நற்காட்சியின் சிறப்பு

36

அறமுண்டேல் யாவறும் எள்ளப் படாஅர்
பிறகுணத்தால் என்ன பயன்?

 

நற்காட்சி இருக்குமானால் அனைவராலும் போற்றப் படுவர். இதை விடுத்து பிற குணங்களால் என்ன பயன்? ஏதுமில்லை.


37

பறையன் மகன்எனினும் காட்சி உடையான்
இறைவன் என உணரற் பாற்று.

 

இழி குலத்தில் தோன்றிய ஒருவனும் நற்காசியுடையனாயின் இறைவனாவான் என உணர்தல் வேண்டும்.


38

தேவனும் நாயாகும் தீக்காட்சி யால் நாயும்
தேவனாம் நற்காட்சி யால்

நற்காட்சி இல்லாதவன் தேவனாக இருப்பினும் நாயாகப் பிறப்பான்; நற்காட்சி உண்டானால் நாயும் தேவ கதியைச் சேரும்.


 

அவிநயம்

39

அவ்விநயம் ஆறும் அகன்றது நற்காட்சி
செவ்விதின் காப்பர் இடை.

 

நற்காட்சியை நன்கு போற்றுபவரிடம் அவ்விநயம் ஆறும் அகன்று விடும்.


40

நல்லறத்தின் தீர்ந்த வணக்கத்தை நல்லோர்கள்
சொல்வர் அவ்விநயம் என்று.

 

இறைவன் ஆகமம் எவரை வணங்குதல் கூடாது என ஒதுக்கியதோ அவரை வணங்குதல் அவ்விநயம் என்பர் நல்லோர்.