 |
அஹிம்ஸா பிரசாரம்
தலைமைச் சாதுக்கள் தவிர மற்ற சாதுக்களில் பலர் சங்கம் எந்த ஊரில் தங்குகின்றதோ அந்த ஊரின் பல பாகங்களிலும் சென்று அஹிம்ஸா தர்மத்தைப்
பற்றி உபன்யாசங்கள் செய்வார்கள். உயிர்க்கொலை செய்யப்படாதென்றும்,
ஊனுண்ணலை ஒழிக்கவேண்டுமென்றும், தெய்வங்களுக்குப் பலியிடலும், யாகம்
செய்தலும், பாதகச் செயல், மூடப்பழக்கம், அநாகா�கம் என்றும் போதித்து
வந்தார்கள். அஹிம்ஸா பிரசாரகர்களுக்குத் தனித்தனியாக இருவரை
அனுப்பியிருந்தார்கள். அவர்களிருவரும் அந்த சாதுக்குரிய பணிகளைச்
செய்வதோடு, அஹிம்ஸா தர்மத்தைப்பற்றிய கொடிகளைத் தாங்கியும் அதன்
சம்பந்தமான நோட்டீஸ்களை விநியோகம் செய்தலுமாகிய தொண்டினை ஆற்றி
வந்தார்கள். இவ்வாறு பல சாதுக்கள் வழி நெடுக தர்மப்பிரசாரம்
செய்துக்கொண்டுவந்தது போற்றத்தக்கது.
பார்வையாளர்கள்
இப்பெரும் புண்ணியமான மாட்சியமைதாங்கிய யாத்திரையானது வெகு சிறப்பாக
நடந்துவரும் போது வழி நெடுக ஜனங்கள் அக்காட்சியைக் காண ஓடிவருதலும்,
பல மைல்கள் அவர்களைப் பின் தொடர்ந்து பார்த்துவிட்டுத் திரும்புதலும்
வெகு விநோதமாக இருந்தன. இவ்வாறு வேடிக்கை பார்க்கும் ஜனங்கள்
ஆயிரக்கணக்காக ஆங்காங்கு சேர்ந்து வந்தார்கள். சங்கம் தங்கும் ஒவ்வோரிடங்களிலும்
காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை ஜாதி மத பேதமின்றி எல்லோரும் உள்ளே
சென்று பார்வையிடலாமாகையால் ஒவ்வொரிடத்திலும் தினம் லக்ஷக்கணக்கான
ஜனங்கள் வேடிக்கைபார்க்க வந்துகொண்டிருந்தார்கள். அநேக
ஆங்கிலேயர்களும், பாரசீகர்களும், மகம்மதியர்களும், கிருஸ்துவர்களும்
விஜயம் செய்து சங்கபதியைத் தா�சித்து பல மணி நேரம் பேசிவிட்டுச்
சென்றார்கள். இவ்வாறே பல பொ�ய மனிதர்கள் சங்கபதியைக் கண்டு பேசி
வாழ்த்திவிட்டுப் போவார்கள். ஆலயத்திலும் அவ்வாறே எல்லோரும் சமமாகப்
போகலாமாகையால் யாவரும் சென்று ஸ்ரீவர்த்தமான மகாவீரரைத் தா�சித்துவிட்டு
சென்றார்கள். சங்கம் தங்குமிடமெல்லாம் அந்தந்த நகர கிராமவாசிகள்
பலவித கடைகளும் போடுகின்றார்கள். இது பார்வையாளர்களுக்கு மிக்க
அனுகூலமாயிருந்தது. அந்த சங்கத்தின் காட்சியைக் காணவந்த பலரும் அதிக
வியப்புற்று மன மகிழ்ந்து மூக்கின் மேல் விரலை வைத்து "இது தேவலோகமோ!
இந்திர லோகமோ" என்று ஆச்சா�ய மடைந்து சென்றார்களென்றால் அதன் பெருமையை
என்னென்று வருணிப்பது? சங்கபதியையும் அவர் மனைவியையும் பலர் அடிதொழுது
போற்றினார்கள். அவர்களிருவரையும் பார்த்து "பார்வதி பரமேஸ்வரனோ!
மகாவிஷ்ணுவும் மகாலக்ஷ�யுமோ இந்திரனும் இந்திராணியுமோ" வென்று
புகழ்ந்து போற்றினார்கள். இத்தகைய ஒரு பொ�ய சங்கத்தோடு கூடிய
புனிதமான புண்ணிய யாத்திரையை நடத்துதல் அரிது அரிது யென்றும்,
இத்தகைய யாத்திரையை நாம் கண்டதுமில்லை கேட்டதுமில்லை யென்றும்
கொண்டாடினார்கள். சுமார் 800 வருஷங்களுக்குமுன் குஜராத்தில் குமாரபால
மகாராஜா என்ற ஓர் ஜைன அரசர் இத்தகைய யாத்திரையை நடத்தினாரென்ற சா�த்திர
உண்மையை மெய்ப்பிக்க இக்காலத்தில் ஒரு மில் சொந்தக்காரர்
நடத்தினாரென்றும் ஆச்சா�யப்பட்டார்கள்.
உண்மையிலேயே இச்சங்கமானது ஒரு பொ�ய அழகிய நகரம் போலவே
பொலிவுற்றிருந்தது. இச்சங்கம்
ஓரிடத்தை விட்டு மற்றோரிடம்
செல்லும்பொது ஒரு பொ�ய நகரம் நகர்ந்து செல்வது போலத் தோன்றும்.
ஆகையால் இக்காட்சியைக் காணும் ஜனங்கள் பேரானந்த மடைந்தது ஆச்சா�யமல்ல.
மேலும் வடநாட்டிலுள்ள பல பத்திரிகைப் பிரதிநிதிகளும் மேல்நாட்டுப்
பத்திரிகை பிரதிநிதிகள் பலரும் அந்த சங்கத்தைத் தொடர்ந்தே வந்து தினசா�
சங்கதியை போட்டோ எடுத்து அனுப்பிகொண்டேயிருந்தார்களென்றால்
அச்சங்கத்தின் பெருமையையும் அதன் அரிய காட்சியையும் வருணிக்க முடியுமோ?
மேலும் இந்த யாத்திரை தொடங்குவதற்கு முன்பே இதனுடைய வரலாற்றை
உலகெங்கும் அறிந்துகொண்டார்கள். அப்பொழுதே அநேகர் அந்த சங்க பதியின்
பக்தியையும் �தா�யத்தையும் மெச்சிப் புகழ்ந்தார்கள். மேலும்
இம்மகத்தான யாத்திரையைக் காண இந்தியாவின் பல பாகங்களிலிருக்கும் அநேக
ஸ்பெஷல்களும், அநேக யாத்திரிகர்களும், ஜைனர்களே யன்றி ஏனையோரும்
விஜயம் செய்தார்கள். பாவ் (Bhav Nagar) நகர் ஸினிமா பிலிம்
கம்பெனியார் ஆமதாபாத்திலிருந்து பாலிடானா வரையில் இந்த சங்கம்
சென்றவிடமெல்லாம் அக்காட்சிகளை ஸினிமாபடம் பிடித்திருக்கின்றார்கள்.
பலர் போட்டோவும் ஆங்காங்கு எடுத்துக்கொண்டே வந்தார்கள்.
சங்கபதியின் ஊர்வலம்
இந்த சங்கம் தங்கிய நகரங்கள், கிராமங்கள் முலிய விடங்களிலுள்ள
சமஸ்தானாதிபதிகள், முனிஸிபாலிடியர்கள், தலைவர்கள், சங்கபதிக்கு
ஆங்காங்கு வரவேற்புப் பத்திரங்களும், உபசாரப்பத்திரங்களும்
வாசித்துக்கொடுத்தார்கள். அக்காலங்களில் சங்கத்தினின்றும் சங்கபதி
ஊர்களில் விஜயம் செய்யும்போது பல விருதுகளுடனும், பாண்டு
வாத்தியங்களுடனும் தன் திருப்புதல்வனை யானையின்போ�ல் அம்பாரியிலமர்த்தி
முன்னே செல்லவும் பின்னால் சங்கபதியும் அவர்தம் மனைவியும் மோட்டார்காரில் பலரும் வாழ்த்தச் செல்லுவார்கள். அவர்கள்தம் திருப்புதல்வியை ஒரு
தாதியுடன் அழகிய பல வேலைப்பாடுள்ள உயர்ந்த சா�கை கம்பளத்தைப் பரப்பிய
மோட்டாரில் உட்கார வைத்து அலங்காரத்தோடு யானைக்குப்பின்
செலுத்துவார்கள். இவ்வாறே நகரங்களையும் கிராமங்களையும் ஊர்வலம்வந்து
ஆங்காங்கு உள்ள ஜினாலயங்களைத் தா�சித்து பிற சங்கங்கள், வாசக சாலைகள்
முதலியவைகளையும் பார்வையிட்டு வருவார்கள். இந்த ஊர்வலங்களின்போது
மெய்க்காப்பாளர்களும் சோல்ஜர்களும், குதிரை வீரர்களும் முன்னும்
பின்னும் புடைசூ� ராஜ வைபவத்தோடு செல்வார்கள்.
சங்கபதியின் தரும குணங்கள்
சங்கபதி விஜயம் செய்த இடங்களிலெல்லாம் பல பொது ஸ்தாபனங்களுக்கும்,
ஜைன பொது ஸ்தாபனங்களுக்கும் ஏராளமான பொருள்கள் தருமம் செய்தார்கள்.
கேட்டி என்ற கிராமத்தார் ஒரு சத்திரத்தைப் புதுப்பிக்க சங்கபதியை
வேண்டிக்கொண்டார்கள். உடனே சங்கபதி அதற்கு 1500 ரூபாய் தருமமாக
அளித்தார். இதனை நான் நோ�ல் கண்டேன். இவ்வாறே வழி நெடுக தருமங்கள்
செய்துகொண்டு வந்துள்ளார். அவர் லக்ஷ்மீ புத்திரனாகையால் அவர்தம்
திருமுகத்தில் ஒருவித பளபளப்பும் தயாள தன்மையும் கம்பீரமான தோற்றமும்
பொலிவுற்று அழகோடு விளங்கின. அவர் எவா�டத்தும் அன்புடன் முகமலர்ந்து
இனிய வார்த்தையால் மொழியாடுகின்றார். தவிர இச்சங்கத்தில் குளிராலும்,
மோட்டார் விபத்தாலும் 7, 8 பேர் இறந்துவிட்டார்கள். அதற்காக அவர் 3
நாள் பட்டினியிருந்திருக்கின்றார். அவர் பட்டினி விரதம் அனுசா�க்கவே
அவர் மனைவியும், சிறிய தாயாரும் அம்மூன்று நாளும்
பட்டினியிருந்திருந்தார்கள். இவர் தங்கள் சங்கத்தைச்
சேர்ந்தவர்களுக்கு ஏதாகிலும் ஆபத்து நேர்ந்தால் தங்களுக்கோ தங்களுடைய
உறவினர்களுக்கோ நேர்ந்தது போல சங்கபதி வருந்துகின்றார். இதனை
கேட்டியில் நடந்த ஒரு சம்பவத்திலிருந்து அறிந்தேன். சங்கத்தைச்
சேர்ந்த ஒருவருக்கு (Influenza) இன்புளுயன்ஸா ஜுரம் வந்து
அவஸ்தையுற்றார். அவரை டாக்டர்கள் பா�க்ஷ�த்து மருந்தளித்து வந்தார்கள்.
அவ்வாறு பாதுகாத்தும் ஜுரம் வந்து அவஸ்தையுற்றார். அவரை பாதுகாத்தும்
ஜுரம் அதிகா�த்துவிட்டது. அப்பொழுது அந்நோயாளியின் சுற்றத்தார்
சங்கபதியினிடம் வருத்தத்தோடு முறையிட்டார்கள். அவர் டாக்டரை அழைத்து
விசாரித்தார். அவரும் சற்று மயக்கமாகக் கூறினார். அந்த சமயத்தில்
அவருடைய கண்களில் நீர் ததும்பி முகம் துக்கக்குறியடைந்து டாக்டரையும
அந்த சுற்றத்தாரையும் பார்த்து வருந்தி எழுந்து வைத்திய சாலை சென்று
அந்நோயாளியைப் பார்த்துவிட்டு உடனே ஒரு காரில் பாலிடானா ஆஸ்பத்திரிக்கு
அனுப்பிவிட்டார். அங்கு வந்தபின் சற்று குணமடைந்ததாகவும்
கேள்விப்பட்டோம். இவ்வாறு சங்கத்தைச் சேர்ந்தவர்களுக்குற்ற
துன்பத்தைத் தனக்குற்றதாக யெண்ணி பாதுகாத்துவந்தார். கூலியாயினும்
சா� கோடீஸ்வரராயினும் சா� இருவரையும் ஒரு தன்மையாகவே சங்கத்தில்
பாவித்து வந்தார். அவர் மனைவியார் மதி செளபாக்கிய லக்ஷ்மிபாய், அவர்
சிறியதாயார் ஸ்ரீமதி மேனக்பாய் ஆகியவர்கள் சங்கபதியைப் போன்றே
இரக்கமும் தயாளமும் மகாதெய்வபக்தியும் குருபக்தியும் நிறைந்து
வைதீகர்களாக விளங்கினார்கள்.
சென்னை ஸ்பெஷல்கள்
இம்மாபெரும் யாத்திரையைத் தா�சிக்க சென்னையிலுள்ள வடநாட்டு மார்வார்,
குஜராத் ஜைனர்களாகிய பொ�ய பொ�ய ஷேட்மார்கள் இரண்டு ஸ்பெஷல்கள் ஏற்பாடு
செய்தார்கள். இந்த இரு ஸ்பெஷல்களும் சென்னை ராம் மோஹன் கம்பெனியாரின் மூலம் நமது சபை (சென்னை தென்னிந்திய ஜீவரக்ஷ� பிரசாத சபை)யின்,
போஷகர்களாகிய ஷேட் சுக்லால் சம்டடியா, ஷேட் பாதர்மல் சம்டடியா, ஷேட்
கான்மல் சம்டடியா, ஷேட் பூர்மல்ஜி, ஷேட் உமேஜ்மல் தீரேஜ்மல், ஷா.
மூக்சந்த் ஹன்ஸ்ராஜ், ஷேட் பபூத்மல்,
ரிகப்தாஸ், ஷேட் ரத்தனசந்த்
ஸர்தார்மல், ஷேட் ஜேட்மல் க்யான்மல்ஜி, ஷேட் பிர்த்திசந்த்மர்லேசா,
ஷேட் சம்பலால் முதலிய பல பொ�யார்கள் நடத்தினார்கள். இந்த இரு
ஸ்பெஷல்களிலும் செல்கின்ற ஒவ்வொருவரும் கட்டவேண்டிய மொத்தம்
ரூ.62-8-0 ஆகும். அதனை சாப்பாட்டோடு ரூ.30 ஆக இப்பொ�யார்கள்
குறைத்துப் பலரையும் அழைத்துக்கொண்டு சென்றார்கள். இந்த இரு
ஸ்பெஷல்களிலும் 650 ஜைனர்கள் பிரயாணம் செய்தார்கள். இந்த ஸ்பெஷலில்
நமது சபையின் பிரசாரகர்களும் ஹைதராபாத் சபைப் பிரசாரகர்களும் பஜனை
கோஷ்டிகளுடன் பல ஜீவகாருண்ய விளம்பரங்களோடு அனுப்பப்பட்டனர். சென்னை
ஜீவரட்சா சபையின் பிரசாரகனாகிய எனது தலைமையில் ஆர்மோனியம் வாசிக்கும்
ராதாகிருஷ்ணராவும், தப்ளா வாசிக்கும் சுந்தரராஜும், ஹைதராபாத் சபையில்
திரு. மாதவராவ் குருபிரசாத் இருவர்களின் தலைமையில் ஆர்மோன்யம்
துல்ஜாராம், தப்ளா ராஜாராம், பிடில் ஈஸ்வரய்யா, சஜ்ஜை ஜீயர்
முதலியவர்களும் சென்றோம்.
சென்னை மாகாணத்தைச் சேர்ந்த தமிழ் ஜைனர்கள் மூவரே இந்த ஸ்பெஷலில்
சென்று, அந்தக் காட்சியைத் தா�சித்தவர்கள். சென்னை வியாபாரம் ஸ்ரீமான்
தரணி நயினார் அவர்களும், ஆரணி ஹைஸ்கூல் ட்ரில் மாஸ்டர் ஸ்ரீமான்
இந்திரகுமார நயினார் அவர்களும், அடியேனுமாகும். இந்த இரு ஸ்பெஷல்களும்
1-2-1935 சென்னைவிட்டுப் புறப்பட்டன. 2-2-35 காலை நைஜாம்
சமஸ்தானத்திலுள்ள அலீர் என்ற ஸ்டேஷனில் இறங்கி ஜைனர்களின் முக்கிய
ஸ்தலமாகிய குல்பாக் என்ற �க்ஷத்திரத்தையும், 4-2-35-ல் பேரார்
மாகாணத்தைச் சேர்ந்த பாண்டக் என்ற ஸ்டேஷனிலிறங்கி அங்குள்ள ஜைன �க்ஷத்திரத்தையும்,
தா�சித்துக்கொண்டு 5-2-35-ல் அகோலாவில் இறங்கி 45 மைல் தூரத்திலுள்ள
சிர்பூர் என்ற ஜைன �க்ஷத்திரத்திற்கு மோட்டார்களில் சென்றோம்.
அவ்வூரில் சுமார் 40 அல்லது 50 திகம்பர ஜைனர்களின் வீடுகள்
இருக்கின்றன. ஸ்வேதாம்பா� வீடு ஒன்றுதான் இருக்கிறது. அத்திருஆலயம்
பூமிக்குள் சுமார் 30 அடி ஆழத்தில் 100 அடி அகலமும் 50 அடி நீளமுமாகக்
கட்டப்பட்டிருக்கிறது. பூமியின்மேல் மதில்களும், மண்டபங்களும்,
கோபுரங்களும் விளங்குகின்றன. அதன் கோபுரவாயிலை 3 அடி உயரமும் 2 1/2
அடி அகலமுமாக அமைத்திருக்கின்றார்கள். கோயிலுக்குள் செல்ல
வேண்டுமென்றால் ஒவ்வொருவராக உட்கார்ந்தவண்ணம் உள்ளே நுழையவேண்டும்.
உள்ளே சென்றதும் பூமியின் கீழுள்ள ஆலயத்திற்குச் செல்ல படிக்கட்டுகள்
இருக்கின்றன. மேல் மண்டபத்தில் ஆலய சம்பந்தமான கணக்கு வழக்குகளை
கவனிக்க ஸ்வேதாம்பா�களுக்கும் திகம்பா�களுக்கும் தனித்தனி ஆபீஸ்கள்
இருக்கின்றன. அக்கோயிலை இரு வகுப்பினரும் தங்கள் தங்கள்
வசமாக்கிக்கொள்ள சுமார் 15 வருஷங்களுக்கு முன் ஒரு பெருவழக்கு
நடத்தினார்கள். கடைசியாக ப்��வி கெளன்ஸில் (Privy Council) வரை
சென்றது. அங்குள்ள ஜட்ஜுகள் இரண்டுவருஷம் இரு மதங்களின்
தத்துவங்களையும் கொள்கைகளையும் ஆராய்ந்தறிந்து ஸ்வேதாம்பா�, திகம்பா�யென்ற
பிரிவானது பெயரளவில் வேறாகத் தோன்றுகின்றதேயன்றி கடவுள், தருமம்,
நடைஉடை பாவனைகள் ஆகியவைகளில் யாதொரு வித்தியாசமும் காண
முடியவில்லையாயினும் கடவுளை வழிபடும் போது மாத்திரம் ஸ்வேதாம்பா�கள்
அக்கடவுளை ஆடை ஆபரணங்களால் அலங்கா�த்து இராஜவைபவத்தோடும் திகம்பா�கள்
ஆடை ஆபரணங்கள் முற்றுந் துறந்த கடைசி நிலையாகிய நிர்வாணப் பதவியிலும்
வழிபடுகின்றார்கள். ஆகையால் ஸ்வேதாம்பா�கள் காலை 6-மணி முதல் 8-மணி
வரை கடவுளை இராஜவைபத்தோடு வழிபட வேண்டுமென்றும், திகம்பா�கள் 8-மணி
முதல் 10-மணி வரை அக்கடவுளை துறவற நிலையில் வழிபட வேண்டுமென்றும்
மாலையிலும் 4-மணி முதல் 7-மணி வரை ஸ்வேதாம்பா�களும் 7-மணி முதல்
10-மணி வரை திகம்பா�களும் வணங்கவேண்டுமென்றும் மிக்க நியாயமாகத்
தீர்ப்பு கூறினார்கள். அதனாலேயே இங்கு இரு வகுப்பினருக்கும் வெவ்வேறு
ஆபீஸ்கள் இருக்கின்றன. தருமசாலைகளும் தனித்தனியாக இருக்கின்றன.