 |
திருக்குறளும் மிகுபொருள் விரும்பாமையும்:
முன்னர் கூறிய சமயவாதிகள் முற்போக்கு இலக்கியங்களிலும் புகுந்து
தங்கள் கொள்கைகளுக்கேற்பத்
திரிந்துப் பொருந்தாப் பொருள் கூறி,
முற்போக்குத் கொள்கைகளுக்குத் திரையிட்டு மறைத்து வரும் செயல்களும்
உண்டு.
பகவான் விருஷபதேவர் உலகுக்கு அருளிய அருளறம், பொருளாதாரம் ஆகிய
அறநெறிகளின் வழியில் ஜைன அறவோர்கள் இயற்றிய இலக்கியங்கள் பலவும்,
மிகுபொருள் விரும்பாமை, பகுத்துண்டு பல்லுயி ரோம்புதல் போன்ற
கொள்கைகளைக் கொண்டவை. குறிப்பாக உலகெலாம் போற்றும் திருக்குறளில்,
"நடுவின்றி நன்பொருள் வெ�கின் குடிபொன்றிக்
குற்றமும் ஆங்கே தரும்"
"பகுத்துண்டு பல்லுயி ரொம்புதல் நூலோர்
தொகுத்த வற்றுளெல்லாந் தலை"
எனும் இரு குறட்பாக்களிலும் பொருளை வரையறுத்தல், ஈட்டிய பொருளைப்
பலகும் பகுத்துண்டு வாழ்தல் என்ற பொதுவுடைமைக் கொள்கைகள் குன்றின்
மேலிட்ட விளக்குபோல் காட்சியளிக்கின்றன.
"நடுவின்றி நன்பொருள் வெ�கின் குடிபொன்றிக்
குற்றமும் ஆங்கே தரும்"
என்ற குறட்பாவில் வரும் 'நன்பொருள்' எனின் மிகுபொருள் என்பது
பொருளாகும். தொல்காப்பியத்தில் நன்று பொ�தாகும் என்பது சூத்திரம்.
எனவே, நல்ல எனில் மிகுதியையும் குறிக்கும். உலகியல் வழக்கிலும்
மிகுதியைக் குறிப்பிடும்போது நல்ல மழை பொழிந்தது, நன்றாக
அடித்துவிட்டான் என வழங்கி வருவதைக் காண்கிறோம். இவ்வுண்மையை அறிந்தோ
அறியாமலோ சில உரையாசிரியர்கள் நன்பொருள் எனில் பிறர் பொருள் என உரை
கண்டுள்ளார்கள். இவர்கள் உரையைக் கொண்டு பார்த்தால் பிறருடைய நல்ல
பொருளை விரும்பாமல் கெட்ட பொருளாயின் விரும்பலாம் என்ற விபா�தப்
பொருளுக்கு இடமுண்டாகிறது. எனவே, திருக்குறளாசிரியர் தேவர் மிகுபொருள்
வெ�காமை என்ற தலைப்பில் மிகுபொருள் விரும்பாமை என்ற பொருளாதாரத்
தத்துவத்தையே விளக்கியுள்ளார் என்பதை இவ் அதிகார முதற்குறள் வாயிலாகவே
அறிய வைத்துள்ளார் என்பதை அறிகின்றோம்.
திருக்குறளாசிரியர் தேவர் பண்டைய அறநெறிகளையும், பொதுவுடைமைக்
கொள்கையையும் மறுமலர்ச்சியுறச் செய்தார் என்பதையும் உலகுக்கு
அறிவித்துள்ள பெருந்தன்மையையும் காண்கிறோம்.
இறைவன் வாழ்த்தில் அஹிம்ஸை முதலிய அறநெறிகளை முதன் முதல் உலகுக்கு
வகுத்தருளிய பகவான் விருஷப தேவரை ஆதிபகவன் எனப் போற்றியும்,
பகுத்துண்டு பல்லுயிரோம்புதல் என்ற குறளில் "நூலோர் தொகுத்த
வற்றுளெல்லாந் தலை" என ஆதிபகவன் அருளிய முதல் நூலையும்
அறிமுகப்படுத்தியுள்ளார். அறிவியல் துறையிலும் தத்துவா�தியிலும்
உலகுக்கே உரைத்தருளிய குறள்நெறியை, சமயவாதிகள் மேலே கண்ட போலி உரையைப்
போன்று பல குறட்பாக்களின் உண்மைப்பொருளை மறைத்துச் சமயக்கணக்கர்
வழியில் உரை எழுதியுள்ளார்கள். இன்றைய இளம் புலவர்களும் வருங்காலப்
புலவர்களும் இவ் உரைகளை ஆராய்ந்தறிந்து உண்மை காண்பார்கள் என
நம்புகிறேன்.
பண்டைய காலத்தில் வெளிநாட்டில் சமதர்மம்:
நாம் இதுவரை கூறிவந்த அஹிம்ஸையை அடிப்படையாகக் கொண்ட சமதர்மக் கொள்கை
பாரத நாட்டில் மட்டுமின்றி, ஏனைய நாடுகளிலும் பரவியிருந்தன என்பதற்குரிய வரலாற்று ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
கம்யூனிஸ்ட் அறிக்கையின் 1888-ஆம் ஆங்கிலப் பதிப்பில் எப். எங்கல்ஸ்
(F. Engels) எழுதியுள்ள குறிப்பில் இந்தியாவிலிருந்து அயர்லாந்து வரை
எல்லா இடங்களிலும் கிராம சமுதாயங்களே (பஞ்சாயத்துகள்) சமூகத்தின்
பூர்வீகக் வடிவமாக இருந்திருக்க வேண்டும் என்றும், அப்பூர்வீகக்
குடிகளின் கொள்கை பொதுவுடைமைச் சமூகக்த்தின் தன்மையையும் உடையது'
எனவும் எழுதியுள்ளார்.
இவ் வரலாற்றை மெய்ப்பிக்க அந் நாடுகளில் ஜைன அறவோர்களின் நினைவுச்
சின்னங்களும், பெயர்களும் கிடைத்துள்ளன. வாய்ஸ் ஆப் அஹிம்சா (Voice
of Ahimsa) என்ற ஆங்கில இதழில் கீழ்வரும் செய்திகள் வெளிவந்துள்ளன.
பேராசிரியர் டாக்டர் ஹாஜிமே நாகமுரா எழுதியுள்ள ஒரு பொ�ய கட்டுரையில்
பின்வரும் செய்திகள் காணப்படுகின்றன.
1. சீனமொழியிலுள்ள பெளத்த நூலாகிய
திரிபீடகத்தில் ஜைனர்களின் முதல்
தீர்த்தங்கரராகிய பகவான் விருஷப தேவரைப்பற்றிப் பல குறிப்புகள்
காணப்படுகின்றன.
2. சீன மொழியிலுள்ள ஷட்சாத்திரம் முதல் அத்தியாயத்தில் விருஷபதேவர்
பகவத் என அழைக்கப்பட்டுள்ளதென்றும், விருஷப தேவா�ன் சீடர்கள் ஜைன
அறநெறிகளைப் பயின்று வந்தனர் என்றும் குறிக்கப்பட்டுள்ளது.
3. சீனநாடு போலவே ஜப்பானியர்களும் பகவான் விருஷப தேவரை ரோக் ஷேவ்
(Rock Shava) எனப்போற்றி வழிபட்டு வந்துள்ளனர்.
4. மகாவம்சம் என்ற நூலில் இலங்கையிலுள்ள அனுராதபுரம் ஒரு ஜைன ஸ்தலமாக
இருந்தது. இங்குள்ள ஆதி தீர்த்தங்கரராகிய பகவான் விருஷப தேவர் கோயில்
கி.பி. ஐந்தாம் நூற்றாண்டு வரை சிறப்புற்று விளங்கிற்று. அதுவரை
அப்பகுதியை ஆண்ட அரச குடும்பத்தினரால் பாதுகாக்கப்பட்டு வந்தது என
அரிய வரலாற்றுச் செய்திகளை அளித்துள்ளார்.
மற்றொரு பேராசிரியர் R.G. ஹர்ஷே என்பவர் டெக்கான் கல்லூரி ஆராய்ச்சி
அறிக்கையின் பக்கம் 229-236ல் பின்வருமாறு விளக்கியுள்ளார்.
1. தற்போது அலாஷயா என அழைக்கப்படும் இடத்தில் கி.மு. 12-ம்
நூற்றாண்டிலிருந்த ��ஷப் என்னும் சிலையை ஆராய்ந்தபோது அது விருஷப
தேவர் சிலையாகவே விளங்கிற்று. ��ஷப் எனில் விருஷப தேவரேயாகும்.
2. இக்கருத்தை வலியுறுத்த அந்நாட்டு மக்கள் பணிக்கர்களின் மொழியில்
��ஷப் என்னும் சொல்லுக்குக் கொம்புடைய பிராணித் தேவர் எனப் பொருள்
கூறப்படுகின்றது. அந்த ��ஷப் சிலையின் கொம்புகள் எருதுகளின் கொம்புகள்
போலவே இருந்தன.
3. இதனால் அந்நாட்டு மக்களாகிய பணிக்கர்கள் பகவான் விருஷப தேவரையும்
அவர்தம் அறச்சின்னமாகிய எருதையும் வழிபட்டு வந்தனர் என்பது
தெளிவாகிறது.
4. பணிக்கர் வகுப்பாரிடையே ஒரு பழமையான கவிதை பாடப்பட்டு வந்துள்ளது.
அது ராஸஸ் மாரா என்னும் இடத்திலிருந்து கண்டெடுக்கப்பட்டது. அதில்
பகவான் விருஷப தேவர் கர்மங்களை வென்று பா�பூரண ஞானியானார் என்றும்
பின்பு ஒவ்வொரு நகரம், கிரமமாகச் சென்று தர்மோபதேசம் செய்து வந்தார்
என்றும் கூறப்பட்டுள்ளது.
தற்கால வெளிநாட்டும் புதைபொருள் ஆராய்ச்சியாளர்களின் அறிக்கைகளில்
கீழ்வரும் செய்திகள் காணப்படுகின்றன.
சோவியத் அல்மேனியாவின் கழிமர்ப்யூலா (சிவப்பு மலை) "தேஷேஸ்வி" என்று
கூறும் உரதியம் நகரம் இருக்கிறது. பேபிலோனியாவின் இஸ்பேசூர் என்னும்
நகரம் ரிஷப்பூர் என்றதன்
திரிபேயாகும். அங்கே தேஷப் தேவா�ன்
(ரிஷப்)
சிலையும் இருந்திருக்கிறது. பழைய காலத்தில் "தேஷவ்" அல்லது தேஷப்
ரூபத்தில் பகவான் விருஷப தேவர் மகிமை மத்திய ஆசியாவிலிருந்து சோவியத்
நாடு வரை பரவியிருந்தது. மவாதியா, ஜின்னேரவி, இஸ்பெக்ஜுர் முதலிய
இடங்களில் தேஷப் தேவா�ன்
(ரிஷப் தேவர்) சிலைகள் காணப்படுகின்றன.
அச்சிலைகள் நிர்வாண நிலையில் எருதைச் சின்னமாகக் கொண்டு
விளங்குகின்றன. அவருக்கு ஆயுதம்
திரிசூலம் போன்று காணப்படுகிறது. (இது
ரத்தினத் திரயத்தைக் குறிக்கும்) இவ்வாறு புதைபொருள் ஆராய்ச்சி
அறிஞர்களால் அஹிம்ஸா சமுதாயத்தைத் தோற்றுவித்த பகவான் விருஷப தேவர்
திருமேனிச் சிலைகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.
உலக வரலாற்றில் பண்டைக் காலமுதல் பரவியிருந்த அறநெறி கொண்ட பொதுவுடைமை
சமுதாயம், பிற்காலத்தில் தோன்றிய மறநெறி கொண்ட பிற்போக்கு
சமுதாயங்களின் சதிச்செயலால் மக்கள் வாழ்க்கை நிலை சீர்குலைந்தது.
சுயநலவாதிகளின் ஆதிக்கம் தலையெடுத்தது. அரசியல் பெயராலும், சட்டத்தின்
பெயராலும், சமயத்தின் பெயராலும், ஒரு வர்க்கத்தார் மற்றொரு
வர்க்கத்தாரை அடிமைப் படுத்தியும், சுரண்டியும் சிலர் ஏகபோகமாக
வாழலாயினர். வறுமையும் அறியாமையும் துன்பமும், கடவுளின் செயல் என்ற
நம்பிக்கையைப் புகுத்திப் பெரும்பாலான மக்களை சுரண்டல் வர்க்கத்தார்
தங்கள் கைப்பாவைகளாக்கிக் கொண்டனர்.
அவனன்றி ஓரணுவும் அசையாது என்ற சமயவாதிகளின் சமயக் கண்ணாடியின் முன்
நின்று மக்கள் சரணடைந்தனர். அதற்கேற்ற நூல்களும் கதைகளும் கட்டி
மக்களை மயங்க வைத்தனர். துணிச்சலும், புரட்சியும் அற்று மக்கள்
ஊமைகளாய் செவிடர்களாய் வாழலாயினர். இந் நிலை உலகெங்கும் தலைவிரித்தாடிற்று.
கார்ல் மார்க்ஸ் தோன்றினார்:
'முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்' என்ற முதுமொழிக்கேற்ப,
பெரும்பாலான மக்களை அடிமைப்படுத்தி வறமையிலாழ்த்தி வந்த பிற்போக்கு
இருளை அகற்ற 1818-ம் ஆண்டில் மத்திய ஜெர்மனியில் கார்ல் மார்க்ஸ்
என்ற கதிரவன் உதயமானார். நல்ல செல்வமும் செல்வாக்கும் படைத்த
குடும்பத்தில் பிறந்தார் கார்ல் மார்க்ஸ். இவர் உயர்நிலைப் பள்ளியில்
பயின்று பல்கலைக் கழகப் படிப்பை முடித்தவுடன் சட்டக் கல்லூரியில்
சேர்ந்து படித்துக் தேறினார். ஆரயாய்ச்சித் துறையில் ஆர்வமுடைய இவர்
அத்துறையில் மேதாவியும் ஆனார். எனவே, சமூக இயல்புகளை ஆராய்ந்தார்.
அவைகள் குறைபாடுடையவை என்பதை அறந்து ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்க
எண்ணங்கொண்டார். அவ்வெண்ணத்தில் தோன்றிய கொள்கைகளைக் கொண்டு,
புரட்சிகரமான கட்டுரைகளையும், நூல்களையும் எழுதினார். அவைகளில் ஒன்று
கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை என்ற நூல் உலகப் பிரசித்தி பெற்றது.
மறுபடியும் மூலதனம் என்ற ஒரு புரட்சிகரமான நூலை இயற்றி இரண்டையும்
வெளியிட்டார். இவருடைய புதிய பொருளாதாரக் கொள்கையில் மூழ்கிய எப்.
எங்க்ல்ஸ் என்ற அறிஞரும் அவருக்குத் துணையானார். இவ்விரண்டும்
நூல்களும் வெளிவந்ததும் ஐரோப்பிய நாடுகள் அதிர்ச்சியடைந்தன.
பொதுவுடைமைத் தத்துவத்தின் அடிப்படையில் மலர்ந்து மணம் வீசியதால்
ஆங்காங்கு எதிர்ப்புகள் தோன்றின. நாடு கடத்தலும், பறிமுதலும்
ஏற்பட்டன. எனினும், அவ்விரு நூல்களும் ஐரோப்பிய மொழிகள் பலவற்றில்
அச்சிட்டு வெளிவந்தன. கார்ல் மார்க்ஸ், எங்க்ல்ஸ் இருவரும் எவ்வளவு
முயற்சி செய்தும், அவர்கள் காலத்தில் அக்கொள்கைகளைச் செயல்படுத்த
வியலாமற் போயிற்று. எவ்வாறோ புரட்சிகரமான பொருளாதார நூல்களும் எங்கும்
பரவிவிட்டன. பெரும்பாலான மக்கள் அந்நூல்களைப் படித்து விழித்துக்
கொண்டனர். இனி செயல்படும் காலமும், செயல்படுத்தும் மனிதரும்
தோன்றுவார்கள் என்ற நம்பிக்கையோடு அவர்கள் இருவரும் காலமானார்கள்.