 |
இத்தகு சிறப்புகளுடன் விளங்கிவந்த அறத்தின் சின்னமாகிய காளை மிகமிகப்
பிற்காலத்தில் சைவ சமயத்தவர், அறநெறி நினைவை மறைக்க வேண்டி எருதை
சிவபெருமானின் வாகனமாகக் கற்பித்து வழிபாடியற்றி வரலாயினர். சமயப்
பூசல் தோன்றிய காலத்தில் பகவான் விருஷபதேவர் கோயில்களைக் கைப்பற்றிச்
சிவன் கோயில்களை மாற்றியதோடு பரம்பரையாக மக்கள் அழைத்து வந்த நந்தி
என்ற பெயரையும் உருத்தையும் அப்படியே வைத்துக் கொண்டார்கள்.
நாளாவட்டத்தில் நந்தி எனில் அறம் என்று பெயர் மாய்ந்து சிவபெருமான்
வாகனம் எனப் பெயர் பெற்றது. இவ் வரலாற்றை உறுதிப்படுத்தும் ஓர்
உண்மையைக் காண்போம். சைவசமயத்தவர் ஜைன கோயில்களைக் கைப்பற்றியது
போன்றே ஜைன மடங்களையும் பிடித்துக் கொண்டனர். ஜைன மடங்களுக்கு நந்தி
மடம் என் றே பெயர். அம்மடாதிகளுக்கு கைலாயகிரி நந்தி பரம்பரை என்றம்
வழங்கலாயிற்று. அதாவது பேதமற்ற அறநெறிகளை வளர்க்கும் பரம்பரை
என்பதாகும். ஜைன மடங்களைக் கைப்பற்றிய பின்னர் சைவ மடாதிபதிகள்
தங்களைச் சிவபெருமான் பரம்பரை எனக் கூறாமல். இயற்கையாகவே ஜைனர்கள்
வழங்கிய கைலாயகிரி நந்தி பரம்பரை என்றே அழைத்துக் கொள்ளுகின்ற
அற்புதத்தை அம்மடாதிகளின் வரலாற்றால் அறியலாம். கைலாயங்கிரி நந்திபரம்பரை எனில் கைலாயத்தில் வீடுபேறுபெற்ற பகவான் விருஷபதேவா�ன்
அறநெறியை பரப்பும் மடங்கள் அல்லது பள்ளிகள் ஆகும். மக்கள் உள்ளங்களில்
ஆழப்பதிந்துள்ள இவ்வா�ய பெயரை மாற்றவியலாமல் கைலாயகிரி நந்தி பரம்பரை
என்ற பெயரையே தங்களுக்கும் சூட்டிக் கொண்டனர். இதுபோன்று பல செய்திகள்
உள்ளன. இங்கே எடுத்துக்காட்டாக இரண்டு வரலாறுகளைக் காண்போம்.
நன்னிலம் தாலுக்காவில் புகலூர் என்பது ஒரு ஜைனத் திருப்பதி. பகவான்
வர்த்தமான தீர்த்தங்கரர் கோயில் அது அக்கோயிலை சைவ சமயத்தவர்.
கைப்பற்றியதோடு அவ்வூர் ஜைனப் பெருமக்களையும் சைவசமயம் புகும்படி
பலாத்காரம் செய்தார்கள். அதற்கு உடன்பாடாத சிலர் ஊரை விட்டே
ஓடிவிட்டனர். சிலர் சைவ சமயம் புகுந்து திருநீறு பூசிக் கொண்டனர்.
தாங்கள் தங்கள் மதம் மாறினாலும், வர்த்தமானர் சிலையை நீக்கி லிங்கத்தை
வைத்தாலும் அதன் பெயரை மாற்ற இசையாமல் வர்த்தமானிஸ்வரன் என்ற பெயரை
லிங்கத்துக்குச்சூட்டி வழிபடலானார்கள். இவ்வரலாற்றுண்மையைத்;
திருஞானசம்பந்தர் தேவாரத்தில் காணலாம். அவ்வூர் மக்களின்
விருப்பத்திற்கிணங்க வர்த்தமானீஸ்வரனே! வர்த்தமானீஸ்வரனே! எனப்பதினோரு
பாட்டுக்கள் பாடியுள்ளார்.
சேலம் ஜில்லாவில் தருமபுரம் என்ற பெயரோடு ஒரு ஊரே இருக்கிறது.
இப்பொழுது தருமபுரம் ஜில்லாவாகக் காட்சி அளிக்கிறது. தருமபுரம் என்ற
பெயரே ஜைனக்கிராமம் என்பது சொல்லாமலே விளங்கும்.
இவ்வூரில் மல்லிநாத தீர்த்தங்கரர் கோயில் சிறப்புடன் விளங்கியிருந்தது.
இக்கிராம ஜைனப் பெருமக்களைச் சைவ சமயம் புகச்செய்து கோயிலையும்
கைப்பற்றிக் கொண்டனர். கோயிலைத்தங்கள் வசமாக்கிக்கொண்டாலும்
அப்பகுதிமக்கள் மல்லிநாத சுவாமி என்று அழைத்துப் போற்றும் வழக்கத்தை
மாற்ற விரும்பாமல் மல்லகார்ச்சுனர் எனப் பெயர் சூட்டி வழிபட்டு
வருகின்றனர். இவ்வாறு யான் எழுதத் துணிவு உண்டானதற்குச் சான்று
வேண்டுமல்லவா? அக்கோயிலின் கற்களே பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன.
அத்தெய்வீக அகச்சான்றைப் பாருங்கள். அக்கோயிலின் கல்வெட்டுக்
செய்திகளில் மல்லிதீர்தங்கரை வழிபாடு இயற்றி அறவுரை யாற்றி வந்த ஜைன
அறவோர்களின் திருப்பெயர்கள் காட்சி அளிக்கின்றன.
விநயசேன பட்டாரர். கனகசேன பட்டாரர், ஆகிய இரு முனிவர்களுடன் பல
அறவோர்கள் அங்கே தவமியற்றி வந்ததாகக் கல்வெட்டு செய்திகள் பொறிக்கப்
பெற்றுள்ளன. இவ்வாற பலஜைனர் கோயில்கள் சைவ, வைணவக் கோயில்களாக
மாற்றப்பட்டுள்ளன. இவைகளைப்பற்றி எழுதுவதாயின் 500 பக்கங்கள் கொண்ட
தனி நூலே எழுதிவிடலாம்.
அறத்தின் சின்னமாகிய காளையைச் சிவபெருமான் வாகனமாக கற்பித்தது
போன்றும், தீர்த்தங்கரர் பெயர்களில் ஈஸ்வரன் என்றும், அர்ஜ்ஜுனர்
என்றும் சேர்த்துக் தங்கள் சிவலிங்கத்துக்கும் பெயர்கள் சூட்டி ஜைன
கோயில்களைக் கைப்பற்றிக் கொண்டது போன்றும் ஜைன அறவோர்கள் பெயர்களைத்
தங்கள் நாயன்மார்களுக்குச் சூட்டிக்கொண்ட வரலாறும் உண்டு.
அப்பர், சம்பந்தர்:
இவ்விரு பெயர்களும் ஜைன அறவோர்களின் பெயர்களே. இச்செய்தி வாசகர்களே
திடுக்கிடச் செய்யும் வரலாற்றை அறிந்ததும் வியப்புறுவர் என்பதில்
ஐயமில்லை. தென்னாற்காடு மாவட்டத்தில் திருநறுங் கொண்டை வரலாற்றுச்
சிறப்புக் கொண்ட ஒரு பழமையான ஜைனத் திருப்பதி இங்கே மலைக்கோயில்
கம்பீரமாகக் காட்சியளிக்கிறது.
இப்புனித மலையின்போ�ல் இருபத்துமூன்றாம் தீர்த்தக்காரர் பகவான் பா��ஸ்வநாதர்
கோயில் கொண்டுள்ளார். பகவான் சந்திரநாதர் ஆலயமும், பிரம்மதேவர் அல்லது
மகா சாத்தய்யா கோயிலும் அமைந்திருக்கின்றன. இவ்வரலாற்றுக்குகைக்
கோயிலில் பல கல்வெட்டுச் செய்திகளும் பொறிக்கப்பெற்றுள்ளன.
அதுமட்டுமின்றி அப்பாண்டை நாதர் எனவும் அழைத்து வந்தனர்.
இம்மலைக் குகையில் பல முனிவர்கள் தவம்
புரிந்துவந்தனர்.
அத்தூயோர்களில் தருமசேனர் என்பவர் சிறப்புடன் விளங்கினார். அம்முனிவரை
அக்கோயில் அருகரை அழைக்கும் அப்பர் என்ற பெயரையே கொண்டு
அப்பகுதிமக்கள் 'அப்பன் முனிவர்' என அழைத்து வந்தனர். நாளா வட்டத்தில்
அப்பர் வருகிறார் என பயபக்தியுடன் போற்றிவரலாயினர். அம்முனிவர்
அப்பகுதி மக்களோடுதொடர்பு கொண்டு அறவுரையாற்றி வந்தார். அவர்
பெருங்கவிஞராகவும் இலக்கிய மேதையாகவும் விளங்கினார். அத்துடன்
அம்முனிவர் அம்மலைக் குகையிலேயே தவமியற்றி வந்ததால் அப்பகுதி
மக்களுக்கு கல்வியறிவையூட்டியதோடு, அறவுரையும் வைத்தியமும் செய்து
வந்தார் அம்மாமுனிவா�ன் செயலும் பேச்சும் எழுத்தும் தூய்மையுடையனவாய்
விளங்கி வந்தமையால் மக்கள் பலரும் அவர்பால் அறாதபற்று கொண்டு அப்பர்
என அழைத்துப் போற்றினர். அப்பெருந்தகை அப்பாண்டைநாதர் போ�ல் பத்து
பதிகங்கள் பாடியுள்ளார். அப்பதிகங்களில் ஒன்றைப்பாடி மகிழ்வோம்.
"கட்டளைசேர் சமய மோராறுந் தானாய்க்
கலந்தறிய சமயமதில் மேலதாகும்
இட்டமுடனே யிருந்தே யறமே கடர்தந்
தெட்டாத தத்துவனே
வட்டமணி முக்குடையாய் மாசிலாதாய்
வானவர்கள் தொழுதேத்தும் வண்மையானே
நட்டணைசேர் நறுங்கொண்டையருகா வுன்னை
நம்பினேன் நின்பதத்தை நல்குவாயே"
இவ்வாறே ஒவ்வொரு பதிகத்திலும் "நம்பினேன் நின்பதத்தை நல்குவாயே" எனப்
பத்துப் பதிகங்களால் துதி செய்துள்ளார். அத்திருநறுங்கொண்டை மலையின்
சிறப்பைச் சித்தா�த்துப் பாடிய பாடல்களும் உள்ளன. இப்பதிகங்களையும்,
தூயதவத்தோராகிய மேற்கண்ட அப்பர்தான் பாடியிருக்கவேண்டும். தோத்திரத்
திரட்டை முதன் முதல் அச்சிட்டவர்கள் பாடியவர் பெயா�ன்றி
பாக்களைமட்டும் வெளியிட்டுள்ளார்கள். அப்பாக்களின் ஆழமான
கருத்துக்களையும், அழகிய சொற்களையும் இயற்கை வளத்தோடு மலையின்
சிறப்பையும், அம்மலையின் கோயில் கொண்டுள்ள அருகர் பெருமானையும்
அமைத்துப் பாடியுள்ள கருத்தோவியங்களே நன்கு விள்க்கிக் காட்டுகின்றன.
அப்பதிகங்களில் முதற்பதிகத்தை மட்டும் இங்கு காண்போம்.
"குளிர்கொள் செம்பிண்டி மலர் மழைமுழங்கும்
துவனிகுடை செழுந்துந்துமிகுலா
வொளிவிளங்கும் கவா� யளியிலங்கும் பொனெயி
லடையவன் றங்குசயில
மளிகுலங் கொண்டுமணி மலர்களுஞ்
சந்தனமு மகிலுமன் சிந்தவருகிற்
றெளிநலங் கொண்டருவி களுவலங் கொண்
டொழுகு திருநறுங் கொண்டை மலையே."
இவ்வா�ய பாடலால் திருநறுங் கொண்டை மலைவளமும் தெய்வீகத் தன்மையும்
நன்கு விளங்குகிறது. இப்பாடல் போன்று பத்துப் பாடல்களை பாடியவர்
அறவோர் அப்பர் என்பதில் ஐயங்கொள்ள வேண்டியதில்லை. இவ்வாறு
புகழ்பெற்றக் கவிஞரும், அறிஞரும், தலச் செல்வருமாகிய ஜைன முனிவர்
பெயரை திருநாவுக்கரசருக்குச் சூட்டிப் புராணம் பாடியுள்ளார்
சேக்கிழார். திருநாவுக்கரசர் தேவாரத்தில் அப்பர் என்பதற்கு எவ்விதச்
சான்றும் கிடையா. இனி சந்பந்தர் வரலாற்றை ஆராய்வோம்.
ஜைன அறவோர்களில் சம்பந்தர் என்றும் சம்பந்தமா முனிவுரென்றும் இருவர்
வாழ்ந்துள்ளனர். ஜைனப் பிரபந்த நூல்களில் தோத்திரத்திரட்டு என்னும்
நூலில் அப்பர் பாடியுள்ளது போன்றே சம்பந்தர் என்ற முனிவரும்
அப்பாண்டைநாதர் போ�ல் பத்துப்பதிகம் பாடியுள்ளார். இப்பொ�யார் பாடிய
பாடலில் தம்பெயரையே அமைத்துப் பாடிய இருபாடலைப் பாடி மகிழ்வோம்.
"மெய்யனே பரந்த கண்டமும்
விரிந்த பேரொளியே
வீதராகனே நாதனே விமல வச்சுதனே
உய்யனே சம்பந்தனுக் கருளிய வொப்பே
வொப்பிலாததோ ரொப்புடையொளி மணிச்சுடரே
கையனேபரந் தறறெறிகாட்டிய கணக்கே
காலகாலனே மூலமந்திர முதற்பொருளே
அய்யனே திருநறுங்கொண்டை வடதிருமலை மேலப்பனே
யடியெனை யுமஞ்ச லென்றருளே.
"பொறிகடந்ததோர் போகமே புண்ணிய வடுவே
புண்ணியக்கதி நண்ணியிற் கண்டதோர் பொழிப்பே
எறியமேல் வருங் கபடனுக்கருளிய வேந்தே
யெந்தை தந்தை யென்றிமயவர் தொழவிருந்தவனே
குறிய சம்பந்தனெஞ் சிவட்கோயில் கொண்டவனே
கொண்டலே குணக்குன்றனே யென்றனாயகனே
அறிவனே திருநறுங் கொண்டைவட திருமலை மேலப்பனே
யடியெனையு மஞ்ச வென்றருளே"
இத்தோத்திரப் பாக்களால் சம்பந்தர் எனும் பெயர் கொண்ட ஜைன அறவோரை
அறிந்தோம்.
இதே தோத்திரக் திரட்டின் 73ம் பக்கத்தில் "சிற்றாமூர் தருமதேவி ஊசல்"
எனும் துதிப்பாடல்களில் 6வது பாடலில்
"அருட்சிந்தை யிளங்கொடி களாசு பாடி
அதன் முன்னும் சம்பந்தன் பாடல் கொண்டு
குறிச் செல்வன் குணபத்திர முனிவன் சிந்தைக்
குடிகொண்ட அப்பனறுங் கொண்டை வாழ்த்தி
மறுக்கொண் மயிலாப்பூர் வண்மைபாடி
வானவர்கள் போற்றிசெயும் வண்மைபாடி
நிதிச்சங்க வெள்ளிமலை நிகாரம் வைகை
நீதிவரை சுந்தா�யே யாடிருசல்."
இப்பாடலில் சம்பந்தன் பாடல்கொண்டு எனக் காண்பதால் இத்தருமதேவி ஊசல்
பாடலும் நாம் முன்னர்கண்ட அப்பாண்டை நாதர் பதிகம் பாடிய சம்பந்தராகவே
இருக்கலாம் எனத் தோன்றுகிறது. இ�து எவ்வாறாயினும் தமிழுலகப் போற்றும்
மற்றொரு ஜைன அறவோர் சம்பந்த மாமுனிவர் இலக்கண உலகில்
காட்சியளித்துள்ளார். அப்புனிதர் ஜைன அறவோர்களாகிய அகத்தியர்,
தொல்காப்பியர், பவணந்தி அமிதசாகரர், நேமிநாதர் போன்ற இலக்கண மேதைகளின்
வழித்தோன்றல் வச்சணந்திமாலை அல்லது வெண்பாபாட்டியல் என்னும்
இலக்கணநூல்; இயற்றியருளிய குணவீர பண்டிதா�ன் ஆசிரியர் என்னும்
இப்பேராசிரியர் வரையறுத்த பாட்டியல் என்றும் இலக்கணநூல் இயற்றியவர்.
இந்நூலை சம்பந்தப் பட்டியல என்றே அறிஞர்கள் அழைத்துப் போற்றியுள்ளனர்.
இவ்வரலாற்றை வரையறுத்துப் பாட்டியலின் முதல் பாவிலேயே
"பார்கொண்ட சோதியன் சம்பந்தமாமுனி பாதமலர்
நேர்கொண் டிறைஞ்சி நிகழ்த்துகின்றே னெடுநூல் சுருக்கி
ஏர்கொண்ட சொற்புலவோர் செய்த பாட்டியலி கற்கமிக்க
சீர்கொண்ட மாமதியல்லா தவர்க்குத் தொ�வுறவே"
என்பதினின்றும் இலக்கண மேதை சம்பந்தமாமுனிவர் என்ற மற்றொரு அறவோரையும்
காண்கிறோம்.