 |
கல்வெட்டில் திருக்குறள்
எல்லிஸ் துரை திருவள்ளுவர் மீதும் திருக்குறளின் மீதும் கொண்டிருந்த
பற்றுக்கு எடுத்துக்காட்டாக இரு அரிய கல்வெட்டுக்கள் கிடைத்துள்ளன.
சென்னை நகா�ல் 1818-ல் கடும் குடிநீர்ப் பஞ்சம் ஏற்பட்டது. அப்போது
சென்னை கலெக்டராக இருந்த எல்லிஸ் துரை பெருமுயற்சி செய்து நகா�ல் 27
இடங்களில் குடிநீர்க் கிணறுகளைத் தோண்ட ஏற்பாடுகள் செய்தார்.
அக்கிணறுகளில் ஒன்று இராயப்பேட்டை பொ�ய பாளையத்தம்மன் கோயிலில்
இன்றும் உள்ளது. இக்கிணற்றின் கைப்பிடிச் சுவா�ல்
பதிப்பிக்கப்பட்டிருந்த ஒரு கல்லில் எல்லிஸ் துரை 1818-ம் ஆண்டில் ஒரு
நீண்ட கல்வெட்டை வெட்டி வைத்தார். (இக்கல்வெட்டு இப்பொழுது தமிழ்நாடு
தொல்லியல் துறையின் மதுரை அருங்காட்சியகத்தில் உள்ளது) அதில்,
சயங்கொண்ட தொண்டிய சாணுறு நாடெனும்
ஆழியிலி ழைத்த வழகுறு மாமணி
குணகடன் முதலாக குடகட லளவு
நெடுநிலந் தாழ நிமிர்ந்திடு சென்னப்
பட்டணத் தெல்லீச னென்பவன் யானே
பண்டார காரிய பாரஞ் சுமக்கையிற்
புலவர்கள் பெருமான் மயிலையம் பதியான்
தெய்வப் புலமைத் திருவள் ளுவனார்
திருக்குற டன்னிற் றிருவுளம் பற்றிய
'இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்
வல்லரணு நாட்டிற் குறுப்பு'
என்பதின் பொருளை யென்னு ளாய்ந்து,.
என்ற வா�களில் ஓர் அழகிய குறளை மேற்கோளாகக் கையாண்டிருக்கிறார்.
மேலும் எல்லிஸ் துரை அக்காலத்தில் சென்னப் பட்டணத்துப் பண்டாரகாரிய பாரம் சுமந்திருந்ததையும் இக்கல்வெட்டுக் குறிப்பிடுகிறது.
அக்காலத்தில் நாணய சாலை பண்டாரத்தின் (Treasury) மேற்பார்வையில்
செயல்பட்டு வந்தது என்பதையும் இங்குக் குறிப்பிட வேண்டும்.
மற்றொரு கல்வெட்டு, திண்டுக்கல் நகா�லுள்ள எல்லிஸ் துரையின்
கல்லறையின் மீது பொறிக்கப்பட்டுள்ளது. இதில் 'எல்லீசன் என்னும் இயற்
பெயருடையோன்'
',.திருவள்ளுவப் பெயர்த் தெய்வஞ் செப்பி
யருள் குறணூலு ளறப்பாலி னுக்குத்
தங்கு பலநூ லுதாரணக் கடலைப் பெய்
திங்கி லீசுதனி லிணங்க மொழிபெயர்த்தோன்,.'
என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கல்வெட்டுகளிலிருந்து எல்லிஸ்
துரையின் ஆழ்ந்த தமிழ்ப் புலமையும் அவருக்குத் திருவள்ளுவர் மீதும்
திருக்குறள் மீதும் இருந்த மிகுந்த ஈடுபாடும் தெளிவாகத் தொ�கின்றது.
திருவள்ளுவா�ன் திருமேனியே!
எனவே எல்லிஸ் துரை 1810-1819-ம் ஆண்டுகளில் சென்னைக் கலெக்டராகப்
பணியாற்றி வந்தபோதே பண்டார
காரியத்தையும் செய்து வந்தார் என்றும், அதே
சமயத்தில் திருக்குறளை முற்றிலும் ஓதி உணர்ந்து அதன் அருமை பெருமைகளை
அறிந்து அதற்கு ஆங்கிலத்தில் ஓர் உரை எழுதினார் என்றும்
மேற்குறிப்பிட்ட கல்வெட்டுச் சான்றுகள் மூலம் தொ�ய வருகின்றது.
எல்லிஸ் துரை தமது அரசுப் பணியில் கிடைத்த வாய்ப்பைப்
பயன்படுத்திக்கொண்டு தாம் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்த திருக்குறளை
இயற்றிய திருவள்ளுவப் பெருமானின் திருவுருவத்தைக் கும்பினி அரசின்
பொ�ய தங்க நாணயமான இரட்டை வராகனில் பதிப்பிக்க ஏற்பாடுகள் செய்தார்
என்று நம்ப இடமிருக்கிறது.
சென்னையிலுள்ள ஆவணக்காப்பகத்தில் நான் ஆய்வு செய்தபோது, சென்னை நாணய
சாலையில் அச்சடிக்கப்பட்ட தங்க நாணயங்களின் மாதிரிகள் பெட்டிகளில்
வைக்கப்பட்டு அவற்றுடன் சென்னை அரசு மூலமாகக் கல்கத்தாவிலிருந்து
மத்திய அரசுக்கும் லண்டனில் செயல்பட்ட கும்பினி டைரக்டர்களின்
ஆணையத்திற்கும் அனுப்பப்பட்ட குறிப்புகள் கிடைத்தன. ஆயினும்
அக்கடிதங்களுடன், இணைக்கப்பட்டிருந்த பட்டியல்களின் நகல்களோ,
காசுகளின் வரைபடங்களோ கிடைக்காததால் இவ்வாண்டுகளில் அச்சிட்ட இரட்டை
வராகன்களில் இதுவும் ஒன்றா என்று கண்டுபிடிக்க முடியவில்லை. என்றாலும்
இக்காசுகள் லண்டனிலும் கல்கத்தாவிலும் உள்ள அருங்காட்சியகங்களில்
மட்டுமே கிடைப்பதால் அவை மேற்கூறியவாறே அந்த இடங்களுக்குப் போய்ச்
சேர்ந்திருக்க வேண்டும் என்பது தெளிவு.
அச்சிடப்படும் இந்தத் தங்க நாணயம் புழக்கத்திற்காக ஏன்
வெளியிடப்படவில்லை என்ற கேள்விக்கு இப்பொழுது விடை காண்பது கடினமே.
ஒருக்கால் இக்காசின் மாதிரிகள் கல்கத்தாவில் இருந்த மத்திய அரசிற்கும்,
லண்டனில் இருந்த கும்பினி ஆணையத்திற்கும் போய்ச் சேருமுன்னர் இனிமேல்
வராகன்களை அச்சடிப்பது இல்லை என்ற முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம்.
அல்லது திருவள்ளுவப் பெருமானின் அருமை பெருமைகளை உணராது, மத்திய
அரசும் கும்பினி நிர்வாகமும் இக்காசை வெளியிடும் திட்டத்தை நிராகா�த்திருக்கலாம்.
மேலும் ஆவணங்கள் கிடைத்தால்தான் இப்பிரச்சினைக்குத் தெளிவான விடை
கிடைக்கக் கூடும்.
அக்காலத்திய நாணய சாலை ஆவணங்கள் இப்பொழுது மிகவும் சிதிலமாகவும்
இன்னும் சீர்படுத்தப்படாமலும் இருப்பதால் அவற்றை முற்றிலும் ஆய்வு
செய்ய இயலவில்லை. எனினும் கிடைத்துள்ள எல்லாச் சான்றுகளையும் தொகுத்து
ஒருங்கே நோக்கினால் இத்தங்க நாணயத்தில் திருக்குறளுக்கு உரை கண்ட
எல்லிஸ் துரையின் செல்வாக்கால் திருவள்ளுவப் பெருமானின் திருவுருவம்
பொறிக்கப்பட்டிருக்க வேண்டும் என்றே தோன்றுகிறது. சென்னை ஆவணக்
காப்பகத்தில் மேலும் தேடினால் இம்முடிவுகளை உறுதிப்படுத்தச் சான்றுகள்
கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.
திருவள்ளுவா�ன் திருவுருவ அமைப்பு
இக்காசில் காணப்படும் திருவுருவத்தையும் சென்னை மயிலையில் உள்ள
திருவள்ளுவர் கோயிலில் அண்மையில் அகழ்ந்தெடுக்கப்பட்ட திருவள்ளுவர்
சிலையையும் ஒப்பிட்டுப் பார்க்கலாம். சுமார் 14-15-ம் நூற்றாண்டைச்
சார்ந்ததாகக் கருதப்படும் இக்கற்சிலையைப்பற்றித் தமிழ்நாடு தொல்லியல்
துறை ஆய்வாளர் ச. கிருஷ்ணமூர்த்தி பின்வருமாறு கூறுகிறார்.
'இச்சிலையின் உருவம் பீடத்தில் இரு கால்களையும் மடக்கி அமர்ந்த
நிலையில் காணப்படுகிறது. தியான நிலையில் வலக்கை சின்முத்திரையுடன்
அக்கமாலை ஏந்தியும் இடக்கை ஓலைச்சுவடி ஏந்தியும், இச்சிலை
காணப்படுகிறது. இவ்வுருவத்தின் தலையை முடிந்த கொண்டையும், முகத்தில்
நீண்ட தாடியும் உடலில் ஓடும் பட்டையான அங்கியும், இடையில் ஆடையும் அணி
செய்கின்றன. இன்று தமிழக அரசின் மூலம் பிரபலமாகியிருக்கும்.
திருவள்ளுவா�ன் திருவுருவப்படமும் ஏறத்தாழ இக்கற்சிலையின் அமைப்பை
ஒத்துள்ளது எனலாம்.
இக்காசில் காணப்படும் திருவுருவத்திற்கும் மற்ற இரு உருவங்களுக்கும்
இடையில் பல ஒற்றுமைகள் கண்கூடாகத் தொ�கின்றன. ஆயினும் ஒரு முக்கிய
வேறுபாடும் பளிச்சென்று தொ�கிறது. காசில் உள்ள முனிவா�ன்
திருவுருவத்தில் தலை மழித்தும் முகத்தில் தாடி மீசையின்றியும்
இருப்பது குறிப்பிடத்தக்க வேறுபாடாகும்.
திருவள்ளுவர் சமணரா?
இக்காசில் முனிவா�ன் தலைமீதுள்ள குடையையும், மழிந்த தலையையும்,
முகத்தையும் காணும்போது இவரை உருவகப்படுத்தியவர்கள் இவர் ஒரு சமண
முனிவர் என்று கருதியுள்ளார்கள் எனத் தெளிவாகத் தொ�கிறது.
திருக்குறளில் 'ஆதிபகவன்', 'மலர்மிசை ஏகினான்', 'அறவாழி அந்தணன்'
போன்றுவரும் சொல் தொடர்கள் வள்ளுவப் பெருமான் சமண சமயத்தினர் என்று
கொள்வதற்கு வலுவான சான்றுகளாகும்.
வேண்டுகோள்
வள்ளுவப் பெருந்தகை திருவுருவத்தைத் தாங்கி நிற்கும் பொற்காசு ஓர்
அரிய கலைப்பொக்கிஷம் என்பதில் கருத்துவேறுபாடு இருக்க முடியாது.
திருவள்ளுவப் பெருமானின் திருவுருவம் பொறிக்கப்பட்டிருக்கும் நான்கு
தங்க நாணயங்களில் இரண்டு லண்டன்
பிரிட்டிஷ் மியூசியத்தில் நமக்கு
எட்டாக் கையில் உள்ளன. நம் நாட்டிலேயே கல்கத்தாவில் இந்திய
அருங்காட்சியகத்தில் உள்ள மற்ற இரு காசுகளில் ஒன்றையாவது நிரந்தரக்
கடனாகப் பெற்று அக்காசைத் திருவள்ளுவப் பெருமான் அவதா�த்த சென்னை
மாநகா�ன் அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்க தமிழக அரசு
ஆவண செய்ய வேண்டுமெனக்கோருகின்றேன்.
இக்காசை முன் மாதிரியாகக் கொண்டு மத்திய அரசு ஒரு வெள்ளி ரூபாய்
நாணயத்தை வெளியிட வேண்டுமென்றும் தமிழக அரசு கோர வேண்டும். இத்தகைய
காசு வெளியானால் அது திருவள்ளுவா�ன் புகழை மேலும் பரவச் செய்வதுடன்
எல்லிஸ் பெருமான் கண்ட கனவையும் நனவாக்கிவிடுமல்லவா?
குறளும் சமணமும்
பன்மொழிப் புலவர் மு.கு. ஜகந்நாத ராஜா
உலகப் பொதுமறை என்று புகழப்படும் திருக்குறள் அனைத்துச் சமயத்தாரும்
ஏற்கும் அரிய அறநூல் ஆகும். ஏனென்றால் அறம் - எல்லாச் சமயத்தார்க்கும்
ஏற்புடையதே. தத்துவம், மதம், கடவுட்கோட்பாடுகள் ஆகியவற்றை விளக்கும்
நூலாக இருந்தால் அது எல்லாரும் ஏற்க முடியாததாக, ஒரு சிலர் மட்டுமே
பாராட்டும் நூலாக அமையும். உதாரணமாக நீலகேசி, சமணத் தத்துவத்தைச்
சிறப்பித்துக் கூறுகின்ற தத்துவ நூல்; தமிழில் சிறு காப்பியங்களில்
ஒன்றாக வைத்தெண்ணப்படுவது. அதனைப் பிற சமயத்தினர் ஏற்கமாட்டார்கள்.
சிவஞானபோதம் - சைவ தத்துவநூல். அதனைப் பிற சமயத்தினர் ஏற்க
மாட்டார்கள். அறத்தை வலியுறுத்தும் நூல்களாக இருப்பதனால்தான்
திருக்குறள், கீதை, தம்மபதம் இம்மூன்றையும் எல்லோரும் பாராட்டிப்
பயின்று மகிழ்கின்றனர். சிலர் தம் வாழ்வில் கடைப்பிடிக்க
முயல்கின்றனர். குறள் - சமணச் சார்புடைய நூல் என்றும் கீதை - வேதச்
சார்புடைய நூல் என்றும் அறிஞர்கள் கூறுவர். இவற்றுள் திருக்குறள்
உலகியல் அறங்கூறும் உன்னதமான நூலாகத் திகழ்வதால் தற்காலத்தில் பலரும்
தம் சமயநூல் தான் என்று கூறுகின்ற நிலையைக் காண்கிறோம். ஐம்பது
அறுபதாண்டுகளில் தான் குறளுக்கு ஏற்றம் வந்தது. தத்தம் சமயம் சார்ந்த
நூல் என்று பலரும் கூறத் தலைப்பட்டுள்ளனர்.
திருக்குறட் கருத்துக்கள் தம் சமயக் கருத்துடன் ஒத்திருப்பதால் அது
தம் சமயநூல் என்று கூற முற்படுவது பிழையாகும். உலகில் பேரறிஞர்களின்
சிந்தனையில் ஒற்றுமை இருப்பது இயல்பேயாகும்.
கி.மு. ஆறாம் நூற்றாண்டில் இருந்த சீன அறிஞர் கன்பூஷியஸ், நம்
நாட்டில் இருந்த புத்தர், மகாவீரர், ஆகியோர் - "எது தனக்கு
விருப்பமற்றதோ அதைப் பிறருக்குச் செய்யாதிருப்பதே அறம்" என்று
கூறுகின்றனர். அதனையே குறளாசிரியரும்.
"இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை
வேண்டும் பிறன்கட் செயல்". (316)
"இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ
வன்சொல் வழங்கு வது" (99)
போன்ற குறள்களில் கூறியுள்ளார். இதைக் கண்டு குறளாசிரியர்
கன்பூஷியசுக்குக் கடன் பட்டார் என்று கூறுவது பொருந்தாது.
கீதையில்,
"யதா ஸ்ம்ஹரதே சாயம்
கூர்மோ அங்கானீவ ஸர்வஸ:
இந்த்ரியாணீந்த்ரி யார்த்தேப்பயஸ்
தஸ்ய ப்ரக்ஞாப்ரதிஷ்டிதா. (2-58)
"ஆமை எவ்விதம் தன் உறுப்புகளை உள்ளுக்குள் அடக்கிக் கொள்கிறதோ
அதுபோலத் தன் இந்திரியங்களை (ஐம்புலன்களை) அடக்கியவனுடைய அறிவு
நிலைபேறுடையதாகும்" என்று புலனடக்கம் பற்றிக் கூறப் பட்டுள்ளது. அது
போன்றே குறளிலும் கூட
"ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப் புடைத்து". (126)
என்று கூறப்பட்டுள்ளது.