 |
3. ஸ்வஸ்தி ஸ்ரீ வெண்புணாட்டுக் குறண்டி அஷ்ட உபவாசி படாரர் மாணாக்கர்
குணசேன தேவர் மாணாக்கர் கனக வீரப் பொ�யடிகள் நாட்டாற்றுப் புறத்து
அமிர்த பராக்கிமந (வ்) லூரான குயிற்குடி ஊரார் பேரால் செய்வித்த
திருமேனி, பள்ளிச் சிவிகையார் ர�க்ஷ
4. அதே பாறையில் மற்றொரு சமணச் சிலையின் அடியில்:
ஸ்வஸ்தி ஸ்ரீ (II) பாராந்தகபற்வதமாயின தென் (வ)ட்டைப் பெரும்பள்ளிக்
குறண்டி அஷ்ட உபவாசி பட்டாரர் மாணாக்கர் மாகணந்திப் பொ�யார்
நாட்டாற்றுப் புறத்து நாட்டார் பேரால் செய்விச்சு திருமேனி சி.
பள்ளிக் சிவிகையார் ர�க்ஷ.
5. சமணர்மலையில் கீழ்க் குயில் குடிக்கு அருகில் செட்டிபொடவு குகைக்கு
வெளியே சமணத் திருமேனியின் கீழே பீடத்தில் செதுக்கப்பட்டுள்ளவை :
...ணாட்டுக் குறண்டித் திருக்காட்டாம் பள்ளிக் கனகநந்திப் (பட்டார்
அபிநந்தணபடாரர் அவர் மாணாக்கர்
அரிமண்டலபடாரர் அபினந்தபடாரர்
செய்வித்தத் திருமேனி.
6. மேற்படி பாறையில் சமணத் திருமேனியின் கீழே செட்டி பொடவு குகையின்
வளைந்த கூரையில் செதுக்கப்பட்டுள்ளவை :
ஸ்வஸ்தி ஸ்ரீ (II*) வெண்புணாட்டுக் குறண்டித் திருக்காட்டாம் பள்ளிக்
குணசேன தேவர் மாணாக்கர் வர்தமானப்பண்டிதர் மாணாக்கர் குணசேனப்பொ�யடிகள்
செய்வித்தத் திருமேனி.
7. அதேயிடத்தில் உள்ள மற்றொரு தீர்த்தங்கரர்ச் சிலையின் கீழ்ச்
செதுக்கப்பட்டுள்ளவை :
ஸ்வஸ்தி ஸ்ரீ (II*) இப்பள்ளியுடைய குணசேன தேவர் சட்டன் தெய்வ பலதேவன்
செய்விச்ச திருமேணி. (I*)
8. அதேயிடத்தில் மூன்றாவது திருமேனியின் அடியில் உள்ளவை :
ஸ்வஸ்தி ஸ்ரீ (II*) இப்பள்ளி ஆள்கின்ற குணசேன தேவர் சட்ட(ன்)
அந்தலையான் களக்குடி (த)ன்னை கை அந்தலையான்... (கை) யாலி�(ய)
ச்சார்த்தி செய்வித்த திருமேனி.
9. சமணர் மலையில், பேச்சிப்பள்ளத்தில் உள்ள குன்றில் இருக்கும்
தீர்த்தங்கரர்ச் சிலையின் கீழேயுள்ளவை :
ஸ்ரீஅச்சணந்தி தாயார் குணமதியார் செய்வித்த திருமேனி ஸ்ரீ (II*)
10. அதேயிடத்தில் மற்றொரு தீர்த்தங்கரர் சிலையின் அடியில் காணப்படும்
கல்வெட்டுச் செய்தியின் படம் : இதன் வாசகம் :
ஸ்வஸ்தி ஸ்ரீ (II*)இப்பள்ளியுடைய குணசேன தேவர் சட்டன் அந்தலையான்
மலைதன் மருமகன் ஆச்சான் ஸ்ரீ பாலனைச் சார்த்தி செய்வித்த ஸ்ரீ
திருமேனி.
11. அதே இடத்தில் மூன்றாவது சமணச் சிற்பச் சிலையின் அடியில்
காணப்படும் கல்வெட்டுச் செய்தியின் படம் :
ஸ்வஸ்தி ஸ்ரீ (II*) இப்பள்ளி உடைய குணசேன தேவர் சட்டன் சிங்கடைப்
புறத்து கண்டன்பொற்பட்டன் செய்வித்த திருமேனி ஸ்ரீ (II*)
12. அதேயிடத்தில் நான்காவதாக, தீர்த்தங்கரர் சிற்பச் சிலையின் அடியில்
:
ஸ்ரீ II*ரூ மிழலைக் கூற்றத்து பாரூரிடையன் வேளான் சடைவனைச் சார்த்தி
இ(ன்)ன மாணவாட நிட்டப் புணாட்டுநா(கூ)ர் ச(டை)யப்ப(ன்) செதவித்த தேவர்
இணைத்து.. தா.... தாயார் (செய்) வித்த திருமேனி (II*)
13. அதே பாறையில் சமண விக்கிரங்கள் இருக்குமிடத்தில் உள்ளவை.
ஸ்ரீ(II*) வெண்பு நாட்டு திருக்குறண்டி பாதமூலத் தான் அமித்தின்
ம(ரை)கள் கனகன (ந்*) செவிச்சு திருமேனி (II*)
14. அதே பாறையில் மேலேயுள்ளவற்றிற்கு அருகில் ஸ்வஸ்தி ஸ்ரீ (II*)
இப்பள்ளி உடைய குணசேன தேவர் சட்டன் அரையங்காவிதி சங்கணம்பியைச்
சார்த்திச் செய்விச்ச திருமேனி (II*)
15. அதே மலையில், பேச்சிப்பள்ளம் சமணச் சிற்பச் சிலைகளின் வா�சைக்கு
எதிர்த்த பாறையில்:
ஸ்வஸ்தி ஸ்ரீ (II*) இப்பள்ளி...... குணசேன தேவர் மாணாக்......கர்
சந்திரப் பிரபு....வித்த....
16. இடிந்த கோயிலின், அடித்தளவா�சையில் அதே குன்றில் பேச்சிப்
பள்ளத்திற்குமேலே :
இவ்வாண்டு இரட்டையான் ஸ்ரீபரம.....ரிர�க்ஷ (II*)
17. குன்றின் உச்சியில், கல்விளக்குக் கம்பத்தின் அருகில்,
பேச்சிப்பள்ளத்திற்கு மேல் (அதேகுன்று)
ஆரிய தேவரு ஆரிய தேவர் மூல சங்க பெல குலா பாலச்சந்திர தேவரு கேமி
தேவருசூ(ர்யா) பிரதா(ப) அஜிதசேனதேவரு கோவதானதேவரு...ரமாடி ச(ட)ரு (கன்னடம்)
என்னே சமணர் மலையின் பெருமை! இம்மலையில் எட்டு நாட்களுக்கொருமுறை
உணவருந்தும் நோன்புடைய குணசேன தேவர், இவ்வறவோரின் மாணாக்கர்களாகவும்
பக்தர்களாகவும் விளங்கிய கனகவீரப் பொ�யடிகள், மாகனந்திப் பொ�யார்,
அபினந்தப் படாரர், வர்த்தமானப் பண்டிதர், ஆச்சார்ய நிலையையடைந்து
விளங்கும் ஆச்சான் ஸ்ரீபாலர், பாண்டிய மன்னரால் காவிதிப் பட்டம்
பெற்ற அரையங்காவிதி சங்கநம்பி, அச்சணந்தி முனிவர் போன்ற பல அறவோர்கள்
அறம் வளர்த்துள்ளார்கள். இக்கடவுளர்களின் நினைவாகத் தீர்த்தங்கரரின்
உருவச் சிலைகள் செதுக்கப்பெற்றுள்ளன. அச்சிலைகளைத் திருமேனி, திருமேனி
எனப் பக்தியுடன் போற்றும் அன்பு நிலை நம்மையெல்லாம் இன்புறச்
செய்கிறது. மேலும் புதுக்கோட்டை சித்தன்ன வாசல் எவ்வாறு தமிழகத்தின்
சித்த�க்ஷத்ரமாக (மாமுனிகள் வீடுபேறடைந்த போ�டம்) விளங்குகிறதோ
அதுபோன்றே இத்திருமலைப் பகுதிகளும் சித்த�க்ஷத்ரமாகக் கருதுவதற்குரிய அறிகுறிகள் காணப்படுகின்றன. இவற்றை நோக்குகையில் செம்மை சான்ற இந்த
அருந்தவத் தமிழர் சான்றோர்களை ஓம்பிப் போற்றுவதற்குரிய இல்லறத்தார்கள்
இந்நாடெங்கும் நிறைந்திருக்க வேண்டுமென்பது நன்கு புலப்படும். தமிழ்
நாடெங்கும் வாழ்ந்த ஜைனப் பெரு மக்களில் பெரும்பாலோர் பாண்டிய
நாட்டில் வாழ்ந்து வந்தனர் என்பது உலகறிந்த உண்மை. இவ்வாறு இல்லறமும்
துறவறமும் இணையற்று விளங்கிய பாண்டிய நாட்டின் பெருமையை விளக்கவும்
வேண்டுமோ!