 |
மக்கள் சமுதாயம் சமாதானத்துடனும் சகோதர உணர்ச்சியுடனும் வாழ, 'கொல்லாநெறி'
எத்துணை இன்றியமையாததோ அத்துணை இன்றியமையாதது மிகுபொருள் விரும்பாமை
என்னும் கொள்கை. தன் தேவைக்கு மேலான பெரும்பொருளை ஒருவர் பதுக்கி
வைத்திருந்தால் அது பிறருடைய வாழ்க்கையைப் பாதிக்கும். ஆகவே அவ்விழி
செயல் மனத சமூகத்திற்குத் துரோகம் செய்த குற்றம் பாவமும் ஆகும். ஏன்?
அது களவைவிட எவ்விதத்திலும் குறைந்ததன்று. ஆகவே திருக்குறளாசிரியர்
கொல்லா விரதமும், மிகுபொருள் விரும்பா நோன்பும் மக்கள் சமுதாயத்திற்கு
இன்றியமையாத இருபேரறங்கள் என்பதை,
"பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்று ளெல்லாந் தலை"
என அழகாக அறிவுறுத்துகின்றார். இக்குறட்பாவிலே "பகுத்துண்ணைலையும்,
பல்லுயிரோம்புதலையும்" அறங்களாக முதன் முதல் தொகுத்தளித்த நூலோராகிய
வினையின் நீங்கி விளங்கிய அறிவின் முனைவனையும் நமக்கு
அறிமுகப்படுத்தியுள்ளார்*. இதனால் பகுத்துண்டு பல்லுயிரோம்பும் பண்பு
பண்டைக் காலத்திலிருந்தே நமது நாட்டில் நிலவியிருந்ததென்பதையும்
அறிகின்றோம். பகுத்துண்ணலெனில் தாம் ஈட்டும் பொருள்களில்
மிகுதியாயுள்ள பொருள்களைப் பதுக்கி வையாமல் பலருக்கும் பயன்படுமாறு
சமுதாய நலத்திற்கு உதவ வேண்டுமென்பதாகும். அதுமட்டுமன்று. தமது
பொருளீட்டலுக்கு வரம்பு வைத்துக்கொள்ளுதலாகும். இதனால் பிறருக்கும்
பொருளீட்டும் வாய்ப்பு ஏற்படுகின்றது. பலரும் இன்புற்று வாழ்வர்.
நாட்டில் வறுமையும் பசியும் தலைகாட்டா. இவ்வின்பக் காட்சியைக்
காண்டற்கு ஒவ்வொரு மனிதனும் மேற்கூறிய "பகுத்துண்ணலும்" "பல்லுயிரோம்பலும்"
ஆகிய இரு பேரறங்களையும் மேற்கொள்ள வேண்டுமென வற்புறுத்துகின்றார் நம்
குறளாசிரியர்.
பசியும், பிணியும், வறுமையும் இல்லாத ஒரு சமுதாயத்தை நமது உள்ளத்தில்
கற்பனையாகப் படைத்துக்காணின், நமதுள்ளத்தே நம்மையுமறியாமல் ஓர் இன்ப
உணர்ச்சி உண்டாகின்றதல்லவா? இக்கற்பனை இன்பத்தை உண்மையிலேயே
நடைமுறையில் மக்களிடையே காணின், நமதுள்ளம் எவ்வாறு விளங்கும்!
மகிழ்ச்சிக்கடலில் மூழ்கித் திளைக்கும்! இப்பெருங் களிப்பு எத்தகைய
தென்பதையும் தேவர் நமக்குக் கூறத்தவறவில்லை.
"தம்மில் இருந்து தமதுபாத் துண்டற்றால்
அம்மா அரிவை முயக்கு"
என்னும் குறளில் அரிவை முயக்கும் பகுத்துண்ணலால் உண்டாகும் இன்பத்தைப்
போன்றதென உவமையாகக் கூறி உவமையைப் பொருளாக்கி உணருமாறு செய்துள்ளார்.
தமிழ் இலக்கியங்களும் பகுத்துண்டு வாழ்தலும்
இனி திருக்குறள் கூறும் மிகுபொருள் வெ�காமை, பகுத்துண்டு வாழ்தல்
என்னும் சீரிய கொள்கைகளை வற்புறுத்தும் தமிழ் இலக்கியங்களைக் காண்போம்.
பாரதநாட்டு ஜைன அறவோர்கள் அறநெறிகளையும் பொருளாதாரக் கொள்கையையும்
பிணைத்தே மக்கள் வாழ்க்கை நலத்திற்கு வழிவகுத்துள்ளார்கள்.
இல்லறத்தாருக்குரிய அறங்களாகக் கொல்லாமை, பொய்யாமை, கள்ளாமை, பிறர்மனை
நயவாமை, மிகுபொருள் விரும்பாமை ஆகிய பஞ்ச சீலங்களையும் அன்னார்
வகுத்துள்ளனர். இதனைத் திருக்கலம்பக ஆசிரியர்,
"விரையார் மலர்மிசை வருவார் திருவறம் விழைவார்
கொலையினை விழையார் பொய்
யுரையார் களவினை யொழுகார் பிறர்மனை யுவவார்
மிகுபொருள் உவவார்."
என அழகாக விளக்கியுள்ளார்.
இல்லற நெறியிலே நின்று வாழ்க்கை நடத்தும் பண்புடையார் பகுத்துண்டு
வாழும் நல்லியலை மேற்கொள்ளவேண்டும். பலரும் வாழ நாமும் வாழ்வோம் என்ற
பரந்த மனப்பான்மை வளர வேண்டும். அன்பு உள்ளம் படைத்தவரே பிறர் துன்பம்
கண்டு இரங்குவார்! இரக்கம் மட்டுமல்ல! தாமும் துன்புறுவர். இத்தகு
விழுமிய குணம் படைத்தவர்களே பகுத்துண்டு வாழ்வர் எனத் திருத்தக்கதேவர்
நா�விருத்தத்தில்,
"பாங்கமை செல்வராகிப் பகுத்துண்டு வாழ்தல் ஒன்றே
தாங்கிய தவத்தின் மிக்க தவநிலை நிற்றல் ஒன்றே"
என்றும், சீவகசிந்தாமணியில்,
"அட்டுநீர் அருவிக் குன்றத் தல்லது வியரந் தோன்றா
குட்டநீர்க் குளத்தி னல்லால் குப்பைமேற் குவளை பூவா
விட்டுநீர் வினவிக் கேண்மோ விழுத்தகை யவர்கட் கல்லால்
பட்டது பகுத்துண்பாரிப் பார்மிசை இல்லை கண்டாய்"
என்றும்,
"மல்லன் மலையனைய மாதவரை வைதுரைக்கும்
பல்லவரேயன்றி பகுத்துணாப் பாவிகளும்"
எனப் பகுத்துண்டு வாழும் பண்பைப் படம் பிடித்துக் காட்டுகின்றார்.
அருங்கலச் செப்பு ஆசிரியர்,
"பொருள்வரைந் தாசை சுருக்கி யேவாமை
யிருள் தீர்ந்தார்க் கைந்தாம்வதம்"
என்றும், சீவக சிந்தாமணி ஆசிரியர்,
"தெருளிற் பொருள் வானுலக மேறுதற்குச் செம்பொன்
இருளிற் படுகால் புகழ்வித் தில்லை யெனி னல்லா
அருளும்நக வையம்நக வைம்பொறியும் நைய
பொருளும்நக வீட்டும்பொருள் யாதும்பொரு ளன்றே"
என்றும், நீலகேசி ஆசிரியர்,
"கோறல் பொய்த்தல் கொடுங்களவு நீக்கிப் பிறர்மனைக் கண்மேற்,
சேறலின்றிச் செழும் பொருள் மேற்சென்ற சிந்தையின் ஆறுகிற்பின்,."
என்றும், யசோதர காவியத்தில்,
"உளமெண்ணிய கொலையும் பொயுமுறை
யெண்டவர் விழையும்
களவும் பொருள் நசையுங் கடுவிட
மென்றவா�டமாம்"
என்றும், பல இலக்கியங்களில் பொருள் வருவாயை வரையறுத்துக்கொள்ளும்
அறநெறியை வற்புறுத்துவதைக் காணலாம். இதனால் பகுத்துண்டு வாழும் பண்பு
இயல்பாகவே அமையும்; பொருளாதார சமத்துவம் பொலிவுடன் மக்களிடையே
தோற்றமளிக்கும்.
"இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்லது அரசு"
என்னும் தமிழ் மறையின் ஆட்சி காட்சியளிக்கும். உறுபசியும்
ஒவாப்பிணியும், செறுபகையும் சேராத இன்ப நாடகத் திகழும். இத்தகைய
நாட்டையும் நமது தமிழ் இலக்கியம் அறிமுகப்படுத்துகின்றது.
மேருமந்தர புராணம் என்னும் போ�லக்கியத்தில் விதேக நாட்டின் சிறப்பைப்
பற்றி அதன் ஆசிரியர்,
"பாரிலுள் ளவர்க்கெல்லாம் படுபயன் பொதுவுமாய்
ஏர்மலிந் திடங்களெங்கும் இன்பமே பயந்துநல்
வோ�சாந்த மூடுபோகி மேவியாடல் பாடலொடும்
வாரமாதர் போன்றமாட வூர்கடோறும் மாடெலாம்"
என்றார். விதேக நாட்டுச் செல்வங்களும் விளைபொருள்களும்
பொதுவுடைமையாக்கப்பட்டுப் பலருக்கும் பயன்படுமாறு பகுத்தளிக்கப்பட்டன,
அதனால் அந்நாடு ஆடல்பாடல்களிலே மிகுந்து. மக்கள் இன்பமாக வாழ்ந்தனர்
என்றார். பொதுவுடைமை நாட்டையே படம் பிடித்துக்காட்டப்பட்டுள்ளது
இக்கவியிலே! ஒவ்வொருவரும் தங்கள் பொருள் வருவாயை வரையறுத்துக்கொண்டு,
பிறருடைய வாழ்க்கை வளர்ச்சிக்கும் வழி திறக்கும். இவ்அரிய மிகுபொருள்
வெ�காமை என்னும் பொதுவுடைமைத் தத்துவம் திருக்குறளிலும், திருக்குறள்
அறநெறியை அடிப்படையாகக்கொண்டு விளங்கும் மேலே கூறிய
இலக்கியங்களிலேயன்றி வேறு சமய நூல்களில் காணவியலாது. அவாவின்மை,
மிகுபொருள் வெ�காமை, கள்ளாமை ஆகிய மூன்றும் வெவ்வேறு கொள்கைகள் என்பதை
உய்த்துணா�ன், நாம் கூறிய இலக்கிய வேறுபாடுகளின் உண்மை விளங்கும்.
சில சமய நூல்களில் அவாவின்மையும் கள்ளாமையும் கூறுப்பட்டிருப்பினும்
மிகுபொருள் வெ�காமையை இயம்பா.
எவை நூல்கள்
மக்கள் சமுதாய ஒற்றுமையையும், அறிவையும், வாழ்க்கை நலத்தையும்,
அவர்கள் பண்பாட்டையும் உயர்த்தும் நூல்கள்,
"மெய்ப்பொருள் காட்டி உயிர்கட்கு அரணாகித்
துக்கம் கெடுப்பது நூல்"
என்னும் ஆன்றோர் வழிவந்த மெய்ந்நூல்களேயாகும். இத்தகைய நூல்களையே
திருக்குறள் ஆசிரியர்,
"கற்க கசடறக் கற்பவை" என்றார். சிலப்பதிகார ஆசிரியர்,
தவப்பெருஞ்செல்வி கவுந்தியடிகள் வாயிலாக,
"கப்பந் திந்திரன் காட்டிய நூலின்
மெய்ப்பாட் டியற்கை விளங்கக் காணாய்"
என்றும், சீவக சிந்தாமணி ஆசிரியர்.
"தேர்ந்த நூற்கல்வி சேர்"
என்றும்,
"நூனெறி வகையினோக்கி நுண்ணிதின் நுழைந்து தீமைப்
பானெறி பலவும் நீக்கிப் பருதியங் கடவுளன்ன
கோனெறி தழுவி நின்ற குணத்தொடுபுண
ரின்மாதோ
நானெறி வகையனின்ற நல்லுயிர்க்கமிர்தம் என்றான்"
என்றும் கூறிப் போந்தார்.