 |
சிறு தெய்வ வழிபாடும் உயிர்ப்பலியும் தோன்றிய வரலாறு
வரலாற்று ஆசிரியர்களின் ஆராய்ச்சிப்படி மக்கள் முதன்முதல்
காட்டுமிராண்டிகளாகவே வாழ்ந்தனர் என்பதையும், பெரும்பாலான மக்கள்
காடுகளிலும் மலைகளிலும் வசித்துவந்தனர் என்பதையும், அறிகின்றோம்.
அவ்வரலாற்றை அடிப்படையாக வைத்து ஆராய்ந்தால் நமக்குப் பல உண்மைகள்
தெளிவாகின்றன. காடுகளிலும், மலைகளிலும் வாழ்ந்துவந்த மக்கள் தங்கள்
தலைவனுக்குச் கட்டுப்பட்டு நடந்து வந்தனர். அவன் ஆணையை சிரமேற்கொண்டு
செயலாற்றுவதே தங்கள் கடமையாகக் கொண்டிருந்தனர்-உயிரைப் பற்றிக்கூட
கவலைப்படுவதில்லை! தலைவன் ஆணையையே அவர்கள் கடவுள் கட்டளையாகக்
கொண்டனர். அத்தகைய தலைவன் இறந்துவிட்டால், அவனை நினைத்தற்கறிகுறியாக
ஒரு கல் நாட்டி, அவனை வழிபட்டுவந்தனர். அது அக்கால வழக்கமாகவும்
இருந்தது. அதனை உலகம் இன்றும் மறந்துவிடவில்லை. அச்சீரிய கொள்கை தமிழ்
நூல்களில் "கால் கோள் விழா" என்றும், இன்றைய நாட்களில் சிலை நிறுத்தல்
என்றும் பலவிதமாக வழங்கப்பட்டு வருகின்றது.
இத்தகைய சிறந்த கொள்கையினின்றும் முளைத்ததுதான் "சிறுதெய்வ வழிபாடு"
காடுகளில் வசித்த மக்கள் தங்கள் தலைவன், தலைவிகளின் நினைவு கற்களுக்கு
ஆண்டுதோறும் விழா நடத்திச் சிறப்பியற்றினர். அன்று அவர்களுக்குரிய பல
வெறியாட்டங்களையும் நிகழ்த்தி வந்தனர். மேலும் தலைவனுக்குப்
பிரியமான
பலவித மிருகங்களின் ஊனையும், கள்ளையும் படைத்துப் பலரும் சேர்ந்து
உண்டு களித்தனர். இந்த நினைவுக் கொண்டாட்டமே பிற்காலத்தில் தெய்வ
வழிபாடாகவும், அக்கல்நாட்டுக் குறிகள் உருவங்களாக்கப்பட்டுத்
தெய்வங்களாகவும் மாறிவிட்டன. அவைகளே சிறு தெய்வங்களனென நம்மிடையே
காட்சியளிக்கின்றன.
காடுகளில் வசித்துவந்த வேடர்களும் குறவர்களும் தாங்கள் வழிபடும்
தெய்வங்களுக்கு உயிர்ப்பலி கொடுத்துவந்தனர் என்பதை நமது சங்ககால
நூல்களிலும், சிலப்பதிகாரம் போன்ற காவியங்களிலும் காணலாம்.
அந்நாட்களில் நரபலிகள் என மனதர்களையும் குழந்தைகளையும் கூடப்
பலியிட்டனர் என்பதை விளக்கக் கல்வெட்டுகளும் நூல்களும் இருக்கின்றன.
இன்றும் அம்மூட வெறியால் சில குற்றமற்ற குழந்தைகள் பலியிடப்படும் பா�தாபகரமான
செய்தியையும், அதனால் தூக்குமேடையில் மடியும் பூசாரிகள்,
மந்திரவாதிகளின் மரணக்கோரத்தையும் அடிக்கடி பத்திரிகைகளிலே
பார்க்கின்றோம்.
காட்டு வழக்கம் நாட்டிற்குள் வந்த வரலாறு
இவ்வாறு காடுகளில் வளர்ந்து வந்த பழக்கவழக்கங்கள் நாடுகளில் எவ்வாறு
கலந்தன என்பதை அறிந்தால் ஆச்சா�யம் உண்டாகும். காட்டுமக்கள் தங்கள்
வாழ்க்கைக்கு வேண்டிய பொருள்களைப்பெற பலவகைப் பழங்களையும், பச்சிலை
மூலிகைகளையும், வேர்களையும் கிராம நகரங்களில் விற்றுப்
பிழைத்துவந்தனர். இன்னும் சிலர் தங்கள் தெய்வங்களைப்பற்றியும்,
அவைகளின் அற்புதச் சக்திகளைப்பற்றியும் பலவித பயங்கரமான வேடங்களுடன்
பாடியும் ஆடியும் மக்களைப் பயமுறுத்திப் பிச்சை ஏற்றுவந்தனர்.
உலகில் தோன்றும் காலரா, வைசூரி, பிளேக் முதலிய கொடிய விஷ வியாதிகளும்,
மழையின்மை, வறுமை முதலிய துன்பங்களுக்கு அத்தெய்வங்களின் கோபத்தாலேயே
உண்டாகின்றன என்று அவைகளைப் பலவித பூசைகளால் சாந்தப்படுத்தி,
காட்டிற்கு நன்மை செய்யவே வந்துள்ளோம் என்றும் கூறி மக்களுக்கு ஒரு
வித அச்சத்தையும், ஆசையையும் தெய்வத்தின் பெயரால் உண்டாகிவிட்டனர்.
இதனால் பாமர மக்கள்-குறிப்பாகப் பெண் மக்கள்- அச்சங்கொண்டு
தங்களாலியன்ற அளவு தானியமாகவும் பொருளாகவும் அத்தெய்வங்களுக்குக்
காணிக்கைகளெனச் செலுத்திவந்தனர், நாளாக, நாளாக அவைகளை
வழிபடக்காடுகளுக்கேகவும் ஆரம்பித்துவிட்டனர். இவ்வாறு நாட்டிலுள்ள
பொதுமக்களுக்குக் காட்டு மக்களின் தெய்வங்களிடம் நம்பிக்கையும்,
பக்தியும் வளரவேநாட்டிலும் பூசாரிகள் பலர் தோன்றிவிட்டனர். ஒவ்வொரு
கிராமத்திலும் நகரத்திலும் அத்தெய்வங்களை நிறுவினர். நாடெங்கும் சிறு
தெய்வ வழிபாடுகளும், உயிர்ப்பலிகளும், நரபலிகளும் மலிந்து விட்டன.
இவ்வரலாற்றை அறிய ஆராய்ச்சி நூல்களைத் தேடிச் செல்லவேண்டியதில்லை.
இத்தெய்வங்களின் கோயில்கள், அந்தந்த கிராமங்களின் புறம்பாகவோ அல்லது
எல்லையோரத்திலோ அமைந்திருக்கும் நிலையும், பூசாரிகள் தாங்கள் பாடும்
பாட்டுகளிலே,
"கானகத்தில் வீற்றிருக்கும் கண்ணணூர்
மாரிமுத்தே
ஈச்சங் குறக்கூடை இருக்கட்டும் பொன்னாலே
தாழங் குறக்கூடை தனிக்கட்டும் பொன்னாலே
ஏரிக்கரை மேடைவிட்டு எழுந்தருளவேணுமம்மா
எல்லைப்பதியை விட்டு இனிதாக வாருமம்மா?"
என்று பாடும் பாட்டுகளும் அவர்கள் உபயோகிக்கும் பயங்கரமான
வாத்தியங்களும், ஆவேசமாடும் மருளாளி ஆடிப்பாடிவிழுந்தவுடன் "மலையேறிவிட்டது"
எனக்கூறும் வார்த்தையுமே இவைகள் காட்டு வழக்கங்கள் என்பதை
மெய்ப்பிக்கப் போதுமான சான்றுகளாகும். இப்போலி சிறுதெய்வங்களும்
உயிர்ப்பலியும் நாட்டுமக்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமாகி மத
சம்பந்தமாகவும் கலந்துவிட்டன. தேவிபாகவதம், காளி மகாத்மியம், பவிஷ்ய
புராணம் முதலிய நூல்களும் இயற்றப்பட்டன. அன்றே அறம் சாய்ந்தது! மறம்
வளர்ந்தது! அதுமட்டுமா? தாழாத் தமிழகம் தாழ்ந்தது!
தமிழ் இலக்கியங்களின் கண்டனங்கள்!
அறிவையும் அறநெறியையும் அடிப்படையாக வைத்து மக்கள் பண்பை வளர்க்கும்
திருக்குறள் போன்ற அற நூல்களுக்கு மாறாக இத்தகைய கோர சம்பவங்கள்
மதத்தின் பெயரால் பரவி வரவே, அறிஞர்களும், மதத்தலைவர்களும் கண்டிக்க
ஆரம்பித்தனர். தமிழ்க் காவியங்களிலே தலைசிறந்த காவியமாக விளங்கும்
ஜீவக சிந்தாமணியின் ஆசிரியர்,
"மண்ணார மஞ்சளுரிஞ்சி மலர்சூட்டிக்
கண்ணார் மறியறுத்துக் கையாலுதிரத்தூய்
உண்ணீரேதேவீர் உவந்தென்பதிவ்வுலகம்
கண்ணார் கடந்தாய் நமனுலுகின் நான் மடங்கே"
என மக்களின் அறியாமைக்கு வருந்திப் பாடியுள்ளார்.
"சண்டகோபி தகவலின் தத்துவம்
கொண்ட கேள்வியுங் கூரறிவுமிலாத்
தொண்டர் கொண்டு தொழும் துருத்
தேவதை சண்டமாரி..."
என யசோதர காவிய ஆசிரியரும் வெறுத்துள்ளார்.
"மாமாங்க மாடல் மணற்குவித்தல் கல்லிடுதல்
தாமோங்கு உயர் வரைமேல் சாவீழ்தல்-காமங்கொண்டு
ஆடோடெருமை அறுத்தல் இவை உலக
மூடமென உணரபாற்று"
என அறநெறிச்சார ஆசிரியரும்,
"வேதவாதியர்கடம் வேள்வி வாய் விட்டவும்
பூததேவர்கட் கெனாப் புல்லியோர்கள் கொல்லவும்"
என சிவவாக்கியரும்,
"ஆடுவெட்டிப் பொங்கலிடும் ஆயன் பிடாரி யெல்லாம்
கூடுவிட்டுப் போமுயிரை ஞானத்தங்கமே
கொண்டு வந்து தாராதடி ஞானத்தங்கமே"
என ஒரு சித்தரும்,
"நலி தருசிறிய தெய்வ மென்றையோ நாட்டிலேபல பெயர்நாட்டிப்
பலிதர ஆடு, பன்றி, குக்குடங்கள் பலிக்கடா முதலிய உயிரைப்
பொலிவுறக் கண்டும் போகவுங்கண்டே புந்தி நொந்துன நடுக்குற்றேன்
கலியுறு சிறிய தெய்வ வெங்கோயில் கண்ட காலத்தெலாம் பயந்தேன்"
என இராமலிங்க அடிகளும்,
"மாடனைக், காடனை, வேடனைப் போற்றி
மயங்கும் மதியிலிகாள்"
என நமது அரசியல் கவிஞர் சுப்ரமண்ய பாரதியாரும்,
"வேள்வியென்றோ உயிர்க்கொலை செய்தல்?
வேண்டல் என்றோ உயிர்ப்பலி செய்தல்?
கேள்வி யில்லை-கிளர்ச்சியு மில்லை!
கெட்ட கூட்டம் கிளைத்தல் அறமோ"
என்று தமிழ்ப் பொ�யார் திரு.விட.க. அவர்களும் சிறு
தெய்வவழிப்பாட்டையும், உயிர்ப்பலியையும் வன்மையாகக் கண்டித்துள்ளனர்.
மஹாத்மா காந்தியடிகளின் அறிவுரைகள்
அஹிம்ஸை, சத்தியம் ஆகிய இருபேரறங்களையும் அரசியலிலே புகுத்தி, மக்கள்
பண்பையும், நாட்டின் நலனையும் ஒருங்கே சீர் திருத்திவந்த மகாத்மா
காந்தியடிகள் தமது சத்தியசோதனையில்
ஓரிடத்தில் இந்த
உயிர்ப்பலியைப்பற்றிக் கூறுகையில் "அறிவு நலன், தியாகஉணர்வு,
பக்திக்காதல் இவற்றிற்குப் பெயர்பெற்ற நமதுநாடு இந்த உயிர்ப்பலிகளை
எவ்வாறு சகித்துக்கொண்டிருக்கிறதோ" என வருந்தி எழுதியுள்ளார்.
மேலும் திருநெல்வேலியைச் சார்ந்த பாளையங்கோட்டை ஆயிரத்தம்மன் கோயிலில்
எருமைக்கடாக்களும் சூலாடுகளும் பலியிடுவது வழக்கம். இக்கோரமான
உயிர்பபலியை நிறுத்தவேண்டி பிரசாரத்திற்காக 1937ஆம் ஆண்டில்
பாளையங்கோட்டைக்குச் சென்றிருந்தேன். திருநெல்வேலி சைவ சித்தாந்த
நூற்பதிப்புக் கழக மானேஜர் உயர்திரு. திருவரங்கம் பிள்ளை அவர்களும்
அவர் தம் மனைவியார் பண்டிதை நீலாம்பிகை அம்மையார்; அவர்களும் மற்றும்
அக்கழகப் பொ�யோர்களும் எங்கள் பிரசாரத்திற்குப் பேராதாவு தந்தார்கள்.
அதனால் பல பொதுக்கூட்டங்கள் நடத்தி உயிர்ப்பலியைக் கண்டித்துவந்தோம்.
ஆனால் எதிர்ப்புப் பிரசாரமும் பலமாக ஏற்பட்டுவிட்டது. நல்லகாலமாக
எதிர்ப்பு கற்போர் மற்போராக இல்லாமல் பிடிவாதப்போராகவே வளர்ந்தது. இதை
சமாளிக்க ஒரு எண்ணம் தோன்றிற்று. உடனே மகாத்மா காந்தியடிகளுக்கும்
அவ்வாண்டு நமது நாட்டின் ராஷ்டிரபதியாய் விளங்கிய பண்டிட்
ஜவஹர்லால்நேரு அவர்களுக்கும் இவ்வுயிர்ப்பலியைப் பற்றி அப்பொ�யோர்களின்
கருத்துக்களை அறிவிக்குமாறு தந்தி கொடுத்தோம். அவ்விரு மாபெருந்
தலைவர்களும் பின்வருமாறு நமக்குத் தந்தி அனுப்பி உதவினார்கள்.