 |
(10) கொலையுண்ட
மிருகங்களின் அசா�ரி.
மாமிசக்கடையில் நடக்கும் கோரஹிம்ஸைகள்
நொண்டிச்சிந்து
1. மனிதர்களே கேளீர்-இழி
மாமிஸம் புசிக்க நீர் மனங்கொள்ளவே
சனியன் பிடித்ததெமையே-அந்தோ
சண்டாளப் பிரமனெம்மை யேனோ படைத்தால்
பனிக்குதுரைக்க நெஞ்சமே-நீங்கள்
பணங்கொடுத் தெம்முடலாம் பிணம் வாங்கியே
இனிதாகச் செல்லுகின்றீர்-யாங்கள்
இங்ஙனமடைந்த பெருமிம்ஸையைச் சற்றே (மணி)
2. கடுங்கொலை பல
புரிந்தே-நெஞ்சம்
கல்வினுங் கனத்ததலாப் பாழுங்கொலைஞர்
கொடுமைவாள் கையிலேந்தி-யாங்கள்
கொடுஞ்சிவரும் வாழ்நாளில் குறுக்கேநின்று
திடுக்கிடப் பிடித்திடுவார்-வேறு
செய்வதறியாதெங்க ளினம் நினைத்தே
நடுங்கி உடலஞ்சிலிர்த்தே-நிற்க
நமன் தூதர்போல் நால்வர் சேர்ந்திழுப்பார் (மணி)
3. உயிரின்மே லுளவிருப்பால்-அவர்கள்
உரமுடை தோளின்தன்மை யோராதிழுப்போம்
வயிற்றினைச் சேர்த்தணைப்பார்-மேலும்
வலிவுடனிழுத்துக் காலுதைத்துக் கொண்டே
அயர்ந்து போம்வரை முயல்வோம்-பின்னே
அடைக்கல மாவோமென்று தலைநிமிர்ந்தே
பயமுடை கண்களாலே-யாங்கள்
பார்க்கும் பா�தாபத்தைப் பாராதிகழ்ந்தே (மணி)
4. இழுத்தெமை முன்னேநிறுத்தி-யாங்கள்
இரைந்து அலறும் பெருமூச்சினிடையும்
அழுத்திப் பிடிக்கும் வலியின்-இடையும்
ஆயுள் பிரிவெண்ணிவிடுங் கண்ணீரிடையும்
புழுங்கிக் கதருமிடையும்-அந்தோ
புலையும் ரத்தமுந் தோய்ந்த கத்தியாலோங்கி
கழுத்தினிடையே வெட்டுவார்-துண்டாய்
கழுத்து முடலும்வேறாய் துடித்திடுமே (மணி)
5. கோரமினியும் வேண்டுமோ-ஐயா
கூறினோஞ் சுருக்கமாய்க் கொண்டதனேகம்
பாரினிற் கொலையுண்டு-யாங்கள்
பாவிகள் நிலைகண்டபின் பிறப்புவேண்டி
ஊரூரா யுருவமின்றே-சுற்றி
ஓடினோன் கடையினிலாழ் நரகத்திலே
கூரிய விரும்பைக்காய்ச்சி-எம்மைக்
கொன்றவரைப் பேய்கள் பல குத்தக்கண்டோம். (மணி)
6. அங்க முருகுதையா-எங்கள்
ஆருயிருங்கள் காத்தடைந்துளதால்
பொங்குறும் புலால் விடுவீர்-இல்லையேல்
புறப்படு மொருநாளை நீதிதெய்வமே
பொங்கி சண்டமாருதம்போல்-சீறி
போற்றுமுங்க ளாத்துமண்மேல் புகுந்தடித்தே
சங்கடங்கள் பல பண்ணும்-இது
சத்தியம் சத்தியம் சொன்னோம் சத்தியமே (மணி)
ஓர் ஆட்டின் உணர்ச்சி
பூஜோ�பட்டி என்ற கிராமத்தில் ஒரு பூசாரி
மாரியம்மனுக்குப் பலியிட ஒரு
ஆட்டை எதிரே நிறுத்தி அதை வெட்ட வாளை ஓங்கினான். உடனே அந்த ஆடு
ஆவேசத்தோடு பெருங்குரலால் கதறித்துள்ளி பூசாரியின் மார்பை ஒரு காலால்
உதைத்துக்கொண்டும் மற்றொரு காலால் கத்தியைப் பிடித்திருந்த கையை
ஓங்கவொட்டாது தடுத்துத் தாழ்த்தி நின்றும் கதறிற்று.
இந்த ஆச்சா�யகரமான சம்பவத்தின் நிலைமையைக் குறித்துப் பாடியது.
(அச்சமில்லை அச்சமில்லை என்ற மேட்டு)
அடே பாவி! அடே பாவி!!
அழியக் காலம் வந்ததோ
விடேனுன்னை விடேனுன்னை
வீரங்குன்றும் வரையிலும் (1)
திடீரென்று கத்தித்தீட்டி
தீயா வெட்டவந்தனை
படீரெனவே மார்துடித்துப்
பதைக்குஞ் சப்தங்கேளடா (2)
நெஞ்சில் சற்று மிரக்கமின்றி
நீசனே வாளோச்சினை
வஞ்சகா உன் வாழ்வின் வழியில்
வான்வா�ன் விழிப்பையே (3)
ஏது குற்றமுனக் கிழைத்தேன்
இந்தப் பகைமை பூண்டனை
வாதுசெய்துன் பொன் பொருளை
வஞ்சிக்கவு மெண்ணிலேன். (4)
பாதகா நீ வெட்டுங் காலை
பதறிப் பாதம் பணிந்துமே
ஆதகா தெனத் தடுத்து
அறமுரைக்க வாயிலேன் (5)
வீரமாக வாளை யேந்தி
வெட்டி வீழ்த்த வருகையில்
தீரமாகநின் றெதிர்க்கத்
திறனுமற்றப் பாவியேன் (6)
கூட்டமிகு மாந்தா�டை
கொன்றிடவே நின்றனை
வாட்டமோடு நிற்குமென்னை
வந்து மீட்பாரில்லையே (7)
உற்றார் பெற்றா ரொருவா�ல்லை
ஒண்டியாக நின்றிட்டேன்
குற்றமற்ற வென்னைக்கொல்ல
கூறிற்றென்றாய்த் தெய்வமே (8)
தெய்வமென்ப தெவ்வுயிர்க்குந்
தேர்ந்தொன்றே யறிகுவாய்
ஐய! நீ பலியாய் என்னை
அறுப்பினம்மன் வெறுக்குமே (9)
தோழா! என்னைக் கொல்லுமுன்னே
தொழுதேன் வாமொன்றளியுமே
ஏழை எங்களுயிரைத் தெய்வம்
ஏற்பதுண்மை யாகிடில் (10)
வீரா!வாளால் வெட்டிடாது
விளங்குந் தெய்வந் தன்னையே
நேரா யெங்களுயிரை வாங்க
நிலம் பணிந்து கேளுமே (11)
உங்கள் மக்களோடு நீங்கள்
உற்றநோய் தமக்கெலாம்
எங்கள் மக்களோடு யாங்கள்
ஏதுசெய்தோ மதியிலாய் (12)
உயிர் பலிக்கு உயிர் கொடுக்க
உலகில் தெய்வமில்லையே
வயிறுபற்றி யொ�யதிந்த
வாளை வீழ்த்தி மீளையா (13)
அழுவதோ நகைப்பதோ உன்
அறிவிலாத செய்கைக்கே
விழுவாய் நரகம் நாளையே! நீ
விடுவாய்க் கொல்லுந் தொழிலையே (14)