 |
மிகுபொருள் விரும்பாமை
"சோலைதாழ் பிண்டிக்கீழ்ச் சூழ்ந்தவர்தஞ்
சொன் முறையான்
மலையறமுந் துறவறமும் மண்ணவர்க்கும்
விண்ணவர்க்கும்
விளையறுக்கும் வகைதொ�ந்து வீடொடு
கட்டிவை யுரைத்த
தொன்மைசால் மிகுகுணத்தெம் துறவரசைத்
தொழுதேத்த
நம்மைசால் வீடெய்து மாறு"
என யாப்பருங்கலக்காரிகை உரையாசிரியர் குணசாகரர் மேற்கோளாகக்
காட்டியுள்ளார். இது போன்று பகவான் விருஷப தேவரையும் அவர் வகுத்த அற
நெறிகளையும் போற்றிப் புகழ்வதைத் தமிழ் இலக்கியங்களிலும் வடமொழி
இலக்கியங்களிலும் காணலாம்.
பகவான் விருஷபதேவர் அருளிய ஐம்பெரும் அறங்களிலே, மிகுபொருள்
விரும்பாமை ஒன்று என்பதை முன்னரே அறிந்துள்ளோம். மக்கள் சமுதாயம்
சமாதானத்துடனும் சகோதர உணர்ச்சியுடனும் வாழ அஹிம்ஸை தருமம் எவ்வளவு
இன்றியமையாததோ, அவ்வளவு இன்றியமையாதது மிகுபொருள் விரும்பாமை என்ற
கொள்கையும் தன் தேவைக்கு மேலான பெரும்பொருளை ஒருவர்
பதுக்கிவைத்திருந்தால் அது பிறருடைய வாழ்க்கையைப் பாதிக்கும். ஆகவே,
அவ்விழி செயல் மனித சமூகத்திற்கே துரோகம் செய்த குற்றமும் பாவமும்
ஆகும். ஏன்! களவைவிட எவ்விதத்திலும் குறைந்ததுமல்ல. எனவே, விருஷபதேவர்
அஹிம்ஸையும் மிகுபொருள் வெ�கோமையையும் உலகிற்கே தலைசிறந்த அறங்களாகத்
தொகுத்தளித்தார்.
திருக்கலம்பக ஆசிரியர் இல்லறத்தாருக்குரிய கொள்கைகளை விளக்கும்போது,
"விரையார் மலர்மிசை வருவார் திருவறம் விழைவார்
கொலையினை விழையார் பொய்
யுரையார் களவினையொழுகார் பிறர் மனையுவவார்
மிகுபொருள் உலவார் வெஞ்
சுரையா லுணர்வினை யழியா ரழிதசை துவ்வார்
விடமென வெவ்வாறும்
புரையார் நறவினை நுகரார் இரவுணல் புகழார்
குரவரை இகழாரே" என்றும்.
அருங்கலச்செப்பு ஆசிரியர்.
"பொருள் வரைந்தாசைக்சுருக்கி யேவாமை
யிருள் தீர்ந்தார்க்கைந்தாம்வதம்" என்றும்,
சீவக சிந்தாமணி ஆசிரியர்.
தெருளிற்பொருள் வானுலமேறுதற்குச் செம்பொன்
இருளில் படுகால் புகழ்வித்தில்லை யெனினெல்லா
அருளுநக வையாக வைம்பொறியும் நையப்
பொருளுநக வீட்டும்பொருள் யாதும் பொரளன்றே"
என்றும்,
மற்றோரிடத்தில்
"மல்லன மலையானைய மாதவரைவைதுரைக்கும்
பல்லவரேயன்றிப் பகுத்துனாப் பாலிகளும்" என்றும்,
நீலகேசி ஆசிரியர்,
"கோறல் பொய்த்தல்கொடுங்களவு நீக்கிப்
பிறர் மனை கண்மேற்
சேறலின்றிச் செமும்பொருள்மேற்
சென்றசிந்தையினை ஆறுநிற்பின்......என்றும்
யசோதரகாவிய ஆசிரியர்
"பெருகியகொலையும் பொய்யும் களவோடு பிறன் மனைக்கண்
தொ�விலாச் செலவும் சிந்தை பொருள் வயிற்றிருகுபற்றும்
மருவிய மனத்து மீட்சி வதமிவை யைந்தோ டொன்றி
ஒருவின புலைசுதேன்கள் ஒழுகுத லொழுக்கமென்றான்"
என்றும்,
மேருமந்தர புராணத்தில்,
"பொய் கொலை களவு காமப் புலைப் சுதேன் கள்ளகற்றி
மெய்யுறத் திசையினோடு பொருள் வரைந்து" என்றும்,
விளக்கியுள்ளார்கள்.
இதனால் மிகுபொருள் விரும்பாமை இல்லறத்தாருக்குரிய அறங்களில்
ஒன்றாகிறது. பொருளுடையோர் பிறருக்கு உதவி செய்தல் வேண்டும் என்னும்
கொள்கையை பொதுவாக எல்லாரும் கூறுகின்றாராயினும் பகவான் விருஷப தேவர்
அறம், பொருளைத் தேவைக்கு மேலாக வைத்திருத்தலாகா தென்பதாகும்.
வெ�காமையும் திருக்குறளும்
கொல்லாமையும், மிகுபொருள் விரும்பாமையுமே தலை சிறந்த அறங்களென்பதைத்
திருக்குறள் ஆசிரியர்.
"பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்று வெல்லாந் தலை"
என, அழகாக விளங்குகின்றார். அதுமட்டுமல்ல! "நூலோர்" என்னுங்
குறிப்பால் மேலே கூறிய இரு அறங்களையும் முதன்முதல் தொகுத்தளித்த
விருஷப தேவா�ன் வரலாற்றை வெளியிட்டு,
நன்மை இன்பக் கடலில் ஆழ்த்துகின்றார். திருக்குறளாசிரியர் இக்குறளிலே
மிகுபொருள் வெ�காமையை நன்கு விளக்கியுள்ளார். பகுத்துண்ணல் என்பது
தம்மிடத்திலுள்ள மிகுதிப் பொருள்களைப் பதுக்கி வையாமல் பலருக்கும்
பயன்படுமாறு தமது பொருள் வருவாயை அளவு படுத்திக்கொண்டு எளிய
வாழ்க்கையை நடத்தி வர வேண்டுமென்பதேயாகும். இதனால் பலருக்கும்
பொருளிட்டும் வாய்ப்பும், வாழ்க்கையை இன்பகரமாய் நடத்திக்கொள்ள
வழியும் ஏற்படும். இவ்வுயா�ய பொருளாதரத் தத்துவத்தை வற்புறுத்தவே
திருக்குறளாசிரியர் தேவர், மிகுபொருள் வெ�காமை என ஒரு அதிகாரத்தையே
அமைத்துள்ளார். ஆனால் இன்று வெ�காமை, எனக் காணப்படுவது
பிற்காலத்திருக்கமேயாகும் மக்கள் வாழ்க்கை நலத்தைச் சிறிதும்
பொருட்படுத்தாத சமயவெறி வெ�காமை என்றால் பிறர்பொருளை அபகா�யாமை எனப்
பொருள்கூறுமாறு செய்து, மிகுபொருள் விரும்பாமை யென்னும் பொதுவுடைமைத்
தத்துவத்தை அறிஞர்களின் அறிவிற்கும், எட்டவொட்டாமற் செய்துவிட்டது.
எனினும் சிந்தனைச் செல்வர்கள் கள்ளாமை என்னும் அதிகாரம் இருக்கையில்,
பிறர் பொருளை அபகா�யாமை என ஓர் அதிகாரம் எற்றுக்கெனச் சிந்தியாமலு
மில்லை. தமிழ் நாட்டின் துரதிர்ஷ்டம் திருக்குறளுக்குத் தருமர் போன்ற
பேராசிரியர்களின் உரைகள் மறைந்து விட்டமையால் பா�மேலழகா�ன் உரையே
இன்று பெரும்பாலுங் கையாளப்படுகிறது. பா�மேலழகரும் மணக்குடவரும்
வெ�காமை என்ற அதிகாரத்தைப் பிறர்பொரள் அபகா�யாமை, பிறர் பொருள்
விரும்பாமை என்று கூறி மாறுபடுகின்றார்களே யன்றி, பிறர் பொருள்
என்பதில் இருவருக்கும் கருத்து வேற்றுமை இல்லை. இவை யிரண்டும் குறளாசிரியர்
கருத்துக்கு மாறுபட்டவை. குறளாசிரியர் தமது கருத்தை முதற்குறிளிலேயே
விளக்கியுள்ளார்.
"நடுவின்றி நன்பொருள் வெ�கின் குடிபொன்றிக்
குற்றமும் ஆங்கே தரும்"
என்பதில் நன்பொருள் என்பதற்கு நல்ல பொருள் என்றும் மிகுதிப்பொருள்
என்றும் பொருள் படும். நல்ல என்றால் மிகுதி எனும் பொருளை, நல்ல மழை
பெய்தது, நன்றாக அடித்து விட்டான் என்ற உலகியல் வழக்கிலே காணலாம்.
தொல்காப்பியத்திலும் "நன்று பொ�தாகும்" என்பது சூத்ரம். மேலும்"
நடுவின்றி நன்பொருள்" என்பதனால் இங்கே நடுநிலைமை யில்லாமல் மிகுதிப்
பொருளை பதுக்கி வைப்பாராயின் என்பது தான் பொருந்தும், பா�மேலழகர்
கூற்றுப்படி பிறருடைய நல்ல பொருளை வெ�குதல் கூடாதென்றால் கெட்டபொருளை
விரும்பலாம் என்றாகிறது. ஆகவே அவருடைய உரை சமய சார்பற்ற பகவான்
விருஷப தேவா�ன் அறநெறிக்கு முறணானது. அவர், குறளைச் சமய நூலாக மாற்ற
வேண்டி இவ்வதிகாரத்தின் தலைப்பைத் திருத்தித் தவறான கருத்தைப் பரப்பி
விட்டார். சமீபகாலத்தில் தருமபுர ஆதினத்தாரால் வெளி யிடப்பட்ட "திருக்குறள்
உரைவளம்" என்ற நூலில் பா�மேலழகருக்கு முற்பட்டவர்களான மணக்குடவரும்
காளிங்கரும் நன்பொருள் என்பதற்கு மிக்க பொருள் என்றே உரை
எழுதியுள்ளதைக் காணலாம். இதனைப் பிறர்பொருள் விரும்பாமை எனப் பொருள்
கெண்டால் மிகு பொருள் விரும்பாமை என்னும் பொருளாதார சமத்துவம் மறைந்து
விடுகிறது. எனவே, குறளாசிரியர் மிகு பொருள் வெ�காமை என்ற அதிகாரத்தின்
வாயிலாக மிகுபொருள் விரும்பாமையையே வற்புறுத்திக் கூறுகின்றார் என்பது
துணிபு. இன்றைய நிலைமையை நோக்கும்போது மிகுபொருள் விரும்பாமை என்ற
கொள்கை எவ்வளவு அவசியம் என்பது புலனாகின்றதன்றோ? தங்கள்
கெளரவத்திற்கும் ஆடம்பரவாழ்க்கைக்கும் ஆசைப்பட்டுப் பெரும்பாலான
வியாபாரிகள் கள்ளச் சந்தைகளை பெருக்கிக் கொள்ளை லாபங்கள் பெற்று
வருகின்றனர். இதனால் பலர் பாதிக்கப்படுவதைச் சிறிதும் பொருட்படுத்தாத
இப்பெரும் பொருளாளர்கள்
உரிமையின் பெயரால் தேவைக்கு மேலான பொருளைத்
திரட்டிக் குவிக்கின்றனர். அவ்வாறு உரிமை பெற்றிருந்தாலும்.
அம்மிகுதிப் பொருள் பிறருடையதே என்பது தேவர் கருத்து. எனவே மக்கள் நல
மேம்பாட்டிற்குரிய ஐம்பெரும் அறங்களில் மிகு பொருள் வெ�காமை ஒன்று
என்பதையும் அவ்வறத்தை மேற்கொண்டு வாழ்வோரே அறிவுடையார் என்பதையும்
விளக்கவே திருக்குறளாசிரியர் தேவர்.
"அறனறிந்து வெ�கா அறிவுடையார்"
எனப் பாராட்டியுள்ளார். பகவான் விருஷப தேவர் அருளிய திருவறங்களைக்
கொண்ட தேவர் திருக்குறளைப் படித்துப் தெளிவும் அறிவும் அமையப் பெற்ற
நீலகேசி ஆசிரியர் தமது அவை அடக்கத்தில்
"தேவன் உரைப்பத் தெளிந்தேன் பிற்றெளிந்ததெல்லாம்
மாவென்று கொண்டேன்..........
எனப் பெருமையுடன் போற்றுகின்றார். அதுபோன்றே அதன் உரையாசிரியர்
சமயதிவாகர மாமுனிவரும் திருக்குறளை மேற்கோளாகக்
குறிப்பிடும்போதெல்லாம் "அ�து எம்மோத்தாதலால்" என உரிமை கொண்டு
பாராட்டி மகிழ்கின்றார். எனவே திருக்குறள் ஆசிரியர் பகவான் விருஷப
தேவர் வகுத்த அறங்களையே திருக்குறளாக இயற்றியுள்ளார் என்பது தெளிவு.
இங்கே திருக்குறளாசிரியரைப்பற்றி ஒரு சிறிது விளக்கி விட்டு மேலே
செல்வோம்.
திருக்குறளாசிரியருக்கு திருவள்ளுவர் என்ற பெயர் இடைக் காலத்தில்
ஏற்பட்டதே யன்றி அவருடைய உண்மைப் பெயரல்ல! அவருடைய பெயரையும், அவர்தம்
வரலாற்றையும் அறிந்து கொள்ள முடியாவிடினும் அவர்தம் பெயரின் இறுதியில்
தேவர் என்ற பட்டப் பெயர் இருந்ததென்பதற்குப் போதுமான சான்றுகள்
இருக்கின்றன. நாம் மேலே குறித்துள்ள நீலகேசி ஆசிரியர் திருக்குறளாசிரியரை
தேவன் என்றழைத்திருப்பதாலும், மாமூலனார் "அறம் பொருள் இன்பம்
வீடென்னும் நான்கின், திறம் அறிந்து செப்பிய தேவை" என்பதினாலும்,
சீவக சிந்தாமணியின் உரையாசிரியர் நச்சினார்க்கினியர் தமது உரையில்
திருக்குறளை மேற்கோளாகக் குறிப்பிடும்போதெல்லாம் தேவர் கூறுகின்றனர்
எனக் குறிப்பிடுவதாலும், ஒளவைப் பிராட்டியார் "தேவர் குறளும் திருநான்
மறை முடிவும்" என அருளியிருத்தலானும், திருக்குறளாசிரியா�ன் பெயர்
தேவரென்றே வழங்கிற்றோவெனவும் சந்தேகிக்க இடமளிக்கின்றது.
புலவர்களுக்கெல்லாம் புலவராய் விளங்கும் திருக்குறளாசிரியரை
அக்காலத்துப் புலவர்களும், பிற்காலத்துப் புலவர்களும் அவா�டம்
கொண்டுள்ள மா�யாதையின் காரணமாகவும், புலமையின் காரணமாகவும். அவர் தம்
முழுப் பெயரையும் கொண்டு அழையாமல் தேவர் என்றே அழைத்தனர் போலும்! ஒரு
சமூகத்தில் செல்வாக்கும், மதிப்பும் வாய்ந்த ஒருவரை அச்சமூகத்தார்
அவர் தம் பெயரைக் கொண்டழையாமல் செட்டியார் என்றோ, முதலியாரென்றோ
அழைப்பதைப் போன்று புலவர் சமூகத்தில் திருக்குறள் ஆசா�யரை தேவர்
என்றழைக்கும் வழக்கம் நிலவியிருந்தத. எனவே நாம் முன்னர் கூறியபடி
திருக்குறளாசிரியர் அறவாழி அந்தணானும் பகவான் விருஷப தேவா�ன் அறக்
கடலிலிருந்தே திருக்குறளெனும் திருவறத்தைத் திரட்டி யளித்தார் என்பது
உறுதியாகிறது.