 |
(29) புலால் மறுத்தல்
இராகம் செஞ்சுரிட்டி-ஆதி தாளம்.
(நம்பிக்கை கொண்டெல்லோரும் என்ற மெட்டு)
பல்லவி
மனிதவர்க்கமே பிறந்தும் மனம்
இரும்பாச்சோ மனம்
இரும்பாச்சோ அதன் பிணம்
கரும்பாச்சோ அரும் (மனித)
அநுபல்லவி
உயிரை மடிக்கின்றீரே அண்ணே-அந்த
உடலெலாஞ் சீழ் ரத்தப் புண்ணே-அதை
மிகச்சிரேட்டமாய் மகிழ்ச்சியோடுணில்
இகழ்ச்சி வேறென்னே! (மனித)
தொஹைரா
காலில் சிறுகடு முள்ளதைத்தால்
கண்ணீர் விட்டழுது நின்றே
கடுகெனப் பிடுங்க வேண்டி
கைமுறித் தலறுகின்றீர்
வானினால் சிரசை வெட்டி
வாழ்வையே யொழிக்கின்றீரே
வாய்மையோ தருமந்தானோ
வஞ்சனை படைத்த பேரே
பாட்டு
பாழும்-வயிற்றினை வளர்ந்திடவேறே-அதோ
வளருதே மரஞ்செடி நேரே-அதன்
வளமறியாமலே புலை மிகவேண்டியே
கொலை புரிகின்றீரே-அரும் (மனித)
(30)
(கோருங்கள் கோருங்கள் என்ற மெட்டு)
பல்லவி
வேண்டாதீர் வேண்டாதீர் வேண்டாதீரே-புலால்
தீண்டாதீர் தீண்டாதீர் தீண்டாதீரே
அநுபல்லவி
வேற்றுயிரின் கூற்றமாவீர்
ஆற்றொணாத் துர் நாற்றமேவீர் (வே)
சரணம்
ஆண்டவனடியைப் பூண்டிடவேண்டி
ஆத்துமன்வந்த திம்மானிடமீண்டி
தூண்டுஞ் சிந்தைதன்னைத் தூயவழியண்டி
துன்னியதிரு மன்னுயிரை தன்னுயிரா யெண்ணிக்
(கொலை (வே)
காய்கனிகிழங்கு காய்த்திங்கிருக்க
கருணையிலா துயிரூனைப்புசிக்க
வாயில்லா யுயிர்களை வாளாலறுக்க
வாதையினால் வேதனைபட்டேதமுறின் பாதகமே (வே)
புண்ணெனு முண்மையை யெண்ணிடுமானிடர்
புசிப்பரோ நாற்றப்புலாலைப் புகினிடர்
முன்னோருரைத்ததோர் வாக்கியத்தொடர்
மொழிவேனூனை விழைவோர்வயிற் சுடுகாடென
(கடையாக்கினர் (வே)
(31)
(பாரினிலேபுகழ் பாரதபுத்திரரே என்ற வர்ணமெட்டு)
ஆடு கோழி நண்டு மீனைப் புசிக்கலாமா
ஐயோ மானிடர்க்காமா
தேடரும் ஜென்மம் மறந்திடலாமா
தீயவிலங்காக மாறிடலாமா
தொஹைரா
எண்ணரும் பிறவிகளில் ஊர்வனவும்
நடப்பனவும் பறப்பனவும் நீந்துவனவும்
மண்ணுலகத் தாயவள் தன் மக்களென
மடிமீது உலவவிட்டுப் பசியாற்ற
வண்ணமுடை மரங்களொடு செடிகளையும்
வளர்த்துமிகக் காய்கனிகள் கரங்களாலே
நன்னயமா யூட்டுவபோன் றியற்தையருங்
காட்சியினை நயந்தறியா மாந்தரேரே
பாட்டு
கரும்பிருக்க வேம்புத்தேடுங் கயவர்யோலே
கண்ணற்றவர் போலே
நிரம்பக் காய்கனிகள் நிற்க முன்னாலே
நீசப்புலாலை விரும்பியப்பேய்போலே (ஆடு கோழி)
தொஹைரா
(அருட்பா)
மருவாணைப் பெண்ணாக்கி யொருகணத்திற் கண்விழித்து
வயங்கு மப்பெண்
ணுருவானை யுருவாக்கி பிறந்தவரை யெழுப்புகின்ற
வுறுவ னேனுங்
கருவாணை யுறவிரங்கா துயிருடம்பைக் கடித்துண்ணுங்
கருத்த னேலெங்
குருவாணை யெமதுசிவக் கொழுந்தாணை ஞாளியெனக்
கூறொ ணாதே.
பாட்டு
என்று மொழிந்த இராமலிங்கர் கவியை
ஏற்காத பாவியை
அன்று படைத்த பிரம்மா வுந்தன் கையை
அறுக்கவே யெண்ணுவா னென்றறி மெய்மை (ஆ)
(32)
(ஏன் வரமாட்டீர் என்ற மெட்டு)
பல்லவி
ஏன் விடமாட்டீரையா பாழும் புலாலை (ஏ)
சரணம்
ஈனத்தையுண்டாக்கும் ஈரலைக்கெடுக்கும்
இனிய ஜீரணக்கருவிக் கின்னலைக் கொடுக்கும் (ஏ)
பந்தியில் வாராது பண்பினைத்தாராது
பாழுமுதேவி மூடும் பங்கயத் திருசேராது (ஏ)
தொட்டகையும் நாறும் துவைத்த சட்டியும் நாறும்
தொடரும் பல் நோய்களும் துன்மார்க்கச் செய்கை (ஏ)
அன்பை அழித்திடும் அருளை ஒழித்திடும்
அறிவை மந்தமாக்கி ஆயுளைக் குறைத்திடும் (ஏ)
இந்துமதங் கெடுமே இறைவனறம் படுமே
இனி வரும் பிறவியிலிருள் நரகத்திடுமே (ஏ)
கொல்லா விரதமொன்றே கொண்டாரைச் சேரும் நன்றே
கோடியுயிர்கள் வாழ்த்தும் கோமானருளுமின்றே (ஏ)