விரதமின்மையால் கேடடைந்தவர்கள்
81

தனசிரி சத்தியன் தாபதன் காப்பான்
நைதாடி வெண்ணெய் உரை

 

தனஸ்ரீ, சத்தியகோடன்,உறித்தாபதன், தளவரன், தாடிவெண்ணெய்காரன் ஆகிய ஐவரும் அணுவிரதம் இல்லமையால் கேடு அடைந்தமைக்குச் சன்றாவர்.


எட்டு மூலகுணம்

82 கள்ளொட் தேன்புலைசு உண்ணாமை ஐவதமும்
தெள்ளுங்கால் மூல குணம்
 

புலால் உண்ணாமை, கள்குடியாமை, தேன் அருந்தமையொடு மேற்கூறிய ஐந்து அணுவதமும் தெளியுங்கால் மூல குணம் எனப்படும்.


 

குணவிரதம்

திசை விரதம்

83

வரைப திசைபத்தும் வாழும் அளவும்
புரைவுஇல் திசைவிரதம் என்.

வாழ்நாள் முழுவதும் திசை பத்திலும் குறித்த தொலைவுக்கு மேல் செல்லுதல் இல்லை என உறுதி எடுத்தல் குற்றமைல்லாத திசை விரதமாம்.


 

திசை விரத எல்லைகள்

84

ஆறும் மலையும் கடலும் அடவியும்
கூறுப எல்லை அதற்கு.

ஆறு, மலை, கடல், காடு, இவற்றை எல்லையகக் கொள்ள வேண்டும் என்று அறிஞர் கூறுவர்.


 

மகாவிரதம்

85

எல்லைப் புறத்தமைந்த பாவம் ஈண்டாமையின்
சொல்லுப மாவதம் என்று

 

வரையறுத்த எல்லைக்கப்பால் நடைபெறும் பாபங்கள் அணு விரதியைச் சேராமையால் இவ்விரதத்தை மாவிரதத்தோடு ஒப்பாக சொல்லுவர்.