அணுவிரதம்

 

களவாடாமை

71

கொடாதது கொள்ளாமை ஏவாமை ஆகும்
கொடாதது கொள்ளா வதம்.

 

உரியார் தராமல் பிறர் பொருளை எடுத்தலும், பிறர் பொருளை எடுத்தலும், பிறர் எடுத்தலும், பிறர் எடுத்துவர ஏவாமல் இருத்துலும் திருடாமை வதம் ஆகும்.


72 குறைவு,நிறைகோடல், கொள்ளைக் கவர்தல்
மறைய விராதல் இறப்பு.
 
 

குறைத்துக் கொடுத்தலும், கூடுதலாக எடுத்தலும், கொள்ளை அடித்தலும், கலப்படம் செய்தலும் கொடாது, கொள்ளாமை வத்திற்கு அதிசாரம் ஆகும்.


73

கள்ளரொடு கூடல் கள்ளர் கொணர்பொருளை
உள்ளினர் கோடலோடு ஐந்து

திருடர்களுடன் தொடர்பு கொள்ளுதலும், அவர் கொடுக்கும் பொருளை மலிவாகப் பெறுதலோடும் திருடாமையின் அதிசாரம் ஐந்தாம்


 

காமமின்மை

74

விதித்த வழியின்றிக் காமம் நுகர்தல்
மதிப்பின்மை நான்காம் வதம்.

தனக்குரியாளைத் தவிர்த்து பிற பெண்டிரைக் கூடுதலை மனதாலும் எண்ணாமை'பிறன் மனைந்யவாமை' என்னும் நான்கும் வதமாம்.


75

அனங்க விளையாட்டு வேட்கை மிகுதி
மனங்கொள் விலார்இணை கேடு

 

முறையற்ற காம விளையாட்டும், மிக்க காம உணர்ச்சியும், விருப்பம் இல்லா வேசையர் உறயும் இதன் அதிசாரங்ளாம்