|
அனனு மதன் |
|
| 171 |
யாதும் உடம்பாடு வாழ்க்கைக்கண் இல்லவன் மாசுஇல் அனனு மதன். |
|
மற்றவர் செய்யும் தொழில்களுக்கும் உடன்பாடு இல்லாதவன் அதாவது எவ்வகையிலும் தொடர்பு கொள்ளாதவன் மாசற்ற ‘ அனனு மதன்’ எனப்படுவான். |
|
|
|
|
|
உத்திட்டபிண்டன் |
|
| 172 |
மனைதுறந்து, மாதவர் தாளடைந்து, நோற்று, வினை அறுப்பான் உத்திட்டன் ஆம். |
|
இல்லைத்துறத்து மாமுனிவர்பால் சென்று விரதங்களை ,மேற்கொண்டு வினைகளை கெடுக்க முயலும் பக்குவம் அடைந்தவன் ‘ உத்திட்டபிண்ட விரதனாவான்’. |
|
|
|
|
|
பதினொரு நிலைகலின் இயல்பு |
|
| 173 |
முன்னைக் குணத்தொடு தம்தம் குணம்உடைமை பண்ணிய தானம் எனல் |
|
பதினொரு நிலைகளும் அந்த அந்த நிலைகளுக்குக் கூறப்பட்ட குணங்களோடு தன் தன் முன் நிலைக்குரிய குணங்களையும் உள்ளக்கியதாம் என அறிதல் வேண்டும். |
|
|
|
|
|
நூலை உணரும் முறை |
|
| 174 |
பாவம் பகையொடு, சுற்றம் இவைசுருக்கி மோவமோடு இன்றி உணர். |
|
பாவச் செயல், பகையுணர்வு, சுற்றத்தினர்பால் பற்று இவற்றை முறையாக நீக்கி அறியாமை நீங்கி நல்ஞானத்துடன் நடுமைபிறழாது ஆகமங்களை அறிவாயாக |
|
|
|
|
|
அருங்கலச் செப்பின் சிறப்பு |
|
| 175 |
அருங்கலச் செப்பினை ஆற்றத் தெளிந்தார் ஒருங்கு அடையும் மான்பு திரு. |
|
அருங்கலச் செப்பு என்னும் இந்நூலினை ஆய்ந்துணர்ந்தவர்கள் மாண்பமைந்த மனித இன்பத்திலிருந்து முக்தி நிலை வரை எய்துவர். |
|
|
|