 |
தபாலாபீஸ்
தபாலாபீசும் ஒன்று இருந்தது. இங்கு தபால், தந்தி, மணியார்டர் முதலிய
எல்லா சமாச்சாரங்களையும் நடத்தத் தகுந்த ஏற்பாடுகள் செய்திருந்தனர்.
அதில் தபாலாபீஸ் போலவே தனித்தனி குமாஸ்தாக்கள் இருந்தார்கள்.
அச்சங்கத்துத் தபால் சமாச்சாரங்கள் பூராவும் உடனுக்குடனே அனுப்பவும்
கொண்டு வரவும் அருகிலுள்ள நகரங்களில் செல்வதற்குத் தனியாகத் தபால்
மோட்டாரொன்றும், ஒரு தபால் ஆபீஸரும், ஒரு தபால் சேவகனும் இருந்தார்கள்.
தபால் தந்தி சேவகர்கள் காவியுடை தா�த்திருந்தார்கள். தபால் மோட்டார்
சிகப்பு நிறத்தாலாக்கியது. டிரைவரும் காவியுடை தா�த்திருந்தார்.
டோலிகள்
சாதுக்களில் சிலரால் நடக்க முடியாவிட்டாலும் பிணியுற்றிருந்தாலும்
அவர்களை ஓரிடத்திலிருந்து மற்றொரிடம் கொண்டுபோக டோலிகள் ஏற்பாடு
செய்யப்பட்டிருந்தன. ஒவ்வொரு டோலியை தூக்கிச் செல்ல இருவர் அல்லது
நால்வர் இருந்தார்கள்.
போஜன வசதிகள்
இந்த சங்கத்தைச் சேர்ந்த பத்தாயிரம் ஜனங்களுக்கும் தினம் இரண்டு வேளை
விருந்து செய்த காட்சிதான் அந்த சங்கத்தில் நாம் அதிசயிக்க வேண்டிய
முக்கிய காட்சியாகும். அந்த சங்கத்தில் 400 சமையற்காரர்களிருந்தார்கள்.
ஒவ்வொரு 25 பேருக்கும் ஒவ்வொரு தலைவனாகவும், ஒவ்வொரு நூறுபேருக்கும்
ஒரு தனி தலைவனாகவும் நான்கு தலைவர்களின் கீழ் போஜனங்கள் செய்யப்பட்டன.
அது பல பிரிவுகளாகப்
பிரிக்கப்பட்டிருந்தது. அன்னம், ரொட்டி, பூரி,
டீ, தித்திப்புப் பண்டங்கள், பலகார பதார்த்த வகைகள் முதலியவைகளுக்குத்
தனித்தனி கூட்டமாகும். ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு இருபத்தைந்து பேர்
கொண்டவர்களே ஜவாப்தாரியாவார்கள். இவ்வாறு அந்த பத்தாயிரம்
ஜனங்களுக்கும் யாதொரு குறைவுமின்றி இரண்டு வேளை உயர்ந்த போஜன
மளித்துவந்தார்கள். இச்சங்கத்தார் தவிர எந்த ஊரில் (Camp) தங்குகின்றார்களோ அந்த
ஊரிலிருந்து வரும் பலருக்கும் போஜனமளிப்பது
தான் போற்றத்தக்கது. கிராமமாயிருந்தால் அக்கிராம வாசிகள் பூராவையும்
சங்கத்தாரே அழைத்து நல்விருந்து செய்வார்கள். ஜாதிபேதமின்றி சகல
வகுப்பாரும் சமபந்தியாகவே உட்கார்ந்து போஜன மருந்துவார்கள்.
இவ்வாறு சிறப்பாக நடந்துவரும் இச்சங்கத்தார்கள் ஆமதாபாத்திலிருந்து
புறப்பட்டு 45 இடங்களில் தங்கி சுமார் 500 மைல் தூரம் பிரயாணம் செய்து
பாலிடானாவிற்கு 20-2-35ல் வந்து சேர்ந்தார்கள். ஒரு
ஊரிலிருந்து
மற்றோர் ஊருக்குச் செல்ல அவர்கள் 10 அல்லது 12 மைல் தூரத்திலுள்ள
கிராமங்களையோ நகரங்களையோ ஏற்பாடு செய்திருந்தார்கள். இவ்வூர்களெல்லாம்
முன்னேற்பாடாக செய்திருந்தமையால் அந்தந்த நகர, கிராமத்தைச் சேர்ந்த
சமஸ்தானாதிபதிகள் (State) சங்கத்தார் தங்கியிருக்கத்தக்க வசதிகளை
ஏற்பாடு செய்திருந்தார்கள். கத்தியவார் மாகாண முழுமையும் அநேக
சமஸ்தானங்களால் ஆளப்பட்டு வருகின்றமையால் சமஸ்தானாதிபதிகள்
இச்சங்கத்தை மிக்க மா�யாதையோடும் கெளரவத்தோடும் வரவேற்று உபசாரம்
செய்தார்கள். ஜுனாகாட் சமஸ்தானம் ஒரு மகம்மதியர் ஆளுகைக்குட்பட்டது.
அங்கும் இச்சங்கத்தாரை வெகுமா�யாதையுடனும் கெளரவத்துடனும் வரவேற்று
உபசாரம் செய்தது குறிப்பிடத்தக்கது. ஒரு சமஸ்தானத்தை விட்டு மற்றொரு
சமஸ்தானத்தின் எல்லைக்குப் போய்ச் சேருகிற வரையில் அந்தந்த
சமஸ்தானாதிபதிகள் இச்சங்கத்தின் பாதுகாப்பிற்காக அநேக ஆயுதந்தாங்கிய
குதிரைப் படைகளை அனுப்பு உதவி
புரிந்தார்கள். இவர்கள்
செல்லுமிடங்களெல்லாம் இவ்விதச் சிறப்போடேயே சென்றார்கள்.
சங்கத்தின் பிரயாண முறைகள்
இந்தப் புனிதமான யாத்திரை சங்கமானது ஓர் ஊரை விட்டு மற்றொரு ஊருக்குச்
செல்லும் காட்சியை வருணிக்க திருத்தக்கதேவரும், கம்பரும் போன்ற
கவிவாணர்களாலன்றி மற்றையோரால் இயலாது. முதலில் பத்து குதிரைப்
படைகளும் ஆயுதந்தாங்கிய போலீஸ் படைகளும் செல்லும். அதற்குப்பின் சூரத்
ஜைன வாலிபர் பாண்டு வாத்தியமும் (Band) மற்ற வாத்தியங்களும் முழங்க
சாதுக்களெல்லோரும் முன்பாகவும், அதன்பின் சங்கத் தலைவரும் மற்ற
ஆண்களும், அதற்குப்பின் தொண்டர்களும் பல ஆயுதந்தாங்கிய வீரர்களும்
குதிரைப்படை சூழ நடந்து செல்வார்கள். இந்தக் காட்சியைக் காணும்போது
ஒரு ஜன சமுத்திரம் போவது போலவும் அதில் பலவித நிறங்களமைந்த அலைகள்
ஓடுவது போலவும் தோன்றும். பிறகு மாட்டு வண்டிகள் புறப்பட்டுவரும்
காட்சி கண்கொள்ளாதது. சுமார் 1 1/2 மைல் நீளம் அவ்வண்டிகள்
தொடர்ந்துவரும். இவைகளாலுண்டாகும் துகள் வெண்மேகம் சூழ்ந்ததுபோல்
பறந்துகொண்டிருக்கும். அவ்வண்டிகளுக்கும் தகுந்த பாதுகாப்புகள்
அளிக்கப்பட்டிருந்தன.
கூடாரங்கள் :
இவ்வாறு இந்த சங்கக் கூட்டம் நடந்து சங்க முகா(Camp)மில்
வருவதற்குமுன் கூடாரங்களெல்லாம் அமைக்கப்பட்டுத் தயாராக விருக்கும்.
அந்த முகாமின் நுழைவாயிலானது ஒருபொ�ய அழகு வாய்ந்த வேலைப்பாடுள்ள
வளைவுகளால் (Gate Orch) அமைக்கப்பட்டிருந்தது. அங்கிந்து சுமார் ஒரு
ஏகர் விஸ்தீரணம் மத்தியில் விட்டுவிட்டு இருபக்கங்களிலும் கூடாரங்கள்
அமைக்கின்றார்கள். இந்த மைதானத்தில்தான் வெள்ளிக்கோயில்
நிர்மாணிக்கின்றார்கள். அங்கோயில் எதிரில் துவஜஸ்தம்பமும்
சங்கக்கொடியும் நாட்டுகின்றார்கள். இந்தக் கோயிலின் இருபக்கங்களிலும்
ஒரு பக்கத்தில் சாதுக்களுக்கும் ஒரு பக்கத்தில் தொண்டர்படை,
பாங்க்(�ank), கோர்ட், தபாலாபீஸ், வைத்திய சாலைகள், சங்க பதியின்
படுக்கை கூடாரம், பிரைவேட் செக்ரிடா� ஆபீஸ் முதலியவைகளின்
கூடாரங்களெல்லாம் அமைக்கப்படும். மற்றவைகளெல்லாம் இக்கூடாரங்களைச்
சுற்றி வீதி வீதியாக அமைக்கப்பட்டிருக்கும். இக்கூடாரங்களில் முதல்
நாள் எவ்வாறு எவரெவர்க்கு இடமளித்தார்களோ அவ்வாறே கடைசிவரைத் தங்க
வேண்டும். அந்த கூடாரங்களும் நெம்பர்கள்
வாரியாக
அமைக்கப்பட்டிருக்கும். சங்கசம்பந்தமான விஷயங்களை அறிவிக்கும்
(Enquiry) ஆபீஸ் அந்த வளைவுக்கு அருகாமையில் அமைக்கப்பட்டிருந்தது.
சமையல் செய்யும் கூடாரம் தனியாகவும், சாப்பிடுவதற்குரிய பொ�ய கூடாரம்
அதன் பக்கத்திலும் அமைக்கப்பட்டிருந்தன. இக்கூடாரங்களில் குடும்பங்
குடும்பமாகத் தங்கியிருப்பார்கள். இவ்வாறு குடியிருக்கும்
குடும்பங்களில் சிலருக்கு குழைந்தைகளுமிருந்தன. மாலை 4 மணிக்கு அதனதன்
தாய்மார்கள் கூடாரங்களின் வெளிக்கயிறுகளில் ஏணைகளைக் கட்டி
தொங்கவிட்டுப் பாராட்டிச் சீராட்டுங் காட்சி மனதை மகிழ்ச்சியெனும்
வெள்ளத்தில் தத்தளிக்கவிட்டது. வண்டிகளெல்லாம் கூடாரங்களின்
பின்புறத்தில் வா�சை வா�சையாக விட்டிருக்கும். மோட்டார் கார்களெல்லாம்
சங்க வாயிலில் நிறுத்தப்பட்டிருக்கும்.
விளக்குகள்
இரவில் விளக்குகள் போடும் அழகே அழகு. எங்கும் சிறிதும் இருளின்றி பகல்
போலவே காணும்படி நூற்றுக்கணக்கான விளக்குகள் போடுகின்றார்கள்.
பெட்ரோமாக்ஸ் (Petromax) 400 காண்டில் (Candle) பவருள்ள விளக்குகள்
சங்கத்தின் எல்லா பாகங்களிலும் கம்பங்கள் நட்டு வா�சை வா�சையாக
போடுகின்றார்கள். விளக்கு சம்பந்தமான
காரியங்களைக் கவனிக்க ஒரு
ஆபீஸரும், 12 கூலிகளும் ஏற்படுத்தியிருந்தார்கள். மின்சார விளக்குகள்
அமைந்துள்ள நகரங்களில் அதனோடு தொடர்பு வைத்து ஆயிரக்கணக்கான
விளக்குகள் பல வர்ணங்களில் சங்க முகாமில் போடுகின்றார்கள்.
சங்கத்தாரின் தினசா� நடைமுறைகள்
காலை 5-மணிக்கு ஒரு சங்கு ஊதுகின்றார்கள். உடனே பாண்டு
வாத்தியக்காரர்கள் ஆங்கு நின்று பாண்டு வாசிக்கிறார்கள். இந்த
சப்தத்தைக் கேட்டதும் எல்லோரும் "ஆதிநாதபகவான்கி ஜே" "�க்ஷமம்
சர்வஜீவானாம்" என்று ஜே கோஷ்டம் செய்து எழுந்திருக்கிறார்கள். உடனே
அவரவர்கள் காலைக்கடன் முடித்துக்கொண்டு ஸ்நானமும் முன்னதாகவே ஆலய
வழிபாடு செய்துவிடுகின்றார்கள். சுமார் 6 1/2 மணிக்கு பாண்டு
வாத்தியங்கள் துவஜஸ்தம்பத்தின் கீழ் முழங்குகின்றன. சங்கபதி, அவர்
மனைவி, சிறிய தாயார், குழந்தைகள் ஆகியவர்கள் தங்கள் கூடாரத்தினின்று
வெளியே வந்ததும் மற்ற எல்லா ஜனங்களும அருகனை வழிபடும் பாட்டுகளை
அழகாகப் பாடிக்கொண்டு ஆலயம் செல்லுகின்றார்கள். எல்லோரும் அரிசி, பாதாம், லவுங்கப்பூ, கொப்பரைத் தேங்காய், ஊதுவத்தி, சந்தனம்
முதலியவைகளால் அர்ச்சனை செய்து பூஜிக்கின்றார்கள். ஆலயத்தின் எதிரில்
பொ�ய மண்டபம்போல் ஒரு கூடாரம் அமைக்கப்பெற்றிருக்கின்றது. அதில்
உட்கார்ந்து ஜெபம் செய்துவிட்டு ஒவ்வொருவராக சாதுக்களை நமஸ்கா�த்து
தங்கள் தங்கள் கூடாரங்களுக்குச் சென்றுவிடுகின்றார்கள். இவ்வாறு
ஒருங்கே கடவுளை காலையில் மிக பக்தி விநயத்தோடு வழிபடுகின்றார்கள்.
பிறகு சுமார் 10, 11 மணிக்கெல்லாம் போஜன மருந்த சங்கு ஊதப்படுகின்றது.
உடனே கூட்டங்கூட்டமாகச் சென்று போஜன மருந்துகின்றார்கள். பிறகு
எல்லோரும் சற்று இளைப்பாறின பின் சுமார் 3 மணிக்கு பாண்டு
வாசிக்கப்படுகின்றது. உடனே எல்லா ஜனங்களும் கோயில் எதிரில் வந்து
கூடுகின்றார்கள். அப்பொழுது சாதுக்களில் தலைவர்களாயுள்ளவர்களில் தினம்
ஒவ்வொருவர் ஜைன தர்மத்தைப்பற்றி அரிய உபன்யாசம் செய்கின்றார்கள்.
உபன்யாசம் சுமார் 1 1/2 மணி நேரம் நடக்கின்றது. உடனே மாலையில் 5
மணிக்கு போஜன மருந்தச் சென்றுவிடுகின்றார்கள். ஜைனர்கள்
சூரியன்
அஸ்தமிக்குமுன் சாப்பிட வேண்டுமாகையால் அந்தக் கொள்கைப்படி 5 மணிக்கே
சாப்பிட்டுவிடுகின்றார்கள். இந்தக் கொள்கையை மேல் நாட்டிலும் பல
ஸைன்ஸ் (அறிவியல்) ஆராய்ச்சிக்காரர்கள் ஒப்புக்கொண்டு அனுசா�த்து
வருகின்றார்கள்.
சூரியன் அஸ்தமித்த உடனே கணக்கிலடங்காத
சிறுசிறுபூச்சிகள் உற்பத்தியாகின்றன வென்றும், அவைகள் ஆகாரத்தில்
கலந்துவிடுமாகையால் அவ்வாகாரம் மாமிசத்திற்குச் சமானமாகுமென்றும்
சுகாதாரக்கேடுமாகுமென்றும் ஜைனர்கள்
சூரியன் இருக்கும்பொழுதே
சாப்பிட்டுவிடுவார்கள். தற்கால ஸைன்ஸ் ஆராய்ச்சிக்காரர்களும்
அக்கொள்கையை ஆதா�ப்பதோடு அப்பூச்சிகளுக்கு எபிமிரா வென்றும் பெயர்
கூறுகின்றார்கள். இது சம்பந்தமாக ஹிந்து மதத்திலும் மார்க்கண்டேய
புராணத்தில்
"அஸ்தங்கதே திவானாதே ஆபூருதிரமுச்யதே
அன்னமாம்ஸம் ஸமம்ப்ரோக்தம் மார்கண்டேய
ரிஷிபாஷிதம்"
என்று கூறுப்பட்டிருப்பது பலரும் கவனிக்கத்தக்கது. இவ்வாறு
மதக்கொள்கைப்படி ஆகாரமானதும் மாலை 6 மணிக்கு மறுபடியும் கடவுளை
வணங்குகின்றார்கள். பிறகு ஆங்காங்கு பலவித வாத்தியங்கள்
முழங்குகின்றன. பஜனைகள் நடக்கின்றன. இது தவிர நன்றாகப் பாடத்தொ�ந்தவர்கள்
சங்கீதக் கச்சோ� நடத்துகின்றார்கள். இவர்கள் முகாம் கிராமமாயிருந்தால்
அந்த கிராமத்திலுள்ள ஏழை மக்கள் சங்கபதியின் முன் தங்களூரில் வழக்கமான பல ஆட்டங்களும் பாட்டுகளும்பாடி பா�சுபெற்றுக்கொண்டு
போவார்கள். கேட்டியில் அக்கிராமப் பெண்களில் சிலர் கூட்டமாக வந்து
கும்மிபோன்ற ஓர் விளையாட்டைப் பாட்டுடன் ஆடிப்பலரையும்
மகிழ்வித்தார்கள். அவர்களுக்கு சங்கபதி ரூபா 5-0-0 பா�சு அளித்தார்.
அவர் மனைவியாரும் சிறிய தாயாரும் மூன்று மூன்று ரூபாய்களாக 6
ரூபாய்கள் தேங்காய் பழத்தோடு பா�சளித்தார்கள். இவ்வாறே ஒவ்வோரிடங்களிலும்
தங்கள் தினசா� ஒழுக்கங்களைத் தவறாது நடத்தி வந்தார்கள்.