 |
அடியார்க்கு நல்லார், உரையாசிரியர், குன்றத்தூர் அட்டாவதானம்
சொக்கநாத முதலியார். சிலப்பதிகார அரும் பதவுரையாசிரியர்,
தக்கயாகப்பரணி உரையாசிரியர், திருக்குருகூர்ச் சுப்பரமணிய தீக்ஷ�தர்,
திருக்குருகைப் பெருமான் கவிராயர், திருநூற்றாந்தாதி யுரையாசிரியர்,
திருநெல்வேலி சங்கர மெச்சிவாயர், திருநெல்வேலி மயிலேறும் பெருமான்
பிள்ளை, திருவாரூர் வைத்தியநாத நாவலர், திருவாடுதுறைச் சாமிநாத
தேசிகர் திருவாடுதுறைச் சிவஞான முனிவர். தென்றிருப்பேரைக்
காரிரத்தின
கவிராயர், நாற்கவிராய நம்பியகப்பெருமான் உரையாசிரியர், நீலகேசி
விருத்தியுரையாசிரியர், நேமிநாத உரையாசிரியர், பா�மேலழகர்,
புறநானூற்றுரையாசிரியர், மயிலை நாதர், யாப்பருங்கலக்காரிகை யுரையாசிரியர்
யாப்பெருங்கலவிருத்தி யுரையாசிரியர்.
உமாபதி சிவாச்சாரியாரின் பொறாமைக் கனல்
காவிய உலகில் இமயம் போன்று பெருமை பெற்று விளங்கும் சீவகசிந்தாமணி
காவியக் கடலை சமயவேறுபாடின்றி பல்லோராலும் போற்றப்படும்
பேற்றியினைக்கண்டும் கேட்டும் உமாபதி சிவாச்சாரியாருக்குப் பொறாமையும்,
பொச்சா�ப்பும் தலைகொண்டு விட்டது. பொறாமைத் தீ அவர் உள்ளத்தில்
பிடித்து என்பெலாம் ஊடுருவி, ஊனில் பரவி உயிரைச் சூழ்ந்து எரிய ஆரம்பித்துவிட்டது. அவர் அறிவும் ஆற்றலும், தாய் மொழியாம் தமிழின்
பாலுள்ள பற்றும், மேன்மையும்
எரிந்து கருவுகள் எனும் புகைமண்டலம்
கவ்விக்கொண்டது. சீற்றமூம் செறுக்கும் தலைவிரித்தாடிற்று. சிதறிய
சிந்தனையை அவிழ்த்து விட்டார் அந்தோ! சேக்கிழார் பாடிய தொண்டர்
புராணத்தைத் தொடுவாரில்லையே! அது தோன்றி மூன்று நூற்றாண்டுகள் ஆகியும்
சைவ சமயத்தவரேயன்றி ஏனையோகும் சீவக சிந்தாமணி! என்றன்றோ
புகழ்கின்றார்கள் படிக்கின்றார்கள்! படிக்கக் கேட்கின்றார்கள்!
மன்னர்கள் முதல் சாதாரண மக்களும் சிந்தாமணியையே நாடிச்
செல்கின்றார்களே. சைவ வைணவப் புலவர்களும், உரையாசிரியர்களும்
சிந்தாமணியைக் கற்பதும், படித்துப் பாராட்டுவதும் உரையாசிரியர்கள்
பலரும் சிந்தாமணியையே மேற்கோள் காட்டுவதுமாக வளர்ந்து வருகின்றதே!ஆ!
சிவபெருமானே! இக் காட்சி என் உள்ளத்தை வாட்டி வதைக்கிறது. அதுமட்டுமா?
தற்கொலைச் செய்து கொள்ளலாமா எனவும் எண்ணம் தோன்றுகிறதே! எனப்
பலவாறாகப் பொறாமைக் கனலில் பொசுங்கி உடலுங் கருத்தது! உருவுங்
குலைந்தது! பித்துப் பிடத்தவர் போல்
திரியலானார். இச் சூழ்நிலையில்
அலைந்து கொண்டிருக்கையில் திடீரெனப் பொறாமைக்கனல் பேயுருவெடுத்து அவர்
உள்ளத்தில் ஆட ஆரம்பித்தது. என் அரிய நண்பரே! சேக்கிழாரின் தொண்டர்
புராணம் பெருமை பெற வேண்டுமாயின் சிந்தாமணியின் செல்வாக்கை அழிக்கக்
கற்பனை நூல் எழுதுக எனக் கூறிற்று உமாபதி சிவாச்சாரியார் உணர்வு
பெற்றெழுந்தார்! என் அருமைப் பேயே! தக்கதோர் ஆலோசனை கூறினாய் அவ்வாறே
சிந்தாமணியின் செல்வாக்கை அழிக்க நூல் எழுதுகிறேன் என உறுதி கொண்டார்.
கற்பனை உலகை வலம்வந்தார். தொண்டர் புராண வரலாறு எனப் பெயர் சூட்டிக்
கதை புனையலானார்.
அக் கட்டுக்கதையில் சிந்தாமணியைப் படித்துப் படித்து இன்புறும் அநபாய
சோழ மன்னரை வரலாற்றுக்காகச் சேர்த்துக் கொண்டார். அம்மன்னருக்குச்
சேக்கிழாரை அமைச்சரெனக் கதை கட்டினார் சீவக சிந்தாமணியின்பால் பாசமும்
பற்றுங் கொண்டுள்ள மன்னா�ன் மனத்தை மாற்றச் சேக்கிழார், சீவகசிந்தாமணி
பொய்க்கதையென்றும், அதைப் படிப்பதால் இம்மைக்கும், மறுமைக்கும்
பயனில்லையென்றும் பல வசைமொழிகளைத் தூவியதோடு, தான் தொண்டர்களின்
புராணம் பாடிக்காட்டுவதாகவும் கூறி மன்னர் மனதை மாற்றிவிட்டாரம்,
பின்னர் தொண்டர்புராணம் எழுத சிவபெருமான் அருளை வேண்ட சிவபெருமானும்
வாழ்த்துக் கூறி உலகெல்லாம் என அடியெடுத்துக் கொடுத்துக் கடவுள்
வாழ்த்தாக அமைத்துப் புராணம் பாடுக எனப் பணித்தாராம். இவ்வாறு
சேக்கிழார் போ�ல் பழிபோட்டு உமாபதி சிவாச்சாரியார் கற்பனையாக கதை
கட்டிநூல் எழுதினார். அதனாற்றாம் நாம் முன்னர் சேக்கிழார் அமைச்சர்
அல்லவெனத் துணிந்து எழுதி உண்மையை வெளியிட்டோம். உமாபதி சிவாச்சாரியர்
சீவக சிந்தாமணியைப் பழித்துப் பாடிய பாடல்களை யான் இங்கு வெளியிட
விரும்பவில்லை ஏனெனில் தமிழ் மொழிக்கும் இலக்கிய உலகுக்கும் ஒளிவீசும்
பெருங்காவியத்தைப் பழித்துள்ள பாடல்களை வாசகர்கள் படித்தால் உமாபதி
சிவாசாரியாரின் போக்கைக் கண்டு சீற்றமுறுவதோடு அவரைப் பழி தூற்றவும்
உள்ளம் துடிக்கும் எனவே உமாபதிசிவாசாரியாரின் போலிக்கதையையும்,
சேக்கிழார் சிந்தாமணியைப் பழித்ததாக அவர் போ�ல் சுமத்தியுள்ள பொய்க்
கூற்றையும், அநபாய சோழ மன்னரை வலிந்து தன் கதையில் காட்டும் வன்
செயலையும், அதற்காகப் புனைந்துள்ள பொறாமை பொதிந்த புரட்டும்
பாடல்களையும், மற்றும் பல கற்பனைச் செய்திகளையும் உமாபதியாரின் வசை
நூலின் வாயிலாகவே அறிந்துக் கொள்ளுமாறு வாசகர்களை வேண்டிக்
கொள்ளுகின்றேன். இ�தொன்றே புலவர்கள், அறிஞர்கள், ஆராய்ச்சியாளர்கள்
ஆகிய அனைவரும் உண்மையை அறிந்துகொள்ள அரிய வாய்ப்பாகும்.
புலவர்களின் வியப்பும் வேதனையும்
தொண்டர் புராண வரலாறு (சேக்கிழார் வரலாறு) என்னும் போலிக் கதையை
படித்துப் புலவர்கள் வியப்பும் வேதனையுங் கொண்டிருப்பார். புலவர்
உலகுக்குப் புன்மை தேடித் தந்த நூல் எனத் தலைகுனிந்து
புழுங்கியிருப்பர் உமாபதி சிவாச்சாரியாரின் இலக்கியக்காழ்ப்பின்
இழிநிலையைக் கண்டு ஏங்கி இருப்பர். ஆயிரம் ஆண்டுகளாகத் தமிழ்த் தாயின்
தோள்களிலே காட்சி தந்தும் புலவர் பெருமக்களின் நாவுகளிலே துள்ளி
விளையாடியும், அவர்கள் உள்ளங்களிலேயே நிலைக்களனாயுறைந்தும், மக்கள்
நினைவிலே நீங்காது பதிந்தும் புகழ் ஞாயிறெனத் தமிழ் ஒளி வீசும்
சீவகசிந்தாமணியை இந்த உமாபதி சிவாச்சாரியார் போன்று ஆயிரம்
அழுக்காறுடையோர் தோன்றினாலும், அப்பெருங்காவியத்தின் செல்வாக்கை,
சிறப்பை, பெருமையை, மதிப்பை யாண்பினை அசைக்கவியலா, இயலாவெனப்
பேசிக்கொண்டிருப்பர் உமாபதிசிவாச்சாரியின் கற்பனை முயற்சி, மலையை
புரட்டி கடலுக்குள் மூழ்கடிக்கின்றேன், கதிரவனை கையால் மறைத்து
விடுகின்றேன் எனக் கூறுபவா�ன் போக்கைப் போன்றது என ஏளனம்
செய்திருப்பர். அதுமட்டுமா? சீவக சிந்தாமணியை கரங்களிலே ஏந்தி,
"தமிழ்த் தாயின் திருமார்பின் மீதொளிரும் தெய்வீக சிந்தாமணியே!
புலவர்கள் சிந்தித்தவற்றையெல்லாம் அள்ளி அருளும் சீவக சிந்தாமணியே!
சாவா மருந்தெனத்திகழும் இலக்கியக் கற்பகமே! இலக்கிய உலகிற்கு
வழிகாட்டும் காவியக் கலங்கரை விளக்கே! அறம், பொருள், இன்பம்,
வீடென்னும் நான்கின் திறம் அறிந்து தீட்டிய தேவா�ன் திருக்குறள்
மறைக்கு இலக்கியமாய்த் தேவர் படைத்த மாபெருங்காவியமே! இயல்,இசை,
நாடகம் ஆகிய முத்தமிழையும் பொழியும் செந்தமிழ்க்கொண்டலே! மெய்ப்பொருள்
காட்டி உயிர்கட்கு அரணாகித் தூக்கம் கெடுக்கும் தூய தமிழ் மணியே!
அறநெறி வாழ்க்கை, ஆன்மீகக் கலை, அறிவியல் தத்துவம், உயிரியல் பாங்கு
உலகியல்போக்கு, அரசியல் மாண்பு, ஆகிய பலவற்றை உலகுக்குப் படைத்தருளிய
உத்தம குருவே! உம்மை யாங்கள் என்றும் மறவோம்! மறவோம்! மறவோம்!!
பல்கலைக்களஞ்சியமாகிய உம்மை உமாபதிசிவாச்சாரியர் பழிதூற்றிய கூற்றைக்
கண்டு 'தமிழ்விடுதூது'சினந்து,
"வந்தென்றுஞ் சிந்தாமணி யென்றிருந்தவுனைச்
சிந்தென்று சொல்லிய நாச் சிந்துமே"
எனச் சபித்தது போன்று உமாபதிசிவாச்சாரியா�ன் நாக்கு அற்று
விழவேண்டுமென்று யாங்கள் எண்ணவில்லை! சிந்தாமணியே! உம் அறவழி நின்று
உமாபதிசிவாச்சாரியா�ன் நாவினின்றும் சிந்தியுள்ளப் பொய்க் கூற்றுகள்,
வன் சொற்கள், வகைத்துளிகள், கற்பனை கதை சிந்துக சிந்துக எனச்சபித்து
அந்நூலைக்கண்களாலும் பாரோம்! கரங்களாலும் தொடோம் எனச் சூளுரைப்
பகர்ந்திருப்பர். மக்கள் வாழ்க்கை நலங்கோலி, பண்பு காத்து கலைபல
காட்டி அறிவொளி வீசும் சீவகசிந்தாமணி மக்கள் இலக்கியமாக
மலர்ந்திருக்கும் மாண்பினையோ யாராவது மறந்து பழிநூற்றுவர்
எத்தகைவராயினும் அவரை மக்கள் மறந்துவிடுவர் என்பது இயல்பே. அச்
சூழ்நிலையிலேயே அன்றைய புலவர்களும், மக்களும் தொண்டர் புராண வரலாறு
எனும் கற்பனை நூலை பொறாமையாலெழுந்தப் பொய்ந்நூலை ஒரு பொருட்டாக
மதியாது மறந்தமையும் அதே சமயத்தின் பொய்நீரவல்லாப் புராணப் பொருளால்'
(வரலாறு) விளங்கும் புகழ் பொதிந்த சீவக சிந்தாமணியை உளமாரப் போற்றிக்
கற்றும், கேட்டும் இன்புற்றிருப்பர் என்பதும் திண்ணம்.
அக்கால புலவர் பெருமக்கள் 'தொண்டர் புராண வரலாறு'கற்பனை நூல் என்பதை
அறிந்து கொண்டது போன்றே வழிவழியாக வந்துள்ளப் பிற்காலப் புலவர்களும்
அறிஞர்களும் அக்கதையை நம்புவதில்லை. அதற்கு எடுத்துக்காட்டாக இந்த
இருபதாம் நூற்றாண்டு புலவர்களுள் பலா�ல் இருபெரும் சைவ சமயப் புலவர்
பெருமக்களின் கருத்துக்களை வாசகர்களுக்கு விருந்தாக அளிக்கிறேன்.
1952ம் ஆண்டில் காஞ்சி ஜைன இலக்கிய மன்றத்திரால் வெளியிடப்பெற்ற
சீவகசிந்தாமணி சொற்பொழிவு நினைவு மலா�ன் 173ம் பக்கத்தில் தமிழ்
இலக்கிய வரலாற்றில் ஒரு திருப்பு மையம், எனும் தலைப்பின் கீழ் என்
அன்புக்கும் மதிப்புக்கும் உரிய பெருந்தகை, உயர் திரு, வல்லை,
பாலசுப்பரமணியம்,B.A., அவர்கள் எழுதிய அறிவு சான்ற கட்டுரையில்
பின்வருமாறு எழுதியுள்ளார்.
சற்றுமுன் சேக்கிழாரைப்பற்றி குறிப்பிட்டேனல்லவா? அதுப் பற்றிப் பொ�ய
புராணத்துக்கும், சீவகசிந்தாமணிக்கும் உள்ள ஒரு பொருந்தாத் தொடர்பின்
பொய்மையை விளக்குவது ஈண்டு என் இன்றியமையாக் கடனாகும்.
சிந்தாமணிக்குப் போட்டியாகப் பொ�ய புராணத்தைக் சேக்கிழார் இயற்றினார்
என்னும் ஒரு கொள்கை சைவா�டையே பரவியுள்ளது. இக்கொள்கைக்கு வித்து,
திருத்தொண்டர் புராண வரலாற்றில் உள்ளது. அநபாயனாகிய குலோத்துங்க சோழன்
சிந்தாமணியைக் கற்று அவமே காலத்தைப் போக்கினானென்றும்,
அதனைவிடுத்துச்சிவகதையைக் கேட்டு உய்யும்படி அவனைச் சேக்கிழார்
அறிவுறுத்தினரென்றும், இதன் விளைவாகப் பொ�யபுராணம் இயற்றப்பட்தென்றும்
திருத்தொண்டர் புராண வரலாறு கூறுகிறது இது முதிர்ந்த சமயத்
துவேஷத்தின் விளைவாக எழுந்த கட்டுரையாகும். இதற்கு அகச் சான்றாகத்
திருத்தொண்டர் புராணத்தில் யாதுமில்லை என்பதை தமிழன்பர்கள் உளங்கொளல்
வேண்டும். முதிர்ந்த புலமையின் பயனாகச் சேக்கிழார் பெருமானுடைய
பண்பமைந்த உள்ளத்தை யான் ஒரு சிறது அறிவேன் அவருடைய நூலைப் பல்கால்
படித்துணர்ந்த காரணத்தினால் அத்தகையார் சீவக சிந்தாமணியை
வெறுத்தாரென்றும் அரசன் அதைப் படிக்காதவாறு செய்தாரென்றும் புனைந்துரை
கூறுவது சேக்கிழாரின் புலமைக்கு இழுக்குத் தேடுவதாகும்."
அதே மலா�ன் 248ம் பக்கத்தில் என் அன்புக்குரிய பொ�யார் உயர்திரு. ம.
இராசமாணிக்கம் பிள்ளை, M.A., L.T., M.O.L., Ph.D அவர்கள் "சிந்தாமணியும்
சேக்கிழாரும்" என்னும் தலைப்பில் எழுதியுள்ள ஆராய்ச்சிக் கட்டுரையில்
"சிந்தாமணியைச் சோழன் படித்துச் சுவைத்ததைக் காணப்பெறாது சேக்கிழார்
அதனை வெறுத்துப் "பொய்ந்நூல்" எனக் கூறியதற்கும். சிந்தாமணிக்கு
மாறாக அவர் பொ�ய புராணம் செய்தார் என்று கூறுவதற்கும் அகச்சான்றில்லை.
சேக்கிழார் பாடிய பொ�யபுராணத்திலும் இதற்கு அகச்சான்றில்லை ஆயின்.
இதற்கு மாறாகச் சேக்கிழார் சிந்தாமணியை நன்றாய்ப் படித்தவர்
என்பதற்குப் பொ�ய புராணத்திலிருந்து சில சான்றுகள் காட்டலாம். இங்கனம்
அந்நூலை நன்றாய் படித்து அனுபவித்து பெரும் புலவரான சேக்கிழார், அதனை
வெறுத்தனர் என்றோ, அதற்கு மாறாக அரசனைத் தூண்டிப் பொ�யபுராணம்
செய்தார் என்றோ கோடல் பொருத்தமன்று. எனவே சேக்கிழார் புராணக் கூற்று,
அதனை பாடிய ஆசிரியரது மனப் போக்கையே-சமணத்தில் வெறுப்பும் சைவத்தில்
அளவு கடந்த பற்றும் கொண்ட மனப்பான்மையே -உணர்த்துவதாகும் எனக் கோடலே
பொருத்தமாகும்"
"எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு"
எனும் தமிழ்மறை வழிநின்ற மேதைகள் எவரும் தங்கள் அறிவாற்றலால்
பொய்மையைக் கண்ணாடி போன்று கண்டு உண்மையைப் புலப்படுத்துவார்கள்
என்பதற்கு மேலே கண்ட இரு பேரறிஞர்களின் கருத்துக் கருவூலங்களே
சான்றாகும்.
அமொ�க்க முன்னாள் ஜனாதிபதி அறிஞர் ஆபிரகாம்லிங்கன் 'நீங்கள் சிலரை
எல்லாக் காலமும் ஏமாற்றலாம்; எல்லோரையும் சிலக்காலம் ஏமாற்றலாம்;
ஆனால் எல்லோரையும் எல்லாக் காலத்திலும் ஏமாற்ற முடியாது' என
முழுங்கிய பொன்மொழி உமாபதிசிவாச்சாரியா�ன் ஏமாற்றும் செயலுக்கு
மிகமிகப் பொருத்தமாகும். அவர் போலியாக எழுதிய நூலை அவர் காலத்திலேயே
அம்பலமாகிவிட்டனர். அன்றுமுதலே வழிவழியாகப் புலவர்களின் மதிப்பிழக்க
அப்போலி நூல் இன்றுள்ள புலவர்களாலும், அறிஞர் பெருமக்களாலும் 'இலக்கிய
காழ்ப்பின் சின்னம்' சமய வெறியின் சாயல் எனப் பட்டம் பெற்று
புறக்கணிக்கப்பட்டு வருவதைக் கண்கூடாகக் காண்கிறோம். செவி வாயிலாகக்
கேட்கிறோம்.
சேக்கிழாரின் திருத்தொண்டர் புராணம் தோன்றிய காலத்திலும், பின்னரும்,
வாழ்ந்த புலவரகள் சீவகசிந்தாமணியைப்போற்றியும், புகழ்ந்தும், தங்கள்
தங்கள் நூல்களிலே சீவகன் வாழ்க்கை நிகழ்ச்சிகளை இணைத்துப் பாடிய
பாக்களை முன்னர் கண்டோம் அப்புலவர் பெருமக்கள் பலரும் சைவ, வைணவ சமயச்
சான்றோர்களேயாவர் மேலும் உரையாசிரியரக்ள பலரும் தாங்கள் உரை எழுத
மேற்கொண்ட இலக்கண இலக்கியங்களில் சீவக சிந்தாமணியை மேற்கோளாகக் காட்டி
உரை எழுதியுள்ள செய்தியையும் முன்னரே அறிந்துள்ளோம்.. அப்
பேரறிஞர்களில் பெரும்பாலோர் சைவ, வைணவ சமயத்தைச் சார்ந்தவர்களே
என்பதைப் புலவர் உலகம் நன்கு அறியும், மேலே குறிப்பிட்டப் புலவர்களில்
சிலர் உமாபதி சிவாச்சாரியா�ன் காலத்தவர்களும் உள்ளனர் சீவக
சிந்தாமணியைச் சிறப்பித்த இப்புலவர்கள் எவரும் பொ�யபுராணம் என்னும்
திருத்தொண்டர் புராணத்தை எடுத்தாளவில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்
தக்கது.