 |
திராவிடர் -ஆசிரியர்:
பாரத நாட்டின் வரலாற்றில் திராவிடர்
ஆரியர் பற்றிக் காண்கிறோம்.
இவ்வரலாற்றைப் பள்ளிகளில் வைத்துள்ள ஆறாம் வகுப்புப் பாடப் புத்தக
முதல் கல்லூரி பாடப் புத்தகங்கள் வரை மாணவ மாணவிகள் படித்துப் பயின்று
வருகிறார்கள். பாடம் கற்பிக்கும் வரலாற்று ஆசிரியர்கள் பற்றிக்
கூறத்தேவையில்லை. இவ்வரலாற்றை நன்கு விளக்கிப் போதிக்கிறார்கள்.
வரலாற்றுத் துறை ஆராய்ச்சியாளர்களைப் பலரும்
ஆரியர் திராவிடர் போர்
என்ற தலைப்பில் மேல் நாட்டு அறிஞர்களும் நம் நாட்டு அறிஞர்களும்
கணக்கற்ற நூல்களின் வாயிலாக வெளியிட்டுள்ளனர்.
ஆரியர் வேதங்களில்
தங்கள் வேதங்களையும் வேள்விக் கொலைகளையும், ஏற்றுக்கொள்ளாது
எதிர்த்தவர்களை வேதப் பகைவர் என்றும் தஸ்யுக்கள்' என்றும் வசை
மொழிகளால் பாடியுள்ள மந்திரங்களும் இப்போர் நிகழ்ச்சியை
வலியுறுத்துவதைக் காணலாம்.
இப்பண்டைய வரலாற்றை நடுநிலையினின்று நுண்மாண் நுழை புலங்கொண்டு
ஆராய்வோர்க்கு அன்னியராகிய
ஆரியர் கொள்கை எதிர்த்தவர் யார்?
ஏற்றுக்கொண்டவர் யார்? என்பது புலனாகும்.
அவ்வளவு ஏன்? நாம் முன்னர் கூறியது போன்று ஏற்றுக் கொண்டவர்களின்
கலாச்சாரங்களும், எதிர்த்தவர்களின் கலாச்சாரங்களும் சான்றாக நின்று
காட்சியளிக்கும் ஏற்றுக்கொண்டோரின் வரலாற்றுப் பட்டியலில் திருஞான
சம்பந்தர் தோவராப் பாடல்கள் கலங்கரை விளக்கம்போல் காட்டுகின்றன. எனவே
பாரத நாட்டின் அருளற நெறிகளையும், நாகா�கத்தையும் நாளதுவரை அழியாது
பாதுகாத்து வரும் திராவிட மக்களையும்,
ஆரியர் கொள்கைகளை ஏற்றுக்
கொண்டு அவர்களோடு ஐக்கியமாகியுள்ள மக்களையும் ஆய்ந்து சமயத்தாலும்
நாகா�கத்தாலும் அன்னியர் யார் என்பதை தொ�ந்து கொள்ளலாம். திரு. மு.
அருணாசலம் அவர்கள் ஜைன சமயத்தவர் அன்னியர், அன்னிய சமயத்தவர் என
அழைக்கும் போலிக் கூற்றைப் போன்று அவரை அன்னியர் என அழையாமல் அன்னிய
கொள்கைகளுக்கு ஆளாகிய திராவிட இனத்தவர் என வரலாறு சிதையாவண்ணம் அவர்
இனத்தைப் பாதுகாக்கிறேன்.
பாரத நாடும் திராவிட மக்களும்:
பகவான் இடபதேவா�ன் மூத்த குமாரர் பரதன் என்பவர் முதன்முதலில்
இந்நாட்டை அருள் நெறியில் நீதிமுறை வழுவாது ஆட்சி
புரிந்து வந்தார்.
அதனால் இந்நாட்டு மக்களால் பரத சக்கரவர்த்தி எனப் பெருமையுடன் அழைத்து
இந்நாட்டிற்கு பரத கண்டம் என அவர் பெயரையே சூட்டி மகிழ்ச்சியுடன்
வாழ்ந்து வந்தனர். இவ் வரலாற்று உண்மையை ஜைன இலக்கியங்களேயன்றி
சிவபுராணம் பக்கம் 37, 57, லிங்கபுராணம் 163ம் அத்தியாயம்,
மார்க்கண்டேய புராணம் (54,39வது சுலோகம்) பிரம்மாண்டை புராணம் (2, 14
பக்கம்) வாயபுராணம் ( 30/50, 53), நாரத புராணம் 48ம் அத்தியாயம்,
ஸ்கந்தபுராணம் (கெளமார கண்டம் 37/5) ஸ்ரீமத் பாகவதம் ஐந்தாவது
ஸ்கந்தம், சார்த்தனாகநாத பாகவதம் ( 2, 44/45)
இப் பாகவத்தில் பரத சக்கரவர்த்தியின் வரலாறேயன்றி பல சிறப்புச்
செய்திகளையும் படைத்துள்ளது. அவைகளில் ஒன்றை மட்டும் படித்து
மகிழ்வோம்.
"ரிஷிப தேவா�ன் புத்திரன் பரதனின் கீர்த்தி ஆச்சா�யப்படும் வகையில்
உலக முழுவதும் பரவியிருந்தது. பரதன் எல்லோராலும் பூஜிக்கப்பட்டவன்
மக்கள் புதிய செயலை ஆரம்பிக்கும்போது பரதனின் திருப்பெயரை நினைத்தே
ஆரம்பிப்பர். அப்புண்ணியவான் பெயரால் தான் இத்தேசம் பாரத்வர்ஷமென
அழைக்கப்பட்டு வருகிறது."
மனோன்மனியம் என்னும் அரிய நாடக நூலினை இயற்றிய பேராசிரியர் சுந்தரம்
பிள்ளை அவர்கள் தம் நூலின் பாவின் உரையில், "விருஷப மகாராஜனது
புத்திரனான பரத மகாராஜனால் ஆளப்பட்ட இடமாதல் பற்றி இந்தியா பரத
கண்டமெனப்பட்டது."என எழுதியுள்ளார்.
இத்தகு சிறப்பமைந்த பல்வேறு சமயப் புராண்ங்களின் வாயிலாக பாரதகண்டம்
என்னும் பாரத நாட்டின் வரலாற்றை அறிந்தோம்.
இப்புண்ணிய பூமியில்
ஆரியர் வருகைக்கு முன்னர் வாழ்ந்த மக்கள் த்ரமனர்
அல்லது திராவிட மக்களேயாவர் என்பதை உலக வரலாற்று ஆசிரியர்கள் அனைவரும்
ஒப்பு கொண்ட உண்மை. அம்மக்களுக்கு பகவான் விருஷபதேவரால் முதன் முதல்
எழுத்துக்களும் வா�வடிவங்களும் அமைத்தருளியவைகளையே பிராமி எழுத்து என
இன்று அழைக்கும் தமிழ்மொழி. இம்மொழியைக் கொண்ட பிராமி எழுத்துக்களே
இந்தியாவின் பல பாகங்களிலும் கிடைத்துள்ள தொன்மை வாய்ந்த கல்வெட்டுச்
செய்திகள். இக் கல்வெட்டுச் செய்திகள் யாவும் தொல்பொருள் ஆராய்ச்சித்
துறையினரால் வெளியிடப்பட்டுள்ளன. இம்மாபெரும் வரலாற்றுச் செய்திகளை
பரதகண்டம் முழுமையும் திராவிட மக்களே வாழ்ந்து வந்தனர் என்பது
உறுதியாகிறது. இவ்வுறுதிப்பாட்டைப் பல்வேறு வரலாற்று மேதைகள் வாயிலாக
அறிந்துள்ளோமாயினும் பிராமி கல்வெட்டுச் செய்தி பற்றி ரஷ்ய அறிஞர்
ஸி. நெரோஸ்னக், எம் எஸ்ஸி அவர்கள் வெளியிட்டக் கருத்தை இங்கு காண்போம்.
இந்தியாவில் கலாசார மொழியில் வரலாற்றுக்கு மிகுந்த முக்கியத்துவம்
வாய்ந்த மக்கள் திராவிடர்களே என்ற உண்மை மிக நெருக்கமாக உள்ளது.
- சோவியத் நாடு ஜுன் 1972 பக்கம் 27.
ஜெர்மணி வரலாற்றுத்துறை பேராசிரியரான டாக்டர் ஹென்ரிச் ஜிம்மர் தாம்
எழுதிய (Philosophics of India) இந்தியாவின் தத்துவங்கள் என்ற நூலில்
"ஜைனர்கள் தங்கள் மதம் மிக்க தொன்மை வாய்ந்தது எனக் கருதுவதில் உண்மை
இருக்கத்தான் செய்கிறது. ஆராய்ச்சியின் வழியாகக் காணும் போது அந்த
தொன்மை ஆரியர்களுக்கு முற்பட்ட திராவிடர் என்று நம்புவதற்கு
இடமுன்டாகிறது." (பக் 64) என எழுதியுள்ளார். மற்றொரு மேல்நாட்டு
அறிஞர் மேலும் ஓர் உண்மையை நிலை நாட்டுகிறார்.
மேஜர் ஜெனரல் ஜே சி. பர்லாங் தாம் எழுதிய (The short study of
comparative Religion) என்ற நூலில் "பாரத நாட்டில்
ஆரியர்கள்
வருவதற்கு முன்னர் திராவிட நாகா�கம் என்ற சிறப்பு வாய்ந்ததொரு நாகா�கம்
வளர்ச்சியுற்றிருந்ததென கூறினோமல்லவா? அது வேறொன்றல்ல! ஜைன நாகா�கமே"
என்ற புதிய உண்மையை வெளியிட்டு நம்மையெல்லாம் வியப்புறச் செய்துள்ளார்.
மகிழ்ச்சிக்குரிய இவ்வரலாற்றுப் பேருண்மையை 1943ஆம் ஆண்டில்
சென்னையில் நடைபெற்ற மகாவீரர் ஜெயந்தி விழாவிற்கு தலைமை வகித்துப்
பேசிய மத்திய அமைச்சர் காலம் சென்ற உயர் திரு. சர் R.K. சண்முகம்
செட்டியார் அவர்கள் "இந்நாளில் திராவிட நாகா�கம் என்ற வார்த்தைகளை
வீண் விதண்டாவதங்களைக் கிளப்பியுள்ளவாயினும்
ஆரியர் வருமுன்னர் இங்கு
வசித்து வந்த திராவிட மக்களின் சமயம் ஜைனமாக இருந்ததால் அதை திராவிட
நாகா�கம் என்று கூறுவதே சா� என யான் கருதுகின்றேன்." என்ற தமிழகப்
பேரறிஞா�ன் பேருரை மேலே கண்ட மேநாட்டு ஆய்வுரைகளுக்கு அரணாக அமைந்து
நம்மையெல்லாம் களிப்பிலாழ்த்தி விழிப்புறச் செய்கின்றது.
வரலாற்றுச் சிறப்பமைந்த இக் கோட்பாடுகளால் நாம் முன்னர் கூறிய
திராவிடா�ன் கொள்கைகளே பாரத நாட்டின் பழம் பெரும் அறநெறிகள் என்ற
மறுக்கவியலாத உண்மை எனத் தெற்றென விளங்குகிறது.
இதனை உறுதிப்படுத்த பகவத்கீதை இரண்டாவது அத்தியாயம் இரண்டாவது
ஸ்லோகத்தில் அர்ச்சுனன் அஹிம்சாதருமத்தில் முழு நம்பிக்கை கொண்டவனாகி
போர் தொடுக்க மறுக்கின்றான் கொலை செய்யக் கூசுகின்றான் உறவினர்களின்
மீதும் குருமார்கள் மீதும் அம்பைத்தொடுக்க மனம் எழவில்லை இதனைக்கண்ட
கிருஷ்ணன் அர்ச்சுனா! அச்சத்தோடு கூடிய இந்த இழி நிலையில் உன்னை
மயக்குவது அஹிம்சா தருமமேயாகும். அது நமது கொள்கையன்று அநாரியர்
கொள்கை"எனக் கூறுகின்றார். இக்கூற்றுப்படி அஹிம்சா தருமமும் அதன்
கர்த்தாவாகிய விருஷபதேவரும் (அநாரியர்)
ஆரியர் அல்லாதவர் எனப்
பெறப்படுகின்றது. அநாரியர் என்றபோதே திராவிடர் என்பது சொல்லாமலே
விளங்கும்.
இப்பழம்பெரும் திராவிடக் கொள்கைகளையே நாளதுவரை ஜைனர்கள் கடைபிடித்து
இமயம் முதல் கன்னியாகுமாரி வரை ஆக்கப்பூர்வமாகப் பாதுகாத்து
வருகிறார்கள். இவ் உண்மைகளால் பாரத நாடு என்னும் இப் புண்ணிய பூமி
ஜைனர்களின் நாடாகவும், அவர்கள் அருளிய அஹிம்ஸை முதலிய அறநெறிகள்
அவர்கள் வழியே வளர்ந்தவை என்பதையும் தெள்ளத் தெளிய அறியலாம்.
ஆரியர் திராவிடர் போர்:
ஆரியர்கள் பாரத நாட்டில் நுழைந்தபோது இங்குள்ள திராவிட மன்னர்கள்
எதிர்த்துப் போராடினார்கள். இப்போரில்
ஆரியர்கள் வெற்றி கண்டார்கள்.
தோல்வியுற்ற திராவிட மன்னர்களில் சிலர்,
ஆரியர்களின் வழியில் சென்று
விட்டனர் இப்போரைப்பற்றி மேல் நாட்டு அறிஞர் நோயல் ரெட்டிக் (Noel
Rettig) என்பவர் பின்வருமாறு எழுதியுள்ளார்.
"ஆரியர்கள் இந்தியாவை வெற்றிகண்ட காலமான சுமார் கி.மு. 1800ம் ஆண்டில்
சாதி முறையும், பல தெய்வ வழிபாடும், மனிதபலி, விலங்கு பலிகளும்
இறக்குமதி செய்துவந்தனர். ஆனால் உள்நாட்டு மன்னர்கள் சிலர் வாழ்ந்தே
வந்தனர். இவர்களால்
ஆரியர்களுக்கு அச்சுறுத்தலாகவே இருந்தது" இதனை
நாம் முன்னர் கூறிய ஜிம்மர் பின்வருமாறு நன்கு விளக்கியுள்ளார்.
கி.மு. 4,5ஆம் நூற்றாண்டுகளில் ஆரிய க்ஷத்திரியர்களுக்குள் உட்பகை
ஏற்பட்டு வலிமை குன்றத்தொடங்கிற்று. இச்சமயத்தில் பல்வேறு இனத்தவர்கள்
ஆட்சிக்கு வந்தனர். இவர்களில்
ஆரியர்களுக்கு முற்பட்ட மன்னர்களின்
பின் வழியினராவர். இதற்குச் சான்றாக வேத மறுப்புக்கோட்பாட்டுப்
பரம்பரையில் (ஜைன வழிமுறை) வந்த மன்னர் சந்திரகுப்த மெளா�யரைச்
சொல்லலாம். இக்காலத்தில் திராவிடப் போர் வீரர்கள் அதிகாரத்தைக்
கைப்பற்றியிராவிடில் வடநாட்டுத் திராவிடர்கள் அனைவரும் சூத்தரர்களாகவே
ஆக்கப்பட்டிருப்பர்!
மறுக்கவியலாத இவ்வரலாற்றுக் கண்ணோட்டத்தின் வழியே தமிழக வரலாற்றைக்
காண்போம்.
வடநாட்டில் திராவிடர்கள் தங்கள் ஆட்சியை நிலை நாட்டியதால் பாரத
நாட்டின் பல்வேறு பகுதியிலுள்ள திராவிடர்கள் (ஜைனர்கள்) நிம்மதியாக
வாழ்ந்து வந்தனர்.
ஆரியர் கொள்கைகளோடு கலந்துவிட்ட திராவிடர்களும்,
அந்தப்பகுதியில் ச்�றுபான்மையினராக வாழ்ந்து வந்தனர். இத்தகு
சூழ்நிலையில்தான் அதாவது கி.மு. 3 அல்லது நான்காம் நூற்றாண்டில்
பத்திரபாகு சுவாமிகளும் சந்திரகுப்த மெளா�யரும் எண்ணாயிரம் ஜைன
முனிவர்களுடன் தென்னாட்டுத் திராவிடர்களின் நிலையை அறியவும், அவர்களை
பண்டைய கொள்கையினின்றும் வழுவாது நிலைநிறுத்தவும் விஜயம் செய்தார்கள்.
இவர்கள் தென்னாட்டிற்கு வர திட்டம் வகுப்பதற்கு முன் தென்னாட்டின்
நிலையை அறிந்துவர அனுப்பிய தூதுக்குழுவின் திருப்திகரமான நிலையை
அறிந்தே தென்னாட்டிற்கு புறப்பட்டு வந்தனர். அத்தூயோர்கள்
தென்னாட்டில்
ஆரியர் கொள்கைகளுக்கு ஆளாகாத பெரும்பாலான திராவிட மக்கள்
பண்டைய கொள்கைகளை கடைப் பிடித்து உறுதியுடன் விளங்குவதற்கறிகுரியாக
இல்லறத்தாரும், துறவறத்தாரும், தமிழ் நாடெங்கும் பரவி இருப்பதையும்
கண்டு அளவிலா மகிழ்வெய்தினர்.
இங்கே நாம் ஒன்றைச் சிந்தித்து உண்மை காண வேண்டும். மேலே கண்ட
எண்ணாயிரவரும் தென்னாட்டில் மதங்களுக்கு ஆதரவு இல்லாமலிருந்தால்
வரத்துணிவார்களா என்பதே அச்சிந்தனை மன்னர்களா திடீரெனப்படை எடுத்துவர!
இல்லை! முற்றுந் துறந்த முனிவர்களன்றோ வந்தவர்கள் ஆகவே தங்கள்
வருகைக்கு முன் இந்நாட்டின் ஆதரவை அறிந்தே புறப்பட்டார்கள் என்பதே
சாலப் பொருந்தும். எனவே பத்திரபாகு சுவாமிகளின் வருகைக்கு முன்னரே
தென்னாடெங்கும் ஜைன சமயம் பெருகி வளர்ந்தோங்கி வந்துள்ளது. என்பது
நன்கு புலனாகிறது. இவ்வரலாற்றுண்மையை அறிந்தோ, அறியாமலோ சில
வரலாற்றுத் துறை ஆராய்ச்சியாளர்கள் பத்திரபாகு சுவாமிகள் வருகைக்குப்
பின்னரே தென்னாட்டில் ஜைன சமயம் தோன்றலாயிற்று என்று பேசியும்
எழுதியும் வருவது வருந்தத் தக்கச் செயலாகும். எனவே பத்திரபாகு
சுவாமிகளின் தென்னாட்டு விஜய வரலாறு
ஆரியர் கொள்கைகளை ஏற்றுக்கொள்ளாத
திராவிடர்கள் (ஜைனர்) தென்னாடெங்கும் பரவியிருந்தனர் என்பதை
உறுதிப்படுத்துகிறது.
தமிழும் ஜைனமும்:
திராவிடர்கள் தென்னாடெங்கும் பரவியிருந்தனர் என்பதால் தமிழ்
நாட்டிலும் விளங்கினர் என்பது தெளிவு. இத்திராவிடர்களில் பாரத
நாட்டின் பண்டை அறநெறிகளைக் கொண்டவர்களும்,
ஆரியர் கொள்கைகள�த்
தழுவியவர்களும் வாழ்ந்தனர். இவ்விரு சாராரில் பழம்பெரும் திராவிடர்
கொள்கையையும் தமிழ்மொழியையும் பாதுகாத்துப் பின்பற்றிவரும் பழங்குடி
மக்களாகிய திராவிடர்களே (ஜைனர்) பெரும்பாலோராக நிறைந்திருந்தனர்.
இவ்வரலாற்றை மெய்ப்பிக்கத் தமிழ் நாட்டிலுள்ள நூற்றுக்கு
தொண்ணூற்றைந்து ஜினர் மலைகளே சான்றாக நிமிர்ந்து நிலைபெற்று பிராமி
எழுத்துகளுடன் காட்சியளிக்கின்றன.
முதல் திராவிட சங்கம்:
இவ்வாறு பண்டைய அறநெறிகள் ஒளிவிட்டு வீசும் தென்னாட்டில் ஆரியர் வருகை
அதிகா�த்து வரவே * கி.பி. முதல் நூற்றாண்டில் வாழ்ந்த குந்தகுந்தாச்சாரியார்
திராவிடர்களுக்கு விழிப்புணர்ச்சியை உண்டாக்க வேண்டி திராவிட சங்கம்
ஒன்றை நிறுவி திராவிடர் கொள்கைகள் அடங்கிய திருக்குறளை இயற்றித்தமிழ்
நாடெங்கும் பரப்பினார். அப்புகழ் பொதிந்த திராவிட சங்கத்தையே கி.பி.
4ஆம் நூற்றாண்டில் வஜ்ஜிர நந்தி மாமுனிவரால் புதுப்பிக்கப் பெற்று
வளர்ந்து வந்தது.
* வித்யாலங்கார பேராசிரியர் S.K. ராமச்சந்திரராவ் அவர்கள் எழுதியுள்ள
"Jainism in South India" என்ற நூலில் Dravida Sanga founded by Kund
Kunda and revived later by Vijjiranandi (about 450 A.D.) a pupil
of pujyapada.
தமிழ் மொழியின் ஆக்கம்:
மேலே கண்ட வரலாற்றால் நாம் ஓர் உண்மையை அறிந்து கொள்ளலாம். பாரத
நாட்டின் மக்களாக விளங்கிய திராவிடர்கள் வடநாட்டில் ஏற்பட்ட
குழப்பத்தால் அங்குள்ள திராவிட மக்கள் வெவ்வேறு மொழிகளிலும் நாகா�கத்திலும்
கலந்து இனங்காணா வகையில் மாறிவிட்டனர். எனினும் அவரவர் கொள்கைகளைக்
கொண்டு இனங்கண்டுகொள்ளலாம். தென்னாட்டிலும் அந்நிலை ஏற்பட்டதெனினும்
ஆரியர் கொள்கைகளுக்கு ஆளாகாதப் பெரும்பாலான திராவிட மக்கள் (ஜைனர்)
தங்கள் தொன்மை வாய்ந்த தமிழ் மொழியைக் கைவிடாமல் பாதுகாத்து வந்தனர்.
மொழியை மட்டுமின்றி தங்கள் பண்டைய அறநெறிகளையும் மக்கள் கடைபிடித்து
வந்தனர். இத்தீவிர திராவிட மக்கள் (ஜைனர்) தங்கள் தமிழ் மொழியின்
ஆக்கத்திற்கும், மேன்மைக்கும் உரிய பல்வேறு கலைகளையும் படைத்துச்
சிறப்புச் செய்தனர்.
அத்தூய அறவோர்கள் சிந்தனைச் சிற்பிகள்! அறிவியல் அறிஞர்கள்! இலக்கிய
மேதைகள்! இலக்கண விஞ்ஞானிகள்! கணித நூல் நிபுணர்கள்! நீதிநூல்
வல்லுனர்கள் அகராதி (நிகண்டு) அமைப்பாளர்கள்! இசைநூல் ஞானிகள்!
நாட்டிய நாடகநூல் கலைஞர்கள்! தர்க்க நூல் வத்தகர்கள்! ஓவிய நூல்
புலவர்கள்! சிற்ப கலைச் செல்வர்கள்! ஜோதிட நூல் செம்மல்கள்! சதகநூல்
சமர்த்தர்களுமாவார்! அறிவியல் துறையில் ஆக்கப்பூர்வமான நூல்களை
இயற்றித் தமிழ்மொழியின் காவலர்களாக விளங்கினர். பாரத நாட்டில் பண்டைய
தாய் மொழியாம் திராவிடர் மொழியாகிய தமிழ் மொழியை வளம் பெறச் செய்தனர்.
எத்த�யோ இன்னல்களையும் எதிர்ப்புகளையும் தாங்கி அவைகளை இன்னலெறெண்ணாது
தாய்மொழிப் பற்றையே உறுதியாகப் பூண்டு இணையிலா நூல்களை ஆழமாகச்
சிந்தித்து இயற்றி உலகோர் முன் அவைகளின் மாண்பினை அறியவைத்தனர்.
இப்பெறலரும் பேற்றினைப் பெற்று விளங்கியதனாலன்றோ இந்த இருபதாம்
நூற்றாண்டில் தமிழ்ப் பேராசிரியர் உயர்திரு. பெ சுந்தரம்
பிள்ளையவர்கள் இயற்றிய மனோன்மணியத்தில்
"நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ்பரத கண்டமிதில்
தக்கசிறு பிறைநுதலும் தா�த்தநறுந் திலகமுமே
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்த பெருந் தமிழணங்கே."
என்ற தமிழ் தாயின் வணக்கத்தை இயற்றும் வாய்ப்பு உண்டாயிற்று இவ்வாறே
தங்கள் பாரத நாட்டின் பழம் பெரும்கொள்கையாகிய அஹிம்சா தர்மத்தின்
அடிப்படையில் அறநெறிகளை அவ்வறிவியல் நூல்கள் வாயிலாக மக்கள் அறிவையும்,
பண்பையும், நாகா�கத்தையும் வளர்த்து வாழ்க்கைக்கு வழி காட்டினர்.
இத்தகு பாரதநாட்டு திராவிட மேதைகள் (ஜைனர்கள்) ஆதிகாலத் தமிழ்
மக்களின் வழி வழித் தோன்றியவர்கள்.
இப்பெற்றிய தீவிர தமிழ் அறவோர்களாக விளங்கிய தனாற்றான் பண்டையத் தமிழ்
மொழி மற்ற மொழிகளைப் போன்று சிதைவுறாமலும், கலவாமலும்,
மாற்றமடையாமலும், அதன் தனித்தன்மையைப் பேணிப் பாதுகாத்து வந்தனர்.
எனினும் அண்டைப் பகுதியிலுள்ள திராவிடர்கள் ஆரியக் கொள்கைகளில்
ஐக்கியமானது போன்று தங்கள் தமிழ் மொழியையும் பறி கொடுத்தனர் இப்பா�தாப
நிலையை உள்ளத்தில் கொண்டுதான், திரு பெ சுந்தரம் பிள்ளையவர்கள்,
"பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்
எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பது போல்
கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையா முந்துளுவும்
உன்னுதரத் துதித்தெழுந்தே ஒன்றுபல ஆயிடினும்
ஆரியம்போல் உலகவழக் கழிந்தொழிந்து சிதையாஉன்
சீரிளமைந் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே"
எனப்பாடிய பாட்டு நாம் மேலே கூறிய வரலாற்றை மெய்ப்பிக்கிறது.
அங்குள்ள திராவிடர்களில் தீவிரவாதிகளாகிய சிலர் (ஜைனர்கள்) மொழியை
இழந்தாலும் தங்கள் பண்டையக் கொள்களைத் தங்கள் புது மொழிகளில் புகுத்தி
நூல்கள் இயற்றி சிறப்பெய்தினர்.
பண்டைய திராவிட இனத்தில் உறுதிஉடையபர்கள் (ஜைனர்) எத்தகைய
எதிர்ப்பையும் பொருட்படுத்தாது தங்கள் கொள்கையினின்று நிலைதளராது
தங்கள் கலாசாரத்தில் கண்ணுங் கருத்துமாக இன்றளவும் வாழ்ந்து வருவதைத்
தமிழ் நாட்டிலும், கன்னட தேசத்திலும், பாரத நாட்டின் மற்றப்
பகுதிகளிலும் காணலாம். தெலுங்கு மொழியிலும் கேரள மொழியிலும், ஜைனர்கள்
நூல்கள் இயற்றியுள்ளனர் அவைகள் நெருப்புக்கும், நதிக்கும் இரையாயின.