 |
Introduction
THIS Publication, though small in size is largely valuable in
research and it has mainly been written to protest the views of
Mr. Deyva Nayagam, a christian Tamil Pandit according to whom
Thiruvalluvar has created the complete "AINTHAVITHTHAN A ATRAL "
(����) in favour of Christianty and he even published his views in
a book named "AINTHAVITA THAN YAR?" The Madras Christian Cultural
Communication centre has requested Sri Jeevabandhu T.S. Sripal
to
contribute a thesis not exceeding in twenty pages confirming
clearly whether his view is agreeable or not and our eminent
Scholar Jeevabandthu welcomed their request with pleasure
contributing this essay as a book of protest. This thesis has been
put forward among many eminent schloars in a conference arranged
by the Christian Cultural Society. All the scholars appreciated
his through literary knowledge and praised the deep and sound
basis of his research as a rare and valuable thesis which revealed
the un-acceptable view of Mr. Deyva Nayagam reflecting the truth
with the scholar and honoured our Jeevabandhu by contributing
cash-pripe of hundred rupees with great pleasure. such being the
value of this creation, we publish it with the hope that it will
be an useful guidance not only for the students of Thirukkural but
also for research workers.
Our thoughts are highly appreciatable and remarkable since Sri. M.
Shanmugam Pillai, Head of the department of Thirukkural Research
Centre, University of Madras, has praised in his letter to the
Author that his work which revealed the misinterpretation of Mr.
Deyvanayagam is indeed a tasteful feast for schoilars, thanking
him for the same on behalf of reserach-World. So the greatness and
admiration of this piece need no further evidences.
Above all we indeed, than and appreciate with great respect, the
greatness of the Madras Christain CulturalCommunication Centre in
honouring the real knowledge of literature, in respecting the high
principles,-in encouoraging it by contribution of prizes, though
this plece of work is a controversy to that of its own religious
author, Mr. Deyva Nayagam.
We recommend with pride those who have a taste In research of
Thirukkural to go through the famous, valuable treasure of the
author Sri Jeevabandhu T.S.Sripal, "THIRUVALLUVAR VAZHTHUM
AADHIBAGAVAN"
(�������� š���� �����š�)
which will give full realisation for research workers.
Yours,
R. SOVANRAJ
Secretary
TAMIL NADU ANUVRAT SAMITI
Madras
Dated: 30-11-1972
ஐந்தவித்தான் யார்?
ஐந்தவித்தான் யார் என்ற தலைப்பில் ஒரு கிறித்துவப் புலவர் திரு. மு.
தெய்வநாயகம் அவர்கள் எழுதியுள்ள நூலைப்பற்றி ஆராய்ந்து அவர்
கூற்றுக்கள் ஏற்புடைத்தா இல்லையா என்பதை விளக்கி எழுதுமாறு
கிறித்துவக் கலை தொடர்பு நிலைய இயக்குனர் திரு. சா. சுவிசேஷ முத்து
அவர்கள் என்னைப் பணித்துள்ளார்கள். அப்பொ�யாரின் விருப்பத்தை ஏற்று
அப்பணியை மேற்கொண்டேன். யான் இந்நூலையும், இவ்வாசிரியர்
எழுதியுள்ள-திருவள்ளுவர் கிறித்துவரா என்று நூலையும் படித்துப்
பார்த்து வியப்பும் வேதனையும் அடைந்தேன்.
ஆராய்ச்சி அறிவு :
ஆராய்ச்சித்துறை ஒரு தனிக்கலை. அது சிந்தனையைக் கிளறுவது. ஆழ்ந்த
அறிவை வெளிப்படுத்துவது. ஆராய்ச்சியாளர் தாம் மேற்கொண்டுள்ள
கொள்கைகளுக்கு அரணாக பன்னூல் பயிற்சியும், வரலாறு, காலம், மரபுகள்,
அகச்சான்றுகள் ஆகிய துறைகளிலும் புலமை பெற்றிருக்க வேண்டும். இவைகளைக்
கொண்டே தம் கொள்கைகளை நிலைநிறுத்த வேண்டும். இத்தகைய ஆராய்ச்சி
அறிவுடையோரின் நூல்களையே அறிஞர் உலகம் ஏற்றுக்கொள்ளும். அது
மட்டுமல்ல; அந்நூல்களே என்றும் எவராலும் போற்றப்பட்டு நிலைத்து
நிற்கும். மேற்கூறிய முறைகளைப் புறக்கணித்துவிட்டு, கண்டதே காட்சி,
கொண்டதே கோலம் என்ற பழமொழிப்படி, ஆராய்ச்சி என்ற பெயரால் நூல்களை
எழுதித் தள்ளவது அறிவுடமையாகாது. அத்தகைய நூல்கள் நகைப்பிற்கும்,
எதிர்ப்புக்கும் இடம் தரும். அந்நூல்களை வாசிக்கத் தொடங்கும் போதே
அறிவு வெறுப்படையும். மேற்கொண்டு படிக்கவும், அதில் மனதை செலுத்தவும்
உள்ளம் ஓடாது. அத்தகைய போலி நூல்கள் அக்கணமே, அன்றைப் பகலே அழிந்து
மறைந்துவிடும். எனவே ஆராய்ச்சியாளர்கள் நாம் மேலே கூறிய வரலாறுகள்
அகச்சான்றுகள் புறச்சான்றுகள் போன்றவைகளைக் கடைப்பிடிப்பது
இன்றியமையாததும், கடமையும் ஆகும்.
இப்பேருண்மைகளை அடிப்படையாகக் கொண்டு ஐந்தவித்தான் யார்? என்ற நூல்
அமைந்திருக்கிறதா என்பதை இனி ஆராய்வோம்.
ஐந்தவித்தான்
ஐந்தவித்தான் என்ற இப்பண்பு இறந்தகால நிகழ்ச்சியாகும். மெய், வாய்,
கண், மூக்கு, செவி ஆகிய ஐந்தின் வயப்பட்ட ஒருவர் தன் உயர் பண்பால்
அவைகளைத் தன் வயப்படுத்தி ஆட்கொண்டார் என்பதாகும். இவ்வாறு
ஐம்புலன்களையும் வென்ற தூயோர்களை முதன் முதலாக பாரத நாட்டு
வரலாற்றிலும், பாரத நாட்டு பண்டைய இலக்கியங்களிலுமே காண்கிறோம்
வேதங்களில் உபநிஷத்துக்களிலும் பல்வேறு புராணங்களிலும் பகவான்
விருஷபதேவர் பேசப்படுகின்றார்.
இப்பெருமகனார் வரலாற்றுக்கெட்டாத காலத்தில் தோன்றி அப்பொழுது
சீர்குலைந்திருந்து மக்கள் சமுதாயத்திற்குப் பல்வேறு தொழில் முறைகள்,
கல்வி, உழவு, வாணிபம் போன்றப் பல்வேறு துறைகளைக் கற்பித்தார். அதோடு
அஹிம்சையின் அடிப்படையில் மக்கள் பண்பாட்டுக்குரிய அறநெறிகளை
வகுத்தருளினார். அவ்வறநெறிகளை இல்லறம், துறவறம் என இருவகை அறங்களாகப்
பிரித்து வாழ்க்கைக்கு வழிவகுத்தார். அதுமட்டுமல்லாமல் தாமும்
இல்லறத்தை நடத்திப் பின்னர் துறவறம் பூண்டு ஐம்புலன்களையும் தன்
வயப்படுத்தும் தவத்தை மேற்கொண்டு வீடுபேறு பெற்றார். இவ்வரலாற்றை நாம்
மேலே கூறிய வேதங்களிலும், ஜைன இலக்கியங்களிலும் படம் பிடித்துக்
காட்டப்பட்டுள்ளன.
ஐம்புலன்களையும் வென்று வீடுபேறு பெற்ற இப் பெருந்தகைய மண்ணுலகமேயன்றி
விண்ணுலகமும் இறைவன் அல்லது கடவுள் எனப் போற்றி வழிப்பட்டனர். இறைவன்
என்ற பெயரே அப்பெருமகன் காலமுதலே உலகில் வழங்கி வரலாயிற்று.
இந்திரன் வருகை
இந்திரனைப்பற்றி பல்வேறு சமய நூல்களில் காண்கிறோம். ஜைன (சமணம்)
நூல்களிலும் இந்திரன் வரலாறுகள் காணப்படுகின்றன. அவன் பேரறிவாளன்,
ஆயிரங் கண்ணுடையோன், நற்பண்பும், நற்பணியும் கொண்டவன்.
ஐந்தவித்துயர்ந்த ஆற்றல் படைத்த மகான்களை அடிப்பணிந்து போற்றும்
அன்பும் ஆர்வமும் உடையவன். இப்பெருந்தகை பகவான் விருஷபதேவர்
ஐந்தவித்துயர்ந்து கேவல ஞானமெனும் முழுதுணர் ஞானத்தை பெற்றுள்ளார்
என்ற செய்தி கேட்டு ஆர்வமேலிட்டு தம் மனைவியோடு மண்ணுலகிற்கு வந்து
பகவான் விருஷபதேவரை அடிபணிந்து வணங்குகின்றான். இக்காட்சியைப் பல்வேறு
மொழிகளிலுமுள்ள ஜைன இலக்கியங்கள் அனைத்தும் பாராட்டிப் புகழ்கின்றன.