 |
ஆதிபகவன்
'மன்னியபே ருலகனைத்தும்
நின்னுள்ளேநீ யொடுக்கினை
நின்னின்று நீவிரித்தனை
நின்னருளின் நீகாத்தனை - எனவாங்கு
ஆதிபகவனை அருகனை
மாதுயர் நீங்க வழுத்துவம் பலவே'
- திருக்கலம்பகம்
'ஆதிபகவன் அசோக அசலன்
சேதிபமுதல்வன் சினவரன்தியம் பகன்'
- திருப்பாமாலை
'போது சாந்தம் பொற்பவேந்தி
ஆதிநாதர் சேர்வோர்
சோதி வானம் துன்னுவாரே'
- யாப்பருங்கலக்காரிகை, உரைமேற்கோள்.
அறிவன்
'கடையிகந்த காட்சியொடு - கடையிகந்த வாலறிவன்'
- திருக்கலம்பகம்.
'இலங்கொளி முக்குடை எந்திரத் தியங்க
அறிவர் சா�தம் முறையிற் காட்டி'
- பெருங்கதை
'அறிவினாலறியாத அறிவ நீ' - மேருமந்தர புராணம்
'உலகமூன்று மொருங்குட னேத்துமாண்
திலகமாய திற லறிவன்னடி' - வளையாபதி.
மலர்மிசை ஏகினான்
'விரிபூந்தாமரை மேற்சென்ற திருவாரடி யேந்தி'
- சீவகசிந்தாமணி.
'விரைமணந்த தாமரைமேல் விண்வணங்கச் சென்றாய்'
- சூளாமணி
'பூவின்மேல் சென்றான் புகழடியை'
- அறநெறிச்சாரம்
'பூவின்மேல் வந்தருளும் புங்கவன்றன் பொற்பாதம்'
- நேமிநாதம்
'மருவார் மலர்பிண்டி மன்னா நமஸ்தே
வண்டாரு மலர்மேல் நடந்தாய் நமஸ்தே'
- தோத்திரத்திரட்டு
வேண்டுதல் வேண்டாமையிலான்
'வேண்டுதல் வேண்டாமை யில்லாத வீரனடி
பூண்டுகிடந்தாற் புறத்திறந்த வெங்கூற்றம் போகும்போலும்
- திருக்கல்பகம்
'ஆழ்த்துதி ஆர்வமுஞ் செற்றமும் நீக்கிய வச்சுதனே'
- திருநூற்றந்தாதி
'உவத்தல்காய்தலாலுன் திருவடித் தவத்தெழுந்தோர்க்கு
உவத்தல் காய்தலுன் திருவுளத்தொன்றும் இலையேல்'
- மேருமந்தர புராணம்
'மலர்தலை யுலகின் மல்கிருளகல
இல கொளிபரப்பி யாவையும் விளக்கும்
பகுதியி னொருதா னாகி முதலீ
றொப்பள வாசை முனிவிகந் துயர்ந்த
அற்புத மூர்த்திதன் னலர்தரு தன்மையின்
மனவிருளிரிய மாண்பொருள் முழுமையும்'
- நன்னூல்
இருள்சேர் இருவினையும் சேரா
'இருள்புரி உலகம் சேரா வியனெறி பயந்த பெம்மான்
பொருள்புரி விழவு காண்பார் புண்ணிய உலகம் காண்பார்'
'வென்றான் வினையின் றொகையாகி
விரிந்து தன்கண்
ஒன்றாய்ப் பரந்த உணர்வின் னொழியாது முற்றும்
சென்றான் திகழுஞ்சுடர் சூழொளிமூர்த்தி யாகி
நின்றான் அடிகீழ்ப் பணிந்தார் வினைநீங்கிநின்றார்'
- சூளாமணி
'ஆதிநாள்புண
ரேதில் வல்வினை
கோதில் வாமனை
யோதிலோ டுமே' - திருக்கலம்பகம்
பொறிவாயிலைந் தவித்தான்
'பொறிவரம் பாகிய புண்ணிய முதல்வன்' - சீவகசிந்தாமணி
'பொறியிலா அறிவன்நீ பூசனைக் கிறைவன்நீ'
- மேருமந்தர புராணம்
'பொறிவாயி லைந்தவித்த புனிதன்நீயே' - சீவ சம்போதனை
அறவாழி வேந்தன்
'மன்ற னாறு மணிமுடிமேல் மலிந்த சூளா மணிபோலும்
வென்றோர் பெருமா னறவாழி வேந்தன்
விரிபூந் தாமரையே'
- சீவகசிந்தாமணி
'ஆண்டுகொண்டே யறவாழி கொண்டே வென்ற அந்தணனே' -திருநூற்றந்தாதி
'பள்ளி யுணர்ந்திலையோ பாவாய்நீ முன்வந்தென்
வள்ள லறவாழி நாதன்மலரடியை' - திருப்பாவை
தனக்குவமை யில்லாதவன்
'ஒருதனி விளங்கிய உத்தமா போற்றி' - திருப்பாவை
'வெலற்கரும் வினைப்பகை வேரொடும் வென்றனை
சொலற்கரும் மெய்ப்பொருள் முழுவதும் சொல்லினை
அருவினை வெல்பவர்க் கரும்புணை யாயினை
யொருவனை யாகி யுலகுட னுணர்ந்தனை'
- யாப்-விரு. சூத். 8. உரைமேற்கோள்
எண்குணத்தான்
'இருநால் வினைகெடுத்திட்டெண் குணனுமெய்தி'
- சீவசம்போதனை
'இறைவனீஈசனீஎண்குணத்தலைவநீ' - மேருமந்தர புராணம்
'அவ்விந்திரனுக்குமுன் எண்குணத்தெம் காவலனை
கவிப்பார் வளைப்பார் முளைப்பார்களைப் போல்'
- திருநூற்றந்தாதி
'பெண்பால் வா�வண்டும் தேனும்பாடும் பொழிற்பிண்டி
எண்பா லிகந்துயர்ந்தார்க்கு இசைந்தகோயில் இயன்றதே'
- சீவகசிந்தாமணி
'கடையிலா ஞானத்தோடு காட்சிவீரிய மேயின்பம்
இடையுறு நாமமின்மை விதித்த கோத்திரங் களின்மை
அடைவிலா வாயுவின்மை அந்தராயங் களின்மை
உடையவன் யாவன்மற் றிவ்வுலகினுக் கிறைவனாமே'
- சூடாமணி நிகண்டு
பிறவிப் பெருங்கடல்
'பிறவிப் பெருங்கடலை நீந்திய பெய்வளையாய்'
- திருப்பாவை
'பிறவிமாக்கடல் பெயர்க்குமாற்றலால்
இறைவன் அன்னவனேந்து கொள்கையான்'
- மேருமந்தர புராணம்
'பீடில்பிறப்பெனும் ஆழிதனைக்கரை யேற விடற்கருளாய்
பேரற நற்பலகைக் குருவாணி எனத்திக ழைந்துவதம்
கூடமெனப்பிறழ் கப்பல் நிரப்பிய கொள்கைச் சரக்கெனவே
கூறியவேதமு மாதிபுராணமும் குற்றமில் தத்துவமும்
நீடநிரப்பிய நிச்ச நயம்பிர மாணமெனுங் கயிற்றால்
நேர்மையெனும்
விரிபாயுமருட்கொடி கட்டிமீ காமனென
ஓட நடத்தியே உயிர்க்கரை யேற்றுவன் உருட்டுக சிறுதேரே
உலகொடு மூன்றறியுந்திருஞானா உருட்டுக சிறுதேரே'
- ஆதிநாதர் பிள்ளைத் தமிழ்
'எண்குண இறைவன்' என வடஆற்காடு ஜில்லா போளூ ர் தாலுக்கா
திருமலையிலுள்ள குந்தவை ஜினாலயத்தின் கல்வெட்டுச் செய்தியாலும்
அறியலாம்.
இனி சிலப்பதிகாரத்தைக் காண்போம். நாடு காண் காதையிலுள்ள அருகர்
வாழ்த்தும், திருக்குறள் கடவுள் வாழ்த்தும் ஒன்றாகவே
அமைந்திருக்கின்றன.
சித்தன், பகவன் - (ஆதிபகவன் முதற்றே - குறள்)
'அறிவன், அறிவு வரம்பிகந்தோன்' - (வாலறிவன் - குறள்)
'மலர்மிசை நடந்தோன் மலரடியல்லதென்' - (மலர்மிசை ஏகினான் - குறள்)
'ஆர்வமுஞ் செற்றமும் அகல நீக்கிய' - (வேண்டுதல்
வேண்டாமையிலாதான்-குறள்)
'ஒழிகென ஒழியா தூட்டும் வல்வினை இட்ட வித்தினெதிர் வந்தெய்தி
ஒட்டுங்காலை ஒழிக்கவு மொண்ணா
- (இருள்சேர் இருவினையும்-குறள்)
'ஐவரை வென்றோன் அடியிணை'
- (பொறி வாயிலைந்தவித்தான்-குறள்)
'தலைவன், பரமன், பொ�யவன், செம்மல், கயம்பு'
- (தனக்குவமையில்லாதான் - குறள்)
'அறவோன், தருமமுதல்வன், அருளறம் பூண்டோன்'
- (அறவாழி அந்தணன்-குறள்)
'பண்ணவன், எண்குணன்' - (எண்குணத்தான்-குறள்)
'திகழொளி இறைவன்' - (இறைவன் பொருள்சேர்-குறள்)
'போதாபிறவி பொதியறை யோரென, சிவகதிநாயகன்'
- (பிறவிப் பெருங்கடல் நீந்துவர்-குறள்)