 |
ஜன சமயத்தின் தொன்மை :
ஜைன சமயத்தின் தொன்மையை மேலேகண்ட தொல்காப்பியம், திருக்குறள்,
சிலப்பதிகாரம், சிந்தாமணி போன்ற பண்டை இலக்கியங்களாலும், சில
வரலாற்றுச் செய்திகளாலும் அறிந்தோமாயினும் மேலும் சில உண்மைகளைக்
கொண்டு ஜைன சமயத்தின் தொன்மையை நிலைநிறுத்துவது சாலச் சிறந்ததாகும்.
நமது பாரதநாட்டுத் தலைவராய் விளங்கும் ஜனாதிபதி. டாக்டர்.
இராதாகிருஷ்ணன் அவர்கள் சில ஆண்டுகளுக்குமுன் எழுதிய இந்திய
தத்துவங்கள் (Indian Philosophy) என்னும் நூலில் "பாகவத புராணம்
பகவான் விருஷபதேவர் ஜைனமதஸ்தாபகர் என்பதை ஆதா�க்கிறது. யஜுர் வேதம்
பகவான் விருஷபநாதர், அஜிதநாதர், நேமிநாதர்
(அரிஷ்டநேமி) ஆகிய
தீர்த்தங்கரர்களின் பெயர்களைக் கூறுகின்றது. வேதங்கள் எழுதப்படுவதற்கு
முன்னரே ஜைனதர்மம் விளங்கியிருந்ததென்று யான் கூறுவதில் சிறிதும்
அதிசயம் இல்லை" என எழுதியுள்ளார்.
பேராசிரியர், விருபாக்ஷ எம்.ஏ. வேததீர்த்த அவர்கள்,
ஜைன சித்தாந்தம் மிகப்பழமையான காலத்திலிருந்தே பரவியிருக்கிறது. "அருகன்
இதம் தயஸே விஸ்வமயம்" என்றும்,
ரிஷபம் மாசமானானாம் சபத்னானாம்
விஷாசகிஹந்தானாம் சத்ருனாம் ததிவிராஜகோபிதம்சுவாம் என்றும் "ரிக், யஜுர் வேதங்களில் காணப்படும் மந்திரங்களால் அதன் தொன்மை தெளிவாகிறது"
எனத் தமது ஆராய்ச்சி நூலில் விளக்கியுள்ளார். இவ்விரு பொ�யார்களைப்
போன்றே காலம்சென்ற நமது மாபெருந்தலைவர் லோகமான்ய பாலகங்காதரரும்,
ஜர்மனிதேசத்துப் பேரறிஞர் டாக்டர் ஹெர்மன்ஜெகோபி அவர்களும்
இதாலிதேசத்து வரலாற்றுப் பேராசிரியர், L.P. டெஸிடோரி (L.P. Tessitori)
என்பவரும் ஜைனசமயம் மற்ற எல்லா சமயங்களினும் தொன்மைவாய்ந்த புனித
சமயம் எனப் போற்றியிருக்கின்றனர்.
"இலக்கிய வளர்ச்சிக்காக ஜைன அறவோர்கள் எடுத்துக்கொண்ட பங்கு ஒப்பற்றது
என்று கூறக்கூடிய அளவுக்கு யான் படித்திருக்கின்றேன். தமிழ் இலக்கிய
வளர்ச்சிக்காக அத்தூயோர் மேற்கொண்ட அரும்பணி வெறும் வார்த்தைகளால்
அளவிடக்கூடியதல்ல என்பதை ஒரு தமிழன் என்முறையில் என்னால்
மறக்கமுடியவில்லை. தமிழ்மொழியிலுள்ள உயா�ய நூல்கள் பல ஜைன அறவோர்களால்
இயற்றியவை என்பதைத் தமிழ்மொழியைக் கற்ற நீங்கள் யாவரும் நன்கு
அறிவீர்கள். திருக்குறள், சிலப்பதிகாரம், சிந்தாமணி, நாலடியார்,
பெருங்கதை போன்ற இணையற்ற நூல்கள் தமிழ் நாகா�கத்திற்காகவும்
தமிழ்க்கலைக்காகவும் ஜைன சான்றோர்கள் ஆற்றிய அருந்தொண்டின் நினைவுச்
சின்னங்களாகும். தென்னாட்டு ஜைன அறிஞர்கள் தமிழ் இலக்கியங்களுக்காக
உழைத்திராவிடின்
அரியகலைப் பொக்கிஷங்கள் பலவற்றை இழந்திருப்போம்.
அண்மையில் கிடைத்த வரலாற்றுப் புதைபொருள் ஆராய்ச்சிகளினின்றும்
ஆரியர்
இந்நாட்டுக்கு வருமுன்னர் இந்தியாவில் மிகவும் உயா�ய நாகா�கம் இருந்து
வந்ததென்று அறிஞர்களை எண்ணச் செய்துள்ளன. இவ்வுயா�ய நாகா�கத்தை நான்
திராவிட நாகா�கம் என்று அழைக்க விரும்புகிறேன். ஏனெனில், இந்நாளில்
திராவிட நாகா�கம் என்ற வார்த்தைகள் வீண்வாதங்களைக்
கிளப்பியுள்ளனவாயினும்
ஆரியர் வருமுன்னர் இங்கு வதிந்துவந்த திராவிட
மக்களின் சமயம் ஜைனமாகவே இருந்ததால் திராவிட நாகா�கம் எனக் கூறுவதே
சா� எனக்கருதுகிறேன்.
இத்தகைய உயா�ய ஜைன சமயம் மட்டும் இந்தியாவில் வலிவுற்று
நிலைத்திருந்தால் இன்று காணும் நிலையை விடச்சிறந்த ஒற்றுமையும்
பெருமையும் அமைதியும் வாய்ந்த இந்தியாவை நாம் பெற்றிருக்க இயலும் என
நான் நம்புகிறேன்", என தமிழ்நாட்டுப் பேரறிஞர் காலம்சென்ற ஸர் ஆர்.கே.
சண்முகம் செட்டியார் அவர்கள் மகாவீரஜெயந்தியில் பேசியுள்ளார்.
புதைபொருள் ஆராய்ச்சிப் பேராசிரியர்கள் பலர் மொஹஞ்சதாரோ, ஹரப்பா
முதலிய இடங்களில் அகழ்ந்தெடுக்கப்பட்டப் புதைபொருள்களில் நிர்வாணமாக
யோகத்தில் நிற்கும் சிலைகளும், ஸ்வஸ்திக் மார்க்குகளும், ஜினாயநம:
எனப் பொறிக்கப் பெற்ற முத்திரைகளும் கிடைத்துள்ளன வாகையால், இவைகளைக்
கொண்டு ஆராயின் ஜைன சமயம் மிக மிக தொன்மை வாய்ந்ததென விளங்குகிறது என
எழுதியுள்ளார்கள். இப்பேராசிரியர்களின் வரலாற்றுச் செய்திகளாலும்,
வேதங்களின் சூத்திரங்களாலும், பகவான் விருஷபதேவரும் அவர்தம்
அறவுரைகளாகிய ஜைன நல்லறமும் மிகத்தொன்மை வாய்ந்ததென்பதை அறிகின்றோம்.
இவ்வரலாற்றுண்மையைக் கவிச்சக்கரவர்த்தி கம்பரும் அழகாக
விளக்கியுள்ளார். கம்பர் பெருந்தகை தமது இராமாயணக் காவியத்தில் வைதிக
வேதங்களைக் குறிப்பிடுவது போன்றே அவைகளுக்கு முற்பட்ட அறநெறிகளையும்
ஆங்காங்கு விளக்கிச் செல்லும் பாக்களே பெருஞ்சான்றாகும்,
"வடசொற்கும் தென்சொற்கும் வரம்பிற்றாய்
நான்மறையும் மற்றுநூலும்
இடைசொற்றபொருட்கெல்லாம் எல்லையதாய்
நல்லறத்துக்கீறாய் வேறு
புடைசுற்றுந்துணையின்றிப் புகழ்பொதிந்த
மெய்யேபோற் பூத்து நின்ற
அடைசுற்றுந்தண்சாரலோங்கிய வேங்
கடத்திற் சென்றடை தீர்மாதோ"
- நாடவிட்டப்படலம்
இங்கே கம்பர் நான்கு வேதங்களையும் அவைகளின் சார்பு நூல்களையும் கூறி
நல்லறத்தைத் தனியாகக் குறிப்பிட்டு நம்மை மகிழ்ச்சியிலாழ்த்துகிறார்.
கம்பர் குறிப்பிடும் நல்லறமே ஜைன சமயப் பேரறம். கிட்கிந்தா
காண்டத்தில் வாலியின் வாயிலாக,
"இல்லறத்துறந்த நம்பி எம்மனோர் க்காகத் தங்கள்
வில்லறந்துறந்த வீரன் தோன்றலால் வேதநூலின்
சொல்லறந் துறந்திலாத
சூரியன் மரபுந்தொல்லை
நல்லறந்துறந்த தென்னா?,,"
என்றார். இங்கேயும் வேதநூலின் சொல்லறமும் தொல்லை நல்லறமும்
தோன்றவைத்துள்ள கொள்கையால் கம்பர் சீவகசிந்தாமணி ஆசிரியர் "தொன்மாண்பமைந்த
புனை நல்லறம், எனப்போற்றும் வரலாற்றுத்துறையை மறவாது குறிப்பிட்டுப்
போற்றுவதைக் காண்கிறோம்.
பேராசிரியர் டாக்டர் ஹாஜிமே நாகமுரா எழுதியுள்ள ஒரு பொ�ய கட்டுரையில்
பின்வரும் செய்திகள் காணப்படுகின்றன.
1. சீன மொழியிலுள்ள பெளத்த நூலாகிய
திரிபீடகத்தில் ஜைனர்களின் முதல்
தீர்த்தங்கரராகிய பகவான் விருஷப தேவரைப்பற்றிப் பல குறிப்புகள்
காணப்படுகின்றன.
2. சீன மொழியிலுள்ள ஷட்சாஸ்திரம் முதல் அத்தியாயத்தில் விருஷபதேவரை
பகவத் என அழைக்கப்பட்டுள்ளதென்றும், விருஷபதேவா�ன் சீடர்கள் ஜைன
அறநெறிகளைப் பயின்று வந்தனர் என்றும் குறிக்கப்பட்டுள்ளது.
3. சீன மொழியிலுள்ள பிடக்கிரந்தம் என்னும் ஜைன நூலில் மகாசத்திய
நிர்க்கிரந்த புத்த வியாக்யானம் என்னும் நூலும் அடங்கியிருக்கிறது.
மேற்படி நூல் கி.பி. 519-ல் போதிருசி என்பவரால் மொழிபெயர்க்கப்பட்டு
அதை திரிபீடத்தில் சேர்த்து விட்டார். இவ்வாறு அவர் செய்ததன் நோக்கம்
சைனாவிலுள்ள ஜைனர்களைப் பெளத்த மதத்தைத் தழுவும்படி
செய்வதற்காகவேயாகும்.
4. சீனநாடு போலவே ஜப்பானியர்களும் பகவான் விருஷபதேவரை ரோக்ஷேவ் (Rick
Shave) எனப்போற்றி வழிபட்டு வந்துள்ளனர்.
5. இலங்கையிலுள்ள மகாவம்சம் என்ற நூலில் அனுராதபுரம் ஒரு ஜைனஸ்தலமாக
இருந்தது. இங்குள்ள ஆதிதீர்த்தங்கரராகிய பகவான் விருஷப தேவர் கோயில்
கி.பி. ஐந்தாம் நூற்றாண்டுவரை சிறப்புற்று விளங்கிற்று. அதுவரை
அப்பகுதியை ஆண்ட அரச குடும்பத்தினரால் பாதுகாக்கப்பட்டு வந்தது என
அரிய வரலாற்றுச் செய்திகளை அளித்துள்ளார்.
மற்றொரு பேராசிரியர் R.G. ஹர்ஷே என்பவர் டெக்கான் கல்லூரி ஆராய்ச்சி
அறிக்கையின் பக்கம் 229 - 236-ல் பின்வருமாறு விளக்கியுள்ளார்.
1. தற்போது அலாஷயா என அழைக்கப்படும் இடத்தில் கி.மு. 12-ம்
நூற்றாண்டிலிருந்த ��ஷப் என்னும் சிலையை ஆராய்ந்தபோது அது விருஷப
தேவரேயாகும்.
2. இக்கருத்தை வலியுறுத்த அந்நாட்டு மக்கள் பணிக்கர்களின் மொழியில்
��ஷப் என்னும் சொல்லுக்கு கொம்புடைய பிராணி தேவர் எனப் பொருள்
கூறப்படுகிறது. அந்த ��ஷப் சிலையின் கொம்புகள் எருதுகளின் கொம்புகள்
போலவே இருந்தன.
3. இதனால் அந்நாட்டு மக்களாகிய பணிக்கர்கள் பகவான் விருஷபதேவரையும்
அவர்தம் அறச்சின்னமாகிய எருதையும் வழிபட்டு வந்தனர் என்பது
தெளிவாகிறது.
4. பணிக்கர் வகுப்பாரிடையே ஒரு பழமையான கவிதை பாடப்பட்டுவந்துள்ளது.
அது ரஸஸ்மாரா என்னும் இடத்திலிருந்து கண்டெடுக்கப்பட்டது. அதில்
பகவான் விருஷபதேவர் கர்மங்களை வென்று பா�பூரண ஞானியானார் என்றும்
பின்பு ஒவ்வொரு நகரம், கிராமமாகச் சென்று தர்மோபதேசம் செய்து வந்தார்
என்றும் கூறப்பட்டுள்ளது.
தற்கால வெளிநாட்டுப் புதைப்பொருள் ஆராய்ச்சியாளர்களின் அறிக்கைகளில்
கீழ்வரும் செய்திகள் காணப்படுகின்றன.
சோவியத் அல்மேனியாவின் கா�மர்ப்யூலா (சிகப்பு மலை) "தேஷேன்வி" என்று
கூறும் உரதியம் நகரம் இருக்கிறது. பேபிலோனியாவின் இஸ்பேசூர் என்னும்
நகரம் ரிஷப்பூர் என்ற தன்
திரிபுவேயாகும். அங்கே தேஷப் தேவா�ன்
(ரிஷப்)
சிலையும் இருந்திருக்கிறது. பழைய காலத்தில் "தேஷவ்" அல்லது தேஷப்
ரூபத்தில் பகவான் விருஷப தேவர் மகிமை மத்திய ஆசியாவிலிருந்து சோவியத்
நாடுவரை பரவியிருந்தது.
மவாதியா, ஜின்னேரவி, இஸ்பெக்ஜுர் முதலிய இடங்களில் தேஷப் தேவா�ன்
(ரிஷப்
தேவர்) சிலைகள் காணப்படுகின்றன. அச்சிலைகள் நிர்வாண நிலையில் எருதைச்
சின்னமாகக் கொண்டு விளங்குகின்றன. அவருக்கு ஆயுதம்
திரிசூலம் போன்று
காணப்படுகிறது. (இது இரத்தினத்திரயத்தைக் குறிக்கும்).
இவ்வாறு இவ்வுலக வரலாற்றில் மிகப் பழங்காலமுதலே பகவான் விருஷபதேவர்
இடம் பெற்றிருப்பதாலும், வடமொழி வேதங்களில் அப்பெருமகன் போற்றப்
பெற்றிருப்பதாலும், தொல்காப்பியம் போன்ற தொன்மை வாய்ந்த தமிழ்
இலக்கியங்களில் அத்தூயோனையும் அவர்தம் பேரறத்தையும்
மேற்கொண்டிருப்பதாலும் ஜைன சமயம் மிகமிகத் தொன்மை வாய்ந்த சமயம்
என்பதையும், அது தொல்காப்பியருக்கு முன்னரே தமிழகத்தில் தமிழர்
சமயமாய் விளங்கியுள்ளதென்பதையும் அறிந்தோம்.
இனியேனும் தொல்காப்பியர் போன்றும், திருக்குறள் ஆசிரியர் போன்றும்
மற்ற நாட்டு மக்கள் போன்றும் தமிழக மக்களாகிய நாம் முதன் முதல்
உலகுக்கு அறம் உரைத்த பகவான் விருஷபதேவரை நாள் தோறும் வழிபாடு செய்து
அப்பெருமகன் அறநெறிகளே மக்கள் வாழ்க்கைக்கும், பண்பாட்டிற்கும்
உலகுக்கும்
உரியவை என்பதை நன்குணர்ந்து போற்றுவோமாக.
வாழ்க நல்லறம்; வளர்க நல்லறிவு.