 |
செல்விருந்து :
அறவோர் பள்ளிகள் அமைந்திருக்கும் மலைகளின் அடிவாரத்திலும் அருகிலும்
பலஜைன நகரங்களும், கிராமங்களும் இடம்பெற்றிருந்தன. அக்கால இல்லறத்தார்
(சாவக நோன்பிகள்) தாங்கள் உணவு அருந்து முன்னர் தவத்தோர் வருகையை
எதிர்நோக்கி இருப்பார்கள். மலைக்குகைகளிலே உள்ள அருந்தவத்தோர்
அவரவர்களின் உணவருந்தும் நாளில் மலையினின்றும் இறங்கி கிராம
நகரங்களின் வீதியே செல்வார்கள். வீடு நோக்கிச் செல்லமாட்டார்கள்.
இத்தூயோர் வருகைக்கு "சா�யா மார்க்கம்" என வடமொழியில் பொருள்படும்.
இம் முனிபுங்கவர்கள் வீதியே வருகையில் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும்
இல்லறத்தார் வீதியிலேயே உணவளிப்பர். முனிவர்கள் தங்கள் இரு
கரங்களிலும் உணவை ஏற்றுப் புசிப்பார்கள். அதன் பின்னரே இல்லறத்தார்
தங்கள் வீட்டிற்கு அழைத்திருந்த விருந்தினரோடு உணவருந்தச் செல்வார்கள்.
இக்காட்சி அக்காலத்தில் தமிழகமெங்கும் விளங்கின. இத்தகு இல்லறத்தார்
கடமையை திருக்குறளாசிரியர்
"துறந்தார்க்கும் துவ்வாதார்க்கும் இறந்தார்க்கும்
இல்வாழ்வான் என்பான் துணை"
என அறிவுறுத்தியுள்ளார். நாம் மேலே கூறிய தவத்தோர் வருகையையும்
அப்புண்ணிய மூர்த்திகளுக்கு விருந்தளிக்கும் இல்லறத்தாரின் சிறப்பையும் திருக்குறளாசிரியர்,
"செல்விருந்தோம்பி வருவிருந்து-காத்திருப்பான்
நல்விருந்து வானத்த வர்க்கு"
எனப் புகழ்ந்துள்ளார். இவ்வரலாற்றுச் சிறப்பை சில உரையாசிரியர்கள்
மறைத்து, இல்லறத்தார் தங்கள் தங்கள் வீட்டிற்கு வருகின்ற
விருந்தினர்களில் விருந்துண்டு சென்றவர் போக, மேலும் வருகின்ற
விருந்தினரை உபசா�த்துவிட்டு பின்னர் தாங்கள் உணவருந்தச் செல்வார்கள்
எனத் திசைமாற்றித் திருப்பிவிட்டார்கள். இவர்கள் உரையை
ஏற்றுக்கொண்டால் இல்லறத்தார் வீடுகளெல்லாம் உணவு விடுதிகளாகக்
(Hotel) கருத நோ�டும். எனவே செல்விருந்து என்பது வீதியே செல்லுகின்ற
முனிவர்கள் என்பதே பொருத்தமும் பொருளுமாகும். திருக்குறளாசிரியா�ன் உள்ளத்தொழுந்த உறுதிப் பொருளும் இ�தே.
கல்வெட்டுச் செய்திகள் :
தொன்மை வாய்ந்த வரலாற்றுப் புகழும், கலைச் சிறப்பும் காவியப்
பெருமையும் மலர்ந்து மணம் வீசும் இப்புனிதக் குகைப்பள்ளிகளில் தவம்
புரிந்த அறப்பணிக் குரவர்களின் திருப்பெயர்களும், அப்புண்ணிய
மூர்த்திகள் ஆற்றிய கலைப் பணிகளும், பட்டினி நோன்பின் விளக்கங்களும்,
பிராமி என்ற தமிழ் எழுத்துக்களிலும், வட்டெழுத்துக்களிலும்
பொறிக்கப்பெற்றுள்ளன. அக்கடவுளர்படுத்து இளைப்பாற அக்குகைப் பாறைகளில்
வழவழப்பான படுக்கைகளும் செதுக்கப்பெற்றுள்ளன. ஆர்வவேரா�ந்த
அவ்அருந்தவத்தோர் வழிபாடியற்றத் தீர்த்தங்கரர்களின் திருஉருவச்
சிலைகள் சிற்பக் கலைகளுடன் செதுக்கப்பட்டுள்ள வேலைப்பாடுகள்
சிந்தைக்கு விருந்தாகக் காட்சியளிக்கின்றன. சில குகைகளில் திருவடிச்
சின்னங்களும காணப்படுகின்றன. மேலேகண்ட திருப்பணிகளைப்
புரிந்த
மன்னர்கள், சான்றோர்கள், அடியார்கள் ஆகியோரின் பெயர்களும், பள்ளிச்
சந்தமளித்தோர் செய்திகளும் அக்கல்வெட்டுக்களில் விளக்கப்பெற்றுள்ளன.
கண்டு முட்டு! கேட்டு முட்டு!
மலைக் குகைகளிலே தவமியற்றும் ஜைன முனிவர்கள் பல்வேறு நாட்களில்
பட்டினி நோன்பிகள் என்பதை முன்னர் விளக்கியுள்ளேன். அம்மாமுனிவர்கள்
உணவு உண்பதை ஒரு பொருட்டாக கருதவில்லை. செவிக்குணவில்லாத போது
வயிற்றுக்குஞ் சிறிது ஈயும் கொள்கையுடையவர்கள். இவ்வாறு உணவு
உண்பதையும் எந்தெந்த வகையில் உணவைத் தடுத்துக் கொள்ளலாம் என்பதற்கும்
ஒரு நியதியை மேற்கொண்டிருந்தார்கள். அத்தூயோர்கள் உணவுண்ணும்
நாட்களில் ஊர் நோக்கி வருவார்கள். வரும் வழிகளிலே கொலைகள்,
வேட்டையாடல்கள் போன்ற தீய செயல்களைக் கண்டால் உணவருத்த முட்டாகி
விட்டதென மலையை நோக்கித் திரும்பி விடுவார்கள். அதே போன்று புலாலுணவு,
கள் குடித்தல் போன்ற பேச்சுகளும், தீய சொற்களும் செவியில் விழுந்தால்
முட்டெனத் திரும்பி விடுவார்கள். இவைகள் யாவும் நிகழாமல் ஊருக்குள்
வந்து உணவேற்கும் நேரத்தில் காக்கை, கழுகுகள் வட்டமிட்டுக்கத்தினாலும்
உணவைத் துறந்து நேரே சென்று விடுவார்கள். இவைகளையே கண்டு முட்டு,
கேட்டு முட்டு என்று கூறுவதுண்டு. இம்முட்டுகளால் உணவின்றித்
திரும்பிய முனிவர்கள் மறுபடியும் அவரவர்கள் வகுத்துக்கொண்ட உணவுண்ணும்
நாட்களில்தான் வருவார்கள். வீடு பேற்றைக் குறிக்கோளாகக் கொண்டு உணவுத்
தியாக உணர்வோடு தவம்
புரியும் முனிவர்களின் வருகையை அக்காலமக்கள்
பலரும் அக்கரையோடு எதிர்பார்த்து மேலே கூறிய தீய செயல்களோ, தீய
சொற்களோ வழிகளில் நிகழாவண்ணம் எச்சா�க்கையாக இருப்பார்கள். இவ்வாறு
முனிவர்களின் உணவு நாட்களில் முட்டு ஏற்படா வகையில் பாதுகாப்பாக
இருப்பதை தங்கள் தங்கள் கடமையாகக் கொண்டு சமயபேதமின்றி அப்புனிதப்
பணியில் எல்லா மக்களும் ஈடுபட்டிருந்தனர்.
முனி-சாமி :
இப்புனிதப் பணியில் ஈடுபட்டிருக்கும் பொதுமக்கள் எதிர்பார்க்கும்
முனிபுங்கவர்கள் ஊர்நோக்கி வருவதைக் காணின் வருகிறார், முனிசாமி
வருகிறார் எனக் கூறிக்கொண்டே ஓடி, முனிவர்கள் அறியாவண்ணம்
பாதுகாப்புப் பணியை வெற்றியுடன் ஆற்றுவார்கள். முனி-சாமி என்பது
தமிழகத்து வரலாற்றுப் புகழமைந்த புனிதப் பெயர். ஊர்களிலேயே காவி
வேட்டியுடனும், கெளபீனத்துடனும் மக்கள் மத்தியில் உலவும் துறவிகளை
சாமி வருகிறார் என்பார்கள். முற்றும் துறந்த முனிவர்களை முனி-சாமி
வருகிறார் என்பார்கள். அந்தப் புனித அழைப்புத்தான் இன்று இல்லறத்தில்
வாழும் பலருக்கு 'முனிசாமி' எனப் பெயர் வழங்குகிறது. இப்பெயர்
துறவுநிலையைக் குறிக்கும் சொல்லாகையால் இல்லறத்தில் வாழும் ஜைனர்கள்
அப்புனிதப் பெயரைச் சூட்டிக் கொள்வதில்லை.
இனி பட்டினி நோன்புடைய முனிவர்களின் உணவுத் தியாகத்திற்குரிய முட்டுகளைப் பற்றி ஜைன சமய நூல்களிலேயன்றி பிற மதத்தினா�ன் நூலாகிய 'தத்துவ
நிஜானுபோகசாரம்' என்ற நூலிலும்
"கொன்றல் வேட்டல் குறைத்தல் கூப்பிடல்
கோழி கூகைகள் காகமும்
தின்றல் சோறெனப் புலா லிறைச்சிகள்
தீய சொற்கள் செப்புதல்
என்ற சொற்கள் அனந்தமும் செவி
யெய்திடில் சா�கைத் திறம்
அன்று முட்டென வோதும் முக்குடை
ஆதிநாதர் ஆகமம்"
என விளக்கப் பெற்றுள்ளது.
முட்டுகளைப் பற்றிய இவ்வரலாற்றுண்மையை மாற்றி தவறானக் கருத்துக்களைப்
பரப்பி சமயப் போருக்கு வழிவகுத்துள்ள செய்திகளை இங்குக் குறிப்பிடாது
சென்றால் என் கடமையினின்றும் தவறியவனாவேன்.
பிறந்த மேனியராய், குழந்தை உள்ளத்தராய், நிறைந்த ஞானியராய் விளங்கும்
அம் முனிபுங்கவர்களுக்கு பகைவர் என்றும், நட்பினர் என்றும், ஏழை
பணக்காரர் என்றும் எவரும் இல்லை. மக்கள் பலரையும் ஒன்றாக மதிக்கும்
மாண்புடையவர்கள். அத்தவத்தோர் மேற்கொண்டுள்ள உணவுக்குத்
தடையாயுள்ளமுட்டுகளை எம்மக்களாயினும் எச்சமயத்தவராயினும்
புரியக்
கண்டால் உணவருந்தாது திரும்பிவிடுவார்கள். இவ்வுன்னதக் கோட்பாட்டைப்
பிற்காலத்தில் தோன்றிய ஞானசம்பந்தர் இம்முட்டுகளைத் தமது சமயப்
போருக்கு ஏற்பத்திரித்துக் கூறி; அப்புனிதத் துறவிகள் போ�ல்
பழிசுமத்தி வகுப்புவாதத்திற்கு வித்திட்டுள்ள பக்தி பாடல்களைக்
கேளுங்கள்.
"நீற்றுமேனிய ராயினர் மேலுற்ற
காற்றுக் கொள்ளவும் நில்லா அமணரைத்"
- ஞா. ச.தேவாரம்.
எனப்பாடி தாம் மேற்கொண்டுள்ளதாகக் காட்டும் சைவ சமயத்தாரைத் தூண்டி;
ஜைன சமயத்தவர்பால் பகையை மூட்டிவிடுகின்றார். இவர் கூற்றை ஆழ்ந்து
சிந்தித்தால் ஓருண்மைப் புலப்படுகிறது. ஞானசம்பந்தர் தேவாரம்
முழுவதும் சைவசமயத்தின் உட்சமயங்களாகிய காபாலிகம், காளாமுகம்,
பாசுபதம் போன்ற சைவ சமயத் தாபசர்களையே பாராட்டிப் பாடியுள்ளார்.
இத்தாபசர்கள் குடித்தல், ஊன் உண்ணல், போகந்துய்த்தல் போன்ற தீய
செயல்களோடு சவந்தாங்கும் மயானத்துச் சாம்பலை உடலெல்லால் பூசிக்கொண்டு,
மண்டை ஓடுகளையும், எலும்புகளையும் மாலைகளாகத் தா�த்துக்கொண்டு, கபால
பாத்திரத்தில் கள்ளையும், ஊனையும் நிரப்பித் தன் மனைவிமார்களுடன்
வீதிகளில் 'நமச்சிவாயா! நமச்சிவாயா!' -எனக் குடித்துக்கொண்டும் தீய
சொற்களைப் பேசிக்கொண்டும்
திரிவார்கள். இத்தகு தீய தபசிகளின் வேடங்களை
விளக்கி மகேந்திர பல்லவன் 'மத்தவிலாச பிரஹசனம்' என நாடகமாக
எழுதியுள்ளான். இவர்களின் கோரக்காட்சியைக் கண்டு அத்தூய முனிவர்கள்
முட்டாகித் திரும்பி இருக்கலாம். ஆனால் தூய்மையாய் நாகா�கமாயுள்ள சைவ
சமய இல்லறத்தாரைக் கண்டு அத்தவத்தோர் முட்டாகக் கருதமாட்டார்கள்.
நாம் முன்னர் கூறிய சைவ சமயத் தாபசர்களாகிய காபாலிகக் காளாமுக வேடதாரிகளைக்
குறிக்காமல் நீறு பூசிய சைவசமயத்தவர் அனைவரையும் சேர்த்து
ஞானசம்பந்தர் பாடியிருப்பது வகுப்புவாதமேயாகும். இவ்வுண்மையை சைவ
மெய்யன்பர்கள் ஆழ்ந்து சிந்தித்தறிந்து, மதுரைக் காஞ்சியில்
போற்றப்பெற்றுள்ள தமிழ் வளர்த்தத் தூய முனிவர்களைப் புராணிகர்களேயன்றி
சங்க நூல் பயின்ற சைவப் புலவர் பெருமக்களும் தங்கள் தங்கள்
சொற்பொழிவுகளில் நிந்திக்காமலிருக்குமாறு வேண்டுகிறேன்.