 |
உலகத்து முதல் ஆசிரியரும் அறவோருமாகிய
பகவான் விருஷபதேவரைப் போற்றும் பண்டைய இலக்கியங்கள்
(1) மருத்வம் த விருஷபம் வாவிருதான மகவாரி
திய்யசாசன மிந்திர
விச்வா ஸாஹம வசே நூதனாயோக்ரா
ஸதோதாமிஹந்தா ஹ்வயேம :
(ருக்வேதம்)
(2) ஓம் நமோ அர்ஹதோ விருஷபோ.
ஓம் விருஷப பவித்ரம்,
புருஹ�தமத்வரம் யக்ஞேசுநக்நம்
பரமம் மாஹ ஸமஸ்துதம்
வரம் சத்ரும் ஜயதம் பசா�ந்திர
மாஹ�ரிதி ஸ்வாஹா
(யஜுர்வேதம்)
(3) கைலாஸே பர்வதே ரம்யே,
விருஷரூபாயம் ஜிநேஸ்வர:
சகார ஸ்வாவதாரம் ய:, ஸர்வக்ஞ: ஸர்வக:
(சிவபுராணம்)
(4) நாபிஸ்து ஜனயேத்புத்ரம்,
மருதேவ்யா மனோஹரம்
விருஷபம் க்ஷத்ரியம் ஸ்ரேஷ்டம்,
ஸர்வ க்ஷத்ரியே ஸ்ய பூர்வஜம்
விருஷபாத் பரதோ ஜக்ஞே
வீரபுத்ர : சதாக்ரஜ:
ராஜ்யே பிஷிச்ய, பரத,
மஹாப்ராவ்ரஜ்ய மாஸ்தித
(பிரம்மாண்ட புராணம்)
(5) அஷ்ட ஷஷ்டிஸ� தீர்த்தேசு,
யாத்ராயாம் யத்பலம் பவேத்
ஆதிநாதஸ்ய தேவஸ்ய, ஸ்மரணேனாபி தத்பவேத்
(நாக புராணம்)
(6) விருஷபோ மருதேவ்யாச,
விருஷபாத் பாதோ பவத்
பரதாத் பாரதம் வர்ஷம்,
பரதாத் ஸ�மதிஸ்த்வபூத்
(அக்னி புராணம்)
(7) ஓம் த்ரைலோக்யப்ரதிஷ்டிதான்,
சதுர்விம் ஷதிதீர்த்தங்கரான்
விருஷபாத்யாவர்த்தமானாந்தான்,
சித்தான் சரணம் பிரபத்யே
(பிருகதாரண்யம்)
(8) பாகவத புராணம் ஐந்தாவது ஸ்கந்தத்தில் பகவான்
விருஷப தேவரை மகா விஷ்ணுவின் அவதார
புருஷராகப் போற்றப்பெற்றுள்ளது.
மதுரையைச் சுற்றிலுமுள்ள
சமணத் திருமலைகள்
சமண சமயம் தமிழகத்தில் வேரூன்றத் தொடங்கியதிலிருந்து பிற்காலம்
வரையிலும் சிறப்புற்றிருந்த பகுதிகளும் மதுரை மாநகரைச் சுற்றிலுமுள்ள
பல தலங்கள் ஒப்பற்றவையாகும். இத்தலங்களிலுள்ள மலைக்குகைகளில்
இரண்டாயிரத்து இருநூறு ஆண்டுகளுக்கு முன்பே துறவியர்கள் உறைந்து சமய,
சமுதாயப் பணிகளைத் திறம்படச் செய்து வந்திருக்கின்றனர். கடுமையான
நோன்பியற்றி அறநெறி போற்றி வந்த இந்த அறவாழி அண்ணலார் எளிமையான
வாழ்க்கை முறையினைக் கொண்டிருந்தமையால், இவர்களில் குகைகளில்
தங்கியிருப்பதற்கென கல்லில் படுக்கைகள் மட்டிலும் அமைத்துக்
கொடுக்கப்பட்டிருக்கின்றன. எளிதில் சென்றடையப் போதிய வழித்தடங்களற்ற
மலைப் பிரதேசங்களில், வெயிலையும், மழையையும், கடுங்குளிரையும்,
இருளையும் சிறிதும் பொருட்படுத்தாது கடுமையான மனத்திண்மையுடன்
இத்துறவற நோன்பியர் தமது சீடர்களுக்கும், பிறருக்கும் சமயப் போதனைகள்
மட்டுமின்றி கணிதம், வானசாத்திரம், மருத்துவம் போன்ற பல்வேறு
துறைகளிலும் கல்வி போதித்து வந்திருக்கின்றனரென்றால், அவை அளப்பா�ய
நற்பணிகளாகும். கல்வியறிவைப் புகட்டுவதற்குக் கருவூலமாகத் திகழ்ந்த
குகைகள் பள்ளிகள் என்றே அழைக்கப் பட்டு வந்திருக்கின்றன. இத்தகைய
குகைப் பள்ளிகள் மதுரைக்கு அண்மையில் ஆனைமலை,
அரிட்டாபட்டி, அழகர்மலை,
திருப்பரங்குன்றம், கீழவளவு, முத்துப்பட்டி, மேட்டுப்பட்டி,
கருங்காலக்குடி, விக்கிரமங்கலம், வா�ச்சியூர் போன்ற பல இடங்களில்
காணப்படுகின்றன. காலப் போக்கில் இவை வழிபாட்டுத் தலங்களாகவும்,
உருவவெடுத்தமையால், இவற்றில் கலைநயம் மிக்க சிற்பத் திருமேனிகள்
தோற்றுவிக்கப்பட்டிருப்பதைக் காணலாம். இத்திரு வுருவங்களுக்கு வழிபாடு
நிகழ்த்த சமணப் பெருங்குடியினர் பல்வேறு வழி வகைகளையும்
செய்திருக்கின்றனர்.
1. ஆனைமலை
மதுரையிலிருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில்படுத்த நிலையிலுள்ள யானையின்
தோற்றத்தை ஓத்த மலையினை யானைமலை என்றும் ஆனைமலை எனவும் அழைப்பது
வழக்கமாகும். இம்மலையின் ஒரு பகுதியில் ஏறத்தாழ 22 அடி நீளமுள்ள குகை
ஒன்றுள்ளது. இதுவே இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சமணத்துறவியர்
உறைந்து சமயப்பணி ஆற்றிய குகைப்பள்ளியாகும். இக்குகையின்
உட்புறத்திலும், வெளிப்பகுதியிலும் வா�சையாகக் கற்படுக்கைகள்
செதுக்கப்பட்டிருக்கின்றன. இவற்றுள் சிலவற்றை குன்றத்தூரைச் சார்ந்த
நாதன் என்பவர் அமைக்க ஏற்பாடு செய்திருக்கிறார். கி.மு. 2 ஆம்
நூற்றாண்டில் இக்குகைப்பள்ளியில்
அரிஷ்டகாசிபலன், எரிஅரிதன்,
அத்துவாய் போன்ற பெரு நெறியாளர்கள் தவநெறி போற்றி வந்தனரென்று அறிய
வருகிறோம்.
கி.பி. 7ஆம் நூற்றாண்டில் சமண சமயம் மிகுந்த பாதிப்பிற்குள்ளான
போதிலும், விரைவில் புத்துயில் பெற்றிலங்காயிற்று, கி.பி. 9ஆம்
நூற்றாண்டில் ஆனை மலையிலுள்ள குகைப்பள்ளி துறவியரது உறைவிடமாக
மட்டுமின்றி, குகைக் கோயிலாகவும் மலர்ந்திருக்கிறது. எனவே
அக்காலத்தில் இதில் தீரத்தங்கரர்கள், யக்ஷியர் முதலியோரது அழகிய
சிற்ப வடிவங்கள் செதுக்கப்பட்டு, வழிபாட்டிற்குரியனவாகத் திகழலாயின.
இத்திருவுருவங்களை அஜ்ஜநந்தி என்னும் அருந்தவ முனிவரும், மற்றும்
ஏனாதிநாடி, எவ்வியம்பூதி, சரதன், அரையன், செதுழியபாண்டி முதலிய
சிராவர்களும் செதுக்க ஏற்பாடு செய்திருக்கின்றனர். துறவியரும்,
பொதுமக்களும் ஒருங்கிணைந்து செயல்பட்டமையால் இப்பகுதியில் சமண சமயம்
தழைத்தோங்கலாயிற்று.
2. அரிட்டாபட்டி
மேலூரிலிருந்து அழகர்மலைக்குச் செல்லும் வழியில் அமைந்துள்ள ஒரு
சிற்றூர் அரிட்டாபட்டியாகும். இவ்வூரை அடுத்துள்ள கழிஞ்சமலையில்
காணப்பெறும் குகையினை கிமு. 2ஆம் நூற்றாண்டில் நெல்வேலியைச் சார்ந்த
செழியன் அதனன் ஒளியன் என்பவர் குகைப்பள்ளியாகக் சீர்செய்து
கொடுத்திருக்கிறார். நெடுங்காலமாக அறவோர் பள்ளியாகத் திகழ்ந்து வந்த
இக்குகையின் முகப்பில் கி.பி. 9ஆம் நூற்றாண்டில் அமர்ந்த தவக்
கோலத்திலுள்ள ஆதி நாதப் பெருமானின் எழில் மிக்க திருவடிவினை அஜ்ஜநந்தி
என்னும் அருளறம் பூண்டோர் செதுக்க ஏற்பாடு செய்ததாக அறியக்
கிடக்கிறோம்.
3. மாங்குளம் (மீனாட்சிபுரம்)
அரிட்டாபட்டிக்குச் சிறிது தொலைவில் மாங்குளம், மீனாட்சிபுரம் என்னும்
ஊர்கள் உள்ளன. இவற்றிற்கு அருகிலுள்ள மலையினையையும், கி.மு. 2ஆம்
நூற்றாணடிலேயே சமணத் துறவியர் நாடியிருக்கின்றனர். இம்மலையிலுள்ள சில
குகைகளில் துறவியார் உறைவதற்கேற்ற வகையில் பாண்டிய மன்னன்
நெடுஞ்செழியனது அதிகாரியாகிய கடவன் வழுதி என்பவரும், மன்னனது
மைத்துனராகிய சடிகன் என்பவரும், அவரது மைந்தன் இளஞ்சடிகனும்
கற்படுக்கைகள் அமைத்துக் கொடுத்திருக்கின்றனர். இங்கு சமயப் பணி
மேற்கொண்ட துறவியர்களுக்குத் தலைமைத் துறவியாகத் திகழ்ந்தவர்
கணிநந்தன் என்னும் பேரறிவாளராவார். சங்க இலக்கியங்கள போற்றிப்பரவும்
பாண்டிய மன்னருள் ஒருவனாகிய நெடுஞ்செழியனைப் பற்றிய செய்தியினைத் தொ�விக்கும்
பெற்றியுடையவை இங்குள்ள பிராமிக் கல்வெட்டுக்களாகும்.