 |
(24) முருகன் துதி
(குமரனே என்ற மெட்டு)
முருகனே நின் அழகுக்கொடியில் மோகமா
யுலவுஞ் சேவல்
அருங்குலமே
புரியுநலமே
புகலயெவரே உளா�ஞ்ஞாலமே (மு)
தொஹைரா
ஆழிசூழுலகினி விரவெலா முறங்கிய
மாந்தரை யெழுப்ப
கோழியின் குலமெல்லாம் படைத்ததாமெனு
முண்மையைப் பரப்ப
பாட்டு
கொண்டாடி கொடியிலேற்றாய்
குவலயம் போற்றவிட்டாய்
குமரனே திருமால் மருகனே
அமரனே குறவள்ளியின் மோகனே (மு)
தொஹைரா
அப்பனே சுப்பிரமணியா ஆரருள் பயந்த
சேவற்கொடியா வென்றே
செப்பிடு மானிடக்கூட்டம் செல்வி
மாரித்தேடி
நின் சேவலைக் கொன்றே
பாட்டு
பலியிடுக் கோரங்கண்டே பதைபதைத்
தோடி யீண்டே
பாவக்கொலைப் பூஜைபாரை விட்டோட்ட
மேவித் துதித்தோம் நின்னருளைநாட்ட (மு)
(25)
மாரியம்மன் துதி
(சரவணபவகுக சண்முகநாதா என்ற மெட்டு)
மண்ணுலகம் புகழும்
மாரியம்மாளே
மாரியம்மாளே மண்ணுயிர்த்தாயா�� (ம)
சிங்காவகனமேறி செல்வாயருளைக்கூறி
அங்கனமருள் பூண்டு அடைந்தோம் நின்னருள்கோரி (ம)
அம்மாநின் பக்திபூண்டு அன்பும் அருளும்விண்டு
அநியாயக் கொலைசெய்தே அழகின்றாரையோ ஈண்டு (ம)
மானிடக்கூட்டமம்மா மதியற்றசிலரம்மா
மடிக்கின்றாருயிர்களை மக்கள்பெறாபாவிகளம்மா (ம)
இரக்கமற்றவரம்மா ஈரமில்லாநெஞ்சரம்மா
ஹிம்ஸித்தாடுகோழியை யிடுகின்றார் பொங்கலம்மா(ம)
அம்மா அம்மாவென்றே ஆடுகோழிகள் நின்றே
அலறியழுங்குரலை அம்மா நீ கேளின்றே (ம)
ஆடுகோழிகள் வெட்டி ஐயையோ ரத்தங்கொட்டி
ஆலயமுன்னே யாறாய்ப் பெருகுதே பாராயெட்டி (ம)
ஊமைப்பிராணிகளம்மா ஒருவருங் கேளாரம்மா
ஓடிவந்தாடுகோழி உயிர்களைக் காருமம்மா (ம)
(26)
(பித்தந்தெளிய மருந்தொன்றிருக்குது என்ற மெட்டு)
பக்தரே �த்யவங்களைப் பூஜிக்கத் தேங்காய்
பால்பழ மேற்றவையாம்
உத்தமமார்க்க கருதிகள் சாற்றிய
உண்மை! உண்மை!! உண்மை!!! ஐயா (பக்தரே)
மாரி பிடாரி காட்டோ� மன்னார்சாமி
மாடனைத் தெய்வங்களாக்
கோரிப்பல ஆடு கோழிகளைக் கொல்லல்
கோரம்! கோரம்! கோரம்!!! அந்தோ (பக்தரே)
குளிக்கப் போய்ச் சேற்றைப் பூசிக்கொண்டாற்போல
கோயில் முன்னே கொலைகள்
பழிக்கச் செய்து புலாலுண்ணும் பக்தியால்
பாவம்! பாவம்!! பாவம்!!! நேரும் (பக்தரே)
கங்கையில் மூழ்கிக் கடவுள் பாதந்தனைக்
கண்மூடி ஒதிடினும்
தங்குயிர் கொன்று தசையுண்போர் நரகில்
சார்வர்! சார்வர்!! சார்வர்!!! ஐயோ (பக்தரே)
இரக்கமும் அன்பும் இலாத மாந்தர் நெஞ்சம்
ஏற்ற இரும்போ கல்லோ
மிரட்டி உயிர் கொல்லுவோர்கள் பிறப்பது
வீணே! வீணே!! வீணே!!! வீணே (பக்தரே)
கொல்லான் புலாலை மறுத்தாளைக் கைகூப்பி
எல்லா உயிருந் தொழும்-என்றே
நல்லார் குறளில் நவின்றதோர் நல்லறம்
நாடும்! நாடும்!! நாடும்!!! தேரும் (பக்தரே)
(27)
(நம்பினவர்க்கருள் இன்பந்தரும் ஜெயராமா என்ற மெட்டு)
அன்பு நிறைந்த சிறந்த அறிஞரே வா��ர்
குணந்தோ�ர் நலம்பா��ர் (அ)
ஆருயிர்தமை பேருயிரென கோருங்கொள்
கையில் கூடும் புகழ்நாடும் இன்பங்தேடும் (அ)
தொஹைரா
அஞ்சாத பாவியர் அம்மன் பிடாரியென
ஆடு கோழி வதைப்பர்
நஞ்சானாலும் நாற்றப்புலாலை நாடி
வயிற்றில் நமன் போலடைப்பர்
பாட்டு
அந்த-பாவமார்க்கமே மேவுமூர்க்கா�ன் தாவுஞ்
சேருதல் ஈனம் அக்ஞானம் விழும்வானம் (அ)
தொஹைரா
எண்ணிலாப் பிறவிதமை யெடுத்திந்த
மானிடராய்ப் பிறந்தமையால்
மண்ணில் வாழுயிரனைத்தும் மக்களாம்
தாயாம் தந்தையொடு சுற்றமால்
பாட்டு
மகிழோடுயிர் சுகமே வாழ பகவனைத்
தொழு�வோமே உயர்வாமே பவம்போமே (அ)
(28)
(ராகம் சஹானா-தாளம்-ரூபகம்)
முந்தி ஜென்மப்பகையோ எந்த ஜென்மக்குறையோ
இந்த மானிடர்கையில் இம்சைக்காளாகினோமே (முந்)
ஆடு கோழியானாலும் கேடு ஒருவர்க்கெண்ணோம்
காடுமேடில் வளர்ந்தும் கருமம் விடவில்லையே (முந்)
அம்மன் பலிக்கென்று யெம்மை மிகவே கொன்று
கொம்மைகொட்டி யெங்கள் குலத்தை யழிக்கின்றவர் (முந்)
கரும்பு யிருக்கமேலே கரம்பை மேய்க்கடாப்போலே
நிரம்பிக் காய்கனியிருக்கெம் நிணத்தை விரும்பி
தின்பார் (முந்தி)
தங்களுடல்புண் கண்டு சங்கை கொள்மந்தா��ண்டு
எங்களுடலுன்மென்று ஏப்பம் விட்டுண்பவர் (முந்தி)