 |
Madras, July, 14
Recent discoveries of archaeological interest were explained by
Dr. B. Ch. Chhabra, Government epigaphist for India, in an
interview with a representative of the Hindu to-day.
"Some jain inscriptions of about the 10th century A.D. in Samanar
Malai, Seven miles from Madura, had also come to the notice of the
department", he said and added that steps were being taken to
prevent the quarrying of the rocks there. The place he said, was
an early Jain settlement and there was jain bass reliefs with
inscriptions in Vattezhuthu characters,"
Hindu, 15-7-1949.
இச் சொதியைப் படித்ததும், இழந்த பொருளை மீண்டும் பெற்றவனைப் போல்
மகிழ்ச்சியில் ஆழ்ந்தேன். இனி அம்மலையின் சிற்பங்கள், கல்வெட்டுக்கள்
பாதுகாக்கப்படும் என்பது நிச்சயம். எனவே அதன் காலத்தைப் பற்றி Dr. B.
Ch. சாப்ரா அவர்கள் கூறும் கருத்துக்களைச் சிறிது ஆராய்வோம்.
அவர் கூற்றுப்படி அச்சிற்பங்கள் குகைகள் கி.பி. 10-ஆம் நூற்றாண்டாக
இருக்க முடியாது. கி.பி.7-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியாகவோ அல்லது
அதற்கும் முந்தியதாகவோ இருக்கவேண்டும். ஏனெனில் கூன்பாண்டியன்
காலத்தில் திருஞான சம்பந்தர் நடத்தியதாகக் கூறப்படும் மதப்போர் வரலாறு
உண்மையாயின் Dr. சாப்ரா அவர்களின் கருத்து பொருந்தாது.
ஆயிரக்கணக்கான சமணப் பெருமக்களைக் கழுவிலேற்றிக் கொன்ற பின்னரும் ஒரு
சமணர் அங்கு உயிருடன் வாழ்வதும், அழகிய சிற்பங்களையும் குகைகளையும்
அமைத்துக் கொண்டு தவமியற்றுவதும் நடைமுறையில் நடக்கக்கூடிய
காரியமன்று.
மேலும் வட்டெழுத்துக்களைப் பற்றி ஆராய்ந்து எழுதிய பல அறிஞர்கள் அவை
கி.பி. 3 அல்லது 4-ஆம் நூற்றாண்டிற்கு முந்தியதென அபிப்பிராயப்
படுகின்றனர். எனவே அச்சிற்பங்கள் கி.பி. 2-ஆம் நூற்றாண்டாகவோ அல்லது
கி.பி. 7-ஆம் நூற்றாண்டிற்கு முந்தியதாகவோ இருக்க வேண்டும்.
Dr. B. Ch. சாப்ரா அவர்களின் கூற்றுப்படி இவைகள் கி.பி. 10-ஆம்
நூற்றாண்டுடையதே என நிரூபித்து விட்டால் பல ஆராய்ச்சியாளர்கள் கூறுவன
போன்று திருஞான சம்பந்தர் கதை கி.பி. பத்தாம் நூற்றாண்டுடையதாக
இருக்கலாம்.
மேலும் நாம் முன்னர் கூறியவாறு அதே ஏழாம் நூற்றாண்டில் நமது
நாட்டிற்கு விஜயம் செய்த சீன யாத்��கர் தமிழ் நாட்டின் பல
சிறப்புகளைப் பற்றி வரைந்துள்ள தமது யாத்திரைக் குறிப்பில் திருஞான
சம்பந்தர் நிகழ்ச்சியைப் பற்றி ஒரு குறிப்பும் எழுதவில்லை. அதற்குப்
பதிலாக ஜைன சமயமும் பெளத்த சமயமும் தென் நாட்டில் மிகச் செல்வாக்குப்
பெற்று விளங்கியுள்ளன வென்று எழுதியுள்ளார். ஜைன சமயம் உண்மையில்
வீழ்ச்சியடைந்த காலம் கி.பி. பத்தாம் நூற்றாண்டிற்குப் பின்னர்தான்
இருக்கவேண்டும்.
ஏனெனில் கி.பி. பத்தாம் நூற்றாண்டிற்குப் பின்னர் 15, 16-ஆம்
நூற்றாண்டுவரை பல சமண அறிஞர் பெருமக்கள் அரும் பெரும்
நூல்களையாத்துள்ளனர். அது மட்டுமா! தலைசிறந்த உரைகள் எழுதிப் புகழ்
பெற்ற பல சமண உரை ஆசிரியர்களின் எண்ணிக்கைக்குக் கணக்கில்லை. எனவே
நாம் முன்னர் கண்டவாறு கி.பி. மூன்றாம் நூற்றாண்டில்
பொறிக்கப்பட்டதாகக் கூறப்படும் பிராமி கல்வெட்டைக்கொண்டு இவைகளும்
அதனைத் தொடர்ந்து 5 அல்லது 6 நூற்றாண்டுடையதாக இருக்க வேண்டும்.
எக்காரணத்தாலும் அவை 10-ஆம் நூற்றாண்டு என்பது பொருந்தாது. அ�து
எவ்வாறாயினும் அம்மலை மிகப் பழமை வாய்ந்த அறவோர் மலை என்பது நிச்சயம்.
இத்தகைய வரலாற்றுச் சின்னங்களைப் புகைப் படம் பிடிக்க வேண்டிச் சென்னை
தங்கசாலை வீதியிலுள்ள சமணச் சிற்ப மிஷன் சங்கத்தினர் பொருளுதவியால்
9-11-49 தேதி மதுரைக்குச் சென்று சமணர் மலையைச் சேர்ந்தேன்.
எதிர்பார்த்தவாறு கல் உடைப்பது நிற்கவில்லை. என் உள்ளம் பதைத்தது:
ஒன்றும் தோன்றாமல் ஏதேதோ எண்ணிக் கலங்கினேன்.'சமணர் மலை' என்ற பெயரைக்
கொண்டே அம் மலை சமண சமயத்தைச் சார்ந்தது என்பதை அறியாமல் அதனை உடைக்க
முற்பட்டதே தவறு. அன்றியும் அம்மலை, வரலாற்றுப் பெருமைமிகப் பெற்றதென
அறிந்த பின்னரும சர்க்கார் உடைக்கத் துணிந்தது அதைவிடப்
பெருந்தவறாகும்.
சைவர் மலை, வைணவர் மலை, முஸ்லிம் மலை, கிறிஸ்துவர் மலை என்ற பெயரால்
அது அமைந்திருக்குமாயின் அதனை உடைக்க அந்தந்தச் சமூகத்தினா�ன்
அனுமதியின்றி உளி நாட்ட முடியுமா? சமண சமயம் சிறு பகுதியினர் சமூகம்
என்ற காரணத்தினாலன்றோ பண்டைய வரலாற்றைத் தாங்கி நிற்கும் பெருமையைத்
தூள் தூளாக உடைக்கின்றனர். அந்தோ!
பிரிட்டிஷ் அரசாங்கம் இருக்கும்வரை
அம்மலைக்கு ஆபத்தே இல்லை. குடியரசானதும் சமணர் மலை உடைக்கப்படுகிறது!
கலைகளை வளர்க்கவேண்டிய குடியரசு, கலைகளை அழிக்க முற்பட்டதே என்று
வருந்தலானேன். புதை பொருள் ஆராய்ச்சி இலாக்கா அதிகாரியின்
வேண்டுகோளும், இந்திய சர்க்காரின் தென்னிந்தியக் கல்வெட்டு ஆராய்ச்சி
இலாக்கா நிபுணரான Dr. B. Ch. சாப்ரா அவர்களின் உறுதி மொழியும் எங்கோ
பறந்தன! இவைகளையெல்லாம் மதியாமல் மலையை உடைப்பது வருந்தத்தக்க
செயலாகும். நாம் அச் சிற்பங்களைப் புகைப்படம் எடுப்பது எவ்வளவு
அவசியமும், அவசரமுமானது என்பதை இப்பயங்கர நிலை நிரூபித்துவிட்டது.
எனவே புகைப் படம் எடுத்துக்கொண்டு மதுரைவந்து சேர்ந்தேன்.
மதுரை ஜோதி சன்மார்க்கச் சங்க வைத்திய சாலை மருத்துவர் உயர்திரு.
முத்து அடிகளும், ஜோதி சன்மார்க்கச் சங்க
காரியதா�சி உயர்திரு. அ.
கங்கணன் அவர்களும், பண்டைய வரலாற்றுத் துறையில் ஆராய்ச்சி நிறைந்த
உயர்திரு. ஏரல். அ. மலையப்பன் அவர்களும் இச் செய்தியை மதுரைப் பத்திரிகைகளில்
வெளியிடின் நலமாயிருக்குமென ஆலோசனை கூறினர். அவர்கள் மூவரும் எனது
ஆப்த நண்பர்கள்; பொதுநலப்
பிரியர்கள் திருக்குறளின் வழி நின்றவர்கள்.
இராமலிங்க சுவாமிகள்; அருளிய அருட்பாவின் கருத்துப்படி
மதவெறியற்றவர்கள். அந்நண்பர்களின் ஆலோசனையை ஏற்று மதுரையில்
வெளியாகும் "தந்தி" "தினச் செய்தி" ஆகிய இரு பத்திரிகைகளுக்கும் சமணர்
மலையின் சிறப்பைப் பற்றியும், அம்மலையைக் கிராவல் கற்களுக்காக
உடைப்பதின் இழிவைக் குறித்தும் விளக்கி உடனடியாக அப் பயங்கரச் செயலை
நிறுத்தவேண்டுமென்று வற்புறுத்தியும் சுருக்கமாக ஒரு அறிக்கையைத்
தயார்செய்து அவர்களிடம் கொடுத்தேன். எனது அறிக்கைகளை அந்நண்பர்கள் அப்
பத்திரிகைகளில் வெளியிட ஏற்பாடு செய்தனர். 'தந்தி'யிலும் 'தினச்
செய்தி'யிலும் 14-11-49-ல் கொட்டை எழுத்துக்களால் தலைப்புக் கொடுத்து
முக்கிய பக்கத்தில் அப்பத்திரிகைகளின் ஆசிரியர்கள் பிரசுரித்தனர். அவ்
வாசிரியர்களுக்கும் மேலே கூறிய என் அன்புக்குரிய நண்பர்கள்
மூவருக்கும் நன்றியறிதலைத் தொ�வித்துக் கொள்கிறேன். நான் சென்னை
வந்ததும் 12-11-49-ல் இந்திய சர்க்காரின் தென்னிந்தியப் புதைபொருள்
ஆராய்ச்சி இலாகா சூபா�ன்டெண்டெண்ட் அவர்களுக்கு 'சமணர் மலை' உடைப்பது
நிறுத்தப்படவில்லை என்று அறிவித்தேன். அதற்கு அவர் மதுரை ஜில்லாக்
கலெக்டருக்குக் கடிதம் எழுதுங்கள் என்றும் கூறினார். உடனே
17-11-49இல் மதுரை ஜில்லாக் கலெக்டருக்குக் கடிதம் எழுதினேன். இதன்
மத்தியில் 'சமணர் மலை'யைப் பற்றிய முழுவிவரங்களையும் கட்டுரையாக
எழுதிச் 'சுதேசமித்திரன்' பத்திரிகைக்கு அனுப்பினேன். அதன் ஆசிரியரும்
'மதுரையும், சமணர் மலையும்' என்ற தலைப்பின் கீழ் 10-12-49-இல்
படங்களுடன் பிரசுரித்துள்ளார்கள். மதுரைப் தியாகராய கல்லூரித் தமிழ்ப்
பேராசிரியர். டாக்டர் மா. இராசமாணிக்கனார் அவர்களும் தமது முதற்படிவ
நேஷனல் தமிழ் வாசகத்தில் சமணர் மலை குறித்துப் பாடமொன்று
எழுதியுள்ளார்கள். ஆசிரியர் இருவர்க்கும் எனது நன்றியறிதலைத் தொ�வித்துக்
கொள்கிறேன். பின்னர் 4-3-505 ஆம் தேதி இந்திய சர்க்கார் தென்னிந்திய
புதை பொருள் ஆராய்ச்சி இலாகா சூபா�ண்டெண்டெண்ட் உயர் திரு. V.D.
கிருஷ்ணசாமி அவர்களிடமிருந்து பின்வருமாறு கடிதம் வந்தது.
No. 40/926,
Superintendent,
Department of Archaeology, Madras-9
Southern Circle, 4th March'50.
Fort St. George.
My Dear Sripal,
Your kind letter of the 3rd instant. you will be pleased to know
that the Mathurai Samanar Malai is now a protected monument and
the Collector is doing his very best to see that there are no
prejudicial quarrying in the vicinity of the monuments.
With Kind regards.
Yours sincerely,
(sd.) V.D. Krishnasamy.
எதிர்பாராத இவ்வெற்றிச் செய்தி என்னை இன்ப வெள்ளத்தில் மிதக்கச்
செய்தது. அளவு கடந்த ஆனந்தத்தால் மெய்மறந்து நின்றேன். அக்கடிதத்தைப்
பன்முறை படித்தேன். தேவலோகத்துப் பா�சோவெனத் திகைத்தேன்! இறந்தவர்
மீண்டும் உயிர் பெற்றது போன்றும் உள்ளம்
பூரித்தேன். இவ்வாறு சமணர்
மலை பாதுகாக்கப்பெற்ற வெற்றிச் செய்தியில் களித்திருந்தபோது உதக
மண்டலத்திலுள்ள சமணர் மலைக் கல்வெட்டுச் செய்திகளின் முழு விவரங்களும்
வந்து சேர்ந்தன. அவைகளை ஆர்வத்தோடு படித்துப் பார்த்தேன். புன்முறுவல்
பூத்தேன். உண்மையா, கனவா என வியந்தேன். மறுமுறையும் நான் வியப்புக்
கொண்ட 10-ஆம் நெம்பர் கல்வெட்டுச் செய்தியைப் படித்தேன். ஆம்! உண்மை
தான்! ஆச்சான் ஸ்ரீபாலன் என்னும் பெயர் கொண்ட அறவோர் செய்தியே என
அறிந்தேன்! என்னே விந்தை! எனது சுற்றுப் பிரயாண நிகழ்ச்சி-நான் சென்ற
பஸ் அம்மலைப் பக்கமாகச் செல்வது-குறிப்பாக அம்மலைக்கருகில் சென்றதும்
பஸ்ஸில் பழுது ஏற்பட்டு பஸ் நின்றுவிடுவது - அதனால் அம்மலையைக காண
நேர்ந்தது-அது பல நூற்றாண்டுகளாய் வரலாற்றுச் சின்னங்களைத் தாங்கி
நிற்கும் சமணர் மலையென அறிவது-அதன�க் கிராவற் கற்களுக்காக உடைக்கும்
கொடுமையைக் கண்டு சகியாது வருந்துவது-கல் உடைப்பதை நிறுத்தவேண்டித்
தக்க நடவடிக்கை எடுத்து வெற்றி கண்டது-அத்திருமலையின் கல்வெட்டுச்
செய்திகளில் ஆச்சான் ஸ்ரீபாலன் என்னும் பெயராலேயே ஓர் அறவோர், அறம்
வளர்த்த செய்தி காணப்படுவது-யானும் ஸ்ரீகம்பீர விஜய ஸ்ரீமுனிவர் எனும்
ஜைனத் துறவோர்களைச் சந்தித்துப் பார்க்கையில் இவை எனது முற்பிறப்பின்
தொடர்புதானோ வெனப் பலரும் ஐயுறும் வண்ணம் அமைந்திருக்கிறது. எனது
கூற்றைத் தற்பெருமையெனக் கருதாது வாசகர்கள் மன்னிக்க வேண்டுகிறேன்.
ஏனெனில்,
"ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவர்க்(கு),
எழுமையும் ஏமாப் புடைத்து"
எனத் திருக்குறள் திருவாய் மொழியையும் நமது இந்திய இலக்கியங்களில்
காணப்பெறும். பல பொ�யோர்களின் முற்பிறப்புச் சம்பவங்களையும்,
ஆழ்ந்தறிந்த எவரும் இவ்வாறு எண்ணுவது இயல்பு. மேலும் அறமே உருவாய்
அமைந்த இம் மாண்புறு மலையைக் கண்டு வணங்கிப் பாதுகாக்கும் பாக்கியம்
பெற்ற பின்னரே எனது வாழ்க்கையில் கலந்த ஜீவ காருண்ய சேவைக்கும் வழி
பிறந்தது. சென்னை சட்ட சபையில் பலி விலக்கு மசோதாவைச் சட்ட மியற்ற
வேண்டி அடியேன் எடுத்துக்கொண்ட முயற்சியும், சமணர் மலை வெற்றி கொண்ட
1950-ஆம் ஆண்டிலேயே செப்டம்பர் மாதம் 14-ஆம் தேதி அறிவு சான்ற கனம்
மந்திரிகள், சட்டசபை அங்கத்தினர்களின் பேராதரவில் சட்டமாக்கப்பட்டது.
அச்சட்டம் 1951-ஆம் ஆண்டு ஜுன் மாதம் முதல் தேதி முதல அமுலுக்கும்
வந்துவிட்டது. இவ்வெற்றி அஹிம்சையின் வெற்றி! அன்பின் ஆக்கம்!
அருளறத்தின் மறுமலர்ச்சி! சமணர் மலை அறவோர்களின் தவப்பெருமை! எனவே
தாம் அனைவரும் சமணர் மலைசென்று பகவான் விருஷப தேவர், நேமிநாதர், பா��ஸ்வநாதர்,
மகா வீரர் முதலிய தீர்த்தங்கரர்களை வழிபடுவோம். பகவான் விருஷபதேவர் (ஆதி
பகவன்) இவ்வுலகிற்கு முதல் முதல் அறம் வகுத்தவர் என்பதையும், அவர்தம்
திருவறமே முதல் நூலாகப் பரத கண்டத்திலும், சிறப்பாகத் தமிழகத்திலும்
தொன்று தொட்டு வழங்கி வருகிறது என்பதையும் முன்னரே அறிந்துள்ளோம்.