 |
இராமநாதபுரம் மாவட்டம்
1. பிள்ளையார்பட்டி
2. பிரான் மலை
3. திருக்களாக்குடி
4. வீரசிகாமணி
5. குன்றக்குடி
6. கருங்காலக்குடி
7. திருவாதவூர்
திருநெல்வேலி மாவட்டம்
1. பொதிகை மலை
2. கழுகு மலை
3. மாறுகால் தலை
4. எருவாடி
5. ஆதிச்சநல்லூர்
6. சித்திரால்மலை
7. திருநந்திக்கரை
சேலம் மாவட்டம்
1. திருச்செங்கோடு
2. சங்ககிரி
3. தென்னன் குன்று (கவுண்டாபளையம்)
4. நைனார் மலை (இராசிபுரம் தாலுக்கா அருகில்)
5. வைகாப்பொன்மலை
கோவை மாவட்டம்
1. அறச்சாலையூர்
2. திருமூர்த்திமலை
3. ஆனைமலை
4. அரசனாமலை
வடஆர்க்காடு மாவட்டம்
1. வெள்ளிமலை
2. பஞ்சபரமேட்டி மலை (திருப்பான் மலை)
3. பொன்னூர் மலை
4. விடால் மலை
5. தொண்டூர் மலை
6. சீயமங்கல மலை
7. மாமண்டூர் மலை
8. திருமலை
9. வழுதலங்குன்றம்
10. கனகபுரங்குன்றம்
11. வெள்ளாயன் பாறை
12. ஜினகொண்டா
13. ஆண்டிமலை
14. திறக்கோவில்
15. அருகர்மலை
தென்ஆர்க்காடு மாவட்டம்
1. திருநாதர்க் குன்றம்
2. தனவானூர்மலை
3. வளத்திமலை
4. எண்ணாயிரமலை
5. திருநறுங்கொண்டை
6. பள்ளிச்சந்தம்
7. அனந்தமங்கலம் (அரசமங்கலம்)
8. திருநெடும்பாறை
செங்கற்பட்டு மாவட்டம்
1. ஆனந்தமங்கலம்
2. கருப்புக்குன்றம்
புதுக்கோட்டை
1. சித்தன்னவாசல்
2. அம்மாசத்திரம்
3. ஆளுருட்டிமலை
4. நார்த்தாமலை
5. பள்ளிவயல்
6. சடையாபாறை
7. தேனீமலை (தேனூர் மலை)
8. மலைக்கோயில்
திருச்சி மாவட்டம்
1. திருஜினப்பள்ளி (ஸ்ரீஜினப்பள்ளி)
2. புகழிமலை (கரூர்)
3. ஆறுநாட்டார் மலை
4. சீயாலம்
5. சுண்டைக்காய் பாறை
தஞ்சை மாவட்டம்
1. குடவாசல்
குமா� மாவட்டம்
1. ஸ்ரீபாதபாறை
இம்மலைப் பள்ளிகளில் பிராமி எழுத்துக்களும் வட்டெழுத்துக்களும்
காணப்படுகின்றன. பிராமி கல்வெட்டுச் செய்திகள் கி.மு. நூற்றாண்டுடையவை.
வட்டெழுத்துக்கள் கி.பி. முதல் நூற்றாண்டிலிருந்து பத்தாம் நூற்றாண்டு
வரையில் விளங்கியவை. இப்புனித மலைகளைச் சுற்றியுள்ள இக்கால கிராம நகர
மக்கள் இம்மலைகளைப் பஞ்சபாண்டவர் மலை எனக் கூறுவார்கள். ஆரம்ப
காலத்தில் அறவோர் பள்ளிகள் என அழைக்கப்பெற்றன. இப்பள்ளிகளில் தனியாக
இருக்க இயலாதாகையால் ஒவ்வொன்றிலும் ஐந்து, ஐந்து முனிவர்களும் அதற்கு
மேற்பட்டும் தங்கியிருந்தார்கள். பெரும்பாலும் ஐவரே இருந்தமையால்
இம்மலைகள் ஐவர்மலை எனப் பொதுமக்கள் அழைத்து வந்தனர். பின்னர்
பஞ்சவர்மலை எனத்
திரிந்து இப்பொழுது பஞ்சபாண்டவர் மலை என
அழைக்கப்பட்டு வருகின்றன.
"எங்குள அறத்தினோரும் இனிதூழி வாழ்க"
வாழிய ஜினர் மலைகள்!
வாழிய நல்லறம்
ஜினர் மலைகள்
ஜீவபந்து T.S. ஸ்ரீபால்
ராகம் : ரஞ்சனி; தாளம் : ஆதி
பல்லவி
பிறவிப் பிணியறுக்கும் பெருமலைகள் - நம்
பெருந்தவ முனிவர்கள் குகைப் பள்ளிகள்
அ. பல்லவி
அறிவுக்கலை வளர்த்துத் தவம்புரிந்தார் - உயிர்
அனைத்தும் இன்புற்றுவாழும் அறம் உரைத்தார்
சரணம்
நறுந்தென்றல் வீசிவரும் பொதியமலையே-அங்கே
நாதன் நேமிஜினர்மலை காணும்மலையே
அறவோர் அகத்தியர் ஆண்டமலையே-நம்
அருந்தமிழ் மொழிவளம் பெற்றமலையே (பி)
சித்திரால் திருச்சரணத் தெய்வமலையே - நூறு
ஜினர் சிலை காட்சிதரும் கழுகுமலையே
உத்தமபாளையத்து உயர் மலையே-அருள்
ஓங்கிடும் கொங்கர்புளியங் குளமலையே (பி)
புகழ்மணம் வீசுகின்ற புகழிமலையே - நம்
புனிதர் செங்காயப முனிவர் பள்ளியே
பகை நடுங்கும் சேரமன்னர் பணிந்த முனியே - மிகப்
பண்டைமொழி தாமிழியின் பழம்பள்ளியே (பி)
முத்துப்பட்டி மேட்டுப் பட்டி இருமலையே-ஜின
முனிவருறை திருச்செங் கோட்டுமலையே
சித்தர்மலை திருநந்திக் கரைமலையே-நெடுஞ்
செழியன் கடவன் தந்த மாங்குளமலையே (பி)
திருப்பரங்குன்றம் திருநாகமலையே-தினம்
தேவர் தொழும் சமணர்மலை ஆனைமலையே
அருங்குன்றம் இருங்குன்றம் ஆந்தைமலையே-உயர்
அணைப்பட்டி கீழவளவு ஐவர் மலையே (பி)
திருஜினப்பள்ளி குன்றக்குடிமலையே-வண்ணச்
சித்திரம் சேர் சித்தண்ண வாசல்மலையே
பெருந்திரு நறுங்கொண்டை திருமலையே-நடனப்
பெருமை விளங்கும் அறச் சாலைமலையே (பி)
குந்த குந்தர் தவம்புரிந்த பொன்னூர்மலையே-பெண்
குலம் கல்வி கற்றப்பள்ளி விடால் மலையே
அந்த மிகு தொண்டூர்மலை ஆண்டிமலையே-வினை
அகற்றும் திருநாதர்க்குன்றம் வெள்ளிமலையே (பி)
சிந்தை அறம் சேரும் சீயமங்கலமலையே-கலைச்
செல்வமெலாமோங்கிய எண்ணாயிரமலையே
அந்தரர் வந்தேகும் திருமூர்த்திமலையே-ஆஹா
ஆறுநாட்டார் குன்றம் மாமண்டூ மலையே (பி)
செந்தமிழ் நாட்டுத் திருஜினர்மலைகள்-உரையால்
செப்புதற்கு இயலாத எண்ணிக்கைகள்
வந்தனை செய்குவோம் வரைகள் நோக்கி-நேரே
வணங்கப் புறப்படுவோம் பயணமாக்கி (பி)