 |
மனிதகுல மாமேரு பிறந்தார் :
ரஷ்யாவில் பென்ஸா என்ற ஊரில் வாழ்ந்த இல்யா நிகலாயெவிச் உல்யானவ்
என்பவர் மா�மா என்ற மங்கையை மணந்தார். இல்யா கஸான் நகரத்துப் பல்கலைக்
கழகத்தில் படித்துப் பட்டம் பெற்றவர். பென்ஸா என்ற ஊரில் உள்ள
செல்வந்தர்களின் பிள்ளைகளுக்கென அமைந்த உயர்நிலைப் பள்ளியில் பெளதீக
ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். அது சமயந்தான் மா�யாவை மணம்
புரிந்துகொண்டார்.
மா�யா பிரஞ்சு, ஜெர்மன், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் நல்ல அறிவு
படைத்தவன். இசையிலும் பயிற்சி பெற்றவள். இவர்கள் இருவரும் ஆசிரியர்களாகப்
பணிபுரிந்து வந்தார்கள். மனமொத்த இத்தம்பதிகள் பின்னர் 1869-ஆம்
ஆண்டில் ஸிம்பீர்ஸ்க் மாகாணத்திற்குச் சென்று வாழந்தனர். 1870-ஆம்
ஆண்டு ஏப்ரல் மாதம் இருபத்திரண்டாம் தேதியன்று ஒரு ஆண் மகவு பிறந்தது.
அந்தக் குழந்தைக்கு விளதிமீர் இல்யீச் உல்யானவ் எனப் பெயர் சூட்டினர்.
இக்குழந்தைதான் இன்று உலகெலாம் போற்றிப் புகழும் லெனின் என்ற பெயரோடு
விளங்குகிறது.
லெனின் கல்வி கற்க ஆரம்பித்த காலத்திலேயே அறிவொளியாக விளங்கினார்.
உயர்நிலைப் பள்ளிவரை அவர் எல்லா வகுப்புகளிலும் முதல்தரமாக தேர்வு
பெற்று பா�சுகள் பல பெற்றார். இவ்வாறே பல்கலைக் கழகத்திலும்
முதன்மையாக விளங்கி, பட்டதாரியானார். சட்டக் கல்லூரியிலும் சேர்ந்து
படித்துத் தேறினார்.
லெனின் ஒரு நடுத்தரக் குடும்பத்தைச் சார்ந்தவராயினும் ஏழை
எளியவர்களின் குடிசை வாழ்க்கையையும், அவர்களின் அவல நிலைகளையும் கண்டு
இரங்குவார். இவ்வேற்றத் தாழ்வுகளுக்கு உரிய காரணங்கள் யாவை என்பதைக்
கண்டறிய முயன்றார். அக்காலத்தில் முற்போக்கு எழுத்தாளர்கள்
எழுதியுள்ள பல நூல்களைப் படித்தார். அவைகளில் கார்ல்மார்க்ஸ் எழுதிய
மூலதனம் என்ற நூலைப் படிக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அன்று முதலே
மாபெரும் லெனினுக்கு பிற்போக்குக் கொள்கைகளைக் கொண்ட உளுத்துப்போன
சமுதாயத்தை மாற்றி புதுமுறையில் ஒரு முற்போக்குச் சமுதாயத்தை
உருவாக்க வேண்டும் என்ற புரட்சி மனப்பான்மை ஏற்பட்டது. எல்லா
நாடுகளிலும் ஏற்றத்தாழ்வு கொண்ட சமுதயாங்களைப் பற்றிக் குறிப்பிடும்
போதெல்லாம் "இரு சமுதாயம்! இரு சமுதாயம்" எனப் பற்களைக்
கடித்துக்கொண்டு குமுறுவார். கார்ல் மார்க்ஸ் எழுதிய மூலதனம் என்ற
நூலிலும், கம்யூனிஸ்ட் அறிக்கை என்ற நூலிலும் பல குறிப்புகள்
எடுத்துக்கொண்டு அப்பாதையில் கிளர்ச்சி ஆரம்பித்தார்.
திருமணம்:
க்ருப்ஸ்காயா என்னும் பெண்மணி பீட்டர்ஸ்பர்க்கில் மாலைநேரப் பள்ளியில்
ஆசிரியையாக இருந்தார். முற்போக்கு மனப்பான்மை கொண்ட அவர்,
மார்க்ஸீயவட்டம் ஒன்றில் உறுப்பினராக இருந்துவந்தார். லெனின்
பீட்டர்ஸ் பர்க்குக்கு வந்தபோது இவ் வம்மையார் அறிமுகமாகும். அது
சமயம் லெனின் பீட்டாஸ்பர்க்கில் சிறையிலிருந்தார். சிறையிலிருந்தபோதே
க்ருப்ஸ்காயாவைக் காதலித்தார். தன்காதல் எண்ணத்தைக் கண்ணுக்குப்
புலனாகாத மையினால் கடிதம் எழுதினார். அவ்வம்மையாரும் தன் உள்ளத்தின்
எதிரொலியாகக் காட்சியளிக்கும் கடிதத்தை மகிழ்ச்சியோடு ஏற்று
வேடிக்கையாக 'மனைவியாக வேண்டுமா? ஆகிவிட்டால் போகிறது' எனப் பதில்
எழுதினார். நோக்கிய கண் இமையாமல் நோக்கி நோக்கி நுண்ணிய மென்
புலவியிலே நொந்து நொந்து வளர்ந்த காதல் 1898-ம் ஆண்டு மே மாதம் தேதி
திருமணமாக மலர்ந்தது. இத் தம்பதிகளின் உள்ளமும் உள்ளமும் ஒன்றிக்
கலந்ததையும் இருவர் கொள்கையும் ஒன்றாயமைந்ததையும் எண்ணும்போது, நம்
நாட்டுத் தத்துவக் கொள்கைப்படி முன்னைப் பாக்கியம் வந்திருவருக்கும்
பலித்ததெனப் பாராட்டி வாழ்த்த உள்ளம் விழையும்.
அதன் பின்னர், தன் புரட்சி வேலைகளைத் தொடங்கினார். அக்கிளர்ச்சியின்
காரணமாக லெனின் பலமுறை சிறைவாசங்களையும், நாடுகடத்தலையும்
அனுபவித்தார். அவர்
புரிந்த புரட்சிப் போர் வெற்றி கண்டது. 1917-ஆம்
ஆண்டு பிப்ரவா� முதல் அக்டோபர் வரை நடந்த புரட்சியே மாபொரும் அக்டோபர்
புரட்சியின் வெற்றியெனப் புகழ்பெற்றது. பிற்போக்கு சமுதாயம் அழிந்தது.
முற்போக்கு சமுதாயம் தலையெடுத்து. 1917, 18ல் புதிய சோவியத் அரசு
உதயமாயிற்று. இப்பேரரசில் ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசங்கள் இல்லாத
பொதுவுடைமை மலர் பூத்துக் குலுங்கிற்று. எத்தனையோ நூற்றாண்டுகளாக,
பெரும்பாலான மக்களின் வாழ்க்கையை வீழ்த்திய சூதாட்டச் செயல்கள்
வாய்ந்தன. சாம்ராஜ்யக் களவெல்லாம் இந்நாளில் மறைகிறது. காரல் மார்க்ஸ்,
லெனின் புரட்சியின் பயனால் பண்டைய அறநெறி மலர்கிறது. புது வாழ்க்கை
காட்சி தருகிறது. மனிதனுக்கு இன்று மதிப்பு ஏற்படுகிறது. சோவியத்தின்
தியாகம் சோஷலிஸக் குடியரசு வாழ்க என்ற முழக்கம் ஒலித்தது. சகோதர
உணர்வும் சமரச மனப்பான்மையும் மக்களிடையே நடனமாடிற்று. அறிவொளி வீசி
அன்பும் பண்பும் வளர்ந்தன.
சோவியத் மக்கள் பலரும் ஈடு இணையற்ற தங்கள் மாபெருந் தலைவர் லெனின்
வகுத்த கோலப் புதுவாழ்வில் ஆர்வமீக்கூர ஓயாமுயற்சியால் ஒற்றுமை
முனைப்பால் உவந்துழைத்துச் செயலாற்றினர்.
அவர்கள் உணர்வின் நிறைந்த ஊக்கத்தால் சோவியத் நாட்டை மண்ணுலகில் ஒரு
பொன்னுலகமாகப் படைத்துவிட்டனர். கல்வி வளம் செல்வ வளம், கலை வளம்,
விஞ்ஞான வளம், விவசாய வளம், தொழில் வளம் ஆகிய பல்வேறு வளங்களுக்கும்
உறைவிடமாம் உலகமே வியப்புறும் வகையில் இன்று அந்நாடு காட்சியளிக்கிறது.
பசியெனும் பகைவனை வெற்றிகண்ட அம்மக்கள் ஆடல் பாடல்களிலும், விஞ்ஞான
வினோதத்திலும் களித்து இன்பபுரி மக்கள் போன்று வாழ்கின்றனர்.
பெருமை மிக்க இக்காட்சியை ஜவாஹர்லால் நேரு 1933 ஜுலை 9-ல் தன்
புதல்விக்கு எழுதிய கடிதத்தில் "ரஷ்யாவின் முன்னேற்றம் வியத்தகு நிலை
கொண்டுள்ளது. உலகிலேயே சிறந்த முற்போக்கும், பெருமையும் கொண்டனவாக,
அந்த நாட்டின் சுகாதார சமூகப் பாதுகாப்புத் துறைகள் கொண்டனவாக
விளங்குகின்றன. இன்னல்களும் வறுமைக் கொடுமையும், வேலையில்லாத் துயரம்,
வெம்பசி இவற்றின் அச்சுறுத்தல்களும், சோவியத் பூமியில் இல்லா
தொழிக்கப்பட்டன. பொருளாதார உத்திரவாதத்தின் புதிய உணர்வினால் மக்கள்
உத்வேகம் பெற்றிருந்தனர். சோவியத் யூனியனின் இன்றைய நிலைமை உலக மக்கள்
மனதில் நீங்கா நினைவாக விளங்குகிறது" எனப் புகழ்ந்து எழுதியுள்ளார்.
இலக்கியத்தில் பொதுவுடைமை:
எழுச்சியூட்டும் சோவியத் நாட்டின் பொதுவுடைமைப் பூங்காவைக் காணும்போது
மிக மிகப் பழங்காலத்தே விளங்கிய விதேக நாட்டின் சிறப்பியல்புகள் நம்
கண் முன்னே காட்சியளிக்கின்றன. முற்போக்கு இலக்கியங்களில் ஒன்றாகிய
மேருமந்தர புராணத்தின் ஆசிரியர் சமய திவாகர வாமன முனிவர் தம்
காவியத்தில் விதேக நாட்டின் வரலாற்றுச் சிறப்பை,
"பாரிலுள்ள வர்க்கெலாம்
படுபயன் பொதுவுமாய்
ஏர் மலிந் திடங்களெங்கும்
இன்பமே பயத்து நல்
வோ� சாந்த மூடு போகி
மேவியாடல் பாடலோடும்
வார மாதர் போன்ற மாட
ஊர்கள் தோறும் மாடெலாம்*"
எனும் பாவின் வாயிலாக விதேக நாட்டின் செல்வமும் விளைபொருள்களும்
பொதுவாக்கப்பட்டு மக்கள் பலருக்கும் பயன்தரும் வகையில் பகுத்தளித்து
வந்தமையால் அந்நாட்டு மக்களனைவரும் மகிழச்சி பொங்க ஆடல்பாடல்களில்
தினைத்து இன்புற்று வாழ்ந்தனர். என்பதைப் படம்பிடித்துக்
காட்டியுள்ளார். இப் பொதுவுடைமைக் காட்சியைக் காவியத்தில்
படிக்கும்போதெல்லாம் இப்படியும் ஒரு நாடு இருந்திருக்குமா எனவும்,
இவ்வாறு ஒரு நாடு இனித்தோன்றுமா எனவும் நமக்கு வியப்பை அளித்து வந்தது.
வியப்புற வேண்டாம்! நீங்கள் இலக்கியத்திற் கண்ட காட்சிக்கு இலக்கணமாக
எங்கள் சோவியத் நாட்டின் பொதுவுடைமைப் புது உலகைப் பாருங்கள் எனக்
காட்டுவது போன்று இவ்விருபதாம் நூற்றாண்டில் கண்கூடாகக் காண வைத்தார்
மாமனிதர் லெனின்.
உலக அரசியல் வரலாற்றிலேயே, மக்கள் வரலாற்றிலேயே ஒரு புது சகாப்தத்தைத்
தோற்றுவிக்க மாவீரர் லெனின் 1924-ஆம் ஆண்டு ஜனவா� திங்கள் 21-ஆம் நாள்
காலமானார். உலகமே துக்கத்தில் ஆழ்ந்தது. பூத உடல்மறைந்திடினும்
புகழுடம்பு உலகம் ஏத்தச் சிறந்து நிற்கின்றது. இவ்விருபதாம்
நூற்றாண்டில் அமைந்த இப்புதிய பொதுவுடைமைச் சமுதாயத்தை எண்ணும்போது
நாம் முன்னர் கண்ட பகவான் விருஷப தேவர் வகுத்தருளிய சமதர்ம
சமுதாயத்தின் நினைவு வருகிறது. அப்பெருமகள் அஹிம்சையின் வழியில்
அமைத்தார். மாவீரர் லெனின் பலாத்காரத்தின் வாயிலாகக் கண்டார்.
பகவான் விருஷப தேவர் கண்ட அஹிம்ஸா சமுதாயம் உலகின் முதல் சமுதாய
மாகையால், அக்கால மக்கள் அப் புதிய புனித சமுதாயக் கொள்கைகளை
அமைதியுடன் ஏற்றுக்கொண்டனர். இன்றோ பல்வேறு கொள்கைகளைக் கொண்ட பல்வேறு
சமுதாயங்கள் நிலைபெற்றுள்ள வாகையால் அவைகளுக்கு மாறாகப் புதிய
பயனுள்ள புரட்சிகரமாக சமுதாயத்தைப் படைக்க முயல்வோர்க்கு எதிர்ப்புகள்
தோன்றுகின்றன. அந்நிலையே மாபெரும் மனிதர் லெனின் அமைக்க முற்பட்ட
பொதுவுடைமைச் சமுதாயத்திற்கு எதிர்ப்புகள் ஏற்பட்டன. அவ்வெதிப்புகள்
அந்நாட்டு அரசாங்கத்தாலும், சுயநலமும், பிற்போக்கும் கொண்டக்
குழுவினராலும் ஏற்பட்டது. அவர்கள் தங்கள் நிலைமை
நிலைநாட்டிக்கொள்ளவும், புதிய சமுதாயத்தைப் பலாத்காரத்தின் வாயிலாக
அடக்கவும் முயன்றனர். பொதுவுடைமைப் புரட்சி வீரர்களும் பலாத்காரத்தை
மேற்கொண்டு அவற்றின் மூலம் வெற்றி கண்டனர். இது அரசியலில் இயற்கையே.
இப்புரட்சி பற்றி மகாத்மா காந்தி 1928-ஆம் ஆண்டு நவம்பர் 15-ம் தேதி
யங் இந்தியா என்ற இதழில் பின்வருமாறு எழுதியுள்ளார். 'போல்ஷிவிசம் -
தனிச் சொத்துரிமை முறையை ஒழிப்பதை குறிக்கோளகாக் கொண்டுள்ளது. இது
எதையும் சொந்தம் கொண்டாடாத நன்னெறிக் கோட்பாட்டை, பொருளாதாரத்
துறையில் செயல்படுத்துவதே யாகும். இதனை மக்கள் தாங்களாகவே முன்வந்து
ஏற்றுக்கொள்வார்களேயானால் உலகெங்கும் அமைதியுண்டாகும் போலிஷிவிக்
இலட்சியத்தின் பின்னே தங்களது அனைத்தையுமே அதற்காக அற்பணித்து
எண்ணற்ற ஆண் பெண்களின் தூய்மையான தியாகம் அடங்கியுள்ளது என்பதை
மறுக்க முடியாது. லெனினேம் போன்ற மகான்களின் தியாகங்களிலும்
புனிதமாக்கப்பட்டுள்ள ஒரு இலட்சியம் வீண் போகாது. தன்னலத் தியாகம்
என்ற அவர்களது புனித உதாரணம் என்றென்றும் அணையாது ஒளிரும். காலம்
செல்லச் செல்ல, அந்த இலட்சியத்தை அது மேலும் மேலும்
துரிதப்படுத்தி,
தூய்மையடையச் செய்யும்."
லெனினைப் போன்ற மகான்களின் தியாகங்கள் எனப் பாராட்டியுள்ள மகாத்மாவின்
உள்ளடக்கிடக்கை நன்கு புலனாகிறது. இந்தியாவிலேயே பிறந்து இந்திய
சமயங்களின் கொள்கைகளை ஆழ்ந்து அறிந்தவர் மகாத்மா, பண்டைய அஹிம்ஸா
சமுதாய அறநெறிகளை (ஜைனக் கொள்கைகளை) ராய்சந்த் ஜெயின் என்ற மேதையிடம்
கேட்டுக் தெளிந்தவர். எனவே, அவர் அஹிம்ஸையையும் சத்தியத்தையும்
அடிப்படையாகக் கொண்டு அரசியல் போராட்டத்தில் வெற்றி கண்டார். அது
மட்டுமல்ல; அஹிம்ஸபா சமுதயாத்தின் பொருளை வரையறுத்தல் என்ற பொருளாதார
கொள்கையிலும் பற்றுடையவர் என்பதைப் பின்வரும் மகாத்மா பேருரையால்
விளங்கும்.
தேவைக்கு மேல் வைத்திருப்பவன் திருடன்.
'நாமெல்லாம் திருடர்கள் என்றே சொல்ல வேண்டும. என்னுடைய
அவசியத்திற்குமேல் இந்த வேளை எனக்கு வேண்டாதது ஒன்றை நான் எடுத்துப்
பத்திரப் படுத்தி வைத்தேனானால் அதை நான் திருடியவனே ஆவேன். அளவனுக்கு
அதை நான் திருடியவளே ஆவேன். அவனவனுக்கு வேண்டியதை அவணன் அந்த அளவில்
மட்டுமே எடுத்துக்கொண்டு வாழ்ந்தால் இந்த உலகத்தில் ஏழைகள் இருக்கவே
மாட்டார்கள். யாரும் பசியால் சாகமாட்டார்கள்.
"இப்பொழுதுள்ள ஏழை பணக்கார ஏற்றத் தாழ்வுகளைப் பார்க்கவே சகிக்கவில்லை.
அளவுக்கு மிஞ்சிய பொருள் பணக்காரர்களிடம் முடங்கிக் கிடக்கிறது.
பணக்காரர்கள் தங்கள் சொத்துக்கு தர்மகர்த்தாக்காளாக இருந்து அப்
பொருளை பலருக்கும் பயன்பெறும் வகையில் பகுத்துண்டு வாழ வேண்டும். நான்
பொருளாதார சமத்துவம் என்று அழைப்பது இதுவே.*"
மகாத்மா காந்திஜீயின் பொருளாதார சமத்துவக் கொள்கையும் பகவான் விருஷப
தேவர் கொள்கையும ஒன்றை ஒன்று பின்னிப் பிணைந்திருப்பதைக் காண்கிறோம்.
மக்கள் வாழ்க்கையை வளப்படுத்த என்னும் ஒவ்வொரு சிந்தனையாளருக்கும்
பகவான் விருஷப தேவர் கொள்கையும் ஒன்றை ஒன்று பின்னிப்
பிணைந்திருப்பதைக் கண்கிறோம்.
மக்கள் வாழ்க்கையை வளப்படுத்த என்னும் ஒவ்வொரு சிந்தனையாளருக்கும்
பகவான் விருஷப தேவர் வகுத்தப் பொருளாதாரத் துறையையே நோக்கிச் செல்லும்
என்ற உண்மையை கார்ல்மார்க்ஸ், லெனின், மகாத்மா காந்தியடிகள்
போன்றவர்களால் அறிகின்றோம்.
எனவே உலகியல் வாழ்க்கையில் மக்கள் பலரும் இன்புற்று அமைதியாகவும்,
அறிவுடையவர்களாகவும் வாழ வழிகோலிய பகவான் விருஷப தேவர் பொதுவுடைமைக்
கொள்கையை மாமேரு லெனின் மறுமலர்ச்சியாக நிலை நாட்டிவிட்டார் என்ற
மகிழ்ச்சியோடு லெனின் நூற்றாண்டு விழாவைப் போற்றுவோம்.