 |
இல்லறநெறிகள் :
"விரையார் மலர்மிசை வருவார் திருவறம் விழைவார்
கொலையினை விழையார் பொய்
யுரையார் களவினை யொழுகார் பிறர்மனையுவுவார்
மிகுபொருள் உவவார் வெஞ்
சுரையால் உணர்வினை யழியார் யழிதசை துவ்வார்
விடமென வெவ்வாறும்
புரையார் நறவினை நுகரார் இரவுணல் புகழார்
சூரவரை இகழாரே"
- திருக்கலம்பகம்.
கொல்லாமை, பொய்யாமை, கள்ளாமை பிறர்மனை நயவாமை, ஊனுண்ணாமை, மிகுபொருள்
விரும்பாமை, கள்ளுண்ணாமை குரவரை இகழாமை போன்ற அறங்களும் இல்லறத்தார்
மேற்கொள்ள வேண்டிய இன்றியமையா நல்லொழுக்கங்களாகும். இவைகளை அணுவிரதம்
எனப்போற்றுவர்.
துறவறம் :
தொல்காப்பியம் பொருளதிகாரம் புறத்திணை இயலில்,
"அருளொடு புணர்ந்த அகற்சியானும்
காமம் நீத்த பாலினானு மென்
றிருபாற்பட்ட வொன்பதின்றுரைத்தே"
என்றார். இளம்பூரணார் உரை : - 'அருளொடு புணர்த்த அகற்சியானும் என்றது
அருளொடு புணர்த்த துறவின் கண்ணும் என்றவாறு. அ�தாவது. அருளுடைமை,
கொல்லாமை, பொய்யாமை, கள்ளாமை, புணர்ச்சி விழையாமை, கள்ளுண்ணாமை, துறவு
என்பனவாம்.
"அருட்செல்வம் செல்வத்துட் செல்வம் பொருட் செல்வம்
பூரியார் கண்ணு முள"
"அறவினை யாதெனிற் கொல்லாமை! கோறல்
பிறவினை யெல்லாந் தரும்!"
"வாய்மை யெனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை யிலாத சொலல்"
"களவென்னுங் காரறிவாண்மை அளவென்னும்
ஆற்றல் புரிந்தார் கணில்"
- குறட்பாக்கள்
"மாக்கேழ் மடநல்லா யென்றரற்றுஞ் சான்றவர்
நோக்கார்கொல் நொய்யதோர் புக்கில்லை-யாக்கைக்கோர்"
"ஈச்சிற கன்னதோர் தோலறினும் வேண்டுமே
காக்கை கடிவதோர் கோல்"
- நாலடியார்
வேண்டினுண்டாகத்துறக்க துறந்தபின்
ஈண்டியற் பால பல.
என்பது பிரம்மச்சா�யக் காப்பின் விளைவு கூறியது
"களித்தறியே னென்பது கைவிடுக! நெஞ்சத்
தொளித்ததூஉம் ஆங்கே மிகும்"
- குறள்.
துறவு என்பது,
"யாதனின் யாதனி னீங்கியா னோதல்
அதனின் அதனின் இலன்."
காமம் நீத்த பாலினானும் என்றது ஆசையை அறவிடுத்தகத்தானும் என்றவாறு,
உதாரணம் :-
"காமம், வெகுளி, மயக்க மிவைமூன்றி
னாமங் கெடக் கெடுநோய்"
"மற்றுந் தொடர்ப்பா டெவன்கொல்? பிறப்பறுக்க
லுற்றார்க்கு உடம்பும் மிகை"
என்பது அறவிடுக்கும் இயல் கூறியது. இப்பெற்றிய தவ நெறியையே மெய்த்தவம்
எனச் சிறப்பித்துள்ளார் தொல்காப்பியர். இம்மெய்த்தவத்தோரே
இருவினைகளையும் வென்று வீடு பேறடையும் இயல்புடையராவர் என்பது ஜைன
அறவோர் கண்ட உண்மை. இத்தகு தலைசிறந்த ஜைன முனிவர்களைக்
கவிச்சரக்கரவர்த்தி கம்பரும் போற்றுகின்றார். சுக்கி��வன் தனது
சேனைகளைக் கொண்டு சீதையைத் தேடுமாறு வழிகூறி அனுப்பும் நாடவிட்ட
படலத்தில் திருவேங்கடத்து மலையில் தவமியற்றும் ஜைனமுனிவர்களைக்
குறித்து அச் சுக்கி��வன் வாயிலாகக் கம்பர் பெருந்தகை பின்வரும்
கவியால் உளங்கனிந்து கூறுகின்றார். அது மட்டுமல்ல, அம்
முனிபுங்கவர்களை வணங்கிச் செல்லுமாறு பணிக்கும் மாண்பினையும் காண்போம்.
"இருவினையுமிடை விடா வெவ் வினையுமியற்றோ
இமையோ ரேத்தும்
திருவினை�யும் மிடுபதற்தேர் சிறுமையையு முறையொப்பத்
தெளிந்து நோக்கிக்
கருவினைய திப்பிறவிக் கென்றுணர்ந்தங்
கதுகளையும் கடையின் ஞானத்து
அருவினையின் பெரும் பகைஞராண்டுளா�ண்
டிருந்து மடி வணங்கற் பாலார்"
இக்கவியில் ஜைன சமயத்துறவிகளுக்குரிய பண்பையும், பிறவிக்குவித்து
இருவினைகளே என்பதையும் அவ்வினைகளைக்களைந்து கடையிலா ஞானம் பெற்று
வீடுபேறடைதலே மக்கள் பிறவிக்குரிய கடமையும் பயனும் என்பதையும் நன்கு
விளக்கி, வினைகளைக் கெடுத்தலால் அத்தூயத்தவத்தோரை 'அருவினையின்
பெரும்பகைஞர்' என அழைத்திருக்கும் புகழுரைகள் அறிவுக்கு விருந்தாகும்.
நாம் மேலே கண்டதவநெறிக்கு மாறாகக் காடுகளிலே சென்று மனைவி, மக்கள்,
மாடுகளுடனும் தவமியற்றுபவர், நெருப்பினிடையே அமர்ந்து தவம் செய்வோர்
போன்றவர்களைத் 'தாபதர்' எனக் குறிப்பிட்டுள்ளார் தொல்காப்பியர்.
தொல்காப்பியத்தில் தாபசருக்கென தனி சூத்திரமே இருக்கிறது. ஐம்பொறி
அடக்கத்துடன் முற்றுந்துறந்தோரே உண்மைத் துறவிகளெனப் போற்றும்
தொல்காப்பியர் போன்றே திருக்குறளாசிரியர் தவம் என்ற அதிகாரத்தாலும்,
போலித் துறவைக் கூடா வொழுக்கம் என்ற அதிகாரத்தாலும்
பிரித்துக்
காட்டியுள்ளார். ஐம்பொறி அடக்கமின்றி, சடை, தாடி, தடி புலித்தோல்
போன்ற பல்வேறு ஆடம்பரங்களுடன் கூடிய வைதிக சமயத்துத் துறவிகளையும்,
வழுதலைப் போல் தினந்தோறும் தலையில் மயிர் தலைகாட்டாவண்ணம் மொட்டை
அடித்துக்கொண்டு செருப்பு, குடை, உடல் முழுதும் ஆடை, உணவு, படுக்கை,
வெற்றிலைப் பாக்கு போன்றவைகளை உபயோகிக்கும் பெளத்த துறவிகளையுமே,
"மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்த தொழித்து விடின்"
என்றார் குறளாசிரியர். தொல்காப்பிய உரை ஆசிரியர் இளம்பூரணரும்,
ஐம்பொறி அடக்கமும் சுவை அடக்கமும் உடைய ஜைன அறவோர்களாகிய தவத்தோரை
விளக்கத் திருக்குறளையும், நாலடியாரையும் மேற்கோள் காட்டித் தவத்தின்
சிறப்பையும், மனிதனிடத்திலுள்ள ஆற்றலின் ஏற்றத்தையும் படம் பிடித்துக்
காட்டியுள்ளார். மக்கள் பிறவியொன்றே வீடு பேறடைவதற்குரியது என்பதும்
தேவர்களோ, விலங்குகளோ அவ்வுயர்நிலை அடைய வியலாது என்பதும் ஜைனசமயக்
கொள்கை. தேவர்களாயினும் மனிதப் பிறவி எடுத்தே தவம் முதலியவைகளால்
இருவினைகளைவென்று வீடுபேறு அடைய வேண்டும். எனவே தேவா�னும் மனிதப்
பிறவியே சாலச் சிறந்த தென்பதை ஜைன சமயம் தெளிவாகவும், உறுதியாகவும்
கூறுகிறது. இப்பேருண்மையையே தொல்காப்பியர்,
'இமையோர் தேயத்தும்
எறிகடல் வரைப்பினும்'
என்னும் சூத்திரத்தால் மண்ணுலகிலும் தேவருலகிலும் உள்ள எல்லா
உயிர்களையும்விட மனிதப்பிறவியே மாண்புடையதென்பதை விளக்கியுள்ளார்.
இதனால் தேவர்களுக்கும் இல்லாதசிறப்பு மனிதர் உயிர்களுக்கு உண்டு
என்பதை அறிகின்றோம். வைதிக சமயங்களில் ஜைன சமய கொள்கைக்கு மாறாக
தேவர்களுக்கு முதலிடமும் மனிதர்களுக்கு அடுத்த இடமும்
அளித்திருப்பதைக் காணலாம். இவ்வைதிகக் கொள்கைகைய மறுக்கவே நமது
குறளாசிரியர்,
"தேவரனையர் கயவர் அவரும் தாம்
மேவன செய் தொழுகலான்"
என்றார்.
இவ்வாறு மானிடப் பிறவியின் உயர்வைக்கொண்டு ஜைன சமயம் அவர்கள்
வாழ்க்கைப் பண்பை வளம்படுத்த வகுத்தருளிய இல்லறம், துறவறமாகிய இரு
பேரறங்களையே தொல்காப்பியரும் தமது நூலில் நன்கு சிறப்பித்துள்ளார்.
இவையே பழந்தமிழர் கண்ட அரும் பெருங்கொள்கை. இவ்விரு அறநெறிகளுக்கும்
அஹிம்சையே அடிப்படையாகையால் மக்கள் பலரும் பிறப்பினால்
ஒன்றுபட்டவர்கள் என்ற கொள்கையைக் கடைப்பிடித்து வாழ வேண்டும் என
அறியும் வண்ணம் அறநெறிகள் வகுக்கப்பட்டுள்ளன. இதனால் ஜைன சமயம்
மக்களுக்குள் உயர்வு தாழ்வுகளைக் கற்பிக்கும் சாதி சமயங்கள்
கூறப்படவில்லை என்பதை அறிகின்றோம். நமது கொள்கையை வலியுறுத்தும்
வகையில் தொல்காப்பியப் பொருளதிகார ஆராய்ச்சியை எழுதியருளிய
பெரும்புலவர் திரு. மு. இராகவ அய்யங்கார் அவர்கள் பின்வருமாறு
அவ்வாராய்ச்சியில்
"உலகிலே தமிழர் நாகா�கமே மிகப் பழமையானது. தலைசிறந்தது. நாம்
இக்காலத்தில் என்னென்ன வேண்டும் என்று நினைக்கின்றோமோ இவைகள் எல்லாம்
பண்டைத் தமிழர் நாகா�கத்திலே படிந்து கிடந்தன : பழந்தமிழர்கள் சாதி
வேற்றுமையைப் பாராட்டாதவர்கள். கடவுள் நம்பிக்கை அற்றவர்கள்.
மூடப்பழக்க வழக்கங்களை அறியாதவர்கள். ஏழை, பணக்காரன் என்ற
வேற்றுமையில்லாதவர்கள்.
ஆரியர்கள் இந்தியாவிற்கு வந்த பின்னர்தான்
தமிழர் நாகா�கம் சிதைந்தது."
என அழகாக உண்மையை வெளிப்படுத்தியுள்ளார்.
அவ்விரு பேரறங்களையும் ஜைன சமய நூல்கள் பலவற்றிலும் காணலாம். இவ்வற
நெறிகளை முதன் முதல் உலகுக்கு உரை செய்த பகவான் விருஷப தேவர் அவைகளைச்
சமயம் அல்லது மதம் என்று அழையாமல் அறம், அறம் என்றே போற்றினார்.
அப்பெரு மகன் மக்கள் சமுதாயத்தில் உயர்வு தாழ்வுகளைக் கற்பிக்காமல்
அனைவரும் ஒன்றே என்ற முறையில் வாழுமாறு பணித்தார். தொழில் முறையால்
வேறுபடினும் பிறப்பினால் மக்கள் பலரும் ஒருகுடும்பத்தினர்
போன்றவர்களாகையால் அவர் தம் அறநெறி அன்பின் அடிப்படையில் மக்கள்
சமுதாயத்திற்கே
உரியதாக அமைந்திருந்தது.
அஹிம்சையும் வாழ்க்கையும் :
அஹிம்சை ஜைன சமயத்தின் அடிப்படைக்கொள்கை என்பதை முன்னரே அறிந்துள்ளோம்.
அஹிம்சை அல்லது அருளறத்தை இன்னாசெய்யாமையாக மட்டும் கொள்வது
பொருந்தாது. அஹிம்சை என்ற சொல் எதிர்மறை வடிவத்தில் தோன்றினாலும்,
அச்சொல்லால் அமையும் கருத்து உடன்பாட்டுக்கருத்தாகும். எவ்வுயிரிடத்தும்
அன்பு பூண்டு ஒழுகுகின்ற அறம் கொல்லாமை என்ற சொல்லால்
குறிக்கப்படுகின்றது. எவ்வுயிருக்கும் பொதுவெனக் காண்கின்றகாட்சி
அமைந்தால் அல்லது எவ்வுயிரிடத்தும் அன்புபூண்டு ஒழுகுதல் இயலாது.
அக்கருத்துக்கு உடன்படுபவனே பிறவுயிர்களின் துன்பங்கண்டு இரங்குவான்.
அதுமட்டுமல்ல! அவ்வுயிர்கள் படும் துன்பத்தை அகற்றமுற்படுவான்.
இத்தகு உயா�ய அடிப்படையில் மக்கள் வாழ்க்கையை அமைக்கவே பகவான்
விருஷபதேவர் அஹிம்சையை தலையாய அறமாக வகுத்தருளினார். எனவே வாழ்க்கை
என்பது அன்பை, நட்பை அடிப்படையாகக் கொண்டது. ஆனால் உலகியலை
நோக்கும்போது வாழ்க்கை வேற்றுமை நிறைந்து காணப்படுகின்றது. எங்கு
நோக்கினுங் கலகங்கள்! பகைமை! மோதல்கள்! இம்ஸைகள்! தொந்திரவுகள்!
ஆகியவைகளே காணப்படுகின்றன. உண்மையில் இவை யாவும் வாழ்க்கையல்ல. இது
வெளித்தோற்றம். வாழ்க்கை வேற்றுமையுடையதல்ல. வாழ்க்கை கலகங்களைக்
கண்டு நடுங்குகிறது. வாழ்க்கை பகைமையை விரும்பவில்லை. மோதல்களை
வெறுக்கிறது. இம்ஸையைக் கண்டு துன்புறுகிறது. தொந்தரவுகளை
ஏற்றுக்கொள்வதில்லை. எனவே வாழ்க்கை இன்பமாக வாழ்வதையே விரும்புகிறது.
எல்லோரும் சேர்ந்து வாழ விழைகிறது. சமாதான வாழ்க்கையில் ஆர்வங்
கொள்கிறது. அதனாற்றான் நாம் கூட்டங் கூட்டமாய் வாழ்கின்றோம். விருந்து
முதலியவைகளை வைத்து நட்வு உறவுகளை வளர்க்க விரும்புகிறோம். சங்கங்கள்
அமைத்து சேர்ந்து பணியாற்றி மகிழ்கிறோம். இவைகளைக்கொண்டு ஆராயும்போது
வாழ்க்கைத் தத்துவம் கூடிவாழ்வதையே அடிப்படையாகக் கொண்டதென்பதை
அறிகிறோம். இத்தகு அன்பு நெறியைத்தான் அருளறம் (அஹிம்ஸை) எனப் பண்டைய
இலக்கியங்கள் போற்றியுள்ளன. நாம் வாழ பிறரும் வாழவேண்டும் என்ற
நல்லெண்ணத்தை வளர்த்துள்ளன. இவ்வியற்கை வாழ்க்கையே இல்லறத்தாரும்.
துறவறத்தாரும் மேற்கொள்ளவேண்டிய அருள் நெறியாகும். இவ்விரு
பேரறங்களையும் திருக்குறளிலே காணலாம். எனவே திருக்குறள் என்றால் ஜைனம்;
ஜைனம் என்றால் திருக்குறள் எனத்தெளிவாகத் துணிந்து கூறலாம்.
கல்வி அறிவு :
அறநெறிகளை வகுத்தருளிய அம்முதல்வர் மக்கள் அறிவு வளர்ச்சிக்காகவும்
வாழ்க்கை நலத்திற்காகவும் கல்வி, உழவு, சிற்பம், வாள், வரைவு, வாணிபம்,
நெய்யுந் தொழில் போன்றவைகளைக் கற்பித்தார். இதனையே கலிங்கத்துப்பரணி
ஆசிரியர் ஜெயங்கொண்டார்.
"காலைப் பொழுதும் மாலைப் பொழுதும்,
கல்விப் பொருளே செல்வப் பொருளாய்,
மேலைக் குறுநற் குணனைக் கருதி
மிகுமா தவமே
புரிவார் தமதூர்"
எனப்புகழ்ந்து போற்றியுள்ளார். இதனின்றும் ஜைன சமயச் சான்றோர்கள்
கல்வியையும், தொழிலையும் வளர்த்து மக்கள் சமுதாயத்தின் வாழ்வுக்கு
வழிகோலினர் என்பதை அறிகிறோம். ஜைன அறவோர்கள் பாரத நாட்டின்
பலபாகங்களிலுமுள்ள இயற்கை மலைக்குகைகளில் பள்ளிகள் அமைத்துக்கொண்டு
தவமியற்றி மக்கள் வாழ்க்கைப் பண்பையும், அறநெறிகளையும் வளர்த்து
வந்தார்கள். அதுமட்டுமன்று பல்வேறு இலக்கியங்களையும், கலைகளையும்
இயற்றி உலகக் கலைக்கு உதவினார்கள். அறிவு விருந்தளித்த அவ்வறவோர்களின்
நினைவுச் சின்னங்களான பள்ளிகளைப் பாரத நாட்டிலும் குறிப்பாகத்
தமிழகத்திலுள்ள பல மலைக் குகைகளிலும் காணலாம். இவ்வுண்மையை
சிலப்பதிகாரம்,
"அறவோர் பள்ளியும் அறனோம் படையும்
புறநிலைக் கோட்டத்துப் புண்ணியத் தானமும்
திறவோருரைக்கும் செயல் சிறந்தொருபால்."
எனச் சிறப்பித்துக் கூறுகிறது. இவ்வா�களுக்கு அடியார்க்கு நல்லார்,
"அறவோர் பள்ளி - அருகர் பள்ளி, அறவோர் பள்ளி முதலிய எல்லாவற்றிலும்
தருமம் போதித்தலும், புராணம் படித்தலுமாகிய செயல்கள்" என உரை
எழுதியுள்ளார்.
இத்தகு தூய்மை நிறைந்த பள்ளிகளில் அறவுரை கேட்கவோ, கல்வி கற்கவோ
செல்பவர்கள் தூய்மையாகச் செல்ல வேண்டும். குறிப்பாகக் கால்களை நன்கு
கழுவிக்கெண்டு செல்ல வேண்டும். அவ்வாறு கழுவாக்கலுடன் செல்வோரைத்
திருக்குறளாசிரியர்,
"கழாக்கால் பள்ளியுள் வைத்தற்றால் சான்றோர்
குழா அத்துப் பேதைபுகல்"
எனக் கண்டித்திருப்பதினின்றும் அவர்தம் சமயக்கொள்கை நன்கு விளங்கி
விடுகிறது. அவர்தம் பேருரையால் ஜைன அறவோர்களிடத்தும், பள்ளிகளிடத்தும்
நாம் எத்தகைய மா�யாதையும் அன்பும் செலுத்தவேண்டும் என்ற
கடமையுணர்ச்சியையும் நமக்கு விளங்க வைத்துள்ளார்.
தானங்கள் :
மக்கள் சமுதாய நலனைக் கருதி ஜைன அறவோர்கள் நான்கு தானங்களை
வகுத்துள்ளார்கள். அன்னதானம் (உணவு அளித்தல்) ஒளஷததானம் (பிணியாளருக்கு
மருந்தளித்தல்) வித்தியாதானம் (கல்வி கற்போருக்கு உதவி புரிதல்)
அபயதானம் (அடைக்கலம் புகுந்தோரைப் பாதுகாத்தல்) ஆகிய நான்கு
தானங்களையும் புரிய வேண்டுமென இல்லறத்தார்க்குப் பணித்துள்ளார்கள்.
பண்டைய காலத்தில் இந்நான்கிற்கும் தனித்தனி நிலையங்கள் அமைத்து
சமூகசேவை புரிந்துள்ளதை வரலாறு மெய்ப்பிக்கின்றது.
பகுத்துண்டு வாழ்தலும் பல்லுயிர் ஓம்புதலும் :
ஜைன அறவோர்கள் மக்கள் வாழ்க்கையை அஹிம்சையின் வழியில் அமைத்து அறம்
வகுத்துள்ளார்கள் என்பதை முன்னரே அறிந்துள்ளோம். அஹிம்சையைப்
பின்பற்றுவோர் அனைவரும் பிறருடைய துன்பங்களைக் கண்டு சகியார்கள். எனவே
அஹிம்சையை மக்கள் பலரும் மேற்கொண்டு வாழவேண்டுமென்றும், அதே சமயத்தில்
தமது பொருளீட்டலை அளவுபடுத்திக்கொண்டு பிறரும் வாழவழி
விடவேண்டுமென்றும் வற்புறுத்துகிறார்கள் ஜைன அறவோர்கள்.
கொல்லாமை (அஹிம்சை) சகோதர உணர்ச்சியையும், தன்னலமின்மையையும்,
பிறவுயிர்கள் பால் அன்பையும் வளர்க்கும். எனவே கொல்லாமையை
மேற்கொள்வோரே தாம்வாழ்வதுபோல் பிறரும் வேண்டும் என்ற நல்லெண்ணத்தால்
மிகுபொருள் வாழவிரும்பாமையை மேற்கொண்டு பகுத்துண்டு வாழ்வர்.
இவ்வியற்கையை சீவகசிந்தாமணி ஆசிரியர்,
"அட்டுநீர் அருவிக் குன்றத் தல்லது வைரம் தோன்றா
குட்டநீர் குளத்தி னல்லால் குப்பைமேற் குவளை பூவா
விட்டுநீர் வினைவிக் கேண்மின் விழுத்தகை யவர்கட்கல்லால்
பட்டது பகுத்துண் பாரிப் பார்மிசை இல்லை கண்டீர்"
என அழகாகப் படம் பிடித்துக் காட்டியுள்ளார். ஆகவே பல்லுயிர் ஓம்பிப்
பகுத்துண்டு வாழும் பண்பிற்குக் கொல்லாமையும் மிகுபொருள்
விரும்பாமையும் பேரறமாக வகுத்தளித்தனர்.
"பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்று ளெல்லாந் தலை"
என்னும் தமிழ் மறையே சான்றாகும்.