அறப்பழி நீக்கல்

21

அறத்துக்கு அலர்களைதல் எவ்வகை யானும்
திறத்தின் உவ கூவனம்
 

 

 அறத்துள்ளாருக்கு நேரும் தவறுகளை எவ்வாறெனும் வெளிப்படுத்தாது காத்து அவருக்கு வரும் பழியை நீக்கல் அறப்பழி நீக்கல் உறுப்பாகும்


 

அழிந்தாரைத் தாங்கல்

22

அறத்தின் தளர்ந்தாரை ஆற்றின் நிறுத்தல்
சிறப்புடை ஆறாம் உறுப்பு

 

அறவழியினின்றும் எப்படியோ தவறினவைக்ளை மீண்டும் நன்னெறிப்படுத்துதல் மேன்மைமிக்க அழிந்தாரைத்தாங்கல் உறுப்பு.
 


 அறத்திற்கு அளவளாவல்

23

 ஏற்ற வகையில் அறத்துளார்க் கண்டுவத்தல்
சாற்றிய வச்சளத்தின் மாண்பு.

 அறவழியில் நிற்போருடன் தக்க முறையில் அன்புடன் உறவாடுதல் சொல்லிய அறத்துக்கு அளவளாவலின் பெருமையாம்.


அறத்தை விளக்கல்

24

அறத்தின் பெருமையை யார்க்கும் உரைத்தல்
அறத்தை விளக்கல் நன்கு
 

 


அனைவருக்கும் அறத்தின் பெருமை மிக்கச் சிற்ப்பினை நன்கு விளங்கவைத்தல் அறத்தை விளக்கல் உறுப்பாம்.
 


 

எடுத்துக்காட்டு கதைகள்

25

 அஞ்சன சோரன்,அனந்தமதி, உலகில்
வஞ்சம் இல் ஒத்தா யணன்.

 

 முதல் மூன்று உறுப்புகளுக்கு அஞ்சன சோரன், அனந்தமதி, ஒத்தாயணன் வரலாறுகள் விளக்கம் தரும்.