26

இரேவதை யரும் சிநேந்திர பத்தரும்
தோவகையின் பாரிசரும் சொல்.

 

இரேவதை, சிநேந்திர பத்தர், பாரிசர் இவர்தம் வரலாறு மயக்கமின்மை. அறப்பழி நீக்கல் அழிந்தாரைத்தாங்கல் உறுப்புகளுக்கு எடுத்துக்காட்டாம்.


27

வச்சிர மாமுனியும் வளர்பெரு விண்ணுவும்
நிச்சயம் எட்டும் உரை.

 

வச்சிர முனிவர், விக்ஷ்ணுமுனிவர் வரலாறுகள் முறையே அறத்திற்கு அளாவளாவல், அறத்தை விளக்கல் இரண்டுக்கும் எடுத்துக்காட்டுகள் ஆகும்.


28

உறுப்பில் குறையின் பயனின்று காட்சி
மறுப்பாட்டின் மந்திரமே போன்று.

முற்கூறிய எண்வகை உறுப்புகளில் ஒன்று குறைந்தலும் மாறுபட்ட மந்திரம் போலப் பயனற்றதாகும்


நற்காட்சிக்கு வேண்டாதவை

29

மூவகை மூடமும் எட்டு மயங்களும்
தோவகைஇல் காச்சியார்க்கு இல்.

 

குற்றமற்ற நற்காட்சியாளரிடம் மூவகை மூடங்கள் எண்வகை மதங்கள் இருப்பதில்லை.


  மூடம்
  உலக மூடம்
30

வரைப்பாய்தல் தீப்புகுதல் ஆறுஆடல் இன்ன
உரைப்பின் உலக மயக்கு

 

மலையிலிருந்து வீழ்ந்தும், நெறுப்பில் பாய்ந்தும் நீர் நிலைகள்¢ள் மூழ்கியும் இறத்தல் புண்ணியம் என் நம்புதல் உலக மூடம் ஆகும்.