 |
(17) (சுயராஜ்யம் அதிகதூரமில்லை என்ற மெட்டு)
ஐயோ கொடுமை இதை யார் பொறுப்பாரே
அலறித் துடிக்குதையோ அழுது நம் நேரே
வையத்தில் மானிட ஜென்ம மெடுத்த பேரே
வாயில்லாப் பிராணிகளை வதைத்திடில் போரே (ஐயோ)
தொஹைரா
எண்பத்து நான்கு லக்ஷபேத உயிர்களாமென
வியம்பிடும் வகைகளிலே
இரக்கமும் அன்பும் அறிவும் இறைவ
னின் எண்ணமும் எழிலுடை மோக்ஷமும்
பண்பட்டு வருகின்ற பாக்களும் பரமாகமம்
படித்ததன் பயனடையும்
பகர்தற் கா�தான மானிடப்பிறவியே யெனப்
பாராது உயிர்களை
பாட்டு
பதைக்கப் பதைக்க வெட்டிப் பலியிடலாமா
பாவியெனப் பெயரைப் படைத்திடலாமா (ஐயோ)
தொஹைரா
கத்தியைக் காத்திலேந்தி கழுத்தனை யறுக்க வெண்ணிக்
கால தூதுவனைப்போன்று கடுமையாய் நிற்கக் கண்டே
சத்திய நெறியைக் கூறி சதி மனங் கரையும் வண்ணம்
சாற்றிட வாயுமில்லா தடுத்திடக் காமுமில்லா சாந்தமாம்
(பிராணி தம்மை
பாட்டு
தவிக்கத் தவிக்க வெட்டித் தசை தின்னலாமா
தருமநெறிதவறித் தலை நிற்கலாமா (ஐயோ)
(18)
இராகம்-தன்யாசி-தாளம்-ஆதி
(நிச்சயமாய் தீர்க்கக் கடன் என்ற மெட்டு)
பல்லவி
உத்தம ஜென்ம துதித்த உயர்மதி ஆண்மையாளா
உமக்கிது நியாயமாகுமோ?
அநுபல்லவி
புத்தியற்றப் பெண்கள் கூடி
பித்தரா லேசங்க வாடி
சத்திமாரி தேவி நாடி
சுற்றிடுவர் ஆட்டைத் தேடி (உத்தம)
சரணம்
குற்றமும் அறிவும் வலி யற்ற ஆடு கோழி தம்மை
கொன்று பலி செய்வதெற்கு?
கொக்காக்கோ அம்மாவெனக் கூவியழத்தலை வெட்டுக்
கோர மூடபக்தி யெதற்கு?
பெற்றப் பிணியாவும் போக்கப்
போருலகில் மருந்துண்டு
உற்றாம் விதி மறந்து
உயிர்க் கொலை செய்யலாமோ? (உத்தம)
(19)
பண்டித மோதிலால்நேரை பிறகொடத்தோமே என்ற மெட்டு
பல்லவி
ஐயையோ தெய்வமே நீ யறியவில்லையோ
அநுபல்லவி
அறியவில்லையோ மனங் கரைய வில்லையோ (ஐ)
சரணம்
மெய்மை பிறப்பே பிறந்து
மேன்மை யறமே மறந்து
கையினிலே வாளையேந்தி கழுத்தை வெட்டுகின்றார்
கழுத்தை வெட்டுகின்றார் மனங் களிக்கப் புசிக்கின்றார் (ஐ)
தொஹைரா
எவ்வுயிர்க்குந் தெய்வமொன்றா
மெனு முண்மையறியாத பேதையர்கள்
ஒவ்வாத பெயர் கொடுத்தே ஊருக்கொரு
சிறுதெய்வமென உண்டாக்கி
பவ்வியர்போல் பசப்பிடும் பூசாரிகளின்
பதர்மொழியின் வலையிற்பட்டு
செல்வியரும் மற்றையரும் பலியெனவே
உயிர் மாய்க்குஞ் செய்கையந்தோ
பாட்டு
செப்பிடவும் வாய் குளரும்
சிந்திக்கவும் மனம் பதரும்
ஒப்பிடவும உலகில் பாவம் வேறுயில்லையே
வேறுயில்லையே பழி விடுவதில்லையே
அப்பப்பா துடி துடித்து வாய்திறக்குதே
வாய்திறக்குதே கண்ணீர் வடித்தழுகுதே (ஐ)