 |
இக்கோயிலின் சிறந்த வேலைத் திறமையை நேரே கண்டானந்திக்க வேண்டும்.
இக்கோயிலைக் கட்டி முடிக்க 2, அல்லது 3 கோடி ரூபாய் செலவாயிற்றாம்.
விக்கிரமசகாப்தம் 1011ல் ஹேம் சந்திராசார்யாரால் பிரதிஷ்டாமகோற்சவம்
நடத்தப்பட்டது. அங்கு
சூரியகுண்ட் என்ற ஓர் குளம் இருக்கிறது. அதில்
குளிப்பவர்களுக்கு நல்ல சுக சா�ரத்தையளிக்குமென்று சொல்லுகின்றார்கள்.
பூமியிலிருந்து அம்மலையிலுள்ள ஆலயங்களிருக்குமிடம் சுமார் 4, 5
மைல்கள் இருக்கும். பண்டைய காலத்தில் கட்டப்பட்ட படிகட்டுகள்
ஒழுங்காக அமைக்கப்பட்டிருக்கின்றன. வழிகளில் ஆங்காங்கு சிறு
மண்டபங்களைக் கட்டி தண்ணீர்ப் பந்தல் வைத்துள்ளார்கள்.
யாத்திரைகாரர்கள் மலையேறி செல்லும்போது ஆங்காங்கு சிறிது நேரம்
இளைப்பாறி ஜலமருந்திச் செல்ல அவைகள் மிக்க செளகர்யமாயிருக்கின்றன.
மலையின் போ�ல் ஏறிச் செல்ல முடியாதவர்கள் டோலியில் செல்லவும் ஏற்பாடு
செய்திருக்கின்றார்கள்.
இத்தகைய திவ்ய ஜைன ஸ்தலத்தினைத் தா�சிக்க குஜரத் அரசனும் ஜைன
மதத்தினனுமாகிய குமார பால சாளுக்யன் என்ற பேரரசன் கி.பி. 1159ல்
தன்னுடைய குடும்பத்தோடு, மந்திரிகளும், வியாபாரிகளும், முனிகணங்களும்,
ஆயிரக்கணக்கான ஸ்ராவக ஸ்ராவகிகளோடும், யானைப் படைகள், குதிரைப்படைகள்,
காலாட் படைகள், ஒட்டகங்கள் முதலியவைகள் சூழ யாத்திரை சென்றார். அந்த
யாத்திரையானது கிராமங் கிராமமாகவும், நகரம் நகரமாகவும் நடந்து
செல்லப்பட்டது. அநேக லக்ஷ ரூபாய்கள் செலவாயிற்றென்றும் அச்செலவு
முழுமையும் குமார பாலன் தன் சொந்த சொத்திலிருந்து செலவழிக்கப்பட்ட
தென்றும் இந்து தேச சா�த்திரம் விளக்குகின்றது. இந்த யாத்திரையினைப்
போன்றே 1935லும் நடந்ததென்றால் எவர் தான் ஆச்சா�யப்படாமலிருப்பார்கள்.
இங்கிலாந்தில் துணிகள் உற்பத்தியாகும் இடத்திற்கு மான்செஸ்டர்
(Manchester) என்று பெயர். அவ்வாறே இந்தியாவில் துணி உற்பத்தியாகும்
இடமாகிய ஆமதாபாத் நகரை இந்தியாவின் மான்செஸ்டர் எனப் புகழ்வதுண்டு.
இங்கு 110 துணி நெய்யும் ஆலைகள் இருக்கின்றன. இவைகளில் இரண்டு
ஆலைகளுக்குச் சொந்தக்காரரும், கோடீஸ்வரரும், ஸ்வேதாம்பர ஜைனருமாகிய
ஷேட்மாணிக்கலால் மன் சுக்பாய் அவர்கள் சுமார் 12 லக்ஷ ரூபாய்
செலவழித்து 10 ஆயிரம் ஜனங்களோடும் நடந்து யாத்திரை சென்றார்.
அந்த திவ்ய யாத்திரையில் இரட்டை மாட்டு வண்டிகள் 1150-ம், மோட்டர்
லாரிகள் 40-ம் மோட்டார்கள் 20-ம், சிறிய கூடாரங்கள் 800-ம், பொ�ய
கூடாரங்கள் 25-ம், யானை ஒன்றும், ஆயுதந்தாங்கிய போலீஸ் படைகள்
200-ம், குதிரைப் படைகள் 50-ம், அவருடைய மெய்க்காப்பாளர் 12 பேரும்
ஆகச் சேர்ந்து அச்சங்கம் ஒரு பொ�ய நகரம் போல காணப்பட்டது.
சங்கபதி ஷேட் மாணிக்கலால் மன்சுக்பாய், தன் மனைவி ஸ்ரீமதி செளபாக்ய
லக்ஷ்மிபாய், 6-வயது சிறுவனான தன் செல்வப்புதல்வன் திரு. ராஜேந்திர
குமாரர், சுமார் 1 வருடத்து பெண் குழந்தையாகிய மகள், தன் சிறிய தாயார்
ஸ்ரீமதி மேனக்பாய் முதலிய பல சுற்றத்தாரோடும், 650 ஜைன சாதுக்களும்
150 ஜைன சாதுவினிகளும் பல சாஸ்திரவாத நிபுணர்களும், 200
வாலண்டியர்களும் சூரத் ஜைன வாலிபர் பாண்டு (�and)ம், மற்றும் இருவேறு
பாண்டு செட்டுகளுமாக பத்தாயிரம் ஜனங்களும் புடைசூழ யாத்திரையை
நடத்தினார்.
சாதுக்களில் ஸ்ரீ விஜய நேமி சூரிஜீ, ஸ்ரீ சாகரானந்த சூரிஜீ, ஸ்ரீ
விஜய மேக் சூரிஜீ, ஸ்ரீ விஜய மோகன் சூரிஜீ, ஸ்ரீ ஜெய சூரிஜீ முதலிய
உயர்ந்த தத்துவ ஞானிகளே 800 சாதுக்களின் தலைவர்களாவார்கள். இந்த ஐந்து
சாதுக்களும் ஜைன மத சித்தாந்தங்களைப் பூரணமாயறிந்த ஞானிகளாயினும் பிற
மதங்களின் தத்துவங்களையும் ஆராய்ந்தறிந்த மகா முனிகள் அதனாலேயே
இவ்வைவரும் ஜைனர்களால் தெய்வமாகப் போற்றப்பட்டு வருகிறார்கள்.
இவர்களில் ஸ்ரீவிஜய நேமி சூரிஜீ சங்கபதியின் குலகுருவாவர். இப்பொ�யாரின் திருவடிகளை இருவேளையும் சங்க பதியும் அவர் மனைவியும் தா�சிப்பதோடு
இவருடைய உத்தரவும் ஆலோசனையுமின்றி சங்க சம்பந்தமான எந்த
காரியத்தையும்
செய்வதில்லை. இந்தத் திவ்ய யாத்திரையும் அம்முதிர்ந்த ஞானியின்
கட்டளையின் போ�ல் நடந்ததாகவும் சொல்லப்படுகிறது.
(Enquiry office) தகவல் விசாரிக்குமிடம்
தொண்டர்படைத் (Volunteer) தலைவர் ஷா லக்ஷ்மீ சந்த்கீம்சந்த்
அவர்களாவர். சங்கத்தின் எல்லா விதமான தகவல்களையும் இவரும் இவருடைய
உதவித் தலைவருமே கொடுப்பார்கள். இந்த வாலண்டியர்கள் எல்லோரும்
அப்பெருஞ் சங்கத்தைப் பாதுகாத்து வந்தார்கள். அச்
சங்கத்திலுள்ளவர்களுக்கு ஏதாகிலும் வேண்டுமாயினும் குறையேற்பட்டாலும்
இந்தத் தொண்டர்களிடத்தில் கூறுவார்கள். தொண்டர்கள் மிகப் பணிவாக
அக்குறைகளையும் வேண்டுகோளையும் நிறைவேற்றுவார்கள்.
வெள்ளி ஆலயம்
சங்கபதியாகிய ஷேட் மாணிக்கலால் மன்சுக்பாயின் சொந்த வெள்ளி ஆலயம்
ஒன்று அக்கூடாரங்களின் மத்தியில் எப்பொழுதும்
ஸ்தாபிக்கப்பட்டிருக்கும். அவ்வாலயம் 12 அடி நீளமும் 8 அடி அகலமும்
25 அடி உயரமுமுள்ளதாயிருந்தது. அதனுள்ளிருந்த மகாவீரா�ன் திருஉருவம்
பொன்னாலாக்கியது. அது தவிர இரு பொ�ய வெள்ளைக்கல் சிலா விக்கிரங்களு
மிருந்தன. அந்த ஆலயத்தின் மதில்கள் வெகு அழகாக பட்டுத் துணியால்
தைக்கப்பட்டு நான்கு பக்கங்களிலும் அமைக்கப்பட்டிருந்தன. சதுரக்
கற்கள் போல ஜெர்மன் ஸில்வரால் செய்யப்பட்ட பல சதுரங்கள் அம்மதிலினுட்
புறத்தில் கோயிலைச் சுற்றி பரப்பப்பட்டிருந்தன. அப்பொழுது
அப்பூமியானது சலவைக் கற்கள் (Marble Stones) புதைத்தது போன்று
பொலிவுற்றிருந்தது. அந்த வெள்ளி ஆலயம் (Folding) மடிக்கக் கூடியது.
மோட்டார் கார்கள்
மோட்டார் கார்களெல்லாம் சங்கத்தாரில் நடக்க முடியாமல் அயர்ந்து
விடுகின்றவர்களுக்கும் குழந்தைகளுக்கும் உபயோகமானதோடு வாலண்டியர்களும்
ஆபீஸர்களும் ஒரு இடத்தை விட்டு மற்றொரு இடம் சென்று கூடாரங்கள்
அமைக்க முன்னதாகச் செல்லவும், கிராமங்களில் செல்லும் போது அவசரமாக
ஓரிடம் போகவேண்டியும், சாமான்கள் வாங்கவேண்டியுமிருந்தால்
அவைகளுக்கும் உபயோகப்படுத்தப்பட்டன. சங்கபதிக்கும் அவர் தம்
மனைவிக்குமுரிய இரண்டு அழகிய உயர்ந்த கார்கள் வேறே இருந்தன. மோட்டார்
லாரிகள் கூடாரங்கள் சாமான்கள் முதலியவைகளைக் கொண்டு போவதற்கு
உபயோகப்படுத்தப்பட்டன.
லாரிகளில் இரண்டு பொ�யவை. அவைகளிரண்டு தண்ணீர்
நிரப்பிக்கொண்டுவந்து சப்ளை செய்பவை. அவைகளில் தண்ணீர் ஏற்கும்
யந்திரங்கள் சேர்க்கப்பட்டிருந்தன. எவ்வளவு தூரத்திலிருந்தாலும்
கிணறுகளிலோ குளங்களிலோ, ஆறுகளிலோ இருந்து தண்ணீர் கொண்டுவர வேண்டியது.
அவைகளில் சிறு சிறு குழாய்கள் இருந்தன.
லாரி வந்து நின்றதும் ஜனங்கள்
அச்சிறு குழாய்களில் துணியைக் கட்டிவிட்டு ஜைனமதக் கொள்கைப்படி
வடிகட்டிய தண்ணீரையே அருந்துவதற்கு உபயோகப்படுத்திக் கொள்வார்கள்.
மற்றொரு லாரி இருந்தது. அந்த
லாரி இரும்பினால் (�ody) கட்டியது.
அதனுள் பல நவரத்தினங்களமைந்த கி��டமும் ஆரங்களும் ஷேட்ஜீ அவர்களின்
பொக்கிஷமும் மற்றும் பல உயர்ந்த நகைகளும் பொருள்களும் நிறைந்திருந்தன.
அதைச் சுற்றி நான்கு ஆயுதந்தாங்கிய வீரர்கள் சதா காவலிருந்தார்கள்.
அது சங்கபதியின் பாங்கியின் (�ank) கூடாரத்திற்கு எதிரில் நிறுத்தப்பட்டிருக்கும். மற்ற
லாரிகளும் கார்களும் சமயோசிதம்போல்
உபயோகப்படுத்தப்பட்டன. 1150 கட்டைவண்டிகளில் பத்தாயிரம் ஜனங்களுடைய
சாமான்களும் 2300 மாடுகளுக்கும் பல குதிரை யானை முதலியவைகளுக்கும்
வைக்கோல், புல், தழை, தவிடு முதலிய பல தீனிச் சாமான்களும் ஏற்றப்படும்.
சிலர் அவ்வண்டிகளிலும் ஏறிக்கொண்டு செல்வார்கள்.
வைத்திய சாலைகள்
அச்சங்கத்தில் இரு வைத்தியசாலைகள் இருந்தன. ஒன்று சுதேச வைத்தியசாலை;
மற்றொன்று ஆங்கில வைத்திய சாலை. அவ்விரண்டு வைத்திய சாலைகளிலும்
கைதேர்ந்த டாக்டர்கள் இருந்தனர். தினம் இரு வைத்திய சாலைகளிலும்
சுமார் 1000, 2000 பிணியாளர்கள் மருந்து சாப்பிட்டு வந்தார்கள்.
ஆஸ்பத்திரி போலவே காணப்பட்டது.
பஞ்சாயத்து கோர்ட்டு
அங்கு ஒரு பஞ்சாயத்துக் கோர்ட்டும் இருந்தது. அதில் நியாயத்தில்
தேர்ந்த ஐவர் பஞ்சாயத்தாராக அமர்ந்திருந்தார்கள்.
கூலியாட்களுக்குள்ளும், வண்டிக்காரர்களுக்குள்ளும், மற்றும்
சங்கத்தைச் சேர்ந்த கூட்டத்திற்குள்ளும் ஏதாகிலும் சச்சரவுகளோ,
வழக்குகளோ ஏற்பட்டால் பக்ஷபாதமின்றி அக்கோர்ட்டில்
தீர்ப்பளித்துவந்தார்கள். அந்தக் கோர்ட்டின் வாயிற்படியில் ஒரு
சோல்ஜர் காவலிருப்பான். அடிக்கடி வழக்குகள் விசாரிக்கப்பட்டதையும்
நான் நோ�ல் கண்டேன்.
பாங்க்
இங்கு நிதி நிலையம் (�ank) ஒன்று சங்கத்தாருக்கென தனியாக இருந்தது.
சங்கபதி தவிர மற்ற எல்லாருடைய பணமும் அந்த பாங்கிலேயே
போடப்பட்டிருந்தது. அந்த பாங்கியில் ரசீது புத்தகங்களும் அச்சிட்டு
பணங் கட்டியவர்களுக்கு அளிக்கப்பட்டிருந்தன. சங்கத்திலுள்ளவர்கள்
தங்களுக்கு வேண்டிய ரூபாய்களை அவ்வப்போது பாங்கியில்
வாங்கிக்கொள்வார்கள். நகரங்களிலுள்ள பாங்குகள் போலவே அந்த பாங்கும்
அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஆயுதந்தாங்கிய நான்கு சோல்ஜர்கள்
காவல் புரிந்து வந்தார்கள்.