|
அணுவிரதம் |
|
| 66 |
பெரிய கொலைபொய் களவொடு காமம் |
|
இயங்குயிர்களைக் கொல்லாமை, பொய் கூறாமை, திருடாமை,பிறர்மனை விரும்பாமை,மிகுபொருள்விரும்பாமை என அணுவதம் ஐந்தாகும். |
|
|
|
|
|
கொல்லாமை |
|
| 67 |
இயங்குயிர்கொல்லாமை, ஏவாமை ஆகும் பெருங்கொலையின் மீட்சி எனல் |
|
இயங்குயிரைத் தான் கொல்லாமலும் கொல்லுவித்தல் செய்யாமலும் இருத்தல் இயங்குயிர் கொல்லாமை அணுவதம் ஆகும். |
|
|
|
|
|
அதிசாரம் ஐந்து |
|
| 68 |
அறுத்தல் அலைத்தல் அடைத்தலோடு ஆர்த்தல் |
|
உறுப்பைக் குறைத்தலும், அடித்து வருத்துதலும், நெருங்க அடைத்து வைத்தலும், கயிறு
முதலானவற்றால் கட்டிப்போடுதலும், மிகுபளு எற்றலூமாகிய ஐந்தும் அதிசாரமாம். |
|
|
|
|
|
பொய்யாமை |
|
| 69 |
பாவம் பொருந்துவன சொல்லாமை ஏவாமை |
|
பாவத்திற்குக் காரணமனவ்ற்றைப் பேசாது இருத்தலும், பிறரைப் பேச ஏவாது இருத்தலும் பொய் கூறாமை எனும் இரண்டாவது வதமாகும். |
|
|
|
|
| 70 |
குறளை மறைவிரி, இல்லடை வௌவல் |
|
கோள் சொல்லலும், இரகசியங்களைக் கூறலும், ஒப்படைத்த பொருளை இல்லை என்றலும், உண்மைக்கு மாறாக உரைத்தலும், பொய்க்கடிதம் எழுதுதலும் பொய்யாமைக்குக் கேடாம். |
|
|
|