திரு. அ. லெ. நடராஜன் எழுதிய
அணிந்துரை |
திரு. ஜீவபந்து T.S. ஸ்ரீபால் அவர்கள் ஜைன சமயத்திலும் அதன்
கோட்பாடுகளிலும் ஆழ்ந்த அறிவு உடையவர்கள். பல ஜைன நூல்களை எழுதி
இருப்பவர்கள். சுமார் ஐம்பது ஆண்டுகளாக ஜைன சமய அறநெறிகளை இடைவிடாது
எங்கும் பரப்பிவருபவர்கள். ஜைன சமயம் இந்திய நாட்டில் தழைத்து ஓங்கி
இருந்த காலத்தில், நாட்டு மக்கள் பசியாலும், பிணியாலும், வறுமையாலும்
அவதிப்படாமல் வாழ்ந்தார்கள். ஜைன சமயத்தைக் குன்றச் செய்து, பிற
சமயங்கள் தலைதூக்கிய பின்னரே, நாட்டில் செல்வத்தைத் திரட்ட வேண்டும்
என்ற ஆசையும், இறைவன் அருளினால்தான் எல்லாம் நடக்கின்றன என்ற எண்ணமும்
தலைதூக்கின.
அதன் பயனாய், மனிதனுக்கு இயல்பாய் இருக்க வேண்டிய மதிப்பும், அவனுடைய
உழைப்புக்குரிய பெருமையும்,
உரிமையும் குறைந்து போயின. அது காரணமாக,
சோம்பலும், அக்கறையின்மையும் மிகுதியாயின. அதன் பயனால் நாட்டில்
வறுமையும், பிணியும், பசியும் அதிகமாயின. அவற்றின் பயனாய் அறியாமையும்
மிகுதியாகி, பொதுநல நோக்கும் நேர்மையும் குறைந்து போயின.
இத்தகைய நிலைமைகள் இந்திய நாட்டில் மட்டு மன்றி, உலக முழுவதிலும்
வியாபித்துக்கொண் டிருந்தன. பண்டைய பொதுவுடைமைச் சமுதாயம்
மறைந்துபோயிற்று; புதிய பொதுவுடைமைச் சமுதாயம் தோன்றவில்லை.
பெரும்பாலான பொதுமக்களுக்கு நன்மை பயவாத பயக்க முடியாத ஏகாதிபத்திய
ஆட்சியை வல்லரசுகள் செலுத்தியபோதுதான், கார்ல் மார்க்ஸ், எங்கல்ஸ்,
லெனின் மூவரும் ஐரோப்பாவில் பிறந்தார்கள். சமுதாயத்தில் காணப்படும்
ஏற்றத் தாழ்வுகளைக் கண்டு, மனம் வெதும்பினார்கள். மனம் வெதும்பி,
சும்மா இருந்துவிடாமல், அவற்றுக்குரிய காரண
காரியங்களை ஆராய்ந்தார்கள்
உற்பத்தி சாதனங்கள் பொதுவுடைமை அக்கப்பட்டாலன்றி, வறுமையையும்
பசியையும் போக்க இயலாது என கார்ல் மார்க்ஸ�ம், முடிவுக்கு வந்தார்கள்.
கார்ல் மார்க்ஸ�ம், எங்கல்ஸ�ம் எடுத்த முடிவை, புரட்சி மூலம்
செயல்படுத்தி, சோவியத்து ருஷ்யாவில் ஒரு சமதர்ம பொதுவுடைமைச்
சமுதாயத்தை, மாபெரும் மனிதர் லெனின் நிறுவியுள்ளார். புதுச்
சூழ்நிலைகளுக்கு ஏற்ப, பலாத்காரத்தின் மூலம், லெனின் நிறுவியுள்ள
பொதுவுடைமை ஆட்சியில், ருஷ்யநாட்டு மக்கள் ஆனந்தமாக வாழ்கிறார்கள்.
மனித உழைப்பின் மகத்துவம், மனித இன ஒற்றுமையின் மகத்துவம் ஆகியவற்றைத்
தமது சாதனைகள் மூலம் லெனின் உலகுக்கு மெய்ப்பித்துக் காட்டியுள்ளார்.
பலாத்காரம் ஒன்றைத் தவிர்த்து, மற்ற அனைத்தும், ஜைன சமய ஆதி
தீர்த்தங்கரர்
ரிஷப தேவர் அமைத்துக் காட்டிய சமுதாய அமைப்புகளும்,
இன்று சோவிய நாட்டில் நிறுவியுள்ள சமுதாய அமைப்புகளும், கிட்டத்தட்ட
ஒன்று போலவே இருக்கின்றன என்று, ஜைனமும் லெனினியமும் என்னும் இந்த
நூலில் ஜைன சமயக்காவலர் ஜீவபந்து திரு.டி.எஸ். ஸ்ரீபால் அவர்கள்
எடுத்துக் காட்டியுள்ளார்கள். தக்க ஆதாரங்கள் தந்து அவற்றை விளக்கி
இருக்கிறார்கள். வருங் காலத்தில் லெனினியம் எங்கும் பரவுவதற்குரிய ஆற்றலும் தகுதியும் பெற்றுள்ளது என்பதை மனமார ஒப்புக்கொண்டு, லெனின்
நூற்றாண்டு விழா மலராக இந்த நூலை எழுதி இருக்கிறார்கள்.
தமிழ் மக்கள் இந்த நூலை வரவேற்பார்கள் என்பதில் எனக்கு ஐயம் இல்லை.
திரு. ஜீவபந்து டி.எஸ்.ஸ்ரீபால் அவர்களை அறியாத தமிழ் அறிஞர்கள் தமிழ்
நாட்டில் யாரும் இருக்க முடியாது.
சுமார் ஏழெட்டு ஆண்டுகளாக நான் திரு. ஸ்ரீபால் அவர்களுடன் நெருங்கிப்
பழகி வருகிறேன். அவர்களுக்கு ஜைன சமயம், தமிழ், லெனினியம்
முதலியவற்றில் அதிக ஈடுபாடு உண்டு. தாம் சொல்ல வேண்டிய கருத்துகளை
அஞ்சாமலும் உறுதியுடனும் அவர்கள் அழுத்தமாக உரைப்பார்கள். அவர்கள்
ஆர்வத்துடன் எழுதி இருக்கும் இந்த நூலைத் தமிழ் மக்கள் வாங்கிப்
படித்து, பயனடைவார்கள் என நம்புகிறேன்.
அ.லெ.நடராஜன்.
நூன்முகம்
பாரதநாட்டுப் பண்டைய இலக்கியங்கள் பலவற்றிலும் பகவான் விருஷபதேவர்
போற்றப் பெற்றிருக்கம் வரலாறுகளைக் காணும் வாய்ப்பு எனக்கு ஏற்பட்ட
காலமுதல், அப்பெருமகள் மக்கள் சமுதாய நலன்களுக்கு வகுத்தருளிய அஹிம்சா
தருமம், கல்வித் துறை, அரசியல் அமைப்பு மிகுபொருள் விரும்பாமை,
பகுத்துண்டு வாழ்தல், தொழில்முறைகள் யாவும் என்னைக் கவர்ந்தன.
இவ்வுலக வரலாற்றில் முதன் முதல் மக்கள் சமுதாய வாழ்க்கைக்கு
வழிவகுத்தருளிய மேலே குறிப்பிட்ட கோட்பாடுகளை ஏனோ இந்த உலகம்
மறந்துவிட்டது என வருந்தினேன். பிற்காலத்தில் தோன்றிய பல்வேறு
கொள்கைகளால் மக்கள் நலத்திற்கு உயிரோட்டமாய் விளங்கும் பண்டைய உன்னத
வாழ்க்கை முறைகள் அருகி வரவே, உலகில் அமைதியும், இன்பவாழ்வும், பண்பு
நெறியும் சிதறிவிட்டன என்பதையும் தெளிந்தேன். பகவான் விருஷப தேவர்
அருளிய அஹிம்சை, மிகு பொருள் வெ�காமை ஆகிய இரு பேரறங்களை மக்கள்
சமுதாயம் ஏற்றுக்கொண்டிருப்பின் உலகம் ஒளிவிட்டு வீசுமே என்ற ஏக்கமும்
என் உள்ளத்தை வாட்டி வந்தது. அது மட்டு மல்ல! உலகில் அவ்வப்போது
தோன்றும் அரசியல் தலைவர்களிலே அஹிம்சைக்கு ஒரு அரசியல் தலைவரும்,
பொருளாதார சமத்துவத்தையும், பகுத்துண்டு வாழ்தலையும், நிலைநாட்ட ஒரு
அரசியல் தலைவரும் தோன்றக் கூடாதா எனவும் எண்ணி எண்ணிப் புழுங்கிய
ஆண்டு.
உலக வரலாற்றுத்துறையில் ஆழ்ந்து தோய்ந்த சிந்தனை வாளர்களும் என்
போன்றே எண்ணியிருப்பார்கள் என்பது திண்ணம்.
இவ்வெண்ணங்களின் ஆற்றலால் இவ்விருபதாம் நூற்றாண்டில் நம் பாரத
நாட்டில் அஹிம்ஸையை அரசியலிலே புகுத்திப் புரட்சி செய்து வெற்றி கண்ட
மகாத்மா காந்தியடிகளையும், சோவியத் நாட்டிலே புரட்சி செய்து
பொருளாதாரச் சமத்துவச் கொள்கையை நிலைநாட்டி வெற்றி கண்ட மனிதகுல
மாமேரு லெனினையும் கண்குளிரக் கண்டோம். மகிழ்ந்தோம். உலகமே ஆனந்தக்
கடலில் மிகுந்தது. பகவான் விருஷபதேவர் அருளிய அஹிம்சாதருமமும்,
மிகுபொருள் விரும்பாமை என்ற பொருளாதாரத் தத்துவமும்
மறுமலர்ச்சியுற்றன. இவ்விரண்டு நெறிகளும் பாரத நாட்டு அறிவியல்
கொள்கைகளே யாகும்.
இவ்விரு பொ�யார்களுக்கும் நூற்றாண்டு விழாக்கள் உலகெலாம் கொண்டாடப்
பெற்றன.
1970-ஆம் ஆண்டில் மாமேரு லெனின் நூற்றாண்டு விழா வந்தது. இம்மாபெரும்
வாய்ப்பை என் பாக்கியமாகக் கருதி, அப்புனித விழாவில் நினைவாக நல்லற
இதழில் 'ஜைனமும், லெனினியமும்' என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதினேன்.
இக்கட்டுரையைப் படித்தறிந்த பல அறிஞர்கள் இதனை ஒரு நூல் வடிவாக
வெளியிடின் பலருக்கும் பயன்படுவதோடு பாரத நாட்டிற்கும், சோவியத்
நாட்டிற்கும் பண்டையகால முதலே தொடர்ந்துள்ள நட்புறவின்
மாண்புவலுப்படுவதோடு பொதுவுடைமைத் தத்துவத்தை மக்கள் பலரும் ஏற்றுப்
போற்றும் வாய்ப்பும், உணர்ச்சியும் வளருமென ஆலோசனை கூறினர். இவ்
அறிஞர்களின் அன்புக் கட்டளையும், ஏற்கெனவே என் எண்ணத்தில்
குடிகொண்டிருந்த ஆர்வமும் இந்நூலை வெளியிடத் தூண்டின. கட்டுரையை நூல்
வடிவாகத் தயார் செய்தபோது சில அரிய கருத்துகளையும் சேர்த்து
உருவாக்கியுள்ளேன்.
இந் நூலுக்கு அணிந்துரை வழங்கியுள்ள உயர்திரு. அ.லெ.நடராஜன் அவர்களைத்
தமிழுலகம் நன்கு அறியும் பகவான் மகா வீரர், நபிகள் நாயகம், இயேசுநாதர்,
காந்திஜி எழுதிய மாணவருக்கு, ஏழை பங்காளன் லெனின் போன்ற பல அரிய நூல்களை எழுதிப் புகழ்பெற்றவர். அண்மையில் மாமேரு லெனின் வரலாற்றை
எழுதி, சோவியத் நாடு நேரு பா�சு பெற்றவர். அது மட்டு மல்ல, இந்நூலை
எழுதி வெளியிட்டமைக்காக, சோவியத் அரசாங்கத்தின் அழைப்பின் போ�ல்
ரஷ்யாவெங்கும் சுற்றுலா செய்தவர். இப்பேரறிஞா�ன் அணிந்துரையால்
இந்நூல் சிறப்புப் பெற்று விளங்கும் என்பதில் ஐயமில்லை. அப்பொ�யாருக்கு
என் நன்றி.
அறம் நனி சிறக்க
T.S. ஸ்ரீபால்
76, பெருமாள் முதலிதெரு
செளகார்பேட்டை, சென்னை -1
ஜைனமும் லெனினியமும்
சமுதாயம் தோற்றம்:
பல்லாயிரம் ஆண்டுகட்கு முன்னர் மக்கள் சமுதாயம் சீர்குலைத்திருந்தது.
நன்மை தீமைகளைப் பகுத்துணராமல் தங்கள் தங்கள் விருப்பம் போன்று கண்டதே
காட்சி கொண்டதே கோலமாக மக்கள் வாழ்ந்தனர். இந்நிலையில் தான் பகவான்
விருஷப தேவர் தோன்றினார். மக்களின் வாழ்க்கைக் கேட்டினைக் கண்டார்.
எனவே, இவர்கள் வாழ்க்கையைச் செம்மைப்படுத்த முனைந்து அதற்கான பல
திட்டங்களை வகுத்தார். அத் திட்டங்களின் தலையாய அறமாக அஹிம்சையை
அமைத்தார். இப்பேரறத்தின் அடிப்படையில் மக்களுக்குக் கல்வி, உழவு,
வாணிபம் முதலிய பல திருப்பத்தை உண்டாக்கினார். அஹிம்சையே அமைதியும்,
அன்பும், இன்பமும் கொண்ட சமுதாயத்தை வளர்க்கும் என்பதை விளக்கிப்
பொருளாதார தத்துவத்தையும் வகுத்தார். பொருள் ஈட்டுவோர் ஒவ்வொருவரும்
பொருளை வரையறுத்துக்கொள்ள வேண்டும். மிகுபொருள் ஈட்டி பிறருடைய
வாழ்க்கையைத் தாழ்வுறச் செய்யக் கூடாது.
ஆருயிர்க்கெலாம் அன்பு செய்யும் அஹிம்சா தருமத்தில் பொருளை
வரையறுத்துக்கொண்டு வாழ்தலும் அடங்கும். அஹிம்சையின் தத்துவம் மக்கள்
பலரும் ஒருமைப்பாட்டு உணர்ச்சியையும், பொருளை ஈட்டுவோர், பலரும் வாழ
நாமும் வாழ்வோம் என்ற பரந்த நோக்கங்கொண்டு மிகுபொருள் விரும்பாது
பிறரும் பொருளீட்டும் வாய்ப்பைப் பெறவல்ல பொருளாதார அறிவியல் தத்துவம்
எனவும் விளக்கினார் பகவான் விருஷப தேவர்.
உள்ளத்தாலும், உரையாலும், செயலாலும் பிறருக்கு ஊறு நேரா வகையில்
அருளத்தைக் கடைப்பிடிப்பது போன்று, பொருளாலும், பிறருக்கு இன்னல்
விளையலாகாதென்ற கொள்கையை முதன் முதல் உலகுக்கு உரை செய்த பொருளாதார
நிபுணர் நாம் போற்றற்குரிய பகவான் விருஷப தேவர். அது மட்டுமல்ல,
சமதர்மக் கொள்கைகளுக்கு வித்திட்ட முதல் அரசியல் தலைவரும் அவரே.
இப்புதிய சமுதாயக் கொள்கையை அஹிம்சா சமுதாயம் அல்லது அறநெறிச்
சமுதாயம் எனப் போற்றி அழைத்துவந்தனர். இக் காலத்தில் ஜைனம் என
அழைக்கின்றனர்.
இவ் அறநெறித் தத்துவத் கொள்கையை ஆழமாக ஆராய்ந்தறிய வேண்டும். பா�வு
உணர்ச்சியோடு கூடிய கண்ணோட்டத்துடன் பயில வேண்டும். தன்னலமற்ற
பொதுமைக் கண்கொண்டு பார்க்கவேண்டும். அப்பொழுது தான் அஹிம்ஸையின்
உள்ளடங்கிய பொதுவுடைமை சமுதாயத்தின் மேன்மை வெளிப்படும். அமைதியான
உலக வாழ்க்கைக்கு இன்றியமையாதது என்று உணர்வு தோன்றும், அது மட்டு
மல்ல! இம் மாண்புமிக்க அஹிம்ஸா சமுதாயத்தின் வழியில் வாழ்க்கையை
நடத்த வேண்டும் என்ற கடமை உணர்ச்சியும் உள்ளத்தில் உருவாகும். எனவே
அக்கால மக்கள் அப்புனித சமுதாய வாழ்க்கையை ஆர்வமோடு ஏற்று அப்பாதையில்
ஓழுகலாயினர். அப் பெருமகன் வகுத்தருளிய தொழில்களை உணர்ச்சியோடும்,
ஊக்கமோடும்
புரியலாயினர். அவ்வாறு மக்கள் செயற்பாடு நாளுக்கு நாள்
வளர்ந்து வந்தது. தொழில்கள் பலவும் தனிச் சிறப்பைப் பெற்றன.
அவர்களுக்குள் வளர்ந்துவரும் ஒற்றுமையும், ஒருமைப்பாட்டின்
உணர்ச்சியுமே அவ்வாறு பணிபுரியச் செய்தது. அவர்களுக்கு, சாதி சமயம்
என்ற சொற்களே தொ�யாது. அன்றுள்ள மக்களை இன்றபோல் உங்கள் சாதி என்ன?
உங்கள் சமயம் யாது? எனக் கேட்பின் அச் சொற்களையே கேட்டறியாத அவர்கள்
விழிப்பார்கள். உங்கள் தர்மம் யாது என வினவிடின் அஹிம்சா தருமம் என
விரைந்து விடை பகருவார்கள்.
பகவான் விருஷப தேவர் அருளிய அறநெறிகள் கொண்ட முதல் நூல் உலகுக்கே
உரியதாய்
எக்காலத்திற்கும் எவர்க்கும் பயனளிக்கக்கூடிய பண்பு நெறிகள் என்பதை
அறிந்தோம். இம்முதல் நூலின் வழியில் பாரத நாட்டின் பல மொழிகளிலும்
இலக்கியங்கள், நீதி நூல்கள், இசை நூல்கள் போன்ற கலை போன்ற கலை நூல்கள்
தோன்றின. இவைகளில் ஒன்றே திருக்குறள். சமயம், காலம், இடம் என்ற
வேறுபாடின்றி எல்லோராலும், எந்நாட்டாராலும் போற்றக் கூடிய
உயர்வினின்றே அப்புகழ்ச்சி நூல் பகவான் விருஷப தேவர் அருளிய முதல்
நூல் வழி வந்ததென்பதை கண்ணாடி போன்று கண்டு தெளியலாம். அத்தமிழ்
மறையில் அஹிம்ஸை, மிகுபொருள் விரும்பாமை, பகுத்துண்டு வாழ்தல் போன்ற
பொருளாதாரக் கொள்கைகளை வற்புறுத்தும் குறட்பாக்களின் விளக்கத்தை
இக்கட்டுரையில் தக்கதோர் இடத்தில் அமைத்துக் காட்டியுள்ளேன்.