 |
இம் மலையின் அமைப்பு, இதைச்சார்ந்த குன்றுகள், குகைகள், படுக்கைகள்,
சிலைகள், கல்வெட்டுச் செய்திகள் ஆகிய வரலாறுகளை எனது வேண்டுகோளுக்கு
இணங்கி உதக மண்டலத்திலுள்ள இந்தியக் கல்வெட்ட ஆராய்ச்சி நிபுணர்
(Government Epigraphist of India) உயர்திரு. 'B.C.H. சாப்ரா' அவர்கள்
உதவியாளர் கல்வெட்டு ஆராய்ச்சி திரு. M. வெங்கட்ராமையா M.A, M. Lit.,
அவர்களைக் கொண்டு எழுதி யனுப்பிய ஆங்கிலக் கட்டுரையின் மொழி பெயர்ப்பு:-
"மதுரைக்கு ஏறக்குறைய ஐந்து மைல் மேற்கில் ஒரு கூட்டமாக அமைந்துள்ள
பாறைக் குன்றுகள் சமணர் மலை என அழைக்கப்படுகின்றன. இது கிழக்கு
மேற்காகச் சுமார் இரண்டு மைல் உள்ளது. குன்றுகளின் தென்மேற்கு
விளிம்பு கீழ்க்குயில்குடிக்கு நேர் முகமாக உள்ளது. வடமேற்கு ஓரம்
மதுரை தாலுக்காவிலுள்ள வட பழனியின் ஒரு பகுதியின் முத்துப்பட்டி
என்றும் ஆலம்பட்டி என்றும் வழங்கும் சிற்றூரின் அருகே இருக்கிறது.
மிக அகன்ற பகுதியிலும் இத்தொடா�ன் அகலம் சுமார் இரண்டிலிருந்து மூன்று
பர்லாங் இருக்கலாம் இக்குன்றுகளுக்கு வழங்கப்படும் சமணர் மலை என்ற
பெயர் குன்றுகளின் வெவ்வெறு பகுதியில் ஜைனச் சிலைகள் உள்ள
காரணத்தினின்றும் பிறப்பிக்கப்பட்டிருக்க வேண்டும், ஏனெனில் தமிழ்
மொழியில் ஜைனர்கள், சமணரெனக் குறிப்பிடப் படுகின்றனர். (சிரணமா-வடமொழி)
இக் குன்றுகள் அம்மணமலை என்றும் அழைக்கப்படுவது அம்மணர்மலை யென்னும்
பேச்சு வழக்கின் உருமாற்றமே என்பது தெளிவு.
இக்குன்றுகளில் வெவ்வேறு பகுதிகளில் காணப்படும் அடிச்சுவடுகளும்,
கல்வெட்டுகளும், விவா�ப்பதன் அனுகூலத்திற்காக அ.ஆ.இ முதலியனவாக
அழைக்கப்படலாம். கன்னடத்திலுள்ள ஒன்றைத் தவிர மற்ற எல்லாக்
கல்வெட்டுகளும் தமிழ்மொழியில் உள்ளன.
பகுதி அ- பஞ்சவர் படுக்கை:- ஆலம்பட்டி அல்லது
முத்துப்பட்டியின் மேற்கு மூலைக் குன்றுகளில் அமைந்த இது பஞ்சவர்
படுக்கை எனப்படும். இப்பகுதியில் அநேக கற்படுக்கைகள் பாறையில்
வெட்டப்பட்டிருப்பதனால் 'பஞ்சவர் படுக்கை' எனச் சுற்றுப்புறங்களில்
வழங்கப்படுகிறது. இவை மேலேயிருந்து தொங்கும் ஒரு பாறையின் கீழ்
அமைந்துள்ளன. மேலே இருக்கும் பாறையின் வெளியோரம் முழுவதும் ஒரு நீண்ட
கோடு போன்ற வெட்டுத் துவாரம் அமைக்கப்பட்டு, நீர் பாறையினின்றும்
ஒழுகிப் பாழியின்படுக்கைகளில் பாயாது தடுக்கப் பெற்றிருக்கிறது.
இப்பாறையின் மீது இரு தமிழ்க் கல்வெட்டுகள் கிறிஸ்துவின் காலத்திய
முந்நூற்றாண்டுகளுக்கு முன்னர்க் குறிப்பிடக்கூடிய பிராமி
எழுத்துக்களில் செதுக்கப் பெற்றிருக்கின்றன. பாழியினுள் படுக்கைகளின்
அருகில் பீடத்தின் மீது பொருத்தப்பட்டு அமர்ந்திருக்கும் ஒரு
தீர்த்தங்கரர் திருமேனி உள்ளது. சிலையினருகில் மற்றொரு பிராமி
கல்வெட்டு செதுக்கப்பட்டுள்ளது. அது மிகவும் அழிந்து விட்டதால் அதன்
வசனம் இங்கே கொடுக்கப்படவில்லை. மேலே தொங்கும் பாறையிலேயே இரண்டு
மாடங்களும், அவற்றின் ஒவ்வொன்றிலும், ஒவ்வொரு ஜினர் சிலையும் உள்ளது.
ஒவ்வொரு சிலையின் கீழும் கி.பி. பத்தாவது நூற்றாண்டினதாக இருக்க
கூடிய வட்டெழுத்துச் கல்வெட்டுகள் (எண் 384) செதுக்கப்பட்டுள்ளன.
இந்த 'அ' பகுதியில் வேறு கல்வெட்டுகளில்லை.
பகுதி ஆ-செட்டி பொடவு:- இது சமணர் மலைத்தொடா�ன் மேற்குச் சா�வுடன்
தென்மேற்கு முனையில் உள்ளது. இது நேராகக் கீழ்க் குயில் குடியை
நோக்கியுள்ளது. இதில் ஒரு குகை (புடைக்கு, பொடவு உல்கோ என்பர்)யும்
அதன் வாயிலின் சா�வான இடம் பாகத்தில் பாதையில் மேல்
உட்கார்ந்திருக்கும் ஒரு பொ�ய ஜிநர் திருமேனி அமைக்கப்பட்டிருக்கிறது.
இச்சிலையின் கீழ்ப்பட்டையில், சுமார் 10-வது நூற்றாண்டினது எனக்கூடிய
வட்டெழுத்துக் கல்வெட்டுகள் (எண் 5) செதுக்கப்பட்டுள்ளன. குகையினுள்,
வளைந்த மேல் பகுதியில் உள்ள மாடங்களில் ஐந்து தொகுதிச் சிற்பங்களும்
அவற்றில் மூன்று வட்டெழுத்துக் கல்வெட்டுகள் (எண் 6,788)
நடுத்தொகுதியன் கீழே செதுக்கப்பட்டிருக்கின்றன. முதலாவது சிற்பம் ஒரு
வீராங்கனை சிங்கத்தின் மீது வலக்கையில் வளைத்த வில்லும் இடக்கையில்
வேலும், மற்றிரண்டில் மற்றதோர் இரு போர்க் கருவிகளும் ஏந்தியவளாய்
அமைந்திருக்கும் தோற்றத்தை எடுத்துக்காட்டுகிறது. சிங்க வாகனத்தை
நோக்கி ஒரு கையிலே வாளும் மற்றொன்றிலே கவசமும் ஏந்திய வீரணால் சாவாரி செய்யப்படும் யானை உள்ளது. சாதாரணமாக இப்பெண் தெய்வங்களைப் போன்ற
உருங்கள் ஜைன சமயத்தில் அம்பிகை என்றேதான் குறிக்கப்படும்.
இதற்கடுத்துப் பீடத்தின் மீது அமர்த்தப்பட்ட மூன்று துறவிகளின் உருவச்
சிலைகள் உள்ளன. அவற்றின் சிரமீது முக்குடையுள்ளது. ஐந்தாவதும்,
கடைசியுமான மாடத்தில் ஒரு பெண்ணுருவம் பீடத்தின் மீதமர்ந்து அதன் ஒரு
கால் பீடத்தின் கீழ் தொங்குவது போலும், மறறொன்று குறுக்காக மடித்து �த்திருப்பது
போலும் அமைக்கப்பட்டுள்ளன. அதன் வலது அருங்கையில் தாமரை மொட்டைப்
போன்ற ஒரு பொருள் காணப்படுகிறது. ஜைனப் பெண் தெய்வங்களுள் பத்மாவதியே
கையில் தாமரை மொட்டு பிடித்திருப்பது போல் வரையப்படுவ துண்டு.
இப்பீடத்தில் மேற்கூறிய நான்கைத் தவிர வேறு கல்வெட்டுகளில்லை.
பகுதி இ-பேச்சிப்பள்ளம்:- இப் பகுதி சமணர் மலைக்குன்றுகளின்
கிழக்குச் சா�வின் தெற்கு முனையில் குன்றுகளின் மேற்கேயுள்ள செட்டி
பொடலின் அருகில் அமைந்துள்ளன. பேச்சிப்பள்ளம் என அழைக்கப்படும் இப்
பகுதி குன்றுகளின் சிறிது மேல் பகுதியில் வா�சையாக ஜைனச்
சிற்பங்களுடைய ஒரு பாறைக்கு எதிரேயுள்ள சமதரையில் உள்ளது.
சிற்பங்களுள் ஐந்து தீர்த்தங்கரர் சுபார்சு வருடையன. இந்த
சிற்பங்களின் கீழே ஆறு வட்டெழுத்துக் கல்வெட்டுகள் (எண்
9,10,11,12,13,&14) உள்ளன.
இச்சிற்பங்களை நோக்கியுள்ள மற்றொரு பாறையில் மற்றொரு கல்வெட்டு (எண்
15) வட்டெழுத்தில் எழுதப்பட்டுள்ளது. இவற்றில் சில கி.பி. 8-வது
அல்லது 9-வது நூற்றாண்டினுடையதாகக் குறிப்பிடலாம். மற்றவை கி.பி.
9-வது அல்லது 10-வது நூற்றாண்டினதாக இருக்கலாம்.
பகுதி ஈ- மற்றும் "இ" பகுதியிலிருக்க மேலும் மலை மேலே செல்லும்
பொழுது மற்றொரு பகுதி 'இ' ஐ அடையலாம் இங்கே கோயிலொன்றுள்ளது. அதன்
தளம் மாத்திரமே தற்போது உள்ளது. தளத்தின் ஒரு வா�சையில் சுமார் கி.பி.
பத்தாவது நூற்றாண்டினதாய் இருக்கக்கூடிய வட்டெழுத்தில் ஒரு முற்றுப்
பெறாத கல்வெட்டுள்ளது.
தீர்த்தங்கரர் திருமேனிகள்
ஆதிபகவன்
உலைவிலாத் தலமுஞற்றி ஊழையும் உப்பக்கங்கண்டு உயர்ந்தோர்
பற்றற்ற இத்திருமூர்த்திகளின் நிலையையே திருக்குறளாசிரியர்
மற்றும் தொடர்பாடெவண் வண்கொள் பிறப்பறுக்க
லுற்றார்க்கு உடம்பும் மிகை" என்றார்.
பகுதி உ- குன்றின் மேல் உச்சியின் மிக அருகில் ஒரு கல் விளக்குக்
கம்பம் உள்ளது. கம்பத்தின் பாகத்தில் சிறிது தூரத்தில் இப் பகுதியில்
சமதரையாக இருக்கும் பாறையின் மேல் பகுதியில் மற்றொரு கல்வெட்டு (எண்
17) செதுக்கப்பட்டிருப்பது காணப்படுகிறது. இக்குறிப்பு ஒரு வா�
கன்னடத்திலும் தமிழிலுமாக எழுதப்பட்டுள்ளன. எழுதப்பட்டவைகளில், கன்னட,
தமிழ் எழுத்துக்கள் கி.பி. 11-வது அல்லது 12-வது நூற்றாண்டினவெனக்
குறிப்பிடலாம்.
கல்வெட்டுகளின் (எண் 4-12) வசனம் இதன் கீழே கொடுக்கப்பட்டள்ளது.
வட்டெழுத்துக்களால் பொறிக்கப்பெற்ற தமிழ்
மொழிக்கல்வெட்டுச் செய்திகள் (Inscriptions)
No. 1&2
சமணர் மலையின் மேற்கு கோடியில் (முத்துப் பட்டி (அ) (ஆலம்பட்டிக்கு
அருகில்) பஞ்சவர்படுக்கையில் உள்ள பாறையில்:
Label A. வி ந தை ஊ ர
" B, சை ய அளன்
" C, கா வி ய
அப்பாறையிலேயே சமணச் சிற்பத்தின் கீழ் :