்ல
தோமிலா மூன்று நூலும் முவமெனவுதித்த வன்றே"
என விரிவாகக் கூறியுள்ளார் தொல்காப்பியர் ஜைன அறவோர் என்பதை
மெய்ப்பிக்க இ�தொன்றே சாலும் எனினும் மேலும் சிலவற்றையும் காண்போம்.
துறவறம்
துறவிகளைப்பற்றிய செய்தியில் தாபஸர் என்றும், தவத்தோர் என்றும்
இருவகைத்துறவிகளைப்பற்றி விவா�த்துள்ளார். தாபஸர் எனில்
ஆஸ்ரமங்களுடனும், மனைவி மக்களுடனும். அக்னி மத்தியில் தவம்
புரிதல்போன்ற
கோலத்துடனும் விளங்குவோர். தவத்தோர் எனில் அருளுடைமை, கொல்லாமை,
புணர்ச்சி விழையாமை, பொய்யாமை, கள்ளாமை, கள்ளுண்ணாமை போன்றவையோடு
விளங்குபவர். இவைகளின் விரிவை தொல்காப்பியம் பொருளதிகாரத்தில் இளம்
பூரணர் உரையைக் காண்க.
இல்லறம்
காமம் சான்ற கடைக்கோட் காலை என்ற சூத்திரத்தாலும் கட்டமை ஒழுக்கத்து
என்ற சூத்திரத்தாலும் இல்லற நெறிகளை விளக்கியுள்ளார்.
நிலையாமை
'காஞ்சிதானே பெருந்திணைப் புறனே' என்ற சூத்திரத்தால் அறியவும்.
உயிர் வேறு, உடல் வேறு
"காலம், உலகம், உயிரே உடம்பே"
-தொ. பொ. கிளவி 58
"சென்ற உயிரின் நின்ற யாக்கை"
- தொ. பொ. பொருளியல் 8
உயிர் வகைகள்:
அறுவகை உயிர்களையும், அவைகளின் இயல்புகளையும் ஜைன சமய அறவோர்கள்
அறிவியல் முறையில் ஆராய்ந்து கூறியுள்ளனர். வேறு எச்சமயத்திலும்,
உயிர் வகைகளின் விளக்கம் கிடையா. அவ்விளக்கத்தின் விவரங்களை
தொல்காப்பியத்தில் காணலாம்.
"ஒன்றறி வதுவே உற்றறி வதுவே
யிரண்டறி வதுவே யதனொடு நாவே
மூன்றறி வதுவே யவற்றொடு மூக்கே
நான்கறி வதுவே யவற்றொடு கண்ணே
வைந்தறி வதுவே யவற்றொடு னுவியே
யாறறி வதுவே யவற்றொடு மளனே
நோ�தி னுணர்ந்தோர் நெறப் படுத்தினரே
-தொ.பொ. மரபியல்