 |
ஆதிபகவனும் ஆச்சாரிய வினோபாஜீயும்
மகாத்மா காந்தியடிகள் அஹிம்சையை அரசியலிற் புகுத்திய இரகசியம்
இப்பொழுதுதான் உருவாகிவருகிறது. அதன் தத்துவத்தில் அடங்கியுள்ள
அரசியற் கொள்கையைப் பெரும்பாலோர் நன்கு
புரிந்துக்கொள்ளவில்லை. அதனால்
மகாத்மாவின் அஹிம்சைக் கொள்கையை ஏளனஞ் செய்தவர்களும் , உண்டு. எனினும்.
மகாத்மா சிறிதுந் தளர்ச்சியுறாமல் தாம் கண்ட உண்மையை உலகுக்குத் தொ�விக்க
முளைந்து நின்றார். அவர் தம் எண்ணம் ஈடேறுமுன் பாவி கோட்ஸே அவரைப் பலி
கொண்டான். எதிர்கால நிலைமைகளை நன்குணர்ந்த நமது மகாத்மா தமது
அந்த்ரங்கக் கொள்கைகளைத் தம்மகத்தே மட்டும் பதிவு செய்து கொண்டாரல்லர்.
தமக்குப் பொ�தும் நம்பிக்கையான ஓர் ஒப்பற்ற தியாகியின் உள்ளத்திலேயும்
பதிவுசெய்து வைத்தார். அத்தியாதி தான் இன்று உலகமெல்லாம் பிரமிக்கும்
வண்ணம் நிலப் பங்கீடு செய்துவரும் நமது ஆச்சாரிய வினோபாபாவே. உலக சா�த்திரத்தை
நோக்கும்போது இவ்வுலகம் அவ்வப்போது அமைப்பிலும் நாகா�கத்திலும்,
கொள்கைகளிலும் மாறுதல் அடைந்து வந்திருப்பதை நாம் காண்கிறோம். நாடு
கடலானதும் உண்டு.
இத்தகைய இயற்கைச் சூழலின் வயப்பட்டு நமது நாடு ஒரு காலத்தில்
சீர்குலைந்திருந்தது. அந்நிலையையே போகபூமி கர்மபூமியாக மாறிற்றெனப்
புராணங்கள் கூறுகின்றன. அது சமயம் மக்களெல்லாம் மாக்களாகவே விளங்கினர்.
நன்மை தீமை என்ற பாகுபாடே இல்லாமலிருந்தது. உணவுக்கும், உடைக்கும்,
வழியின்றி அலைந்தனர். சமைத்துண்ண வகைதொ�யாமல் பச்சைக் காய்களையும்
இலைகளையும் அப்படியே புசித்து வந்தனர். பொதுவாக, சமுதாய அமைப்பே
யின்றி மனம்போன போக்கில்
திரிந்தனர். இந்நிலையில் நாபி என்ற
மன்னருக்கும், (தலைவர்) மருதேவி என்ற அரசிக்கும் ஓர் ஆண் மகவு
பிறந்தது. அதற்கு 'விருஷபதேவர்' சிறு வயதிலிருந்தே அறிவுடன்
விளங்கினார். காளைப்பருவம் அடைந்ததும் நாட்டின் நிலையில் அக்கறை
கொண்டார். மக்களின் பா�தாபகரமான நிலையைக் கண்டு வருந்தினார். அவர்கள்
அறியாமையில் மூழ்கி இருப்பதுடன் தொழிலொன்றும் இல்லாமல்
திரிவதைக்
கண்டு. அந்நிலையை மாற்றச் சிந்தனை செய்தார். சிந்தனையில் பல
திறப்பட்ட திட்டங்கள் தோன்றின. கடைசியாக ஒரு முடிவுக்கு வந்தார்.
முதலில் மக்களின் வாழ்க்கை முறையையும் அறிவையும் வளர்க்கவேண்டும் என
அறிந்தார். மக்கள் எவ்வளவுக்கெவ்வளவு அவர்கள் வாழ்க்கை நலமும்
உயர்ந்து நிற்கும் என்பதையறிந்து, மக்களுக்குக் கல்வியைப்பரப்ப
அகரமுதலாகிய எழுத்துக்களையும், ஒன்று முதலாகிய
எண்கலையுந்தோற்றுவித்தார். தொழில் வளர்ச்சிக்காக வாள். வரைவு, உழவு,
வாணிபம், சிற்பம், கல்வி, ஆகிய அறு தொழில்களையுங் கற்பித்தார். மக்கள்
அனைவரும் குடும்பம் குடும்பமாகச் சேர்ந்து வாழவும், தொழில்களைச்
செய்யவும், கிராமங்களையும் நகரங்களையும் அவற்றில் வீடுகளையும்
தோட்டங்களையும்,
ஏரிகளையுங் குளங்களையும், புன்செய் நன்செய்
நிலங்களையும் நாடெங்கும் அமையவும் வகைசெய்தார். அதுமட்டுமல்ல, மக்கள்
வாழ்க்கையைச் செம்மைப் படுத்தவேண்டிப் பல சட்ட திட்டங்களையும்,
இல்லறம் துறவறம் ஆகிய இரு பேரறங்களையும் வகுத்தார். இவ்வாறு பல்வேறு
திட்டங்களுடன் ஒரு புது சமுதாயத்தையே தோற்றுவித்தார்.
அறத்தின் தோற்றம்
பகவான் விருஷபதேவர், தாம் தொகுத்த திட்டங்களையும் கொள்கைகளையும், தம்
பெயராலோ மதம், சமயம் என்ற பெயராலோ அழைக்காமல், பொதுவாக அவைகளை 'அறம்'
என்றே அழைத்தார். இவ்வறநெறியில் உலகியல், அருளியல், பொருளியல்,
அறிவியல் ஆகிய உயா�ய கொள்கைகள் அடங்கியிருந்தமையால் அவ்வறிவியக்கக்
கொள்கைகளையே முதல் நூலாக உலகம் ஏற்றுக் கொண்டது.
இன்று நமக்குக் கிடைத்துள்ள பண்டைய நூல்களாகிய தொல்காப்பியம்,
திருக்குறள், சீவகசிந்தாமணி, சிலப்பதிகாரம், சூளாமணி, நாலடியார்,
பெருங்கதை, மேருமந்தர புராணம் நீலகேசி, ஜீவசம்போதனை, நன்னூல் போன்ற
நூல்கள் எல்லாம், அறம், பொருள், இன்பம், வீடு என்ற கொள்கைகளையே
வற்புறுத்திக் கூறுகின்றன. இவ்வாறு அறத்தினை வற்புறுத்திக் கூறும்
நூல்கள் யாவும் பகாவன் விருஷப தேவர் வழி வந்தவை. இவ்வுண்மையைத்
தொல்காப்பியர்.
"வினையின் நீங்கி விளங்கிய அறிவின்
முனைவன் கண்டது முதனுலாகும்"
எனப் போற்றியுள்ளார்.
"பூமலிய சோகினீழற் பொலிந்த வெம்மடிகண் முன்னாள்
ஏமமா முதனூல் சொல்ல"
என சூடாமணி நிகண்டாசிரியர் மண்டல புருடரும் விளக்கியுள்ளார்.
யாப்பருங்கலவிருத்தி உரையாசிரியர், முதல் நூல் என்பது.
"குற்றங்கெடுத்து முற்றவுணர்ந்த
நற்றவத்தோன் சொற்றதாகும்"
எனப் பேசுகின்றார்.
"ஆதிவேதம் பயந்தோய் நீ; அலர்
பெய்மாரியமைந்தோய் நீ;
நீதி நெறியை யுணர்ந்தோய் நீ
நிகா�ல் காட்சிக்கிறையோய் நீ."
என சீவகசிந்தாமணி ஆசிரியர் திருத்தக்க தேவரும்.
"ஆதிவேதத்து நாதன் புருவிந்த வுலகமேத்த
நீதி மாதவத்தைத் தாங்கி"
என மேருமந்தர புராண ஆசிரியரும்
சங்ககாலப் புலவர்களில் பெரும்பாலோரும் இவ்வறத்தின் திறனையும்,
தோற்றுவித்தத் தனிப்பெருந்தலைவனையும் ஆங்காங்கு விளக்கிப்
புகழ்கின்றார்கள். அதுமட்டுமல்ல!'திருவறம்' எனப் பல நூல்களில்
பெருமையுடன் பேசப்படுகின்றது.
"திங்கள் மும்மாரி பெய்க திருவறம் வளர்க செங்கோல்
நன்கினி தரசனாள்க..."
எனச் சீவகசிந்தாமணியிலும்,
"விரையார் மலர்மிசை வருவார் திருவறம் விழைவார்."
எனத் திருக்கலம்பகத்திலும்,
"முக்குடை நீழல் மணிச்சாமரை வீசவுடன்
மூவுலகும் பரவத்தீவினை போயகலத்
திக்குடையாடையுடன் தாமரைமேல் வருவார்
திருவற மல்லது வேறொரு பொருளுங்கருதேன்"
எனத் தேரத்திரத் திரட்டிலும்,
"அரியது திருவற மல்ல தில்லையேல்"
என மேருந்தர புராணத்திலும் இதுபற்றிக் காணலாம். இத்திருவறத்தின்
தலையாய அறமே அஹிம்ஸா பரமோதர்ம: என்பது அறம் என்றால், 'ஐயமிடுதல்'
என்ற கொள்கையில் பேசுவோரும் உண்டு. ஆனால் பகவான் விருஷபதேவர் வகுத்த
அறம் ஒழுக்கத்தை அடிப்படையாகக் கொண்டது. உயிர்கட்கு அரண் செய்வது.
"மெய்ப்பொருள் காட்டியுயிர்கட்கரணாகிக்
துக்கங்கெடுப்பது நூல்"
எனக் அருங்கலச் செப்பின் இலக்கணப்படி அமைந்தது. அதனாற்றான் நீலகேசி
ஆசிரியர்
"நல்லார் வணங்கப்படுவான் பிறப்பாதி நான்கும்
இல்லான் உயிர்கட்கு இடர் தீர்த்து
உயா�ன் பமாக்கும் சொல்லான்"
எனவும், திருநூற்றாந்தாதி ஆசிரியர்
"மறமே முனிந்து மயிலாபுரிநின்று மன்னுயிர்கட்கு
அறமே பொழியும் அருட் கொண்டலே...."
எனவும், மேருமந்தர புராண ஆசிரியர்
"தோன்றிமாய்ந்துலக மூன்றிற்றுயரெய்து
முயிர்கள் தம்மை
ஈன்றதாய் போல வோம்பியின் பத்துளிருத்தி நாதன்
மூன்றலகிற்குமாக்கி முடிவிலாத் தன்மைநல்கும்
ஆன்ற நல்லறத்தைப்போலும்
அரியதொன்றில்லையென்றான்"
எனவும் துத்துள்ளார்கள். இவை போன்ற அறநூல்கள் பலவற்றிலும் காணலாம்.
இதற்குச் சான்று திருக்குறள் அறத்துப்பால் ஒன்றே சாலும். சிறப்பாகக்
கூறுமிடத்து இவ்வறம், கொல்லாமை, பொய்யாமை, கள்ளாமை, பிறர்மனைநயவாமை,
மிகு பொருள் விரும்பாமை, என ஐந்தில் அடங்கும்.
"பொ�யகொலை பொய்களவொடு காமம்
பொருள் வரைதலோ டைந்து"
என்ற அருங்கலச் செப்பின் அறிவுரை நமது கொள்கையை உறுதிப்படுத்துகிறது.
எனவே, மக்கள் வாழ்க்கையை மாண்புறச் செய்யும் இத்திருவறத்தினையே
மெய்ப்பொருள் எனக்கொண்டனர்.
"எப்பொருள் யார் யார் வாய்க்கேட்பினும்
அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு"
-எனக் குறளும்
மெய்ப்பொருள் தேறுதல் நற்காட்சியென்றுரைப்பர்
எப்பொருளுங் கண்டுணர்ந்தார்
என அருங்கலச்செப்பும் நவில்வதையும் ஓர்க.
எனவே, இம்மெய்ப்பொருளின் தலையாய அறமாகிய அஹிம்ஸையையும் அதனைத்
தோற்றுவித்த அறிவனையும் அறிந்தோம். இனி, அஹிம்ஸையின் தன்மையை
ஆராய்வோம்.
அஹிம்ஸையின் தத்துவம்
அஹிம்ஸை என்றால், பிற உயிர்களை ஹிம்சை செய்யாமலிருப்பது என்ற ஒரே
பொருளால் பெரும்பாலோர் நோக்குகின்றனர். அ�து உண்மையேயாயினும், அதன்
உட்பொருள்களை ஆராய்ந்தால் நம்மை இன்ப வெள்ளத்தில் இழுத்துச் செல்லும்.
அஹிம்ஸையும் அன்பும் ஒன்றையொன்று பற்றி நிற்பவனாகும். அஹிம்ஸையின்
வழியில்தான் மற்ற அனைத்தும் அமையும் அஹிம்ஸையின் அடிப்படை தன்னைப்போல்
பிறரை நோக்கலும், பிறருக்கு வரும் துன்பத்தைத் தமக்கு வருவதாக எண்ணி
அத் துன்பத்தை நீக்கி முயலுதலுமாம். அவ்வாறு இல்லையேல் அவன்
வாழ்வதினும் சர்வதே மேல்.
"இனியார்தம் நெஞ்சத்து நோய் உரைப்ப அந்நோம்
தணியாத உள்ளம் உடையார் - மணிவரன்றி
வீழும் அருவி விறன்மலை நன்னாட!
வாழ்வின் வரைபாய்தல் நன்று."
என்பது நாலடியார்.
எனவே, அஹிம்ஸையை அறிதல் வேண்டுமாயின், பிறர் நோயெல்லாம் தன்னோய் போல்
போற்றவேண்டும். அதனாற்றான் திருக்குறளில் தேவர்.
"அறிவினான் ஆகுவதுண்டோ பிறிதின்நோய்
தந்நோய்போல் போற்றாக் கடை." -எனவும்
"தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது
மன்னுயிர் வைகலும் ஓம்பி வாழுமேல்"
எனவும், தோலாமொழித் தேவர் சூளாமணியில்,
"மன்னுயிர் வருத்தங்கண்டும் வாழ்வதே வலிக்குமாயின்
அன்னவன் ஆண்மையாவ தலிபெற்ற அழகுபோலாம்"
எனவும் கூறியுள்ளார்கள். எனவே, இத்தகைய உயா�ய பண்புகளைக் கொண்ட
அஹிம்ஸையின் வழியில் மக்கள் நின்றால், உலகெங்கும் சகோதர உணர்ச்சியும்,
தன்னலமின்மையும், பிற உயிர்கள்பால் அன்பும், இயல்பாகவே வளர்ந்தோங்கும்.
ஆகவே, பகவான் விருஷபதேவர், மக்கள் சமுதாயம் அனைத்தும் ஒரே
குடும்பம்போல் ஒற்றுமையும் அன்பும் பூண்டு வாழவேண்டும் என்ற
காரணத்திற்காகவே, மக்களிலே உயர்வு தாழ்வுகளையோ, சாதி சமயங்களையோ
கற்பிக்கலாம், அஹிம்ஸையை அடிப்படையாகக் கொண்ட அறத்தினையே அருளினார்
இதனையே,
"யாதும் ஊரே யாவரும் கேளீர்!"
என்றார் புறநானூற்றிலே கணியன் பூங்குன்றனார்.
வகுப்புவாதமும் சமயவெறியும் சாதிப்பூசலும் அணுகுண்டு முழக்கமும் தலைவிரித்தாடும்
இந்த இருபதாம் நூற்றாண்டில், உலகெங்கும் சமாதான நிலையை உண்டாக்கவே
மகாத்மா காந்தியடிகள் பகவான் விருஷப தேவர் கண்ட அஹிம்சா தருமத்தை
அரசியலிலே புகுத்தினார்.