 |
மேலும், மகாத்மா காந்தியடிகளின் எண்ணத்தை நிறைவேற்றவே சர்வோதயா
இயக்கத்தை ஆரம்பித்து நிலப்படுங்கீடு சேவையும் செய்து வருகின்றார்.
இவர் தம் அறப்பணியை இன்று உலகெலாம் வரவேற்கின்றன.
23-11-51ல் ரோம் நகா�ல் நடந்த ஐக்கிய நாட்டு உணவு விவசாய ஸ்தாபனத்தின்
மகாநாட்டில் நமது உணவு மந்திரி கனம் கே.எம். முன்ஷி பேசும்போது, "நிலச்
சீர்திருத்தப் பிரசாரம் செய்துகொண்டு கால்நடையாக இந்தியாவில்
சுற்றுப்பிராயணம் செய்து வரும் ஆச்சார்ய வினோபாபவேவை உதாரணமாக
எடுத்துக்காட்டி, பாவேயின் தார்மீக யாகத்தின் விளைவாக எவ்வளவு ஜனங்கள்
மனம் கரைந்து ஏக்கருக்குமேல் ஏக்கராக ஏழைகளின் வினியோகத்திற்காகப்
பாவேயிடம் பூமிதானம் செய்துவருகிறாக�ன்றும், இதுவரை ஆயிரக்கணக்கான
ஏக்கர்கள் வந்து சேர்ந்துள்ளன என்றும் பாவேவின் சாத்வீக இயக்கம் நில
விநியோகப் பிரச்சனையை புனிதமான மார்க்கத்திற்குக் கொண்டுவருகிற
தென்றும். இது தெய்வீகம் பொருந்திய ஒரு பொ�ய பா��க்ஷ இயக்கமென்றும்
உலகமெங்குமே இம்மாதிரி உற்சாகத்தை ஊட்ட இந்த சர்வதேச ஸ்தாபனம்
முன்வரவேண்டும்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.
19-11-51 தினமணி.
எனவே இத்தகையசிறந்த ஆத்மீகம் கலந்த பொதுவுடைமைத் தத்துவத்தை
முதன்முதல் தோற்றுவித்த ஆதிபகவனை உலகறிய விழாக் கொண்டாடி, அச்சீரிய கொள்கையை நடை முறையில் கொண்டுவரும் ஆச்சாரிய வினோபாஜீயின்
கோட்பாட்டினையும், தமிழ் நாட்டுத் தனிப் பெருந் தலைவர் திரு.வி.க.
அவர்களின் மாசற்ற உள்ளத்திலே உருவாகி ஒளிவரும் பொதுவுடமைக்
கொள்கையையும் ஆதா�த்து.
"இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்லது அரசு"
எனத் திருக்குறள் அரசை நிலைநாட்டிச் சிறந்து வாழ்வோமாக.
"அருகன் அருளறம் பொருளறம் வேண்டும்
ஆக்கத் தொழிலில் ஊக்கம் வேண்டும்
இறப்பையும் பிறப்பையும் மறத்தல் வேண்டும்
சரம் சுரக்கும் வீரம் வேண்டும்
உலகொரு குலமெனும் உணர்வு வேண்டும்
ஊனக் கொலைபுலை உறங்கல் வேண்டும்
என்றும் பணிநினைந்தி யற்றல் வேண்டும்.
-"பொருளும் அருளும்" (திரு.வி.க)
கதமொழி தீர்மின் கறுவுகடேய்யின் கருணைநெஞ்சோ
டிதமொழி கூறுமின் இன்னுயிர் ஒம்புயின் எப்பொழுதுஞ்
சுதமொழி கேண்மின் சுகமிக வேண்டில்துறவர் சொன்ன
வதமொழி யேன்மின் இவை சினனார் திருவாய்மொழியே.