இறைவனிடம் இருக்கத் தகாதவை

6

பசிவேர்ப்பு நீர்வேட்கை பற்றுஆர்வம் செற்றம்
கசிவினோடு இல்லான் இறை

 

பசி, வியர்வை, தாகம், பற்று, கோபம், கலக்கம் முதலான பதினெட்டுக் குற்றங்கள் இல்லாது ஒழித்தவன் இறைவன்

 
 

இறைவனிடம் இருக்கத் தக்கவை

7

கடைஇல்அறிவு, இன்பம், வீரியம், காட்சி
உடையான் உலகுக்கு இறை

 

வரம்பு இல்லா அறிவு, இன்பம், வீரியம், காட்சி இந்நான்கும் உடையவன் உயிர்களுக்கு இறைவன்
 

 
 

இறைவனிடம் அறத்தினை உரைத்தல்

8

தெறித்த பறையின் இராகாதி இன்றி
உரைத்தான் இறைவன் அறம்

 

வேறுபாடு இன்றி முழங்கும் முரசு போல விருப்பு வெறுப்பு இன்றி அறங்களை உரைத்தவன் இறைவன்
 

 
 

நூல்

9

என்றும் உண்டாகி இறையால் வெளிப்பட்டு
நின்றது நூல்என்று உணர்

 

 உலகில் எப்போதும் நிலைத்துள்ள அறமானது ( கலத்தால் மறைக்கப்பட்டு) இறைவனால்
ஒலி வடிவில் வெளிப்பட்டு, பிறகு எழுத்தில் நிலைபெற நின்றது நூல் என உணர்க.
 

 
10

மெய்ப்பொருள் காட்டி உயிர்கட்கு அரண்ஆகித்
துக்கம் கெடுப்பது நூல்

 

 பொருள்களின் உண்மை இயல்பை உணரச் செய்து, உயிர்களுக்குப் பாதுகாப்பாகி,
பிறவித் துயரங்களை கெடுக்கவல்லது நூல்.