 |
ஜீவரக்ஷக சபையின் தோற்றமும் சேவையும்
சென்னை தென்னிந்திய ஜீவரக்ஷகப் பிரசார சபை 1926-ஆம் ஆண்டு டிசம்பர்
மாதம்
9-ஆம் தேதி சென்னையில் திறக்கப்பட்டது. இச்சபையைத் தோற்றுவித்தவர்
ஜைனாச்சாரிய கம்பீர விஜயாஜீ முனிவராவர். இம்மகான் குஜரத்
மாகாணத்திலுள்ள பாலிடாணா நகரத்தைச் சார்ந்தவர். சுவாமிகள்
ஜைனத்துறவிகளின் கொள்கைப்படி பாலிடாணாவிலிருந்து சென்னைக்குக்
கால்நடையாகவே நடந்துவந்தார்கள். அவ்வாறு பல கிராமங்களையும்
நகரங்களையும் கடந்து சென்னைமாகாணத்தை அடைந்தார். இங்குள்ள சில
கிராமங்களில் போலோம்மா,
மாரியம்மா, பிடாரி போன்ற பல சிறு
தெய்வங்களுக்கு ஆயிரக்கணக்கான ஆடு கோழிகளையும் எருமைக் கடாக்களையும்
பலி கொடுப்பதாகக் கேள்வியுற்று மனம் வருந்தினார். உயிர்கள் மடிவது
மட்டுமின்றி மனிதப்பண்பும் நாகா�கமும் பாழாகின்றனவே என்ற கவலையும்
சுவாமிகள் உள்ளத்தை வாட்டிற்று. இந்நிலையில் சுவாமிகள் சென்னை வந்து
சேர்ந்தார்கள். சென்னையிலுள்ள ஜைனப் பெருமக்கள் சுவாமிகளைப்
பக்திபரவசத்துடன் வரவேற்றுத்தினந்தோறும் சொற்பொழிவுக்கு ஏற்பாட
செய்தார்கள்.
சுவாமிகள் வடமொழி இலக்கியங்களிலும் குஜராத் இலக்கியங்களிலும் நல்ல
பயிற்சியும் தேர்ச்சியும் பெற்றவராகையால் அவர் தம் சொற்பொழிவைக்
கேட்க ஜைனமதத்தினர்கள் ஆயிரக்கணக்கில் வந்து கூடினார்கள். சுவாமிகள்
சொற்பொழிவுகளில் ஒன்று அஹிம்ஸா தர்மத்தைப் பற்றியது. அன்று
அஹிம்சையின் தத்துவத்தை விளக்கிப்பேசி அவ்வறத்தைப் பரப்பவும்,
தெய்வத்தின் பெயரால் உயிர்ப்பலி செய்யவும் கொடிய வழக்கத்தை
நிறுத்தவும்ஒரு ஜீவரக்ஷகப் பிரசார சபையை நிறுவவேண்டும் என உருக்கமாகப்
பேசினார்கள். அவர் அறிவுரைகளைச் சிரமேற்கொண்ட ஜைனப் (சமண) பெருமக்கள்
அன்றே நிதி திரட்டி நாம் மேலே கூறிய தென்னிந்திய ஜீவரக்ஷகப் பிரசார
சபையைச் சென்னையில் நிறுவினர். அன்றுமுதல் இச்சபை சென்னை
மாகாணமெங்கும் இடைவிடாது தொண்டாற்றி வருவதைப் பலரும் நன்கறிவர்.
அடியேன் 1927-ஆம் ஆண்டு ஜூலை மாதத்திலிருந்தே இச்சபையின்
அமைப்பாளனாகவும் பிரதம சொற்பொழிவாளனாகவும் பதவி ஏற்று நாளதுவரை
தொண்டாற்றி வருகின்றேன். பல நூற்றாண்டுகளாகத் தெய்வத்தின் தொண்டாற்றி
வருகின்றேன். பல நூற்றாண்டுகளாகத் தெய்வத்தின் பெயராலும்
உயிர்ப்பலியிடும் மூட நம்பிக்கையில் மூழ்கியுள்ள மக்களின் அறியாமையை
அகற்ற இச்சபை பல துறைகளிலும் பணியாற்றி வந்துள்ளது. பஜனை கோஷ்டிகளுடன்
சொற்பொழிவுகள், நாடகங்கள், பாட்டுகள், கதைகள், பலவித
துண்டுப்பிரசுரங்கள், சுவரொட்டிகள் ஆகியவைகள் மூலம் மக்கள் அறிவை
வளர்த்து வந்தது. இத்தகைய அரிய சேவையின் பயனாகப் பெரும்பாலான
மக்களிடையே புத்துணர்ச்சியும் புதிய அறிவும் உதயமாயின என்றே கூறலாம்.
ஆயிரக்கணக்கான முதியோர்களும் இளைஞர்களும் புலாலுணவை மறந்தார்கள்.
வரலாற்றுப் பிரசித்திபெற்ற திருவொற்றியூர், திருப்பாதிரிப்புலியூர்,
சிதம்பரம், சீர்காழி, திருப்பூவனம், பாளையங்கோட்டை, சேலம்,
கோயம்புத்தூர், ஆத்தூர், சங்கரநயினார் கோயில் போன்ற பல நகரங்களிலும்
நூற்றுக்கணக்கான கிராமங்களிலும் உயிர்ப்பலிகள் அறவே நிறுத்தப்பட்டன.
எனினும், தெய்வத்தின் பெயரால் பலியிடும் வழக்கம் ஆங்காங்குத்
தலைகாட்டிக்கொண்டிருந்தது. தெய்வத்தின் பெயராலன்றி மக்கள் அஹிம்சா
தர்மத்தின் மேன்மையை அறிந்து கொள்ளவியலாது. அதுமட்டுமன்று; சமூகமும்
முன்னேற்றமடையாது! "மூடநம்பிக்கைகள் சமூக முன்னேற்றத்திற்குத் தடைகள்.
அத்தடைகளை ஒழிக்கக் கல்வியும் சட்டமும் தேவை" யெனும் மேல் நாட்டு
அறிஞா�ன் அறிவுரையும் நமது கொள்கைக்கு அரண் செய்வதாகும். இவ்வுண்மையை
நமது நாட்டில் எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே அறிந்து பகவான்
விருஷபதேவர், லோகமூடம், தேவமூடம், பாசண்டி மூடம் என்ற
மும்மூடங்களையும் அகற்ற வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். எனவே
தெய்வத்தின் பெயரால் உயிர்ப்பலியிடும் மூடக்கொள்கையை அறவே அகற்ற
சர்க்கார் மூலம் சட்டம் கொண்டு வருதல் நலமென அறிந்தேன்.
உயிர்ப்பலியை சட்டத்தின் மூலம் ஒழிக்க முயற்சி
அன்றே (1932) "கிள்ளை விடு தூது" எனும் ஓர் நூல் சபையின் சார்பாக
இயற்றினேன். இந்நூலில் தெய்வத்தின் பெயரால் உயிர்களை எவ்வாறு சித்ரவதை
செய்கின்றார்களென்பதையும் அதனை ஒழிக்கச் சட்டம் இயற்றவேண்டியது
அவசியம் என்பதையும் நன்கு விளக்கியுள்ளேன். இதனால் பொதுமக்களின் மனம்
சிறிது மாறிற்றேயன்றி அரசாங்கத்தின் உள்ளத்தை சிறிதும் அசைக்கவில்லை.
ஏனெனில் இந்திய மதங்களின் கொள்கைகளில் தலையிடுவதில்லை என்ன
பிரகடனத்தின் பீடத்தின் மீது அமர்ந்திருந்த ஆங்கில அரசாங்கம் அன்று
ஆட்சி புரிந்தது. பின்னர் 1938ம் ஆண்டு காங்கிரஸ் கட்சி சட்டசபையைக்
கைப்பற்றியது. சென்னை மாகாணத்தில் கனம் ஸ்ரீ C. ராஜகோபாலாச்சாரியார்
அவர்கள் பிரதம மந்திரியாக அமர்ந்திருந்தார். இதுதான் சமயம் என அறிந்து
எனது நண்பரும் வடஆற்காடு ஜில்லா செய்யாறு தொகுதி சட்டசபை
மெம்பருமாகிய திரு. D. இராமலிங்கசெட்டியார் M.A., B.L., M.L.A.,
அவர்களைக் கொண்டு சட்டசபையில் உயிர்ப்பலி தடைமசோதா கொண்டுவருமாறு
சபையின் சார்பாக வேண்டிக்கொண்டேன். அவரும் அதற்கிசைந்து சட்டசபைக்கு
உயிர்ப்பலி தடைமசோதாவைக் குறித்து நோட்டீஸ் அனுப்பினார். பத்திரிகைகளிலும்
வெளிவந்தது. இம்மசோதாவிற்கு ஆதரவு தேடவேண்டி சபையின் சார்பில்
மாகாணமெங்கும் சுற்றுப்பிரயாணம் செய்து ஆயிரக்கணக்கான ஆதரவு
தீர்மானங்களைச் சேகா�த்து சர்க்காருக்கு அனுப்பினேன். அத்துடன்
நிற்கவில்லை. எங்கள் சபையின் ஆண்டு விழாவிற்குத் தலைமை வகிக்குமாறு
கனம் முதன் மந்திரி C. ராஜகோபாலாச்சாரியார் அவர்களை வேண்டினோம்.
அவரும் இசைந்து 1939ம் ஆண்டு ஜனவா� மாதம் 16 கோகலே மண்டபத்தில்
நடைபெற்ற ஆண்டு விழாவில் தலமை வகித்தார். அதுசமயம் எங்கள் சபையின்
வரவேற்புப் பத்திரத்தில் தெய்வத்தின் பெயரால் உயிர்ப்பலியிடுங்கொடிய
வழக்கத்தை நிறுத்த சட்டமியற்றுமாறு குறித்திருந்தோம். ஆனால் திரு. C.
ராஜகோபாலாச்சாரியார் அவர்கள் மதசம்பந்தமான இம்மசோதாவைக்
கொண்டுவருவதற்கு இது சமயமல்லவென்று நிராகா�த்துவிட்டார். எனவே சபையின்
முயற்சி வெற்றிபெறவில்லை எனினும், சபை தனது சேவையில் குறையவில்லை.
முன்னைவிட தீவிரமாகவே தொண்டாற்ற முனைந்து நின்றது. தமிழ்நாட்டிலுள்ள
பல சங்கங்களும் தனிப்பட்ட அன்பர்களும் எங்களுடன் ஒத்துழைத்தனர்.
அதனால் பிரசாரத்தின் மூலமாகவே மேலும் மேலும் வெற்றி கண்டு வந்தது.
சுதந்திரமும் சட்டமும்
மகாத்மா காந்தி அடிகளின் சுதந்திரப் போராட்டம் வெற்றி கண்டது. 1947ம்
ஆகஸ்டு ஆண்டு மாதம் 15 உ நமது நாடு சுதந்திர நாடாயிற்று, காங்கிரஸ்
கட்சி ஆட்சி பீடத்தில் அமர்ந்தது. "அந்நிய அரசாங்கம் நாட்டு மக்களின்
அறியாமையையும் அநாகா�கத்தையும் வளர்த்தும்; சுதந்திர அரசாங்கம்
அறிவையும் நாகா�கத்தையும் வளர்க்கும்" என அயர்லாந்து தேசபக்தர்
டெரன்ஸ் டிரக்ஸ்வினி கூறியதுபோல் இனி நமது முயற்சி வெற்றிபெறும் என்ற
நம்பிக்கை பிறந்தது. நாடு சுதந்திரம் அடைந்துவிட்டதால் மக்களின்
அறியாமையைப் போக்க அரசாங்கம் முனையவேண்டும் என்றும், தெய்வத்தின்
பெயரால் உயிர்பலியிடும் அநாகா�க வழக்கத்தை நிறுத்தவேண்டி ஓர் சட்டம்
இயற்றவேண்டும் என்றும் பத்திரிகைகளில் அறிக்கைகள் விடுத்தோம். பின்னர்
காங்கிரஸ் சட்டசபை அங்கத்தினர்கள் சிலரைக்கண்டு உயிர்ப்பலி தடை மசோதா
ஒன்றைக் கொண்டு வருமாறு சபையின் சார்பாக வேண்டிக் கொண்டேன்.
இவ்வேண்டுகோள் மிக முக்கியமானதென அறிந்து தினந்தந்தி ஆசிரியர்
உயர்திரு. S.B. ஆதித்தன் M.L.C. அவர்கள் சென்னை சட்டசபையின்
மேற்சபையில் 1947ம் ஆண்டு மசோதாவை பிரோ�த்தார். இம்மசோதாவைப் பற்றிக்
கேள்வியுற்றதும் நம் மக்கள் காட்டிய ஆர்வமும் ஆதரவும் அளவு கடந்தவை.
அனைவரும் தமக்கு ஏதோ ஒரு புதையல் கிடைத்தது. போன்று ஆனந்தங்கொண்டனர்.
நமது வேண்டுகோளுக்கிணங்கி ஆங்காங்குப் பொதுக்கூட்டங்கள் கூட்டிப் பலி
விலக்கு மசோதாவை ஆதா�த்துத் தீர்மானங்கள் நிறைவேற்றிச் சர்க்காருக்கு
அனுப்பினர். இப்பேராதரவின் சார்பில் சட்டசபையின் மேற்சபையில்
21-1-49ல் பெரும்பாலான கெளன்சிலர்களின் (M.L.C) ஆதரவும்
ஒத்துழைப்புங்கொண்டு சட்டமாக்கப்பட்டது. பின்னர் கீழ்சபையிலும்
இச்சட்டம் கொண்டுவரவேண்டும். அதற்காக மதுரை ஜில்லா திருமங்கலம் தொகுதி
சட்டசபை மெம்பரும், காங்கிரஸ் தியாகியுமான உயர்திரு. K. இராஜராம்
நாயுடு அவர்களைத் திருமங்கலத்திலுள்ள அவர்கள் இல்லத்திற்குச் சென்று
மேற்சபையில் நிறைவேறிய சட்டத்தைக் குறித்துப் பேசி கீழ்ச்சபையில்
தாங்களே கொண்டு வரவேண்டுமெனச் சபையின் சார்பாகக் கேட்டுக்கொண்டேன்.
அப்பொ�யாரும் எனது வேண்டுகோளை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார்கள்.
பின்னர் 1949ம் ஆண்டு நவம்பர் மாதம் 25 உயர்திரு. K. இராஜராம் நாயுடு
M.L.A. அவர்கள் சட்டசபையில் பிரோ�த்தார்கள். அ�து 14-9-50ல்
பெரும்பாலான சட்டசபை அறிஞர்களால் ஆமோதிக்கப்பெற்று பலிவிலக்குச்
சட்டம் வெற்றிகரமாக நிறைவேறிற்று, பின்னர் நம் ஜனாதிபதி இராஜேந்திர
பிரசாத் அவர்களாலும் அங்கீகா�க்கப்பட்டு 1-6-51 முதல் அமுலுக்கு
வந்துவிட்டது.
இனி இச்சீரிய சட்டத்தை நாடெங்கும் வரவேற்று அதனை வெற்றிகரமாக
நடத்திவைப்பது பொதுமக்களாகிய நமது கடமையாகும். ஏனெனில் மிஸ்மேயோ
போன்ற அந்நிய நாட்டவர்கள் நமது நாட்டைப்பற்றி இழித்துக்கூறிய பழிகளைப்
போக்கவும் நமது நாட்டுப் பண்டைய நாகா�கத்தின் மேன்மையை விளக்கவும்
இ�து ஒரு வாய்ப்பாகும். எனவே பலிவிலக்குச் சட்டம் அமுலுக்குவரும்
இந்த வேளையில் தெய்வங்களுக்கு உயிர்ப் பளியீடுதல் மத சம்பந்தமும்
தெய்வ சம்மந்தமும் உடையதுதானா என்பதை ஆராய்ந்து அறிவது நலம். சிலர்
இவ்வழிபாட்டைத் தெய்வ சம்பந்தமுடையதென்றே எண்ணியிருக்கின்றனர்.
இத்தகைய தவறான எண்ணத்தைப் போக்கவும் மற்ற நாடுகளில் இவ்வநாகா�க
வழக்கத்தை அந்தந்த நாட்டு அறிஞர்கள் எவ்வாறு போக்கினார்கள் என்பதை
மக்கள் அறிந்துகொள்ளவும் வேண்டி அதன் வரலாற்றைச் சுருக்கமாக இங்கு
விவா�க்கின்றேன்.
உயிர்ப்பலியின் வரலாறு
நமது நாட்டில் காளி, மாரி, பிடாரி, மதுரைவீரன், மாடன் போன்ற பல
தெய்வங்களை வழிபட்டு வருவது போன்றே எகிப்து, இத்தாலி, கி��ஸ்,
பாலஸ்தீனம், அரேபியா, இங்கிலாந்து, சீனா முதலிய நாடுகளிலும் மினர்வா,
தார், ஓடியன் ஜுபிடர் எனப பலவகையான பெயர்களுடன் கூடிய பல தெய்வங்களை
வழிபட்டு அவைகளுக்குப் பெரும்பாலான உயிர்ப்பலிகளும் கொடுத்து வந்தனர்.
மிருகபலி மட்முமல்ல-நரபலிகளும் நடந்திருக்கின்றன! சீனா தேசத்தில்
சன்யாட்சென் செய்த புரட்சி இயக்கத்தால் அந்நாட்டில் சிறு தெய்வ
வழிபாடே இன்று காணமுடியவில்லை! அது போன்று மற்ற மேல் நாடுகளிலும்
அத்தெய்வங்கள் மாஜி தெய்வங்களாகி மக்கள் நினைவில்கூடத் தோன்றாமல்
மறைந்துவிட்டன. அதற்குக் காரணம் அந்தந்த நாட்டு மதத் தலைவர்களும்
அறிஞர் பெருமக்களுமாவர்.
உதாரணமாக கிறிஸ்துவ மதத் தலைவராகிய ஏசுநாதருடைய மதப்போதனைகளிலும்
இஸ்லாம் மதத் தலைவராகிய முகமது நபிநாயகம் அவர்களின் போதனைகளிலும்,
ரோமாபுரி மதநூல்களிலும் கடவுளின் பெயரால் உயிர்ப் பலியிடுவதைக்
கண்டித்திருப்பதைக் காணலாம்.
"நான் உயிர்ப்பலியை ஒழிப்பதற்கெனவே உலகில் அவதா�த்திருக்கின்றேன்"
என்றும் "பாமர மக்களால் விக்கிரகத்தின் முன்படைக்கப்பட்ட மாமிசம்
இரத்தம் முதலியவற்றைக் கடவுள் ஏற்றுக்கொள்ளாமல் இருக்கின்றார்"
என்றும் ஏசுநாதருடைய அறிவுரைகளிலே காணப்படுகின்றன. அதுமட்டுமல்ல!
விக்கிரகங்களின் முன் படைக்கப்பட்ட மாமிசத்தைப் புசிக்கக்கூடதாதெனக்
கட்டாயப்படுத்தியுமுள்ளனர். அதனால் பூசாரிகளாலும், மிருகங்களை
விற்கும் வியாபாரிகளாலும் ஏசுநாதர் அடைந்த துன்பத்தை அளவிட்டுரைக்க
வியலாது. இதுபோன்றே மகமதுநபி நாயகம் அவர்களும், "மக்களே நீங்கள்
சமர்ப்பிக்கும் உயிர்பிராணிகளின் இறைச்சியும் இரத்தமும் எல்லாம்வல்ல
இறைவனை அடையா. உங்களுடைய, உண்மையான-மனப்பூர்வமான-பக்தியாகிய அன்பே
கடவுளை அடைகின்றது" என்று கூறியுள்ளார். ரோமாபுரி நூல்களில் ரோம்
மதக்கடவுள் "என்னால் படைக்கப்பட்ட என்குழந்தைகளாகிய ஊமைப்பிராணிகளை
எதன் பொருட்டாக என் முன் பளியிடுகின்றீர்கள்! நான் எருமை ஆடு முதலி
ஊமைப்பிராணிகளின் இரத்தத்தினால் மகிழ்ச்சி அடைவதில்லை" என்று
கூறியதாக விளக்கப்பட்டுள்ளது. எனவே மேல் நாடுகளில் இத்தகைய
மதபோதகர்களின் அறவுரைகளைச் சிரமேற்கொண்டு அரசர்களும் பொதுமக்களும்,
கோயில்களைக் கொலைக்களமாக்கும் கொடும் வழிபாட்டை ஒழித்தனர்.
இன்றும் மாதாகோயில்களிலும், பள்ளிவாசல்களிலும் உயிர்ப்பலியைக்
காணமுடியாது. "புண்ணிய பூமி" எனப் பல்லோராலும் புகழப்படும் நமது
நாட்டில் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் ஆதிபகவனால் அஹிம்ஸா
தர்மத்திற்கு விதை கோலப்பட்டது. பின்னர் மஹாவீரரும், புத்தரும்
உலகெங்கும் அன்பு நெறியைப் பரப்பினர். இவ்வளவு சிறந்த அறநெறி பிறந்த
நாட்டில் தெய்வத்தின் பெயரால் உயிர்ப்பலியிடும் தீய கொள்கை எவ்வாறே
புகுந்துவிட்டது.