ஐந்து அனர்த்த தண்ட விரத இறப்பு

96

ஐந்து அனர்த்த தண்ட விரத இறப்புமுகையே நினைப்பு மொழியின்மை கூறல்
மிகைநினைவு நோக்கார் செயல்.

 

நகைச்சுவைப் பேச்சு, குரும்பு செயல், பயனற்ற சொற்கள் துய்ப்புணர்வு, சிந்தனையற்ற செயல் ஆகியவை அனர்த்தண்ட விரதத்தின் அதிசாரங்களாம்..


வரும் முன் காத்தல்

97 ஐந்துஅனத்த தண்ட விரதக்கு இறப்பிவை
முந்துஉணர்ந்து காக்க முறை
 

மேற்கூறிய ஐந்து இறப்புகளும் நேராதபடி உணர்ந்து விழிப்புடன் முறையக அனர்த்ததண்ட விரதத்தை அணுசரித்தல் வேண்டும்.


 

ஐந்தன் சுவை அடக்கல்

 

பரிக்கிரக பரிமாண விரதம்

98

போக உபபோக பரிமாணம் என்றுரைப்பர்
வாயிற் புலன்கள் வரைந்து.

ஐம்பு நுகர்ச்சிக்குரிய பொருள்களை ஓர் அளவுடன் வரையறுத்து துய்ப்பது ‘பரிக்கிரக ப்ரிமாண் விரதம்’ எனப்படும்.
 


 

போகப் பொருள்கள்- உபபோகப் பொருள்கள்

99

துய்த்துக் கழிப்பன போகம்; உபபோகம்
‘துய்ப்பாம் பெயர்த்தும்’ எனல்.
 

ஒரேமுறை துய்த்தற்குரியவை போகப்பொருள், மீண்டும் மீண்டும் பயன் படுபவை உபபோகப் பொருள் எனப்படும்.


100

மயக்கம் கொலை அஞ்சிக் கள்ளும் மதுவும்
துயக்கில் துறக்கப் படும்.

 

அறிவை மயக்குவதாலும், கொலைப் பாபம் நேர்வதாலும், கள், தேன் இவற்ரை அரவே நீக்குவது அவ் விரதத்தின் பாற்படும்.