சோரம் போதல்

76

பிறர்மனை கோடல், பிறர்க்குச் செல்வாளைத்
திறவதில் கோடலோடு ஐந்து.

 

பிறர் மனைவியைச் சேரல், பிறர்க்கு உறுதி செய்தவளை வலிந்து கொள்ளலோடு இதன்
அதிசாரங்கள் ஐந்தாம்.


 

பொருள் வரைதல்

77 பொருள் வரைந்து ஆசைசுருக்கி ஏவாமை
இருள்தீர்ந்தர்க்கு ஐந்தாம் வதம்.
 

தேவைப்பட்ட பொருளையே வைதிருத்தலும் , பொருளாசையை அடக்குதலும், இறர்வழ்¢ பொருலைப் பெருக்காமையும் ஐந்தாவது அணுவதமாம்.


78

இயக்கமோடு ஈட்டம் பெருக்கலும் லோபம்
வியப்புமிகைக் கோடலோடு ஐந்து

விலங்குகள் மீது நெடுந்தூரப் பயணமும் நெடுநாள் தானியங்களைச் சேமித்து வைத்தலும், லோபமும், பிறர் ஆக்கம் கண்டு பொறாமையும், ஆற்றல் மீறிய செயலில இரங்குதலும் இதன் ஐந்து அதிசரங்களாம்.


 

அணுவிரதச் சிறப்பு

79

ஐஐந்து இறப்புஇகந்த ஐந்து வதங்கலும்
செய்யும் சுவர்க்கச் சுகம்.

அதிசாரங்கள் இருபத்தைந்தும் இல்லாது கைக்கொண்ட அணுவதம் ஐந்தும் தேவ இன்பத்தைத் தரும்.
 


 

அணுவிரத்தால் சிறப்படைந்தவர்கள்

80

சட்டி தனதேவன் பாரீசன் நீலியும்
பெற்றர் சயனும் சிறப்பு.

 

சட்டி புலையன், தனதேவன், பாரிசேனன், நீலி, ஜயகுமரன் ஆகிய ஐவரும் அணுவதத்தால் சிறப்படைந்தமைக்குச் சான்றாவர்