 |
இவ்வுரைகளால் நாம் ஓர் உண்மையை அறிகின்றோம். "உலகில் காணும் பல்வேறு
நூல்களில் மக்கள் வாழ்க்கை நலத்திற்கு உறுதுணை
புரியும் மேற்கண்ட
இலக்கியங்கள் போன்று பல உள்ளன என்பதையும், அவை மக்களைத் தவறான
பாதையில் அழைத்துச்செல்லா அறநூல்கள் என்பதையும் தெளிவாக்கிவிட்டது.
திருக்குறளாசிரியர், நூலோர் தொகுத்தவற்றுளெல்லாந்தலை" எனக்
குறிப்பிட்டுள்ளது நம்மை விழிக்கச் செய்கிறது. எனவே நில உச்சவரம்புக்
கொள்கையைப் பஞ்ச சீலங்களில் ஒன்றாக வகுத்துக்காட்டும் போ�லக்கியங்களை
நமது தமிழ் மொழி பெற்றிருப்பதைக் காண்கிறோம். இவ்வா�ய அறிவியல்
தத்துவத்தை ஆராய்ந்து வெளியிடவேண்டும். இதுவரை பாடப்புத்தகங்களிலோ
வரலாற்று நூல்களிலோ வெளிவந்துள்ளனவா? இல்லை! சமயக் காழ்ப்பெனும்
குறுகிய நோக்கங்களை உள்ளத்திலே உருவாக்கிக்கொண்டு சிலர் தமிழ் நூல்களை
ஆராய்கின்றமையால் இத்தகைய கலைப்புதையல்கள் மக்கள் அறிவுப்
புலன்களுக்கு எட்டாமல் போய்விடுகின்றன. அதுமட்டுமா! மக்கள் சமுதாயம்
தன்னியல்பினின்றும் மாறிவிடுகிறது. கடமை உணர்ச்சியையும் கருணை
உள்ளத்தையும் இழந்துவிடுகிறது. பல்வேறு குழுக்களாக மாறிப்
பாழ்படுகிறது. தன்னலமும் வேற்றுமை உணர்ச்சியும் வளர்ந்து
நல்லறத்தின்பால் நாட்டங்கொள்வதில்லை. யாக்கை நிலையாமை, செல்வம்
நிலையாமை ஆகிய நிலையாமைத் தத்துவங்களை வற்புறுத்துவதும் பிறர் நலம்
பேணும் பண்பு வளரவேயாகும். எனவே நமது தமிழ்மறையாம் திருக்குறளும் அதன்
வழி வளர்ந்த மேற்கண்ட அறிவியல் இலக்கியங்களுமே மனித சமுதாயத்தின்
வாழ்க்கை நலத்தை ஓம்ப வல்லது என்பதை அறிஞர்கள் அறிதல் வேண்டும்.
அரசியலார், நடு நிலைமையில் நாட்டங்கொள்ள புலவர்களையும் அறிஞர்களையும்
கொண்டு மேலே கூறிய சமயச் சார்பற்ற பொது நூல்களை மக்களிடையே பரவச்
செய்வதற்குரிய வழிகளை வகுத்தளிக்குமாறு வேண்டுகிறேன். இனி நில
உச்சவரம்புக்குரிய வரலாற்றுச் செய்திகளை ஆராய்வோம்.
யாவரும் கேளிர்
இதுகாறும் பகுத்துண்டு வாழ்தல் அல்லது மிகுபொருள் விரும்பாமை என்னும்
சோஷலிசக் கொள்கைக்குரிய பண்டை இலக்கிய ஆதாரங்களைக் கண்டோம். மக்கள்
சமுதாய நலத்தை அடிப்படையாகக்கொண்ட அப்போ�லக்கியங்கள் யாவும் ஜைன
அறவோர்களால் உலகுக்கு உரைசெய்த பொது நூல்கள் என்பதையும் அறிந்தோம்.
ஜைன அறவோர்களின் முதல் அறவோரும், முதல் தலைவரும், முதல் முனிவருமாகிய
பகவான் விருஷபதேவர் மக்கள் சமுதாயம் அன்பும், அறிவும், பண்பும்
ஒற்றுமையும் பெற்று விளங்க அஹிம்ஸா பரமோ தர்ம; என்னும் பேரறத்தை
அருளிச் செய்தார். இதனையே ஒன்றாக நல்லது கொல்லாமை எனத் திருக்குறள்
தேவர் திருவாய் மலர்ந்தார். உலகை உய்விக்கும் இவ்வறநெறியை அருளிய
ஆதிபகவானாகிய அருகப் பெருமானைப் போற்றும் தோத்திரத் திரட்டில்,
"உருவினோ டுருவென் றுரைப்பரே யுரைத்த
வுலோகலோகங் களையெல்லாம்
பருவர லொழிய வொருகணத் துள்ளே
பார்ப்பரே பன்றிநாய் பாம்பொத்து
ஒருவரை யொருவர் கொன்று தின்றடைய
வுலகெலாங் கெடாவகை யுறுதித்
திருவற மருளிச் செய்வரே யாயின்
ஜினவரா தீபை நாயகனே"
எனப் போற்றப் பெற்றுள்ளது. இத் தோத்திரப் பாவால் ஒரு நல்ல விளக்கம்
பெற்றோம். மக்கள் சமுதாயம் பன்றி, நாய், பாம்பு போன்று ஒருவரை ஒருவர்
கொன்றுதின்னா வகையில் நடத்திச் செல்லும் திருவறம் என்றதும் நமது
உள்ளத்தே ஒரு புத்துணர்ச்சி உருவாகிறது. மக்கள் வாழ்க்கையில் காணும்
வேற்றுமை உணர்ச்சிகளும், பகைமை, பொறாமை, வஞ்சனை, சூது கொலை முதலிய
யாவும் திருவற நெறிக்குப் புறம்பானவை என்பது தெளிவாகிறது. அதுமட்டுமா?
இனவேற்றுமை, நிற வேற்றுமை, மொழிவேற்றுமை, மதவேற்றுமை, சாதி வேற்றுமை,
நடை, உடை, உணவு முதலிய வேற்றுமைகளைப் பாராட்டாது 'யாதும் ஊரே யாவரும்
கேளிர்' என்ற முறையில் ஒன்றுசேர்ந்து வாழ வேண்டுமென்பதையும்
அத்தோத்திரப் பாவால் நன்கு விளங்குகிறது. எனவே வாழ்க்கையின் இயல்பைக்
காண்போம்.
வாழ்க்கையின் இயல்பு வேற்றுமையுடையதல்ல! பூசலையும் மோதலையும்
விரும்புவதல்ல! பகைமை உணர்ச்சிக்குப் பலியாவதல்ல! அன்பும் பண்பும்
நிறைந்தது! கூட்டம் கூட்டமாக வாழ விழைவது! பலருடன் உறவும் நட்பும்
பூண்டு வாழ விரும்புவது! விருந்து முதலியவற்றால் ஒருவரை ஒருவர் தழுவி
வாழ முனைவது! சங்கங்கள் அமைத்துப் பலரையும் அன்புடன் பழக வைப்பது!
விழாக்கள் கொண்டாடி அனைவரையும் அணைந்து வாழவழி கோலுவது! பிறர் துன்பங்
கண்டு மனம் இரங்குவதும், பிறர் இன்பங்கண்டு வாழ்த்துக் கூறுவதும்
போன்ற இயல்புகளைக் கொண்டதே வாழ்க்கை. இவ்வியற்கை உணர்வினையே "அன்பின்
வழியது உயிர்நிலை" என்றார் திருக்குறள் தந்த பெருந்தகையாளர். இப்பெரு
மகன் வழித்தோன்றலாகிய சூளாமணி ஆசிரியர் தோலா மொழித்தேவர்,
"ஆருயிர் யாதொன்று இடருறு மாங்கதற்கு
ஓருயிர் போல உருகி"
என உயிரின் வாழ்க்கைச் சிறப்பைப் படம்பிடித்து உலகம் ஓர் குலம்
என்பதைக் காட்டியுள்ளார். இத்தகு சிறப்பமைந்த வாழ்க்கைக்குப்
புறம்பாக மனிதன் பன்றியைப் போல் இழிந்த நிலையை எய்துதலும்,
தன்னினத்தைத் தான் பகைக்கும் நாய்போன்று தான் பிறந்த மனித குலத்தின்
வேற்றுமையை உண்டாக்குவதும், பாம்புபோன்று நஞ்சுள்ளம் கொண்டு
சமுதாயத்தில் பல இன்னல்களை விளைவிப்பதுமாகிய செயல்களை உடையவருக்கு
அறிவுறுத்துவான் வேண்டியே தோத்திரத்திரட்டு ஆசிரியர் பன்றி, நாய்,
பாம்புகளை உவமை காட்டினார். அறிவியல் வரலாற்றில், அரசியல் வரலாற்றில்,
சமுதாய வரலாற்றில், இலக்கிய வரலாற்றில் தோத்திரப்பாவெனும்
இப்புதுமலரைக் காண்கிறோம்! அம்மலரைப் பறித்தெடுப்போம்! அம்மலா�ன்
நறுமணத்தை நுகர்வோம்! அத்திருமலரை உள்ளத்தே சூடி அலங்கா�ப்போம்! உலக
மக்கள் உணர்விலே செலுத்துவோம்! அன்றே மக்கள் சமுதாயம் கண்விழிக்கும்.
மக்களனைவரும் ஒன்றே எனும் உணர்வு பிறக்கும்! பகை உணர்ச்சிப்
பறந்தோடும்! ஒற்றுமை உருவெடுத்து உலகை உய்விக்கும்! எனவே ஆதிபகவான்
அருளிய நல்லறமே மக்கள் நலமேம்பாட்டிற்கும் பண்பாட்டிற்கும்
வழிகாட்டும் கலங்கரை விளக்கம் எனப் போற்றுவோம்.
இத்தகு சிறந்த வாழ்க்கைப் பண்பாட்டிற்கு எடுத்துக்காட்டாக அண்மையில்
சோவியத் பத்திரிக்கையிலே வெளிவந்த ரஷிய மாலுமிகளின் தியாக உணர்ச்சி
நம் உள்ளத்தே காட்சி அளிக்கிறது. ஒரு நீராவிப் படகில் ஜிகான்ஷின்
என்ற இளைஞரும் அவருடைய சகாக்களும் கடலில் செல்லும்போது எதிர்பாரா
வகையில் புயல் காற்றால் தாக்கப்பட்டு நாற்பத்தைந்து நாட்கள் உணவு,
உறக்கமின்றி நடுக்கடலில் துன்புற்றனர். அவர்களை மீட்ட அமொ�க்கர்,
ஜிகான்ஷினை நோக்கி இவ்வளவு நாட்களாகக் கடைசி ரொட்டித்துண்டு அல்லது
தண்ணீர் துளிக்காக நீங்கள் உங்களுக்கும் சண்டைபோடாமல்
எப்படியிருந்தீர்கள் என்று கேட்டார்கள். ஆபத்தில் சிக்கிக்கொண்ட
ஒருவன் முதலில் அவனுடைய உயிரைக் காப்பாற்றிக்கொள்வதற்குத்தானே
முயல்வான் என்பது அவர்களுடைய எண்ணம். வாழ்வதற்கான போராட்டமல்லவா?
அவர்கள் எண்ணமறிந்த ஜிகான்ஷின், பிறர் ஒருவரை வருத்தி நம்மைக்
காப்பாற்றிக்கொள்ளவேண்டும் என்ற எண்ணமே எங்களுக்குப் புறம்பானதாகும்.
தன்னலத்தை விடப்பொதுநலமே தலையாயது, முதன்மையானது என்று பச்சிளம்
பருவத்திலேயே நாங்கள் போதிக்கப்பட்டு வந்துள்ளோம். எங்கள் தெப்பத்தில்
இருந்த சமுதாயம் மிகக் குறுகியதுதான். நான்கே பேர்கள்தான் இருந்தோம்.
ஆனால் இந்தச் சமுதாயம் சோவியத் சமுதாயமாகும். சோவியத் சமுதாயத்தின்
அடிப்படை விதி இங்கு அரசோச்சியது. "எல்லோருக்கும் ஒருவர்,
ஒருவருக்காக எல்லோரும்" என்பதே அவ்விதி. சமுதாயத்துக்கும் தனி
நபருக்கும் இருக்கவேண்டிய உறவுகள் பற்றிய கேள்விக்கு இந்த விதி
பதிலளிக்கிறதல்லவா? உலகிலுள்ளவர்கள் யாவரும் சா�சமமானவர்கள்.
தமக்காகப் பாடுபடுவதுபோலவே பிறருக்கும் பாடுபடவேண்டும். ஒருவரை ஒருவர்
ஆதா�த்து நிற்கவேண்டும்" எனப் பதில் இறுத்தார். இதனைக் கேட்ட அமொ�க்கர்கள்
வியப்புற்றனர். மேலோ கண்ட சம்பவத்தையும் ஜிகான்ஷின் கூறிய பதிலையும்
நோக்கின் நாம் இதுவரை ஆராய்ந்தறிந்த ஆதிபகவன் அருளிய அறநெறியும் அதன்
அடிப்படையாக எழுந்த திருக்குறளும், போ�லக்கியங்களும் ரஷ்ய நாட்டுப்
புதிய சமுதாயத் தத்துவத்துடன் பெரும்பாலும் ஒத்திருப்பதைக் காண்கிறோம்.
திருக்குறளாசிரியர் திருவுள்ளதேவர்,
"தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறி
தின்னுயிர் நீக்கும் வினை"
என்றும்,
சீவகசிந்தாமணி ஆசிரியர் திருத்தக்க தேவர்,
"தன்னுயிர் தான்பா�ந்தோம்பு மாறுபோல்
மன்னுயிர் வைகலும் ஓம்பி வாழுங்கள்"
என்றும்,
"வருந்தினும் அறத்திறம் மறத்தல் ஓம்புமின்"
என்றும்,
சூளாமணி ஆசிரியர் தோலாமொழித் தேவர்,
"மன்னுயிர் வருத்தங்கண்டும் வாழ்வதே வலிக்குமாயின்
அன்னவன் ஆண்மையாவ தலிபெற்ற அழகுபோலாம்"
என்றும், புறநானூற்றிலே பூங்குன்றனார், "யாதும் ஊரே யாவரும் கேளிர்"
என்றும் கூறியுள்ள மாண்புரைகள் மேலே கண்ட நிகழ்ச்சிக்குச்
சான்றுகளாகும். ஜைன அறவோர்கள் மன்னுயிர்கட்கு அறமே பொழிபவர்கள்.
உயிர்கட்கு இடர் தீர்த்து உயா�ன்பமாக்கும் சொல்லையுடையவர்கள் என்பதை
மாணவர் உலகமும் மதி நுட்பம் வாய்ந்த புலவர் பெருமக்களும் மறத்தலாகாது.
இவ்வுண்மை வரலாற்றினைக் கலங்கத்துப் பரணி ஆசிரியர் கவிச் சக்கரவர்த்தி
ஜெயங்கொண்டார்.
"காலைப் பொழுதும் மாலைப் பொழுதும்
கல்விப் பொருளே செல்வப் பொருளாய்
மேலைக் குறுநற் குணனைக் கருதி
மிகுமா தவமே
புரிவார் தமதூர்"
"செய்யும் வினையும் இருளுண் பதுவும்
தேனும் நறவும் ஊனுங் களவும்
பொய்யுங் கொலையும் புறமும் தவிரப்
பொய்தீர் அறநூல் செய்வார் தமதூர்"
"வஞ்சங் கருதார் பிறனில் விழையார்
வாமன் வழிநூல் வழுவார் நிதமும்
இஞ்சொன் மீகுமா தவர்தாள் தொழுதே
இயல்நல் லறமே
புரிவார் தமதூர்"
என ஜைன அறவோர்களின் சேவைகளையும் பண்புகளையும்
படம்பிடித்துக்காட்டியுள்ளார்.
இப்பெற்றிய அறிவுரைகளை உலகுக்கு வழங்கிய தமிழ்ச் சான்றோர்களாகிய ஜைன
அறவோர்கள், மலைகளிலே உள்ள இயற்கைக் குகைகளில் பல்கலைக்கழகங்கள்
அமைத்துத் தமிழ் கலை வளர்த்தத் தூயோர்கள் என என அறிந்து வாழ்த்துவோம்.
எங்கே பொருளாதார நிலை பொதுவுடைமையாகக் காட்சியளிக்கின்றதோ அங்கே
வாழும் மக்களின் உள்ளங்களிலும் பொதுமை என்னும் புதுமலர் பூத்திடும்
போலும்! வறுமையற்ற வாழ்வு வளர்கின்ற நாட்டினிலே வஞ்சகமும், சூதும்,
களவும், கபடமும் பொறாமையும் தலைகாட்டா! இவ்வுண்மையை ரஷ்ய மாலுமிகளின்
நடுக்கடல் நிகழ்ச்சிச் சொற்பொழிவிலே கண்டோம்! அவர்கள் நாட்டுப்
பொதுவுடைமைப் பண்பு தங்களுக்கு நோ�ட்ட ஆபத்தையும் துன்பத்தையும்கூடப்
பங்கு போட்டுக்கொண்டு அனுபவிக்கச் செய்தது. இவ்வியற்கைத் தத்துவத்தை
என்றோ உணர்ந்த ஆதிபகவன் (பகவான் விருஷபதேவர்) "மிகுபொருள்
விரும்பாமையையும் பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பும் பண்பையும்" அறங்களாக
உலகுக்கு அருளினார்.
பண்டைய காலத்தில் பஞ்சாயத்துக்கள்
இப்பெருமகன் திருமொழியை வேந்தன் முதல் விவசாயிகள் வரை ஏற்று
வாழ்ந்தார்கள் என்பதற்குரிய சான்றுகளை நமது பாரதநாட்டின் வரலாற்றிலும்
காணலாம். திரு. H.D. மாளவியா என்ற பேரறிஞர் "இந்தியாவில் கிராமப்
பஞ்சாயத்துக்கள்" என எழுதியுள்ள ஆங்கில நூலில்.
"Jainism was essentially a religion based on human brotherhood and
equality. A.S. Sarat Chandra Ghoshal, the General Editor of the
mounmental service, The Sacred books of the Jainas has remarked :
"Jainism is one of the oldest religions, of India whose Votaries
in the past ranked from the prince to the peasant, exercising a
noble influence in placing al beings on the same sacred status by
unfurling banner of peace and universal brotherhood, under which
they were called to assemble." Ranjan Surideva, in an on
Panchayats in Jain period has rightly remarked. "Sarva Varnah
Saman Manarha (i.e. equality of all) is the basic principle of
Panchayats in the Jain period "The democratic content in the
teaching of Mahavir Tirthankar is clearly borne out by his
discourses. In Vyavahar-uddeshak, for example he clearly enjoins
the election of his successors by a convened assemble. His
Sharmana Sangha, was essentially democratic. The existance of
Janapadas and the Great deal of trade carried on by them, as
revealed in Jain Canonical Literature is discussed in a very
learned and original study by Dr. Motichandra, which describes the
various travel methods and trade routes of ancient India."
Extract from 'Village Panchayat in India'.
by H.D. Malavia.