16

அறத்தை விளக்கலோடு எட்டாகும் என்ப
திறம்பட உள்ள உறுப்பு

 


அறத்தின் உண்மையை அனைவருக்கும் விளங்கக் கூறுதல் என்னும் உறுப்புடன் நற்காட்சியின் உறுதி காட்டும் உருப்புகள் எட்டாகும்.


 

ஐயம் இன்மை

17

மெய்ந்நெறிக்கண் உள்ளம் துளக்கின்மை காட்சிக்கண்
ஐயம் இலாத உறுப்பு

 


இறைவன் அருளிய உண்மை நெறியில் உறுதியுடன் இருத்தல் நற்காட்சியின் ஐயம் இல்லாத உறுப்பாகும்
 


அவா இன்மை

18

தடுமாற்ற இன்பக்கு இவறாமை ஆகும்
வடுமாற்(று) அவாஇன்மை ந்ற்கு

நிலையற்ற புலன் இன்பங்களில் பற்று வைக்காமைதான் பிறவியை ஒழிக்கும் நல்ல அவாமின்மை உறுப்பாகும்

 


உவர்ப்பின்மை

19

பழிப்பில் அருங்கலம் பெய்துடம்பு என்று
இழிப்பின்மை மூன்றாம் உறுப்பு
 

 

 (குறையில்லாத மும்மணி பெய்த உடம்பு என்று துறவியரது மாசுண்ட உடலை இழிவாகக் கருதாமை உவர்ப்பு இன்மை உறுப்பகும்.

 


 

 மயக்கமின்மை

20

பாவ நெறியாரைச் சேர்ந்த மதிப்பின்மை
மோவம் இலாத உறுப்பு.
 

 

 தீவினைக்கு ஏதுவான மாறுபட்ட நெறியினைச் சேராமையும், அந்நெறியரைப் போற்றாமையும், 'மயக்கம் இன்மை' உறுப்பாகும்