 |
"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்" (972)
"அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்". (30)
என்று கூறி வருணப் பாகுபாட்டை ஏற்கவில்லை. நான்கு ஆசிரமக்
கோட்பாட்டையும் அவர் ஏற்கவில்லை. சமணக் கோட்பாடாகிய ஸ்ராவக தருமம்
முனிதருமம் எனும் இரண்டு ஆசிரமக் கோட்பாட்டை ஏற்கிறார் என்பது குறள்
அமைப்பிலேயே தொ�கிறது. அறத்துப்பாலை - இல்லறம் - (சிராவகதருமம்)
துறவறம் (முனி தருமம்) என்றுதான் பகுத்துள்ளார். இதிலிருந்தே அவர்
வேதச் சார்புடையவர் அல்லர் என்பது
புரிகிறது. மற்றும் வேத மதம் கூறும்
எந்தத் தெய்வத்தையும் ஷண்மதம் ஆகிய ஸெளரம், காணாபத்தியம், கெளமாரம்,
சைவம், சாக்தம் ஆகிய எந்தக் கடவுளரையும் வணங்காதவரை எப்படி வைதீக
மரபினர் என்று கூற முடியும்? சமண சமய நூல்களிலும் வருணா சிரமங்களைப்
பற்றித் தம் மரபுக்கேற்ற விளக்கங்களுடன் குறிப்பிடப்பட்டுள்ளதேனும் -
அது அக்கால சமுதாய அமைப்பின் தாக்கத்தால் ஏற்பட்ட கருத்தாகும். அதைக்
கொண்டு வைதீக வருணாசிரமத்தை ஏற்றனர் எனல் கூடாது. சாங்கியம், யோகம்,
நியாய வைசேடிகங்கள் தத்துவ தருக்க நெறி சார்ந்தவை. வைதீக, சமண,
பெளத்த சமயங்கட்கும் உடன்பாடான சிந்தனைகளை உடையவை. யோகம், சமண,
பெளத்த மதங்களும் ஏற்பவைதாம். மேலும் இவை தனிச் சமயங்களாக்கப்
பெறவில்லை. சாங்கியம் - சில காலம் தனிச் சமயமாக இருந்து மறைந்து
விட்டது. சாங்கியமும் சமணமும் அடிப்படையில் ஒன்றுதான். பிரகிருதி (புத்கலம்)
புருஷன் (ஜீவன்) ஆகிய இரண்டு மெய்ப்பொருளை மட்டுமே கூறுவன.
மூன்றாவதான ஈஸ்வரன் (உலகைப் படைத்த இறைவன்) என்ற கோட்பாட்டை
சாங்கியமும், சமணமும், பெளத்தமும் ஏற்கவில்லை. பிற்காலத்தில்தான்
சாங்கியமும் யோகமும் இணைந்த பிறகு சாங்கியத்திலும் ஈஸ்வரக் கோட்பாட்டை
வைதீகர்கள் நுழைத்தனர். சாங்கியத்தின் பல்லுயிர்க் கோட்பாடு சமணத்தோடு
ஒத்துள்ளது. எனினும் சாங்கியம் கூறும் இருபத்து நான்கு தத்துவக்
கோட்பாட்டைச் சமணம் ஏற்பதில்லை. அவை பொருத்தமாகவும் இல்லை என்பது
நீலகேசியில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. வள்ளுவர் சாங்கியம் கூறும்
பா�ணாம வாதத்தையோ, கபிலரைப் பற்றியோ குறிப்பிடாததால் சாங்கியர் என்று
கூறுவதற்கில்லை. ஷட் தா�சனங்கள் எனப்படும், சாங்கியம், யோகம் முதலியன
தத்துவ ஆய்வுக் கோட்பாடுகளைப் பற்றியவையேயன்றி அறநெறிக்கோட்பாடுகளை
முதன்மைப்படுத்தும் சமயங்களாகக் கருத முடியாது. ஆதலின் வைதீகம்
சார்ந்த சைவ, வைணவச் சமயங்களைச் சார்ந்தவரா? என்றே ஆய்தல் வேண்டும்.
சைவ வைணவங்கள் தமிழகத்தின் தொன்மையான முருகன், திருமால் வழிபாட்டினைப்
பின்பற்றி வந்த பிற்காலச் சமயங்களே. புத்தர், மகாவீரர் காலத்தில் இவை
சமயமாக உருவாகவில்லை. தெய்வ வழிபாட்டு நிலையிலேயே இருந்தன. சமயம்
என்ற உருவமுடைய, தத்துவக் கோட்பாடுகள், அறநெறிக் கோட்பாடுகள், கடவுட்
கோட்பாடு ஆகிய மூன்றும் தேவை. சங்க காலத்தில் இந்தத் தெய்வ வழிபாடு
நிலையிலேயே இருந்ததே தவிர தமிழகத்தில் அவை தத்துவக் கோட்பாடுகளைப்
பெற்றிருக்கவில்லை. தமிழில் அக்காலத்தில் தத்துவ நூல்களோ, தத்துவ ஆசிரியர்களோ
இருந்ததாகத் தொ�யவில்லை. கபிலர், நக்கீரர், பரணர் போன்றோரின் கவிதைகள்,
அகம் - புறம் சார்ந்தவைகளாகத் தாம் உள்ளன. இசை, கூத்து நூல்களும்
இலக்கண நூல்களும் இருந்தன. தத்துவ நூல்கள் இருந்ததற்கான சான்றுகள்
இல்லை. கி.பி. 2ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர்தான் - மணிமேகலையில்
தத்துவக் குறிப்புகள் முதன் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆதலின்
வள்ளுவருக்கு முன்பு சைவ, வைணவத் தத்துவ நூல்கள் யாதும் இல்லை.
அவருக்குப் பின்னர் தான் வடமொழியில், சைவ, வைணவ, ஆகம நூல்கள்,
காசுமீர சைவ சாத்திர நூல்கள் தமிழ்ச் சைவ சித்தாந்த நூல்கள் தோன்றின.
ஆதலின் வள்ளுவரைச் சைவ சமயத்தவர் என்றோ, வைணவ சமயத்தவர் என்றோ கூறுவது
வரலாற்றாய்வின்றியும் இந்தியத் தத்துவஞான அறிமுகமின்றியும் கூறும்
மிகு சமயப்பற்றாளர் கூற்றாகவே முடியும். சிவனைப் பற்றியோ, கண்ணனைப்
பற்றியோ ஏதும் கூறாதவர், வணங்காதவர் எப்படி சைவரோ, வைணவரோ ஆவார்?
என்று சிந்திக்க வேண்டுகிறேன். திருவள்ளுவர் - இந்திரனைப் பற்றிக்
கூறுகிறார். வேதக் கதையாகிய திருவிக்கிரமனாகப் பின்னர் புராணத்தில்
வந்த கதையைக் கூறுகிறார். இவை சமண, பெளத்தத்திலும் உள்ளவை தாம்
என்பதைப் பின்னர் எடுத்துக்காட்டுவதும், வள்ளுவர் அறநூலாசிரியரேயன்றிச்
சமய தத்துவ நூலாசிரியர் அல்லர். ஆதலின் அவர் பிதிபசுபாசம் (பிரகிருதி,
ஜீவன், ஈஸ்வரன்) என்ற முப்பொருள் உண்மையை ஏற்றவரா என்பது
வெளிப்படையாகத் தொ�ய இயலாது என்பதும் உண்மைதான். ஆயினும் அவர் நூல்
முழுமையும் ஆயும்போது உலகு (பாசம், பிரகிருதி, புத்கலம்) உயிர் (பசு,
ஜீவன், ஆன்மா) ஆகிய இருவகையை ஏற்கிறார் என்று தொ�கிறதேயன்றி ஈசுவர (பதி)
தத்துவத்தை ஏற்றார் என்பதற்குச் சான்றில்லை.
கடவுள், உலகியற்றியான், இறைவன் என்ற சொற்கள் குறளிலும், அதிகாரப் பெயா�லும்
வருவது வைதீக, சைவ, வைணவர்தம் ஈசுவர தத்துவத்தை ஏற்றார் என்பதற்குச்
சான்றில்லை.
கடவுள், உலகியற்றியான், இறைவன், என்ற சொற்கள் குறளிலும், அதிகாரப்
பெயா�லும் வருவது வைதீக, வைச, வைணவர்தம் ஈசுவர தத்துவத்தைக்
குறிக்கும் சொற்களன்று என்பதைப் பின்னர் விளக்குதும்.
இதுகாறும் கூறியவற்றால் குறள், வைதீக, சமய நூலன்று. சைவ சமய நூலுமன்று.
வைணவ சமய நூலுமன்று. திருவள்ளுவர் சைவ சமயத்தவரானால் நாயன்மார்களில்
ஒருவராகப் பராட்டப்பெறாமல் இருப்பாரோ? ஆழ்வார்களில் ஒருவராகக்
கூறப்படாதிருப்பரோ? என்று சைவப் பொ�யாராகிய திரு.வி.க. அவர்களே குறள்
பற்றிய ஒரு நூலின் முன்னுரையில் குறிப்பிட்டிருக்கிறார்.
"த்ரிஷஷ்டி சலாக புருஷர்" எனும் அறுபத்து மூன்று பொ�யோர்களைப் பற்றிய
சமணப் பகுப்பே சைவத்தில் அறுபத்து மூன்று நாயன்மார் என்ற
பகுப்புக்குக் காரணம் என்று பேரறிஞர். மயிலை. சீனி. வெங்கடசாமி "சமணமும்
தமிழும்" எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார். நாயன்மார்கள் பக்திச் சுவை
சொட்டும் பாமாலைகள் பாடியவர்களேயன்றி அற நூலாசிரியர்கள் யாருமில்லை.
இருபது, முப்பது நாயன்மார்கள் கூடப் பாடலாசிரியர்கள் இல்லை.
மற்றவர்கள் பக்தியின் காரணமாகப் பாராட்டப்பட்டவர்களே. அவர்களையெல்லாம்
அறுபத்து மூன்று என்ற எண்ணிக்கை வேண்டி சேர்த்துக்கொண்டவர்கள்,
பேரறநூல் படைத்த வள்ளுவரையோ குறளையோ சைவ சமயத்தவராயின் சேர்க்காமல்
விட்டிருப்பாரோ? அது போன்றே ஆழ்வார்கள், ஆசாரியர்கள் யாரும் வள்ளவரைத்
தம்மவராகக் குறிப்பிடாதிருப்பரோ?
ஆதலின் குறள், சைவ, வைணவச் சார்புடைய நூலன்று என்பது நிச்சயம். இனி -
அவர் பெளத்த சமயத்தவரா? என்பது குறித்தும் ஆய்தல் வேண்டும்.
தமிழகத்தில், ஏன் இந்தியாவிலேயே பெளத்தம் கி.பி. பதினொன்றாம்
நூற்றாண்டுக்குப் பிறகு மறைந்து விட்டது. கீழை நாடுகளில்
செல்வாக்குடன் மிளிர்ந்தது. தமிழகத்தில் மிகச் சிறந்த பெளத்த ஆசாரியர்கள்
கி.பி. மூன்றாம் நூற்றாண்டுக்குப் பின்னர் எட்டாம் நூற்றாண்டுக்கு
முன்னர் சிறந்து நின்றனர் என்பது பாலி பெளத்த நூல்களாலும், பெளத்த மத
வரலாற்று நூலாலும் தெளிவாகத் தொ�கிறது. வள்ளுவர் காலத்திலும் அவருக்கு
முன்னைய சங்க இலக்கியக் காலத்திலும் பெளத்தப் பள்ளிகளும் பெளத்தப்
பிட்சுக்களும் தமிழகத்தில் சிறப்புடன் இருந்தனர். ஆதலின் குறள்
பெளத்த சார்பு நூலா? என்றும் ஆய்தல் வேண்டும்.
குறள் பெளத்தச் சார்புடையதா?
சமண பெளத்த அறக்கோட்பாடு பொதுவாக ஒன்றேயாதலின், குறளிலுள்ள
அறக்கோட்பாடுகளைக் கொண்டு இது பெளத்தம், இது சமணம் என்று நிறுவுதல்
இயலாது. கொல்லாமை, பொய்யாமை, கள்ளாமை, வெ�காமை, பிரமசா�யம் எனப்படும்
பிறன்மனை நயவாமை முதலிய அறங்கள் பொதுவே. எனினும் பெளத்தத்
தத்துவத்தின் அடிப்படையாகிய சர்வம் துக்கம் எனும் கோட்பாடுகளைக்
கொண்டு குறளில் இக்கோட்பாடுகள் உள்ளனவா என்று ஆய்தல் வேண்டும். சமணம்,
பெளத்தம் இரண்டும் ஈசுவர தத்துவத்தை ஏற்கவில்லை. வேள்விச் சடங்கில்
பலியிடுதலை எதிர்த்தன. எனினும் சமணத்துக்கும் பெளத்தத்துக்கும்
அடிப்படை வேறுபாடுகளும் உண்டு. பெளத்தம் நிலைபேறுடைய ஆன்மாவை
ஏற்பதில்லை. சமணம் ஏற்கிறது. மறுபிறவிக் கொள்கையும் முற்பிறப்பை
உணரமுடியும் என்பதும் சமணம், பெளத்தம் ஏற்கின்ற கருத்து.
இதனையே வேத காலத்துக்குப் பின் வந்த இதிகாசகால வைதீக மதமும்
ஏற்றுக்கொண்டது. உயிர் பல பிறவி எடுக்கும் என்ற கருத்தைப் "பிறவிப்
பெருங்கடல்" என்று வள்ளுவரும் ஏற்கிறார். இக்கருத்து மேலை நாடுகளிலோ
கீழை நாடுகளிலோ இல்லை. பாதர நாட்டுக்கே உரிய மதக்கருத்தாகும். இதைக்
கொண்டு வள்ளுவர் சமயத்தைக் கூற இயலாது. பெளத்தத்தின் முச்சரணங்களில்
ஒன்றாகிய புத்தனைச் சரணடைதல் - புத்தரைக் குறிப்பிடுதல் குறளில் இல்லை.
மலர்மிசை ஏகினான் என்பது - புத்தர், தீர்த்தங்கரர் இருவருக்கும் உள்ள
சிறப்பாதலின் அதைக் கொண்டு தீர்மானிக்கவும் இயலாது. குறளில் எங்கும்
உலகமே துக்க மயமானது இரண்டும் கலந்தது என்ற கருத்தே உள்ளது.
துன்பத்தையும் மன வலிவுடன் ஏற்று - ஊழையும் உப்பக்கம் காணும்
தன்னம்பிக்கை வாதம், குறளில் எடுப்பாகக் காணப்படுகிறது. ஆதலின்
பெளத்த நூலாக இருக்க முடியாது. கொல்லாமையைத் தலையாய அறமாக இரு
சமயங்களும் ஏற்பினும் புலால் உண்ணாமை குறித்துச் சமணமும் பெளத்தமும்
முரண்படுகின்றன. உயிர்களைக் கொல்ல கூடாதே தவிர - தானாக மூத்து
இறந்தவற்றையும், பிறர் தருவனவற்றையும் உண்ணுவதற்குப் பெளத்தம் இடம்
கொடுத்துள்ளது.
பாலி மொழியிலுள்ள குத்தக நிகாயத்தைச் சேர்ந்த குத்தக பாடம் எனும்
நூலில் வரும் சிட்சா விரதத்தில் பஞ்சசீலத்தில் (அஹிம்சை, சத்தியம்,
அஸ்தேயம்) (திருடாமை) பிரமச்சா�யத்துடன் மதுவுண்ணாமையைச்
சேர்ந்துள்ளனர். மேலும் விகால போஜனம் (இரவுண்ணாமை) இசை நாடகம் நுகராமை,
மாலை, சந்தனம் நுகராமை, அணிகள் நீக்குவது, உயர்ந்த ஆசனம், மேன்மையான
படுக்கைகளை உபயோகியாமை, பொன் வெள்ளிகள் ஏற்காமை ஆகியவற்றுடன்
தசசீலங்கள் கூறப்பட்டுள்ளன. ஆனால் புலால் உண்ணாமை முதலிய விரதமாகக்
கூறப்பெறவில்லை.
புத்தர் தம் அந்திம காலத்தில் சுந்தன் அளித்த விருந்தில் 'சூகரமத்தயம்'
என்னும் இளம் பன்றி மாமிசத்தை உண்டார் என்றும் அதனால் நோயுற்றார்
என்றும் சுத்தபிடகம் தீகநியாகயம் பா�நிர்வாண சுதத்தில்
கூறப்பட்டுள்ளது. சூகரமத்துவம் - என்பது காளான் என்பாரும் உண்டு.
இன்றும் உலகிலுள்ள பெளத்த பிட்சுக்கள், புலால் உண்கின்றனர். கி.பி.
ஐந்தாம் நூற்றாண்டு இலக்கியமாகிய நீலகேசி எனும் தத்துவநூலிலும்
மொக்கலவாதச் சுருக்கத்தில் பெளத்தர்கள் புலால் உண்பதனைக் கண்டித்து
வாதம் செய்யும் பகுதிகளும் இதனைத் தெளிவுறுத்தும். தமிழில் உள்ள
பெளத்த சமயக் கருத்துக்களை
விரித்துக் கூறும் காவியமாகிய மணிமேகலையின்
முப்பதாவது பவத்திறம் அறுகெனப் பாவை நோற்ற காதையில்,
"தீவினை என்பது யாதென வினவின்
ஆய்தொடி நல்லாய் ஆங்கு அதுகேளாய்
கொலையே களவே காமத் தீவிழைவு
உலையா உடம்பில் தோன்றுவ மூன்றும்
பொய்யே குறளை கடுஞ்சொல்பயனில்
சொல்எனச் சொல்லில் தோன்றுவ நான்கும்
வெ�கல் வெகுளல், பொல்லாக் காட்சி என்று
உள்ளம் தன்னில் உருப்பன மூன்றும்". 30-64
என்று கூறினார்; புலால் உண்ணலைப் பாவம் எனக் கூறப்பெறவில்லை. மேலும்
பதினாறாவது காதையான ஆதிரைபிச்சையிட்ட காதையில் சாதுவன் கூற்றாக
"அடுதொழில் ஒழித்து அவர் ஆருயிர் ஓம்பி
மூத்து விளிமா ஒழித்து எவ்வுயிர் மாட்டும்
தீத்திறம் ஒழிக".
என்று முதுமை எய்தித் தாமாக இறந்த விலங்குகளை உண்ணலாம் என்றும் பிற
உயிர்களைக் கொல்லுதல் கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது.
ஆதலின் பெளத்தம் புலால் மறுத்தலைக் கூறவில்லை. சமண சிட்காவிரதம்
கூறும் பகுதியில்
"அஷ்டபதார்த்த சாரம்" எனும் மணிப் பிரவாள நடைத் தமிழ்நூலில்
கூறப்படுவதாவது:
"அணுவிரதப் பஞ்சகத்தோடும், மது, மத்ய, மாம்ச நிவிர்த்தி என்னும்
மூலகுணம் எட்டும் கிரகஸ்தர்க்கு விரதமாகும்.
பெளத்த சிட்சாவிரதத்தில் மாமிசம் சேர்க்கப்படவில்லை. சமண சிட்கா
விரதத்தில் மது (தேன்) மத்யம் (கள்) மாம்சம் (புலால்) விலக்கல்
சேர்க்கப்பட்டுள்ளது. பெளத்த பிட்சுக்களே மாமிசம் உண்கின்றனர். சமண
இல்லறத்தாரும் மாமிசம் உண்பதில்லை. குறளில் புலால் மறுத்தல் எனும்
அதிகாரமே படைக்கப்பட்டு உள்ளது.
"கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிரும் தொழும்" (260)
"தினற்பொருட்டால் கொல்லா துலகெனின் யாரும்
விலைப்பொருட்டால் ஊன்தருவா
ரில் (256)
என்று கூறும் வள்ளுவர் பெளத்தச் சார்புடையவரல்லர், சமணச் சார்புடையவரே
என்பது உறுதியாகிறது.